-->

முன்பக்கம் , , � சாகித்ய அகாடமி விருதும், ஒரு பாமர எழுத்தாளனும்

சாகித்ய அகாடமி விருதும், ஒரு பாமர எழுத்தாளனும்

  காரிலிருந்து இறங்கியதுமே டீக்கடையில் உட்கார்ந்திருந்த, மேல்ச்சட்டை போடாத இரண்டு பெருசுகள் "பொன்னுச்சாமியை பார்க்க வந்திருக்கீங்களா" என்று  கேட்டனர். ஆமாம் என்றதும், "அதோ..அந்த மஞ்சக்கலர் வீடு" என்று அடையாளம் காட்டினார்கள். குறுகலான தெருக்கள். உற்றுப் பார்க்கும் மக்கள். சிறிய,  எளிமையான வீடு.

 

"வாங்க...வாங்க.." என்று உற்சாகமாய் வரவேற்றார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. அதற்கு முன்னால் வந்து சென்றவர்களுக்கு கொடுத்திருந்த சேவு  ஒரு தட்டில் மீதமிருந்தது. காலியான தம்ளர்களை எடுத்துக் கொண்டே சிரித்து வரவேற்றார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரின் மனைவி.

 

இருபத்து மூன்று வருடங்களாக மிக நெருக்கமாகப் பழகிய அவரது வீட்டிற்கு இப்போது சென்றிருந்தோம். சிவகாசி, ஆலங்குளம் வழியாகவும் செல்லலாம்.  கோவில்பட்டி, திருவேங்கடம் வழியாகவும் செல்லலாம். எப்படிச் சென்றாலும், சரியான சாலை வசதிகள் இல்லாத, மேடும் பள்ளமுமான வழி சங்கடத்தை  ஏற்படுத்தும். தமிழ் உலகிற்கு, மேலாண்மறைநாடு என்னும் அந்தச் சிறிய ஊரை உச்சரிக்க வைத்த மனிதராய் இருக்கிறார் நமது எழுத்தாளர். இங்கிருந்து வந்து,  பலகலைக் கழகங்களிலும், பிரபல பத்திரிக்கைகளிலும், புத்தகக் கடைகளிலும், இப்போது சாகித்ய அகாடமியிலும் இடம் பெற்றிருப்பது அவரது உழைப்பையும்,  கடும் முயற்சிகளையும் சொல்கிறது. கட்டிப் பிடித்துக் கொண்ட "ஹா..ஹா.." என்று வாய்விட்டுச் சிரித்த அவரது முகத்தில், ஐந்து வரை கூட படிக்காத, கடந்த  காலத்தை வென்ற பெருமிதம் இருந்தது.

 

வெளியூர்களுக்குச் சென்று விட்டு அவரது ஊருக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் திரும்ப முடியாது. சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டுகளில்தான்  முதல் பஸ்ஸிற்காக காலை ஐந்து மணி வரைக் காத்திருக்க வேண்டும். இந்த ஊர்களில் உள்ள தெரிந்த நண்பர்கள் வீட்டில் அன்று இரவு, இலக்கியம் பேசிக்  கொண்டிருப்பார். அப்படி பலமுறை சாத்தூரில் எங்களோடு தங்கியிருந்த நாட்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

 

செம்மலரில், பிறகு ஆனந்தவிகடனில், கல்கியில் என்று பயணித்த அவரது எழுத்துக்களில் கரிசல் பூமியின் வாசம் வீசிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அனைத்துப்  பத்திரிக்கைகளிலும் அவரது கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன. வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் பரிசும் அவரைத் தேடி வந்திருக்கிறது. 'அரும்புகள்' கதையைப்  படிக்கிற போது கண் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பெட்டிக்கடை வியாபரம், கொஞ்சமிருக்கிற நிலத்தில் எதோ விவசாயம்,  இவைகளுக்கு  ஊடேதான் சிறுகதைத் தொகுப்புகளும், 6 நாவல்களும் எழுதியிருக்கிறார். வறுமை மிகுந்த நாட்களில் எழுத்துக்களே அவருக்கு ஆசுவாசமாகவும்,  நம்பிக்கையாகவும் இருந்திருக்கின்றன. எமர்ஜென்சி காலத்தில் துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த 32 பேரில் இவரும்  ஒருவர்.

