காலத்துளி

Salvador-Dali-Painting

 

இரவின் நிசப்தத்தை
மெலிதான ஒலியில்
கலைத்துக் கொண்டிருந்த
கடிகாரத்திலிருந்து
டொக் டொக் என்று
சொட்டிக் கொண்டே இருந்தது காலம்...

 

- எஸ் வி வேணுகோபாலன்

(pic: Salvador-Dali-Painting)

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நான் நினைத்தால் காலத்தை
  நிறுத்தி வைப்பேன்.-என்
  கை கடிகாரத்தில்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை தோழர்,ஓவியம் அழகாகப் பொருந்துகிறது, கலீல் கிப்ரானின் கடிகாரக் கவிதை குறித்து அப்துல்ரகுமான் எழுதியதை நினைவூட்டுகிறது

  பதிலளிநீக்கு
 3. டிக். டிக் என்னும் சத்தம் டொக் டொக் என்று கழிந்துகொண்டிருக்கும் காலத்தை உருவகப்படுத்தி ரசிக்கும்படி எழுதியிருக்கிற கவிதை மிகவும் கவர்ந்தது..

  அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 4. அன்பு மாதவ்

  காலத்தைப் பற்றிய கற்பனை எப்போதும் வரவேற்பைப் பெறுவது.
  காலமே நமது கற்பனை தானே..
  நம்மை அளந்து கொள்ள, நாம் காலம் என்ற கருவியை
  உருவாக்கிவிட்டு, இப்போது காலம் பற்றி அளந்து கொண்டிருக்கிறோம்.
  கடிகாரங்கள் வேறு நேரத்தை உணர்த்தக் கண்டுபிடிக்கப்பட்டது போய்
  இப்போது காதல், நம்பிக்கை, அச்சம், உறுதிமொழி, துரோகம், மிரட்டல், உண்மைக்கும் பொய்மைக்கும் சாட்சி.....என எத்தனை விஷயங்களுக்குக் குறியீடாகி விட்டது!
  எனது தந்தை நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஒரு முறை நீ என் கைக் கடிகாரம் கட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்று கேட்டார், எல்லையற்ற காலத்தை எப்படி ஒருவன் தனது மணிக்கட்டில் கட்டிக் கொண்டுவிட முடியும் என்று நான் அவரைக் கேட்டேன்.
  கடிகாரம் இல்லாவிட்டாலும் காலம் ஓடிக் கொண்டே இருக்குமே என்று இந்தக் கவிதையை வாசித்த எனது நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் எழுதிக் கேட்டார். காலம் தான் உண்மை, கடிகாரம் மாயை என்று அத்வைத பாணியில் நான் அவருக்குப் பதில் சொல்லிவிட்டேன்...
  நன்றி மாதவ்...
  பவித்ர பாபு, ஷீ நிசி இருவருக்கும் சிறப்பு நன்றி.
  கவிதையை வாசித்து ரசித்த அல்லது கடந்து போன
  அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!