காற்றுக்கென்ன வேலி

வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்

அதிகாரத்தை மையப்படுத்தி, அதனைக் கைப்பற்றும் பெருங்கதையாகவே இதுவரையிலான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் தீர்மானிக்கும் வல்லமையை அதிகாரம் எடுத்துக்கொள்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்திலும் அதற்கென்று கருத்துக்களை வைத்திருக்கிறது. அதுதான் முழுமையானதென்று நம்பவைக்கிறது. மீறக்கூடது என்று கட்டளைகளை விதித்து, அதையே ஒழுக்கம் என்பதாக அறிவிக்கிறது. புனிதமாக போற்றுகிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, அதிகாரத்தின் கைகள் ஒழுக்கத்தின் கோடுகளை அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் வளைத்தும், நெளித்தும் புதிய உருவாக்கங்களை கற்பிக்கிறது. அதாவது தனது நலன்களையும், செல்வாக்கையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதைகளை அவ்வப்போது செம்மைப் படுத்திக் கொள்கிறது.

அந்த விதிகளின்படி ஒழுகும் மக்கள் நன்மக்கள் என்றும், மற்றவர்கள் கலகக்காரர்கள் என்றும் தன்னிச்சையாக கருதும் அளவுக்கு சமூகத்தின் பொது அறிவு புரையோடிப் போய் இருக்கிறது. அறிவியலுக்கு முரணான, பெரும்பான்மை மக்களுக்கு விரோதமான கருத்தாக இருந்தாலும் அதுகுறித்து எந்த யோசனையும் செய்ய இயலாமல், பிரமைகளுக்குள்ளும், மயக்கங்களுக்குள்ளும் மனிதர்களை அமிழ்த்திவிடுகிறது. இந்தப் பிடியிலிருந்து உண்மைகளும், சுதந்திர உணர்வுகளும் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கின்றன. அவை யார் மூலமாவது, எதாவது ஒரு வடிவத்தில், எதாவது ஒரு காலக் கட்டத்தில் வெளிப்பட்டே விடுகின்றன. அவை அதிகாரத்தின் கூறுகளில் எதாவது ஒன்றை சிராய்த்துவிட்டால் கூட போதும். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் முகமும், தோற்றமும் மாறிவிடும். வெளிப்பட்ட அந்த உணர்வுகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மேலும் ஏற்படவிடாமல் தடை செய்யப்படும். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.

பல சமயங்களில், இப்படிப்பட்ட உண்மைகளை, உணர்வுகளை எழுத்தின் வடிவில் வெளிப்படுத்தி, அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானவர்கள் பலர் காலந்தோறும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியங்கள் மக்களை நெருங்கவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் மக்களின் அதிகாரம் பற்றி உண்மையிலேயே பேசிய அமைப்புகளும் பெரும்பான்மையான மக்களுக்கு விரோதமாக இலக்கியங்களை தடை செய்திருக்கின்றன. எல்லாம் அதிகாரத்தின் பேரிலேயே நடந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.

காலவெளியில் எழுத்துக்களின் அப்படிப்பட்ட வெற்றிகளை கொஞ்சம் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

முதலாவதாக- (இங்கே திறந்து படிக்கலாம்)

முன் பக்கம்

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்லதொரு முயற்சி. தொடருங்கள் மாதவராஜ். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மதுமிதா,

    சந்திப்பு

    இருவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    தொடரில் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் All quiet on the western front குறித்து எழுதியிருந்தேனே...

    படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள நல்ல ஒரு பதிவு நண்பரே ...

    வாழ்த்துக்களுடன்

    என்றும்
    இனிய தோழன்
    விஷ்ணு

    பதிலளிநீக்கு
  4. Yes.It is true.The ''Power has more Power''in all walks of life.In literature,Trade,offices,Politics and even in trade union movements the so called ''power'' is playing its own way.The majority of our valued time is being spend for facing the ''power''. The 'thurst' of life and self respect always has to struggle with the 'power'.No other way.-R.Vimala vidya-Namakkal-9442634002-vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு
  5. வணக்கம். உங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன். தொடர்ந்து எழுதவும். - பி.கே. சிவகுமார்

    பதிலளிநீக்கு
  6. Uncle you are back with a bang! எழுத்தில் அப்படி ஒரு வேகமும் வீரியமும். Hats off!

    பதிலளிநீக்கு
  7. The story about the story is excellent..Throughout the novel the humanism prevailed.some people should understand the differences between humanism and subjectivity..why don't you try to translate it ?Kindly think it over.Many best things have to be brought to Tamil language -Namakkal vimalavidya-9442634002-vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு
  8. விமலவித்யா அவர்களுக்கு

    ரொம்பவும் உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    உண்மைதான். மனிதன் இயற்கையோடு மட்டும் போராடவில்லை. தொடர்ந்து
    அதிகார மையங்களை எதிர்த்தும் போராடிக்கொண்டு இருக்கிறான்.

    நானா மொழிபெயர்க்க வேண்டும். அய்யோ! ரொம்ப சிரமம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!