வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்!

 

 

சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)

முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப்

 

இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)

1.இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்

2. யுகபுருஷன் – அப்பாதுரை

 

தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)

1.படுதா - போகன்

2.சுனை நீர் – ராகவன்

3.உயிர்க்கொடி - யாழன் ஆதி

4,அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்

5.பெருநகர சர்ப்பம் -  நிலா ரசிகன்

6.கொடலு - ஆடுமாடு

7.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்

8.பம்பரம் - க.பாலாசி

9.அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்

10.முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்

11.கல்தூண் - லதாமகன்

12.கருத்தப்பசு - சே.குமார்

13.மரம்,செடி,மலை - அதிஷா

14.அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா

15.வார்த்தைகள் -  ஹேமா

 

இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மற்றும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கருத்துகள்

41 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! என் கதை தொகுப்பிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டது மகிழ்ச்சியளிக்கிறது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் இத்தருணத்தை.. பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் மல்லுகட்டி என்னுடைய சிறுகதையும் தொகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.. தேர்ந்தெடுத்த குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்..

    முதல் மூன்று இடங்களைப்பிடித்த நண்பர்கள், மற்றும் தொகுப்பில் இடம்பெறப்போகும் சிறுகதைகளை எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..

    இந்த இனிய வாய்ப்பிற்குதவிய உங்களுக்கும் எனது நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! போட்டி அமைப்பாளர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. தேர்வு பெற்றோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    அமைப்பாளர்களுக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்! :)

    பதிலளிநீக்கு
  5. சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேன்! நமக்கு கொடுப்பினை இல்லை போல! வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. தேர்வுபெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  8. தேர்வு பெற்றோருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் வெற்றிபெற்ற , மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .
    மேலும் இலக்கிய வளர்சிக்கு தேவையான செயல்களை செய்துவரும் வம்சி நிறுவனத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
    அன்புடன்
    தேவராஜ் விட்டலன்
    http://devarajvittalan.com/

    பதிலளிநீக்கு
  10. முதல்முறையாக என் சிறுகதையொன்றை அச்சில் பார்க்க போகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  11. முதன்முறையாக என் சிறுகதையொன்று அச்சில். மிக்க நன்றி. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. மகிழ்ச்சியாக உணர்கிறேன். நடுவர்களினால் இந்த தொகுப்பு நூல் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் இடம் பெறுவது பெரியவிசயம்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. போட்டியில் நானும் ஓடி வந்தேன் என்ற மகிழ்ச்சி நெஞ்சம் முழுவதும் உள்ளது
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு
  16. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
    - சித்திரவீதிக்காரன்.

    பதிலளிநீக்கு
  17. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. பெருமையாக இருக்கிறது மாதவ்

    உங்களுக்கும் வம்சிக்கும் வாழ்த்துக்கள்..

    பதிவுலகத்திலிருந்து பதிப்புலகம் பெயரும் எழுத்துக்கள் அவற்றை ஆக்கியோருக்கு என்ன பெருமிதம்
    அளிக்கும் என்பதை லதாமகன் எதிர்வினை தெரிவிக்கிறது.
    இதைவிட அந்த அன்பர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு வேறென்ன கிடைக்க முடியும்?

    உடல் நலமிக்க உள நலமிக்க புத்தாண்டு அமையட்டும் அனைவருக்கும்..

    கைகளால் விதைத்தவற்றை கண்களால் அறுவடை செய்கிறோம் அது என்ன என்று ஒரு விடுகதை உண்டு,எழுத்து தான்..அப்படியான அறுவடைகளை புத்தாண்டு நிறைய கொழிக்கட்டும்..

    உள்ளுணர்வின் வெளிப்பாடுகள், சமூக
    மாற்றத்திற்கான விதை தூவல்கள், அநீதிக்கு எதிரான நெருப்புக் கங்குகள், உண்மையின் பக்கம் நின்று சுடர்விடும் தீபங்கள் படைப்புகளாக தெறித்து விழட்டும்..

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  19. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. போட்டி நடத்திய உங்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை படிக்கனுமே, எங்க கிடைக்கும். ஆன் லைனில் படிக்க வசதியிருக்கா?

