சதத் ஹசன் மாண்ட்டோவையும் விடமாட்டாரோ ஜெயமோகன்?

"எழுதி எழுதி கீழ் செல்லும் ஜெயமோகனின் கை' யைத்தொடந்து வந்த கருத்துக்களில் தீபா இப்படி எழுதியிருந்தார்.

"I said to him, "I am a muslim, don't you want to kill me?'

"Not now, but while I was listening to them about the atrocities committed by Muslims, I could have killed you'.

His remark shocked me deeply. I suddenly understood the psychological background of India's communal bloodbath. He said he could have killed me " then' but not "now'. Therein lay the key to the communal holocaust of Partition.

- Sadat Hasan Manto.

Writers must remember this when they write about communalism. They cannot afford to be irresponsible. It would be a serious crime.

மிகச்சரியான பார்வை இது!.

நட்பும், பரஸ்பர அன்போடும் நேற்று வரை பழகிக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கணத்தில் எதிரெதிர் திசையில் நிற்பது திகைப்பாயிருக்கிறது. அப்படிப் பார்த்து கதறியவர்தான் சதத் ஹசன் மாண்ட்டோ. அம்பையும் குஜராத் கலவரம் குறித்து இதுபோல ஒரு சிறுகதை காலச்சுவட்டில் எழுதியிருப்பார்ர்கள். தாய்மை ஒளிரும் பெண்களுக்குள்ளும் வகுப்புவாதத்தின் வேர்கள் ஊடுருவி, பகைமை உணர்வு வெளிப்படுவதை தவிப்போடு சித்தரித்திருப்பார். ஒருவிதமான அச்சம் நம்மை பிழிவது போல இருக்கும். "18வது அட்சக்கோடு' நாவலில் அசோகமித்திரனும் வகுப்புவாதத்தின் கொடூரமான முகத்தை பதிவு செய்திருப்பார். ஒருக் கலவரத்தின்போது சந்திரசேகரனை விரட்டிக்கொண்டு முஸ்லீம்கள் சிலர் வருவார்கள். அவன் ஓடி, கடைசியில் ஒரு சுவரைத் தாண்டி குதிப்பான். அது மூஸ்லீம் குடும்பம் ஒன்று வசித்து வரும் வீடு. அப்போது அவர் எழுதியிருக்கும் வரிகள் எல்லோரையும் உலுக்கிவிடும்.

"அது ஹைதராபாத் செகந்திராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் வீடுகளில் ஒன்று. ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு. மூன்று நான்கு ஆண்கள். மூன்று நான்கு பெண்கள். மூன்று நான்கு குழந்தைகள். தவிர்க்க முடியாத கிழவி ஒருத்தி. அந்த மூன்று ஆண்கள் சேர்ந்து கொண்டு சந்திரசேகரனை கொன்று கூடப் போட்டு விடலாம். ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கையாக இருந்தார்கள். அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது.

சந்திரசேகரன் நிலைமையை புரிந்து கொள்வதற்குள் ஒன்று நடந்தது. அந்த பெண்மணிகளில் பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள்.

"நாங்கள் பிச்சை கேட்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்" என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கமிஸைக் கழற்றினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலேயும் அவளுடைய விலா எலும்புகளை தனித்தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள்.'

மொத்த மனித சமூகமும் கண்ணை மூடிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

தேசப்பிரிவினையின்போது இதுபோல ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடந்த, பெண்களின் அலறல்களிலும், குருதியிலும் கிழித்து எறியப்பட்ட நிலம்தான் இது. அந்த நாட்களில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இரண்டு சமூகத்துப் பெண்களும் பைத்தியம் பிடித்து எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். ஆகாயத்தைப் பார்த்தும் சிரித்தனர். எதையும் பார்க்காமலும் சிரித்தனர். பார்வை நிலைகுத்தியும் சிரித்தனர். அவர்கள் எதைப் பார்த்து சிரித்திருப்பார்கள். இரண்டு தேசங்களைப் பார்த்தா? தம்மைக் கெடுத்த ஆண்களைப் பார்த்தா? புனிதம், புனிதம் என்று ஓதுகிற இந்த மதங்களைப் பார்த்தா?

"The otherside of silence' by urvasi butalia வையும், "Borders and Boundaries' by Ritumenon & Kamala Bhasir யையும் படித்துப்பார்த்தால் நாமெல்லாம் ஓவென்று கதறி அழுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது.

