வெற்றிலை வாழ்க்கை

வெற்றிலை இடிப்பதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு எங்கேயோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்கள் பாட்டி. பேத்திக்கு பாவமாயிருந்தது. கல்லூரிப் பாடபுத்தகத்தை கீழே வைத்துவிட்டு பாட்டியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

என்ன வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்றுதான் தோன்றியது. “பொண்ணு, தண்ணி கொண்டு வா” என்று தாத்தா கூப்பிட்டால் தட்டுத்தடுமாறி எழுந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு பாட்டிதான் செல்ல வேண்டும். காத்திருந்து தாத்தாவின் கையில்தான் கொடுக்க வேண்டும். கீழேவைத்துவிட்டால் அவ்வளவுதான். காலால் சொம்பை எட்டிவிட்டு கூப்பாடு போடுவார். கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார். சில மாதங்களுக்கு முன்பு தாத்தா சாகும்வரை இந்தப் பாடுதான். எதற்கெடுத்தாலும் சண்டைதான். பாட்டியை அடித்து விரட்டி விடவும் செய்வார். எத்தனைமுறை மகன், மகள் வீடுகளில் வந்து பரிதாபமாக பாட்டி அடைக்கலமாகி இருக்கிறார்கள். அம்மாவிடம் கேட்ட கதைகளும், சிறுவயதிலிருந்து பார்த்த காட்சிகளும் ஒவ்வொன்றாய் ஓட ஆரம்பித்தன.

வாஞ்சையோடு பாட்டியின் அருகில் சென்று கட்டிப் பிடித்தாள். “என்ன ஆச்சி.. ஒருமாதிரியா இருக்கீங்க...?” என்றாள்.

“இல்லம்மா...  வெத்தலய நா இப்படி இடிச்சுக்கிட்டு இருந்தா ஒங்க தாத்தா ஆசையா பொண்ணு எனக்கும் ஒரு வா தான்னு கைய நீட்டுவாவ ...” என்று தழுதழுத்தார்கள்.

பாட்டியின் கண்ணீர், இடித்த வெற்றிலைக்குள் விழுந்தது.

Comments

19 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தாத்தாவின் ஆளுமை யை(அல்லது சாவனிஸ்ம் )பாட்டியின்,கடற்பொறுமையை (அல்லது பாண்டெட்னெஸ்) இரண்டையும் சொல்லுகிறபோது நினைவுகள் அலையலையாய் மோதுகிறது.அலைச் சத்தத்தில் கேட்கிறது ஒரு கலைஞனின் மொழி. அழகு. இப்பதான் ஊர்ப்பாட்டியை ஒரு பால்காய்ச்சு வீட்டில் பாத்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. என்ன சொல்வது!!!!

    கல்லுக்குள்ளும் ஈரம் இருந்திருக்கிறது.!

    அருமையான எழுத்து அண்ணா.

    ReplyDelete
  3. mathavji! Iam seventy five now.Mine is an arranged marriage.To keep my home oven burning me and my wife strugled very hard.To rear my son and daughter,educate and give them a cofortable life we fought every second. After finishing our duty when we looked back it was late and the neighbour hood children started calling us THATHAand PATTY.Now Ilive for her.She lives for me. WE STARTED LOVING EACH OTHER.The tears that droped into the betul grinder is the ecstatic moment of that blessed old LADY...kashyapan.

    ReplyDelete
  4. இரக்கமில்லா முட்காட்டில் எங்கோ தவறிக் கிடக்கும் ஒற்றைத் துளித் தேனை சுவைத்த நாவின் நினைவை மட்டும் வைத்துக்க் கொன்டு காலமெல்லாம் காட்டைப் பராமரிக்கும் சிறகை மறந்த வண்ணத்துப் பூச்சி!
    பழைய வண்ணத்துபூச்சி மட்டுமல்ல, புதிய பூச்சிகளும் உண்டு, பராமரிப்பிலும் பாத பூஜையிலும் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். காலத்திற்கு ஏற்றபடி...!

    ReplyDelete
  5. ஆண்டாண்டு கால உறவு.....
    வலிகளையும் தாண்டி அவசியமாகிறது.

    ஒரு கட்டத்தில் வலிகளையும் ரசிக்கப் பழகிவிட்டனர் நம் முன்னோர்....

    நிஜமான நிகழ்வுகள்......

    ReplyDelete
  6. நிறைய அந்தக்கால மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல,
    அடிச்சாலும்,ஏசினாலும் அதற்குள்ளும் ஒரு அன்பை, பரிவை எதிர்பார்த்து.....