 

அவரது எழுத்து நடை குறித்து விமர்சனங்கள் உண்டு. திரும்பத் திரும்ப வார்த்தைகளாய் வந்து அயற்சியை உண்டு பண்ணுகின்றன என்று பல எழுத்தாளர்கள்  விமர்சனங்கள் செய்திருக்கின்றனர். ஆனால் அவரது கதைமாந்தர்கள் இரத்தமும், சதையுமாக நம்முன் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர்கள் என்பது மறுக்க  முடியாத உண்மை.  மக்கள் அவரை விரும்பிப் படித்தனர். இதோ மத்திய அரசும் அவருக்கு கௌரவம் செய்திருக்கிறது.

 

பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன விஷயம் ஒன்று திரும்பும் வழியெல்லாம் வந்து கொண்டிருந்தது. "ஆரம்பத்துல கதை பத்திரிக்கையில் வந்துரும்.  பத்திரிக்கையும் வீட்டிற்கு வந்துரும். ஆனா இந்த ஊர்ல அதைப் படிச்சுப் பேச யாரும் கிடையாது. இங்கிருந்து மெனக்கெட்டு வேலையெல்லாம் விட்டுட்டு  கோவில்பட்டிக்குப் போய் நண்பர்களைப் பார்ப்பேன். பிடிபட்ட எலியை சாக்கு மூட்டையில் கட்டித் தரையில் அடிப்பது போல விமர்சனம் செய்வார்கள்" என்று  சொல்லி திரும்பவும் 'ஹா... ஹா' என பெரிதாய் சிரித்தார். எனக்குச் சிரிக்க முடியவில்லை.

 

வாழ்த்துக்கள் எங்கள் எழுத்தாளரே!   வாழ்த்துக்கள் எங்கள் தோழரே!!

Related Posts with Thumbnails

33 comments:

 1. // பிடிபட்ட எலியை சாக்கு மூட்டையில் கட்டித் தரையில் அடிப்பது போல விமர்சனம் செய்வார்கள்"//


  ஆஹா என்ன ஒரு உதாரணம்.....எனக்கு பிடித்த எழுத்தாளர்.

  ReplyDelete
 2. எனக்கு அவர் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். பத்தாவது படிக்கும் போது கல்கியில் வந்த அவரது முற்றுகை என்ற தொடர்கதை தான் முதலில் படித்தது. பின்பு ரோஷாக்னி என்ற சிறுகதை,ஒரு கண்டக்டர் பற்றிய சிறுகதை (தலைப்பு நினைவில்லை) இரண்டையும் மிகவும் ரசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. Virudhunagar district la irukuradhuku ippo than romba perumaya iruku... Namma maavatta thula orutharu dhesiya alavula gowrava padutha padrar na summava? (Oru ezhuthalar a sondha oor karar nu chinna vattathula adaikuradhuku mannikavum)... Avaroda "Maanuda Pravagam" siru kadhai thoguppu padichuruken.. Unmailaye namma mannoda viyarvai a azhuththama padhivi senjirupar..

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அவரோட மானுடம் வெல்லும் கதைதான் நான் முதலில் படித்தது. சிபிகள்- தொகுப்பின் பெயர் என்று ஞாபகம்.

  டை கட்டிய ஆசாமிகளை பார்த்து பழகினவனுக்கு, சும்மா துண்ட எடுத்து தோள்ல போட்டுட்டு ஆசுவாசமா போறவனப் பார்த்தது மாதிரித்தான் அவரது எழுத்துக்கள்.

  மண்ணிலிருந்தும், அதன் மனிதகளிடமிருந்துமான வாசனையுடன் கிளர்ந்தெழுந்த எழுத்துக்கள் அப்படித்தான் கார நெடியும் மூச்சடைக்கும் தூசுகளும் சேர்ந்திருக்கும். அதுதானே அதன் இயல்பு; வேறெப்படி இருக்க முடியும்?

