-->

முன்பக்கம் , , , , � பால்ய ருசி

பால்ய ருசி

கூடு கட்டிய காக்கைகள் எப்போதாவது கரையும் வேப்ப மரத்தில் இப்போது பகலெல்லாம் மைனாக்களின் சத்தங்கள் நிறைந்து தெறிக்கின்றன. காற்று இல்லாவிட்டாலும் அடர்ந்த இலைகள் சடசடத்த்துக் கொண்டேயிருக்கின்றன. பொறுக்கி, கூறு போட்டு, விற்று விளையாட நானும், என் இளம் தோழியும் இல்லாமல் வேப்பம்பழங்கள் வெறுமனே அதனடியில் சிந்திக் கிடக்கின்றன.

குறுகுறுப்புடன் குனிந்து ஒரு பழம் எடுத்தேன். தலையில் காகத்தின் எச்சில் விழுந்தது. சிறு அருவருப்புடன்  தொட்டுப் பார்த்தபோது, அங்கே ஒரு வேப்பங்கொட்டையும் தட்டுப்பட்டது.

Related Posts with Thumbnails

15 comments:

 1. அருமை, வேப்ப மரத்து நிழல் , வேம்பு வாசம் நிகர் அற்றது

  ReplyDelete
 2. பால்ய நினைவுப் படிமங்களிலிருந்து கிளம்பிய
  வேப்பமரக் காத்து ம்... 'மிகவும் ருசி'

  ReplyDelete
 3. arumaiyo arumai ungal kavithai

  ReplyDelete
 4. ரொம்ப சின்னவயசுன்னு நினைக்கிறேன். கலைமகள் பள்ளிக்கூட வளாகத்துல வேப்பம்பழங்களை பொறுக்கி காயவைத்து எடைக்கு போட்டதாக ஞாபகம். இப்பொழுதந்த வேப்பமரங்கள் இல்லை. காக்கையின் எச்சங்கள் விழுந்த இடங்களில் வேப்பமரங்கள் இருக்கலாம்...

  ReplyDelete
 5. சின்ன வயசில் வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொடுத்தால் படிக்கு இவ்வளவு பைசா என்று தருவார்கள். நானும் சகாக்களும் ஓடி ஓடி பொறுக்கியது ஞாபகம் வந்தது.

  ReplyDelete
 6. வேப்பங்கொட்டை பொறுக்குவது ஒரு வேலையாக மட்டுமல்ல..அது ஒரு இளம் சினேகிதத்தின் வடுவாகவும் பதிவாகிவிட்டது..அதை கிளறிவிட்டது மாது உங்க கவிதை..

  ReplyDelete
 7. ஒன்றுகொன்று தொடர்பிருந்தாலும் பாராவுக்கொன்றாய் ரெண்டோ?

  ReplyDelete
 8. நானும் எங்க பாட்டியும் வேப்பங்கொட்டை பொறுக்குவோம். பிறகு அதை என்ன செய்வார்கள் என்று ஞாபகமில்லை.

  ReplyDelete
 9. வணக்கம் மாதவராஜ்,

  கல்யாண்ஜி சொன்னதை நான் வழி மொழிகிறேன். அவசியம் ஒரு நாவல் தொடங்க வேண்டும்.

  ஆனால் அரசியல் இடுகைகளை இலக்கியம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்?

  யார் கண்டது? அரசியலேகூட உங்கள் நாவலாகலாம். ஆக வேண்டும்.

  ReplyDelete
 10. பழம் தின்னு கொட்டபோட்டச்சுனு சொல்லிரிங்களா ? அருமை.

  ReplyDelete
 11. சே.குமார்!
  நன்றி.

  ராம்ஜ் யாஹூ!
  நினைவுக்கு வந்ததா... சந்தோஷம்.

  அரபுத்தமிழன்!
  அனுபவியுங்கள் நினைவுகளிலாவது...!

  ஜே!
  நன்றி.

  சி.எஸ்!
  நன்றி.


  க.பாலாசி!
  நிச்சயம் இருக்கும். அதிலும் பழங்கள், பறவைகள் இருக்கும்.

  ரிஷபன்!
  எல்லோரும்தான் பொறுக்கி இருக்கிறோம். அதில் ஒரு கொட்டையைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.

  ஆறுமுகம் முருகேசன்!
  மிக்க நன்றி.


  Hakuna matata !
  இரண்டும் ஒன்றுதான்!


  இரா.எட்வின்!
  அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.

  முனியாண்டி!
  அதே...!

  ReplyDelete