எங்க போச்சு?

தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அம்மா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களை சம்மதிக்க வைத்து இந்த நகரத்திற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் கூடவே இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள முடிந்தது. இன்று அவனும், அவளும் அவரவர் அலுவலகங்களுக்கு கிளம்ப, குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர். வீட்டைப் பூட்டிக்கொள்ளவும், சமைத்திருந்த மதிய உணவையும், ஃபிளாஸ்கில் போட்டு வைத்திருந்த டீயைப் பற்றியும் அம்மாவிடம்  சொல்லப்பட்டு இருந்தது. ரிமோட்டை இயக்கி எப்படி டி.வி பார்ப்பது என்றும், எந்தெந்த நம்பர்களில் எந்தெந்த சானல் என்றும் கூட விளக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தவிப்பாய் இருந்தது. வீட்டில் போன் இருந்தாலாவது அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. ஊரில் பேசவும், பழகவும் வீடுசுற்றி மனிதர்கள் இருப்பார்கள். தனியாய், உள்ளே பூட்டிக்கொண்ட வீட்டில் அம்மா என்ன செய்வார்களோ என உறுத்திக் கொண்டே இருந்தது.

சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும், நேரே வீட்டிற்கு போனான். குழந்தைகள் வந்திருந்தனர். அம்மா வாசலருகே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்னம்மா, எப்படியிருந்தீங்க.... என்ன சீரியல் பாத்தீங்க” என்றான் சிரித்தவாறு.

“எய்யா... முன்னால் எல்லாம் ஒங்க வீட்டுல எவ்வளவு சிட்டுக்குருவி உண்டு. ஜன்னல் வழியா அதுபாட்டுக்கு உள்ளே வந்து போகும். துணிக் காயப்போட்டு இருக்குற கொடியில வரிசையா உக்காந்து கத்தும். இந்த புங்க மரத்துல எப்பப் பாத்தாலும் அடைஞ்சு கிடக்கும். இப்ப ஒன்னையும் காணம். எங்க போச்சு?” என்றார்கள் வருத்தமாக.

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Mother! here after you me he and they can"t see chittukuruvi.They were all destroyed by the microwaves emenatingfrom mobile towers......kashyapan.

    பதிலளிநீக்கு
  2. தமிழச்சி தங்கப்பாண்டியன் (சுமதி) அக்காவின் , வனப்பேச்சி கவிதைகள் தான் என் கண் முன்னே விரிகிறது.

    இதே நடையில் ஒரு கவிதை உண்டு.


    ஆனால் இவ்வாறு கிராமத்தில் அல்லது ஒரு சிறிய நாட்டில் மட்டுமே இருப்பவர்களை பற்றி இரு விதமான மேலாண்மை (மனிதம் சார்ந்த) கருத்துக்கள் உள்ளன:

    1. கிணற்று தவளைகள் அவர்கள்.பரந்த மனப்பான்மை இல்லாதவர்கள், எந்த ஒரு புதிய மாற்றம், சூழலை ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள்.

    2. கிணற்று தவளையாக இருப்பதே மேல், ஏன் என்றால் அருகில் உள்ள பெரிய குளம் அல்லது கடல் அசுத்தமாக உள்ளது. அசுத்தமான குளத்தை (நகரத்தை, நாட்டை ) காட்டிலும் சுத்தமாக, சிறியதாக உள்ள (கிராமம், இந்தியா) கிணறே சிறந்தது என்று.

    now its your turn to tell which one is good

    பதிலளிநீக்கு
  3. தவிட்டு மஞ்சள் நிற சிட்டுக்குருவிகள் எல்லாம் இப்போ அறவே பார்க்க முடியலை.பட்டுக் கருப்பில் அடர் நீல சிறகோட குருவி மாதிரியே சின்னஞ்சிறு பறவை பார்க்க கிடைக்குது இப்போ.ஆனா அது குருவி இல்லை.கிராமங்களில் தண்ணீர் குழாய் அடியில் பானை வைக்கும் தடத்தில் தேங்கி நிற்கும் துளியூண்டு தண்ணீரில் தலை விட்டு சிலுப்பும் சிட்டுக்குருவிகளை பார்க்க முடியாத ஏக்கம் பதிவில் தெரியுது.

    பதிலளிநீக்கு
  4. அண்ணா,

    உரைநடையில் ஒரு அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
  5. அம்பிகா..

    //அண்ணா,

    உரைநடையில் ஒரு அழகான கவிதை.//



    அதேதான் மக்கா!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அந்தக் குருவிச் சத்தம் எப்போதாவதுதான் வருகிறது.
    நெகிழ்வாக இருக்கு தோழனே.

    பதிலளிநீக்கு
  8. அன்பான தோழரே

    எப்பொழுதும் அம்மாக்களின் உலகம் மாசுபடாததாக, மனதிலிருந்து சிந்திப்பதாக, பரந்ததாக இருக்கிறது..நகர வாழ்வில் அடுக்குமாடி வீட்டுக்குள் சுருங்கிப் போகும் நமது சிந்தனைகளும் சுருங்கித்தான் இருக்கிறது,,

    சிட்டுக்குருவியை தேடத் தோன்றுகிறது,, பாராட்டுக்கள்,,

    பதிலளிநீக்கு
  9. தோழர் காஸ்யபன்!
    வணக்கம். எப்படியிருக்கீங்க. உங்க மெயில் ஐ.டி தாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. குப்பன் யாஹூ!
    சிட்டுக்குருவி என்னும் உயிரினம் ஒன்று பூமியில் இருந்தது என நம் குழந்தைகள் இனி பாடப் புத்தகத்தில் படிப்பார்கள்.

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்று சொன்ன பாரதியாரின் வரிகளுக்கு உயிரில்லாமல் போய்விட்டதேயென கிணற்றுத்தவளைகள் கத்திக்கொண்ட் இருக்கிறார்கள்.


    கார்த்திகா வாசுதேவன்!
    ஆமாங்க.. நானும் பார்த்திருக்கேன்.


    அம்பிகா!
    நன்றி தங்கையே!


    சந்தனமுல்லை!
    நன்றி.


    ஈரோடு கதிர்!
    நன்றி.


    பா.ரா!
    நன்றி மக்கா!


    வெ.ராதாகிருஷ்ணன்!
    நன்றி.


    செ.சரவணக்குமார்!
    நன்றி தம்பி.


    தீபா!
    அப்படியா....! நன்றி.



    காமராஜ்!
    நன்றி என் தோழனே!


    அமைதிச்சாரல்!
    மிக்க நன்றிங்க...


    பவித்ரா பாலு!
    அழகாகவும், அர்த்தத்தோடும் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!