  ReplyDelete
 6. ராஜ்!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 7. தீபா!

  நகரத்தில் வாழ்ந்தும், அந்தக் கிராமிய மொழியை ரசிக்க முடிந்திருக்கிறதே, ஆச்சரியம்தான்.

  ReplyDelete
 8. ராம்குமார்!

  நீங்கள் இந்த மாவட்டத்துக்காரரா?

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வேலன்!
  //டை கட்டிய ஆசாமிகளை பார்த்து பழகினவனுக்கு, சும்மா துண்ட எடுத்து தோள்ல போட்டுட்டு ஆசுவாசமா போறவனப் பார்த்தது மாதிரித்தான் அவரது எழுத்துக்கள்.
  //
  ஆஹா..அழகாய்ச் சொல்கிறீர்களே!

  ReplyDelete
 10. "NALLA PATHIVU"...INTHA PATHIVIN MOOLAM "THIRU MELANMAI PONNUSAMI' PETRA "SAKITHYA ACDAMY AWARD"....ULAGENGUM VAZHUM TAMIL ANBARKALAI SENDU ADAIKIRATHU...GREAT...A REAL RESPECT TO THE "PAMARA EZUTHALAR"...THREE CHEERS TO YOU...

  ReplyDelete
 11. ராமசுப்பிரமணிய ஷர்மா!

  தங்கள் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
  மேலாண்மை பொன்னுச்சாமியிடம் உங்களையெல்லாம் சொல்வேன்.

  ReplyDelete
 12. தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்

  ReplyDelete
 13. என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்?
  பிறமொழிக் கதைகளும் க‌லாசாரமும் புரிகிறவர்களுக்கு நம் சொந்த மண்ணின் கிராமிய மணம் அந்நியப்பட்டுப் போகலாமா?


  கொஞ்சம் வார்த்தைப் பிரயோகங்கள் அதிகமாக இருந்தாலும் என்ன? தமிழர்கள் வளைத்து வளைத்துப் பேசுபவர்கள் தானே? அப்படி எழுதக் கூடாதா என்ன? அர்த்தம் மிக்கதாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தால் போதும்.

  ReplyDelete
 14. அன்பு மாதவ்ராஜ்

  மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

  பின்புலமும், செல்வாக்கும் இல்லாத சாதாரண நிலையிலிருக்கும் ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் இந்த விருதினால் அந்த விருதிற்கே பெருமை என்றால் மிகையில்லை. அவருடைய பல கதைகளை படித்திருக்கிறேன் என்பதால் அவர் இந்த விருதிற்கான தகுதியான நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  ReplyDelete
 15. விடுதலை!

  தங்கள் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. தீபா!

  //பிறமொழிக் கதைகளும் க‌லாசாரமும் புரிகிறவர்களுக்கு நம் சொந்த மண்ணின் கிராமிய மணம் அந்நியப்பட்டுப் போகலாமா?//

  அடேயப்பா! சந்தோஷம்.

  ReplyDelete
 17. மஞ்சூர் ராசா!

  தங்கள் வருகைக்கு முதலில் நன்றி.
  //பின்புலமும், செல்வாக்கும் இல்லாத சாதாரண நிலையிலிருக்கும் ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் இந்த விருதினால் அந்த விருதிற்கே பெருமை என்றால் மிகையில்லை.//

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்...!

  ReplyDelete
 18. Hoy sir, thanks for your post and visiting my village and for your blog about my Periyappa, Mr. Melanmai Ponnuchamy.

  ReplyDelete
 19. செங்கதிர்ச் செல்வன்!

  வணக்கம்.
  உங்கள் வருகை சந்தோஷமளிக்கிறது.
  நீங்க எங்க இருக்கீங்க. என்ன செய்றீங்க.
  வெண்மணி உங்களுக்கு அண்ணணா, தம்பியா?

