நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 4



”நான் என்ன செய்கிறேன் தெரியுமா?”
மனைவியிடம் கேட்டான்
அந்த மகா புருஷன்
 
புரியாமல் நின்றவளிடம்
புத்தன் நான் என்று
வீட்டை விட்டு வெளியேறினான்
 
ஐம்பத்தாறு ஆண்டுகளாய்
சொல்லத் துணியாத அவளிடம்
பத்திரமாய் இருக்கிறது
பதில் ஒன்று
 
“ஆசையைத் துறந்தவன்
அன்புக்காக அதிகாரத்தையே
விட்டுக் கொடுத்தவன்
புத்தன்
பேராசைக்காரன்
அதிகாரத்துக்காக
எதையும் விட்டுக் கொடுப்பவன்
என் புருஷன்”
 
நரைமுடி காற்றில் அலைய
வெறுமை கொண்ட கண்கள்
எங்கோ நிலைத்திருக்க
தனக்குள் சொல்லிக்கொள்ள
முடிந்ததெல்லாம் ஒன்றுதான்
அது-
”நான் யசோதாதான்”

Comments

0 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்