அடுக்கு மாடி வீடுகள்

keys

 

ஈரோடு பாஸஞ்சருக்காக  பிளாட்பாரத்தில் அண்ணனுக்காக காத்திருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக  நண்பனும் அதே ரெயிலிலிருந்து இறங்கினான்.  ஒருகாலத்தில் அறிவொளி இயக்கத்தில்  நெருக்கமாக இருந்தவன் அவன். ஒரு வருடத்திற்கும் மேலே ஊரில் பார்க்க முடியவில்லை. டீச்சர் வேலை கிடைத்து எங்கோ பணிபுரிந்து கொண்டிருக்கிறான என்று மட்டும் தெரியும். வாழ்க்கை அவரவர் குடும்பத்திற்குள்ளே புதைந்து போனதாய் இருக்கிறது. பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ள பேசிக்கொண்டு இருக்கும் போது அண்ணனும் வந்து விட்டிருந்தான்.

 

“அண்ணா...இது என்னோட நண்பன்...ஈரோட்டுலத்தான் டீச்சரா இருக்கான்,”

 

“அப்படியா...ஈரோட்டுல நீங்க எங்க இருக்குறீங்க...”

 

“ஈரோட்டில் மேட்டுப்பாளையம் ரோடு போகுதுல்ல...”

 

“அங்க...?”

 

“பால்பண்ணை இருக்குல்ல...”

 

“அங்க?”

 

“ஹவுசிங் போர்டு குவார்ட்டஸ் இருக்குல்ல...”

 

“ ஆமா... அங்க...”

 

“ பீ குவார்ட்டஸ்ல...”

 

“அங்க...”

 

“முதல் தளத்தில்... கதவு எண் நான்கு..”

 

“அப்படியா... நான் இரண்டாவது தளத்தில்... கதவு எண் ஆறு!”

 

0

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உண்மை
    அடுக்கு மாடி குடியிருப்பில்
    குழந்தைகள் மூலம் பழக்கம் வந்தா தான்
    உண்டு

    பதிலளிநீக்கு
  2. காமெடியாக இருந்தாலும், நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள்தாம் இவை. நல்ல சுவாரஸ்யமாக உள்ளது :)

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் மாதவராஜ்

    இது பல காலமாக நடைமுறையில் உள்ள நிகழ்வு தான். நகர்ப்புற அடுக்ககங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது நட்பினை இழப்பது.
    24 மணி நேரமும் வீட்டுக் கதவு சாத்தியே இருக்கும். யாராவது அழைப்பு மணி அடித்தால் லென்ஸ் மூலமாகப் பார்த்து விட்டு கதவைத் திறக்க வேண்டும். என்ன செய்வது .....

    பதிலளிநீக்கு
  4. ஸ்மைல்!

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். இந்தப் பதிவில் விட்டுப் போன இடம் அது. என் அண்ணன் தன் குழந்தையின் பேரைச் சொல்லித் தெரியுமா என்று கேட்டான். என் நண்பர் உடனே ஆமாம் என்று ஆவளோட அப்பாவா நீங்க... என்று ஆச்சரியப்பட்டார்.

    பதிலளிநீக்கு
  5. அனுஜன்யா!

    வர வர மனிதர்கள் காமெடியன்களாகி விட்டார்கள் என்று சொல்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  6. சீனா!

    முதலில் தொலைந்து கொண்டிருக்கும் மனித இதயங்களை லென்ஸ் கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!