வைக்கோல் கட்டு அடர்ந்திருக்கும் ஆச்சி வீட்டின் பின்பக்கத்தில் நிற்கும் மாடுகளிடம் கறக்கும் பாலை வாங்கச் செல்லும் காலைகளில் “யப்பு, இந்த பனங்கொட்டைகளுக்குத் தண்ணீர் ஊத்திட்டுப் போ” என ஆச்சி சொன்னார்கள். சில நாட்களில் தோண்டியெடுக்கப் போகும் பனங்கிழங்கின், தவுணின் ருசி ஊற, தொட்டியில் இருந்து எடுத்து தண்ணீர் ஊற்றினேன். தருவைக் காட்டைத் தாண்டி, புதுக்குளத்தில் குளிக்கச் செல்லும் வழியில், தூரத்தில் தெரியும் வயல் வெளியும், அவைகளைச் சுற்றி அடர்ந்திருக்கும் பனை மரக் கூட்டமும் எப்போதும் அழகாகவே இருந்தன. பேயன்விளையில் பள்ளிக்குச் செல்லும் வழியிலும் வலது பக்கம் விரிந்த மணல் காட்டில் பனைமரங்கள் நின்றிருந்தன. பனம் பழங்களின் காலத்தில் ஊரே பிசுபிசுவென அந்த வாசனையில் ஊறிக் கிடந்தது. பனைத் தண்டுகளில் கட்டிய வடத்தில், தெருவில் தாவணி கட்டிய அக்காக்களின் சிரிப்புச் சத்தங்களோடு ஆடினேன். சந்தடியும் அரவமும் இல்லாத அடைக்கலாபுரம் ரோட்டில், வெளிச்சம் மயங்க ஆரம்பிக்கும் நேரத்தில், காலேஜிலிருந்து எதிர்க்காற்றில் சைக்கிளை அழுத்திக் கொண்டு திரும்பும்போது, சடசடக்கும் பனைமரங்களின் இரைச்சல் மிரட்டும். முதன்முதலாய் புகை பிடித்தது பனைமரத்து வேரில்தான். போதை கொண்டதும் பனங்கள்ளில்தான்.
பால்யமும், இளமைப்பருவமும் பனைகளின் ஊடேதான் கடந்து சென்றது.
எழுதியதில் பனைமரங்கள் வந்த எனது சிறுகதை கேட்டபோது, ‘இன்னும் கிளிகள்’ கதையைக் கொடுத்தேன். இன்னும் எவ்வளவு கதைகள் எழுதாமல் இருக்கின்றன என்பது எதிரே வந்து மறிக்கிறது.

.jpeg)

வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்