சில நமிடங்களில் நாசமாகிப்போனது சர்வமும். 7.8 ரிக்டர் நடுக்கம் 200000 த்திற்கும் மேலான மக்களை அழித்துப் போட்டிருந்தது. அன்பு, காதல், அழகு, கவிதை, கதை, விளையாட்டு, போட்டி, பொறாமை, விரோதம், கோபம், திறமை, சாதனை, நம்பிக்கை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாயிருந்தது. மூக்கில் துணி கட்டிய இருவர் இடிந்த சுவருக்குக் கீழே தெரிந்த ஒரு சிறுவனின் பாதத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சகிக்க முடியமால் கண்களை பொத்திக்கொண்டால் காற்றெல்லாம் அழுகிய பிணவாடை அடிக்கிறது. கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் இழந்து நிற்கிறது நிலம். நாமும் கூட செத்துப் போயிருக்கலாமே என உயிர் தப்பியவர்கள் பைத்தியமாக கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
எல்லாம் அறிந்த கடவுள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் முன்கூட்டியே அந்த பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தான்.
அன்பின் மாதவராஜ்
பதிலளிநீக்குஇயற்கைச் சீற்றங்கள், எவ்வளவுதான் முன்னேற்பாட்டுடன் இருந்தாலும், அவை தன் கைவரிசையைக் காட்டாமல் போவதில்லை. என்ன செய்வது
ஓடிப்போன இறைவன் அங்கிருந்த படியே அடுத்த வேலையைச் செய்கிறான். அவனும் மாண்டிருந்தால் .....
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதை விட வேறு என்ன செய்ய இயலும்.
செய்தியாகக் கூட அந்த நிகழ்வை நம்மால்
பதிலளிநீக்குஅணுக முடியவில்லையே.அருகிருக்கும் மிஞ்சிய
மக்கள் பாவம், பெரும்பாவம் பண்ணியவர்கள்.
ச்சே...கொடூரம் தோழனே.
அந்தாளு கெடக்காரு விடு.
எனவே எங்கள்
பதிலளிநீக்குஅன்புத் தோழர் சீனா சொல்லுவதைப்போல.
எவனும்
மிகப்பெரியவனில்லை,
இயற்கையை விட.
கடவுள் இருந்தால்தானே தப்பிப்பதற்கு.
பதிலளிநீக்குஐந்தறிவுனு நாம் சொல்கிற விலங்குகள் அறிகின்றதே இயற்கைச் சீற்றங்களை
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குகடவுள் என்ன செய்வான் பாவம்.
அவன் அழகான ஒரு பரந்த பூமியை கொடுத்தான் நாம் மிருகங்களுடனும், தாவரங்களுடனும் இனைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்.
கடவுள் ஒரு பொது நல வாதி.
மனிதர்கள் நாம் தான் சுய நலமாக, நம் சொவ்கரயந்கள் (sowkaryangal) மட்டுமே முக்கியம் என்ற முனைப்பில் , தாவரங்கள், விலங்குகள் வசிக்க இடம் இல்லாது பண்ணி விட்டோம்.
கம்ப்யுட்டர் காலத்தில் முற்பகல் செய்யின் முற்பகலே விளையும்.
:-( ஆம்; எல்லாக் கொடுமைகளுக்கும் மத்தியில்
பதிலளிநீக்குகடவுள் மட்டும் தப்பிப் பிழைத்து ஜீவித்துக் கொண்டே இருக்கிறது. அருமையான சிந்தனை.
//எல்லாம் அறிந்த கடவுள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் முன்கூட்டியே அந்த பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தான். //
பதிலளிநீக்குஇது எதுக்கு தோழர்.....?
அந்த பிரதேசத்தை விட்டு மட்டுமா ஓடினான்???????
400 பின்தொடர்வோரைப் பெற்ற வலைப்பதிவருக்கு வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஇயற்கைக்கு முன்னால்...?
பதிலளிநீக்குஆம்..
பதிலளிநீக்குஇல்லாத கடவுள்..
நம்பிக்கையில்லாத மனிதர்களின் மனத்திலிருந்து நீங்கிச்சென்றான்..