இதையெல்லாம் உணர்ந்துதான் எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் விசை பத்திரிக்கையில் எழுதினார். "லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவீரவாதிகளால் அல்ல. சாதாரணமாக- இணக்கமாக- இயல்பாக வாழ்ந்துகொண்டிருந்த இந்துக்களும், முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும், பெண்களை கடத்துபவர்களாகவும், கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? மதவெறியர்களால் சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்துவிட்டெரிய சந்த்ர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. முற்போக்காளர்கள் சமாதான காலங்களில் சும்மா இருந்துவிட்டு, கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவீரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்" என்று கேட்டிருப்பார்.

பழிக்குப் பழி என்பதிலிருந்து விடுபட்டு பரஸ்பர இணக்கம் குறித்து மானுடம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும். தேசத்தில் மீண்டும் அப்படியொரு காட்டுமிராண்டித்தனங்கள் நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்திலும், சமூகப் பொறுப்பிலும்தான் தொடர்ந்து முற்போக்காளர்கள் சமயச்சார்பின்மை குறித்து பேசிவருகிறார்கள். அதை எல்லோரும் சரியாக புரிந்து கொண்டால், அவரவர்களுக்கான எல்லையும், வரம்பும் தெளிவாகும். உணர்வுபூர்வமாக பார்ப்பதைக் காட்டிலும் அறிவுபூர்வமாக யோசிக்கிற விஷயம் என்று வலியுறுத்துகிறார்கள். அதில்தான் ஜெயமோகன் போன்றவர்களுக்கு கோபம் வருகிறது.

எழுத்தாளர் அருந்ததிராயை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தியிருக்கும் ஜெயமோகன் சதத் ஹசன் மாண்ட்டோவையும், அசோகமித்திரனையும், அம்பையையும், ஊர்வசிபுட்டாலியாவையும், ரிதுமேனனையும், கமலா பஷிரையும் கூட விடமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அந்த மண்டை, இந்த மண்டை என்றும் எதாவது நக்கலான பேர்கள் சூட்டியும் தனது நகச்சுவைத் தொடரின் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்டு அகமகிழக்கூடும். எல்லாம் இப்போது தெளிவாக புரிகிறது. ஜெயமோகன் எதை தூவிக் கொண்டிருக்கிறார் என்பதும், நாம் எதை அணைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதும்.

சரிதான் வேணுகோபால்! நீங்கள் தெரிவித்த கருத்துக்களில் மேற்கோள்காட்டிய சமயவேலின் கவிதையைச் சொல்லி முடிக்கிறேன்.

"பிரியம் விதைத்த காட்டில்

நெருப்பு முளைத்தாலும்

பிடுங்கி எறிந்துவிட்டு

மீண்டும் உழுது வைப்போம்'

முன் பக்கம்

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. Arundati Roy is against the unity and integrity of this country as she wants Kashmir to be ceded from India. Are you for it?. Jeyamohan
  is not for it, nor am I. He is against Hindutva and islamic terrorism. He is against
  islamic groups that advocate a
  jihad and an islamic state as
  solution.Roy does not care even
  if Kashmir becomes another islamic state. Have you read her article in Outlook. Read that and then
  state whether you agree with her
  views or not. By the by Roy is not a fan of communist movement. She has condemned the regimes of stalin, mao and pol pot. So be careful in supporting her views.

  பதிலளிநீக்கு
 2. ///மொத்த மனித சமூகமும் கண்ணை மூடிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

  தேசப்பிரிவினையின்போது இதுபோல ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடந்த, பெண்களின் அலறல்களிலும், குருதியிலும் கிழித்து எறியப்பட்ட நிலம்தான் இது.///


