இன்று முதல் ‘தீராத பக்கங்கள்’ வலைத்தளத்தளத்தை ஒரு செயலி ( App ) ஆகவும் தங்கள் மொபைலில் படிக்க முடியும். அதில் தங்கள் கருத்துக்களை பகிர முடியும்.
இந்த நாளில் இருந்து கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்.
2003க்குப் பிறகு தமிழில் Blog என்னும் சமூக ஊடகம் அறிமுகமாகியது. அச்சு ஊடகங்களில் தங்கள் எழுத்துக்கள் வர காத்திருக்காமல், தங்களுக்கென வலைப்பக்கத்தை ஆரம்பித்து நிறைய இளைஞர்களும், பெண்களும் எழுதத் தொடங்கினார்கள்.
2008ல்தான் ’தீராத பக்கங்களை’ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கிறது. ஏராளமான நட்புகளும், எழுத்து உறவுகளும் மலர்ந்த காலம் அது. எவ்வளவோ உரையாடல்களாலும் விவாதங்களாலும் பதிவுலகம் ததும்பிக் கொண்டிருந்த காலம் அது. அதுவரை அறியப்படாத பலருக்கு கதவைத் திறந்து வைத்து வரவேற்ற காலமும்தான்.
எழுத மட்டுமில்லாமல், நிறைய வாசிக்கவும் முடிந்தது. அதுதான் Blog என்னும் சமூக ஊடகத்தின் சிறப்பே. தங்களுக்குப் பிடித்தமான பதிவர்கள் எழுதியதை உடனுக்குடன் நமது பிளாக்கிலேயே தெரியும்படி அந்த வடிவமைப்பு இருந்தது. மேலும் அதற்கென தமிழ்மணம், தமிழீஸ் போன்ற திரட்டிகள் எல்லோரின் எழுத்துக்களை ஓரிடத்தில் வரிசைப்படுத்திக் காட்டிக்கொண்டே இருந்தன.
தமிழ் இலக்கிய உலகத்திற்கு வலைப்பக்கங்கள் பெரும் பங்காற்றின என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான, காத்திரமான, நுட்பமான எழுத்துக்களைக் காண முடிந்தது. அமிர்தவர்ஷிணி அம்மாள், பா.ராஜாராம், மண்குதிரை, தீபலட்சுமி, சுரேஷ் கண்ணன், ராகவன், போகன், நேசமித்ரன், அய்யனார், ரிஷான் ஷெரிப், நிலாரசிகன், தமிழ்நதி, அனுஜன்யா, அ.மு.செய்யது, கார்த்திகைப் பாண்டியன், ஆ.முத்துராமலிங்கம், சந்தனமுல்லை, க.பாலாசி, அமுதா, கே.ஜே.அசோக்குமார், ஹேமா, என்று சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களின் பார்வைகளும், புலம்பெயர்ந்தவர்களின் உணர்வுகளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
2013க்குப் பிறகு இந்த Blog காலம் மெல்ல மங்கவும், மறையவும் தொடங்கியது. மிக முக்கியமான காரணம் Facebook, Whatsapp போன்ற சமூக ஊடகங்கள் என்றேத் தோன்றுகிறது. இந்த சமூக ஊடகங்கள் எல்லாம் மொபைலில் செயலிகளாய் (App) வந்திருந்தன. மக்கள் தங்கள் வாசிப்பையும், எழுத்தையும் கம்ப்யூட்டரிலிருந்து மொபைலுக்கு மாற்றிக்கொண்டனர். 2017க்குப் பிறகு Blog என்னும் சமூக ஊடகம் வறண்டு போக ஆரம்பித்தது. அதற்கென இருந்த வாசகர்கள் அங்கு இல்லை. திரட்டிகளும் பின்னர் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டன.
Blog மூலம் அறியப்பட்ட சிலரின் எழுத்துக்களையும், அவர்களின் படைப்புகளையும் இப்போது காணும் போதெல்லாம் எதோ ஒரு மகிழ்ச்சி ஒரு ஓரத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும். அதே நேரம் பலரின் எழுத்துக்கள் காணாமல் போய்விட்டன என அறியும்போது வெறுமை சூழும். எப்போதாவது Blog பக்கம் சென்று பிடித்தமான பதிவர்களின் எழுத்துக்களையும் கமெண்ட்களையும் படித்து காலத்தின் நிழல்களை பிடிக்க முயற்சி செய்வேன். ஆளரவற்ற வெளியில் தன்னந்தனியாய் உலவிக்கொண்டு இருப்பதைப் போன்ற மனநிலை வந்து தவிக்கச் செய்யும். அறிவும், உணர்வுகளும் நிறைந்த ஒரு பெரும் வெளி அங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த பிரக்ஞைகளிலிருந்து தோன்றியதுதான் Mathavaraj App. வலைத்தளங்களை இப்படி Appகளாக்கி, நம் மக்களின் கைகளில் மொபைலில் கையடக்கமாக உலவ விட்டுப் பார்க்கத் துணிந்தது. எதோ ஒரு முயற்சி செய்வோம் என இறங்க வைத்தது.
தொழில்நுட்பம் ஒன்றும் எனக்குத் தெரியாது. நானாக வலைப்பக்கங்களில் மேய்ந்து, மேய்ந்து தெரியாததை கொஞ்சம் தெரிந்ததாக்கி இந்த காரியத்தைச் செய்திருக்கிறேன். குறைகள் இருக்கும், சரிசெய்து கொள்வோம்.
கீழ்க்காணும் படத்தை கிளிக் செய்து Play Storeல் Mathavaraj Appஐ செய்து download செய்து தங்கள் மொபைலில் install செய்து கொள்ளுங்கள். தீராத பக்கங்களை வாசியுங்கள். உரையாடுங்கள்.
படித்து விட்டு கீழ்கண்ட படத்தை க்ளிக் செய்து அல்லது தொட்டு Google Play Storeல் App குறித்து உங்கள் மதிப்பீட்டை ( Rating and Review) பதிவு செய்யுங்கள்.
உங்கள் ஆதரவையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் எதிர்நோக்கி…
அன்பும் வாழ்த்துகளும்
ReplyDeleteஅன்பும், நன்றியும், தங்கள் பெயரைத் தெரியப்படுத்தலாமே. :-)
Deleteவாழ்த்துகள் தோழா
ReplyDeleteநன்றி தோழர். தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே.
Deleteஇனிய வாழ்த்துகள் தோழர்
ReplyDeleteநன்றி தோழர். தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே :-)
Deleteடவுன்லோட் பண்ணி பார்த்துக்கொ ண்டிருக்கிறேன் மாது
ReplyDeleteமகிழ்ச்சி. தாங்கள் யார் என்று குறிப்பிட்டு இருக்கலாமே.:-)
Deleteநல்ல முயற்சி..வாழ்த்துகள் தோழா..மதுரை சௌந்தர்..
ReplyDeleteநன்றி தோழர் சௌந்தர். தங்களுக்கு என் அன்பு.
Deleteதோழர். வணக்கம். வாழ்த்துகளுடன், க.ஷெரீப், சிவகாசி.
ReplyDeleteதோழர் ஷெரிப்! வருகைக்கு நன்றி. அன்பும், மகிழ்ச்சியும்.
DeleteApp ல் படித்து கொண்டிருக்கிறேன் ஐயா... தங்களின் கிளிக் நாவல் படித்தேன் எதிர்பாரத முடிவுகள் மிக அருமை நன்றி ஐயா
ReplyDeleteஇப்படிக்கு
சக்தி
மகிழ்ச்சி சக்தி. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள். உரையாடலாம்.
Delete