    ReplyDelete
  7. மாதண்ணா,

    தாத்தா, தன் மரணத்துக்கு முன் தனக்கு இடித்து தரப்பட்ட கடைசி வெற்றிலையை `பொன்னுக்கு’ என ஆச்சிக்கு பகிர்ந்து அளித்ததும்,

    தாத்தாவுக்கு பின் ஆச்சி வாயிலிருந்து அடிக்கடி வரும்,
    `அந்த மகராசன் இருக்கும் போது’

    என்ற வார்த்தைகளும் அவர்களது வெற்றிலை வாழ்க்கைக்கு சாட்சிகள்.

    ReplyDelete
  8. மிக அழுத்தமான ஒரு வாழ்வை,அற்புதமாக வரையக் கூடிய தூரிகை ஒன்று வைத்திருக்கிறீர்கள் மாது!அது உங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது..

    ReplyDelete
  9. ///இரக்கமில்லா முட்காட்டில் எங்கோ தவறிக் கிடக்கும் ஒற்றைத் துளித் தேனை சுவைத்த நாவின் நினைவை மட்டும் வைத்துக்க் கொன்டு காலமெல்லாம் காட்டைப் பராமரிக்கும் சிறகை மறந்த வண்ணத்துப் பூச்சி!
    பழைய வண்ணத்துபூச்சி மட்டுமல்ல, புதிய பூச்சிகளும் உண்டு, பராமரிப்பிலும் பாத பூஜையிலும் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். காலத்திற்கு ஏற்றபடி...! ////



    நான் வழி மொழிகிறேன்

    ReplyDelete
  10. old beloved comrade Kaashyapan, how are you?
    how is your beloved partner? I sincerely hope you both are doing well.
    "ThEn kalantha kanneer"!
    iqbal

    ReplyDelete
  11. நிறைகளை மட்டுமல்ல...

    குறைகளையும் சேர்த்து

    ரசிக்க..நேசிக்க தெரிந்தவர்கள்

    ReplyDelete
  12. எந்த வீட்டில் கோபம் இல்லை..மனிதர்கள் நேசத்தால் ஆனவர்கள் என்பதற்கு வெற்றிலையே சாட்சி..

    ReplyDelete
  13. பிரமிக்க வைத்த வாழ்க்கை யதார்த்தம் சொன்ன எழுத்து.

    ReplyDelete
  14. எங்க பாட்டி ஞாபகம் வந்துருச்சி மாதவ் அண்ணா. சில இடுகையில ஆளக் கொல்றீங்க நீங்க.

    ReplyDelete
  15. நூறு பக்கங்கள் வேண்டாம், நூறு எழுத்துக்கள் போதும் வாசகனை தொட்டு விட என்பதை நிரூபணம் ஆக்கி விட்டது, உங்களின் இந்த பதிவு.

    அருமை.

    கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது இது தானோ.

    ReplyDelete
  16. குறைந்த வரிகளில் நிரம்ப அழுத்தத்தை எப்படி கொண்டு வர முடிகிறது உங்களால்.

    நிறைய‌ க‌ற்றுக் கொள்ள‌ வேண்டும்.

    ReplyDelete
  17. இது உறவுகளின் மேல் வைத்திருந்த பாசத்தின் அடர்த்தியோ.. அருமை

    ReplyDelete
  18. காமராஜ்!
    நன்றி தோழனே!

    அமைதிச்சாரல்!
    நன்றி.

    காஷ்யபன்!
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.


    அனானி!
    கவிதை!


    ஆரூரன்!
    உண்மைதான்.


    அமிர்தவர்ஷிணி அம்மா!
    ஆமாம் அந்தக்காலம்தான்.


    அம்பிகா!
    நினைவிருக்கிறது.


    பா.ரா!
    நன்றி என் மக்கா!


    பவித்ராபாலு!
    நன்றி.


    அனானி!
    நன்றி.

    தாமோதர் சந்ரு!
    நன்றி.

    விஜயராஜ்!
    அப்படி ஒரு காலம் இருந்தது....


    ரிஷபன்!
    நன்றி.


    வெ.ராதாகிருஷ்ணன்!
    நன்றிங்க.

    செ.சரவணக்குமார்!
    ரொம்ப நன்றி.


    குப்பன் யாஹூ!
    உண்மையாகவா!


    அ.மு.செய்யது!
    உற்சாகம் தருகிறீர்கள். சந்தோஷமாய் இருக்கிறது.


    உழவன்!
    நன்றி.

    ReplyDelete

You can comment here