  ஒரு தந்தை கலவர சமயத்தில் தனது மகளை தேடிக்கொண்டிருப்பார். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து காப்பாற்ற குழுக்களாக செயல்பட்டுகொண்டிருப்போரிடம் தனது மகளைத் தேடித்தரும்படி கேட்டுக்கொள்வார். அவர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி கண்டிப்பாக தேடி அழைத்து வருவதாகச் சொல்வார். தந்தையோ தனது மகள் பார்ப்பதற்கு இப்படிப்பட்ட அழகு என அவளைக்குறித்து அடையாளம் சொல்லும்போது சொல்வார். சிறுகதையின் காட்சியமைப்பு திடுக்கிடும் வண்ணம் இருக்கும். பயந்து மறைந்து ஒளிந்து இருக்கும் அப்பெண்ணை அப்பெண்தான் என அடையாளம் கண்டுகொள்கின்றனர். தந்தையிடம் சேர்ப்பதாக நம்பிக்கையளித்து அந்த நால்வரும் வண்டியில் அழைத்துச் செல்கின்றனர். ஒருவன் தன் மேலாடையைக்கூட அவளுக்காக அவள் போர்த்திக்கொள்ள அளிக்கிறான்.

  தந்தை மறுமுறை அவர்களை சந்திக்கும்போது அவசியம் திரும்பி வருவாள் என்கின்றனர். அதிர்ச்சி தொடர்கிறது. ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவள் அவருடைய மகளாக இருக்குமோ என அடையாளம் காட்ட அழைக்கின்றனர். அவரும் மிகுந்த மன உளைச்சலுடன் செல்கிறார். செத்துப்பிணமாக இருப்பது போல் இருக்கும் அவளை மருத்துவர் பரிசீலனை செய்கிறார். அப்போது வெளிச்சத்துக்காக ஜன்னல் கதவைத் திறக்கச் சொல்கிறார். பேச்சும் ஒலியும் சேர்கையில் அவளின் எதிர்வினை கொடுமை. அவளின் வாய் முணுமுணுப்பதும் கை அசைவினால் அவள் செய்கைவும் கண்டு மருத்துவர் வாயடைத்து அதிர்ந்துபோகிறார். சற்று தூரத்தில் அசைவையும் ஒலியையும் மட்டும் கேட்கும் தந்தையோ மகள் உயிருடன் இருக்கிறால் என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறார்.

  அய்யோ கடவுளே இதை எழுதும்போதே எழுத இயலவில்லையே. அப்பெண்ணின் அந்த தந்தையின் நிலை போன்றுதான் மதத்தின் பெயரால் எத்தனை கொடுமைகள். இதற்கு மேல் இப்போது எழுதவியலவில்லை.


  சதத் ஹசன் மாண்ட்டோவின் சிறுகதைகளும், சிறு கால்பக்கமே வரும் கருத்தாடல் கதைகளும் அவலச்சுவையை, இருண்டவாழ்வின் இன்னொரு பக்கத்தைக் காட்டுவனவாக இருக்கின்றன. இந்து, முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதன் வாழ்க்கைநிலையை வருத்தத்துடன் அதிரச்செய்யும் வார்த்தைப் பிரயோகங்களுடன் பதிவு செய்திருப்பார். இது குறித்து தனியாக எழுதவேண்டுமென நினைத்துக்கொண்டிருந்தேன். நினைவுபடுத்திவிட்டீர்கள் மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் எத்தனை காலம்தான் இந்த இடதுசாரிகள் மதச்சார்பின்மை, மதவாத எதிர்ப்பு என்பதை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள். இடதுசாரிகள் நடைமுறையில் சிறுபான்மை மதவாதிகளாக மாறிவிட்டார்கள்.இதை பலர் அறியாமல் இருப்பதுதான் இடதுசாரிகளுக்கு இன்று ஒரு பலமாக
  இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. ரவி ஸ்ரீனிவாஸ்!

  பெரும்பான்மை வகுப்புவாதமோ, அல்லது பேரின வாதமோ, எப்படி வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை எதிர்ப்பதாலேயே, இடதுசாரிகளை சிறுபான்மை மதவாதிகள் என்று தொடர்ந்து வலதுசாரிகள் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பான்மை வகுப்புவாதம், அதிகார பீடத்திலிருந்து பிறப்பது. சிறுபான்மை வகுப்புவாதம் அச்சத்திலிருந்து பிறப்பது. இந்த இரண்டையுமே நிராகரித்து, மக்கள் ஒற்றுமையை இடதுசாரிகள் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அது வலதுசாரிகளுக்கு பிடிப்பதில்லை.
  இதற்கு நான் என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 6. மதவாதத்தை எதிர்க்கும் 99.99% பேர் இந்துக்களாகவே உள்ளன்ர்.
  இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!