பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள்.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.
பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.
பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்
தீராத பக்கங்கள் வாசித்து தீராமல் நதி வெள்ளமாய் நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDeleteஇரமணிஷர்மா
மதுரை
இரமணிஷர்மா, தங்கள் வாழ்த்துக்கு என் அன்பும், மகிழ்ச்சியும்.
Deleteஅன்புள்ள மாதவராஜ், அற்புதமான சொற்கோவை.
ReplyDeleteவணக்கம் ரவீந்திரன். தங்களுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும். உற்சாகம் தரறீங்க.
Deleteசரி இப்போ உள்ள பைத்தியங்கள் எப்போ காணாமல் போவார்களா அல்லது குணமாவார்கள் என்று எண்ணுகிறீர்களா தோஸ்த்.
ReplyDeleteதெளிவாக சொல்லி இருக்கிறேனே சுப்பையா!
Delete