பாராளுமன்றத்துக்குள் முதன் முதலாய் நுழையும்போது தரையில் விழுந்து வணங்கினான்.
சான்றோர் நிறைந்த சபையில் தன் பேச்சை துவக்கும்போது, தனது முதல் மரியாதை நாட்டின்
விவசாயிகளுக்கு என்று சொல்லி வணங்கினான்.
எல்லையில் போய் இராணுவ வீரரக்ளை வணங்கி அவர்களுக்கு இனிப்பு வழங்கினான்.
தனது குறைந்த வருவாயில் சேமித்து கழிப்பிடம் கட்டிய கிராமத்து மூதாட்டியை மேடைக்கு
அழைத்து எல்லோர் முன்னாலும் வணங்கினான்.
தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு வணக்கம் சொல்லி, அறிவுரை வழங்கினான்.
மக்களை எல்லாம் வணங்கி அவர்களின் மனதோடு பேசுவதாகச் சொன்னான்.
அன்றொரு நாள் இது போல ஒருவன் மகாத்மாவுக்கு முதலில் வணக்கம்தான் செலுத்தினான்.
அருமை மாதவ்
பதிலளிநீக்குவேணு