எழுத்தென்பது…



நான் பொய்யன். என் பொய்களை  எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.

நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.

நான் திருடன். என் திருட்டுத்தனத்தை எழுதினேன். நேர்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.

நான் என்னை மறைத்து,  உயர்வாய் எழுத ஆரம்பித்தேன் ஒருநாள். எல்லோரும் சேர்ந்து  நின்று ‘பொய்யன்’, ‘அசிங்கமானவன்’, ‘திருடன்’ எனப் பழித்தார்கள். என் எழுத்துக்களே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. @செங்கதிர்ச் செல்வன்!

    ஏன் உடனே, யாருடனாவது சம்பந்தப்படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது நமக்கு. ஒரு சிறு பொறியில், பொதுவான உண்மை ஒன்று எனத் தோன்றும். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

    சாருவைப் பற்றி என்றால், அவரைப் பற்றி என்றே குறிப்பிட்டு எழுதுவேன். அந்தத் திராணியும், நேர்மையும் எனக்குண்டு என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ”...வாய்ச் சொல்லில் வீரரடி”என்று பாரதி எழுதியபோது கருணானிதி பிறக்கவில்லைதான் ஆனாலும் அது எப்படி அவரோடு பொருந்திப் போகிறதோ அப்படித்தான் இதுவும் மாதவராஜ். யாரோடெல்லாம் பொருந்திப் போகவேண்டுமோ அவர்களோடெல்லாம் பொருந்தித் தோன்றவே செய்யும். நெசத்துக்கும் அற்புதம்

    பதிலளிநீக்கு
  3. எழுதாமல் இருந்தால்,'ரொம்ப நல்லவன்' என்பார்களோ எனப் பயந்து எதையாவது எழுதிக் கொண்டும் இருக்கிறேன். (பீ கேர் ஃபுல்! நான் என்னைச் சொன்னேன்) :-)

    பதிலளிநீக்கு
  4. சார் இப்ப என்ன சொல்ல வரீங்க .. நங்கெல்லாம் எழுதலாமா வேண்டாமா??

    பதிலளிநீக்கு
  5. Beauty of these lines are how we interpret it for our own way or convenience.

    பதிலளிநீக்கு
  6. எழுத்து உண்மைக்கு அருகில் இருக்கும் போது உயர்வைத்தருகிறது. உயர்விற்காக புனையப்படும் பொய்கள் தாழ்வைத் தருகின்றன.

    அருமையான வரிகள்.
    நாம் எப்போதும் எதையும் பிறருக்கே பொறுத்திப் பார்க்கிறோம். இவ்வரிகள் நம்முடன் வினைபுரிவது அவசியம்.

    பதிலளிநீக்கு
  7. வெகுவாக ரசித்தேன் தோழர்
    (பா.ரா பின்னூட்டம் உட்பட )

    பதிலளிநீக்கு
  8. அன்பு மாதவராஜ்,

    இதில் எழுதுகிற எல்லாருமே தெரிகிறார்கள்... ஒரு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது...

    எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன்...காட்டிக் கொடுக்காத எழுத்தை யாரால் எழுதமுடியும்...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  9. ஆமா ஆமா ... சாருக்கும், யாருக்கும் இது பொருந்தவில்லை

    பதிலளிநீக்கு
  10. எழுதுகிற எழுத்தால்தான் ஒவ்வொருத்த்ரையும் பத்தி தெரிஞ்சிக்கிறோம்.

    உன் நண்பன் யார், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது பழஞ்சொல், இப்ப உங்க வலைப்பூ தான் உங்களை காமிக்குது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!