நண்பர்களுக்கு வணக்கம்.
தீராத பக்கங்கள் வலைத்தளம் – Mathavaraj என்னும் பெயரில் செல்போன் (Android mobile App ) ஆகவும் செயல்படுவது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அந்த Mathavaraj App செயல்பாட்டில் சில குறைகள் இருந்தன. புதிய பதிவுகள் வெளிவந்தால், அதுகுறித்த notification களை மொபைலுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிப்பதை நிறுத்தி விட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது.
அதுபோல், மொபைலில் - வாட்ஸப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ அல்லது வேறு எங்கோ தீராத பக்கங்களின் இணைப்புகளைத் (links) தொட்டால், பிரவுசர் வழியாக வலைத்தளத்திற்கு செல்வது வழக்கம். தங்கள் மொபைல் போனில் Mathavaraj Appஐ (install) நிறுவியிருந்தால் அந்த இணைப்புகளைத் தொட்டவுடன், App தானாகவே தீராத பக்கங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
தீராத பக்கங்கள் முன்பு மொபைலில் Full screenல் தெரிந்தது. அது மொபைல் போனில் கீழ் உள்ள பட்டன்களைத் தொட முடியாமல் இடைஞ்சலாக இருந்திருக்கும். அது இப்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் வலைத்தளங்களை திரட்டி காண்பிக்கும் ‘தமிழ் திரட்டி’ தீராத பக்கங்களில் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனவே Mathavaraj App-ஐ தங்கள் போனில் நிறுவிக்கொண்டால், மெனு மூலம் தமிழ் திரட்டியின் பக்கம் எளிதாகச் சென்று யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். தமிழ் திரட்டி மூலம் அந்த வலைத்தளங்களுக்குச் சென்று வாசிக்க முடியும்.
இந்த வசதிகளோடு, Mathavaraj - Mobile app-ன் புதிய வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. கீழே இருக்கும் படத்தை க்ளிக் செய்து Play Store-ல் தங்கள் மொபைலில் install செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே App-ஐ தங்கள் மொபைல் நிறுவியிருந்தால் Play storeல் Update செய்யச் சொல்லும். செய்து கொள்ளுங்கள்.
Notificationகளை allow செய்கிறீர்களா என்று கேட்கும். Allow செய்து கொள்ளுங்கள்.
மொபைல் போனின் settings செல்லுங்கள். அதன் கீழ் வரிசையாக லிஸ்டில் Apps என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் – வரிசையாக Alphabetical orderl-ல் Appsஇருக்கும். அதில் M வரிசையில் Mathavaraj -Appஐப் பார்க்க முடியும். அதை க்ளிக் செய்யுங்கள். அதில் வரிசையாக ஆப்ஷன்கள் இருக்கும். அதில் ‘Set as default’ என்று இருக்கும். அதை தொட்டால் Open supported links என்று வரும். அதை enable செய்து கொள்ளுங்கள். அதன் கீழே Supported links என்று இருக்கும். அதைத் தொட்டால் www.mathavaraj.com என்று இருக்கும். நீங்கள் சரியாக மொபைலில் mathavaraj app-ஐ நிறுவிக் கொண்டீர்கள். அவ்வளவுதான்.
இனி தீராத பக்கங்களை மொபைலில் முழுமையாக புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.
இதில் எதுவும் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள். சரி செய்து கொள்ள முடியும்.
தங்களுக்கு என் அன்பும், நன்றியும்.





You can comment here!