    பதிலளிநீக்கு
  22. மிக்க மகிழ்ச்சி. போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். முன்னின்று நடத்திய அமைப்பாளர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்!
    புத்தாண்டு நாள் பதிவு!-இலவச ஒன்லைன் antivirus programs!

    பதிலளிநீக்கு
  25. தேர்வு பெற்றநண்பர்களுக்கு பாராட்டுக்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  26. வெற்றி பெற்றோருக்கும், திறம்பட நடத்திய குழுவுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. முதல் பரிசை வென்று மகிழும் இக் கணத்தில் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திய எழுத்தாளர் மாதவராஜ், வம்சி பதிப்பகம் மற்றும் நடுவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய பரிசுகளைப் பெற்ற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இது சம்பந்தமான எனது பதிவு

    எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்!
    http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  28. வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டியை சிறப்பாக நடத்திய வம்சி பதிப்பகத்திற்கும், மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

    போட்டிக்கு வந்திருநத பல நூறு கதைகளில் இருந்து முதல் கட்டமாக சில கதைகளை நீங்களே தேர்ந்தெடுத்ததாக (Screening) கூறியிருந்தீர்கள்.

    1. எதன் அடிப்படையில் அந்த கதைகளை தேர்ந்தெடுத்தீர்கள்?

    2. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எத்தனை?

    3. அந்த கதைகளின் பட்டியலை வெளியிட முடியுமா?

    ஒரு ஆர்வத்தில்தான் இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். Transparency வேண்டும் என்பதாலும். நன்றி :)

    பதிலளிநீக்கு
  29. புத்தாண்டு பரிசாகவே இதை உணர்கிறேன். நன்றி. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  30. எதிர்பாராத அங்கீகாரம். அனுப்பிவைத்த அன்புள்ளத்துக்கும் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் மிகவும் நன்றி.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்!

    அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  32. வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  33. போட்டி அமைப்பாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. ஹை. எங்கள் அப்பாத்துரைக்கு பரிசு.
    பெருமையாய் இருக்கிறது.
    சிறுகதைகளை எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  35. வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  36. ஜெய்த்தாப்பூர் அணுஉலைக்கு எதிராக தேசிய அளவில் குழு அமைத்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், "கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வேண்டும்" என்று சட்டப்பேரவையில் இன்று வலியுறுத்தல்!

    #என்ன கொடுமை சார் இது...?// இது முக நூலில் பார்த்த வசனம்! உங்கள் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி நீங்கள் ஒரு பதிவைப் போடலாமே! ஏன் உங்கள் கட்சி கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  37. கூடங்குளத்தில் அமைதியான முறையில் போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்துத் தாக்கியுள்ளனர். போராட்டத்தை உங்கள் கட்சி ஆதரிக்கலாம்! அல்லது எதிர்க்கலாம்! அது உங்களுடைய நிலைப்பாடு! ஆனால் அமைதியான முறையில் போராடி வரும் போராட்டக்குழுவினரை வன்முறையில் ஈடுபட்டுத் தாக்கிய 'இந்து முன்னணியினரை'க் கண்டிக்கக் கூட மனம் இல்லையா? இதுவரை உங்களுடைய கட்சி, தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரைக் கண்டித்து ஓர் அறிக்கை கூட விடவில்லையே! வருத்தத்துடன் முத்துகூடங்குளத்தில் அமைதியான முறையில் போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்துத் தாக்கியுள்ளனர். போராட்டத்தை உங்கள் கட்சி ஆதரிக்கலாம்! அல்லது எதிர்க்கலாம்! அது உங்களுடைய நிலைப்பாடு! ஆனால் அமைதியான முறையில் போராடி வரும் போராட்டக்குழுவினரை வன்முறையில் ஈடுபட்டுத் தாக்கிய 'இந்து முன்னணியினரை'க் கண்டிக்கக் கூட மனம் இல்லையா? இதுவரை உங்களுடைய கட்சி, தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரைக் கண்டித்து ஓர் அறிக்கை கூட விடவில்லையே! வருத்தத்துடன்
    முத்து

    குறிப்பு: போராட்டத்தைப் பற்றி ஒரு வரி கூட இதுவரை எழுதாமல் நீங்களும் இருட்டடிப்புச் செய்திருக்கிறீர்கள் என்பது கண்டு மனம் வலிக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!