  ReplyDelete
 20. அன்புக்கும் மதிப்பிற்குரிய திரு. மாதவராஜ் அவர்களுக்கு,

  வணக்கம். உங்களின் பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.. நன்றி

  நான் தற்பொழுது டெல்லி அருகில் குர்காவுவில் கட்டுமானத் துறையில் வேலை பார்க்கிறேன்..

  வெண்மணி எனக்குத் தம்பி. அனேகமாக ஆறு மாதம் இளையவர்.

  உங்கள் தொடர்புக்கு மீண்டும் நன்றி..

  அன்புடன்,
  க.செங்கதிர்ச் செல்வன்

  ReplyDelete
 21. நடந்து முடிந்த தமுஎச நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் காலை என்னை அழைத்து இருந்தார்ர்கள். அங்கு திரு.மேலான்மை பொன்னுசாமி அவர்களைச் சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.

  (நீங்க வந்திருப்பதாக கும்கி சொன்னார். உங்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை அண்ணே)

  ReplyDelete
 22. செங்கதிர்ச்செல்வன்!

  நன்றி.
  உங்கள் வலைப்பக்கம் சென்றேன்.
  ஒன்றும் எழுதவில்லையே.
  எழுதுங்கள்.அடிக்கடி சந்திப்போம்.

  ReplyDelete
 23. புதுகை அப்துல்லா!

  ஆஹா! நீங்கள் வந்திருந்தீர்களா...!!
  பார்க்க முடியாமல் போனதில் எனக்கும் வருத்தமாக இருக்கிறது.
  நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்களா?
  அடுத்தமுறை வரும் போது சந்திப்போம்.

  ReplyDelete
 24. அவருக்கு இவ்வளவு நெருக்கமானவரா நீங்கள்? அடுத்த முறை பார்க்கையில் பதிவுலக வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 25. அனுஜன்யா!

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
  கண்டிப்பாக மேலாண்மை அவர்களிடம் சொல்வேன்.
  ரொம்ப சந்தோஷப்படுவார்.

  ReplyDelete
 26. மிகப்பொருத்தமான, எவ்வித விமர்சனத்திற்கும் இடமில்லா தேர்வு.

  என்னுடைய வாழ்த்துகளையும் சேர்ப்பியுங்கள்.

  பாகி சாத்தூர் வருகிறாரா?

  ReplyDelete
 27. வெயிலான்!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  பாகி என்றால் பாரதி கிருஷ்ணகுமாரா?

  ReplyDelete
 28. Mann manakkum manidhargalin vazhkkaiyai thanadhu kadhaihalil ulava vitta oru samniya yezhuthalan melanmai ponnuchamy yenbathil yendha sandhegamum illai.Idhu pondra samanyargal gowravikkpadavendia kaalam ippodhu thuvangiyirukkiradhu yendru solla thondruhiradhu.yethanai kaalam dhan brahmanargalum velalargalum kalaiyaiyum ilakkiyathaiym thangaladhu kaihalil vaithirukkamudiyum. Soothiran oruvarukku sahidya academy virudhu koduthu saatheeya melanmaiyai murithukkondadhu varalatruchuvadandri verenna?

  ReplyDelete
 29. Anonymous!

  கலையும், இலக்கியமும் வாழ்வோடு பின்னிப் பிணைந்து கிடப்பது சாமானியர்களிடம்தான். அதை உரக்கச் சொல்கிற காலம் இதுவாக இருப்பதில் நம் அனைவருக்கும் சந்தோஷம்தான்.

  ReplyDelete
 30. I am very happy to hear MR.Melanmai Ponnusamy received Such an award.
  He is deserved to that.
  I read many of him short stories and I like his writting.
  Thanks Mr. Mathavarj I came to know it thro. your blog only.

  Hariharan
  Doha

  ReplyDelete
 31. // பாகி என்றால் பாரதி கிருஷ்ணகுமாரா? //

  ஆம். அவரே தான்.

  ReplyDelete
 32. வெயிலான்!

  இப்போது முன்னைப் போல அவரோடு தொடர்பு இல்லை.

  ReplyDelete