அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை!மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை,  இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். இன்று  இந்தியாவின்  நாயகர் போல முன்னிற்கிறார்.  தேசத்தின் ஊழல் கறையை அகற்ற வந்த உத்தமர் அவர்  என்று முழக்கங்கள் கேட்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஃபேஸ்புக், டுவிட்டர் என எங்கெங்கு காணினும் ‘அன்னா ஹசாரே;, ‘அன்னா ஹசாரே’.  திடுமென இப்படியொருவர் எங்கிருந்து குதித்து வந்தார் என்று யாரும் கேட்கவில்லை. மக்கள் அனைவரும் அவர் பின்னால் திரண்டு நிற்பதாய் என்.டி.டி.வி, டைம்ஸ் நௌவும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவர்தான் நம் நம்பிக்கை என கைகாட்டுகின்றன.  சாத்தூரின் ஒருச் சின்ன டீக்கடையில் பேப்பர் படிக்கும் நான்கைந்து பேரின் விடிகாலைப் பேச்சில் இப்போது அன்னா ஹசாரேவும் இருக்கிறார்.

எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத்தான் அவரும் பேசினார். “ஊழலை ஒழிக்க முடியும்” என பேசியபோதெல்லாம்  ஏளனமாய் சிரித்த அலுவலக நண்பன் இப்போது அன்னா ஹசாரேவின் விசிறி. ஊழலை அதிகாரபூர்வமாக்கிவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டே வேதனைப் பட்டபோது, “ஆமாம், வேறு என்ன செய்ய முடியும்?” என அங்கலாய்த்தவர்கள் இப்போது அன்னா ஹசாரேவின் பேரை உச்சரித்தபடி  ஊர் ஊருக்குக் கூட்டம் நடத்துகிறார்கள். மக்களின் மனமாற்றங்கள்  இங்கு ‘உடனடி’யாக நடந்துவிடுகின்றன.

நீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக்  கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும்,  சினிமா  நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள்.  தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன.  ஊழலில் திளைக்கும்  காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன.  இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையில்லாதவை. அன்னா ஹசாரே என்னும் தேவதூதர் வந்து ஊழல் பற்றிப் பேச வேண்டும். அதற்காக காத்திருந்தார்கள் போலும்.

ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பால் மசோதா வரைவை தயாரிக்கும்  கமிட்டியில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும் என அன்னா ஹசாரே கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசு அதனை நிராகரித்து, ஒரு குழுவை அமைக்க முன்வந்ததும், ஹசாரே காலவரையற்ற  தன் உண்ணாவிரதத்தை ஒருநாள் துவக்கினார். தொலைக்காட்சிகள் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தன.  அவ்வளவுதான் சடசடவென எங்கும் தீப்பற்றிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வேண்டும்.  அது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தொட்டு நின்ற பிறகு  வந்தது. அன்னா ஹசாரேவும் வந்துவிட்டார். இனி ஊழலை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாய்  வரிந்து கட்டி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.

இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி,  வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம்.  பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்  இருக்க ஆரம்பித்தார்.

நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும்.  அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன  என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில்  வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.

ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும்  ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின்  உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே  உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.  ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக  பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது.  இது விதி.  இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும்  கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.

இப்படி ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த மசோதா சரியாக நிறைவேற்றப்பட்டால்,  ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தக் கூடும். ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் இன்னொரு புறம். இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை நாளைக்கு  அமல்படுத்தப் போகிறவர்கள். சிரிப்பாக இல்லை?

இந்த தேசத்தில் திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே? இதோ, மதுரையில்  அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது? நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம்.  ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி  அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து  நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம்.

அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி,  இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை  கண்டாரோ?

இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம்.  அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது?  மந்திரம்தான்.
 
(கார்ட்டூன்: தேவா வரைந்தது.  எஸ்.வி.வேணுகோபால் மெயிலில் அனுப்பி வைத்திருந்தார்.)

கருத்துகள்

47 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. Sir , you are affected with 'Modi phobia'.because Anna congradulate his gov.. Ok , Then what is the solution for corrunt political system. I think you are journey going to Nxalism.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் மாதவராஜ்,
  வணக்கம்.மிக நல்ல பதிவு என்பதைவிட மிகவும் தேவையானப் பதிவாகவே இதைப் பார்க்கிறேன். மதுரையில் சகாயமாகட்டும் திருச்சியில் சங்கீதாவாகட்டும் கண்டுகொள்ளப் படவே இல்லை. ஆனால் அன்னா கொண்டாடப் படுகிறார் எனில் இதில் இருக்கும் அரசியலை அம்பலப் படுத்தத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஊடகங்கள் தோளில் தூக்கி ஆடியபோதே தெரிந்து விட்டது இந்த அண்ணா யாரென்று.

  பதிலளிநீக்கு
 4. மாதவ் ஜி! அன்னா ஹஸாரே பற்றி மிக அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள். அவரைப்பற்றிய பிரச்சாரத்திற்காக ஒரு அறக்கட்டளையே உருவாக்கியுள்ளார்கள் சமார் 80 லட்சம் வசூல். இதுவரை 30 லட்சம் செலவாகியுள்ளது. மீதம் 50 லட்சம் உள்ளது. உண்ணாவிரதப் பந்தலுக்கு மட்டும் 10 லட்சம் செலவு. பகாசுர அலுமினிய முதலாளி ஜிண்டால் 25 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். கம்பெனி முதலாளிகள் அள்ளிக்கொடுத்துள்ளார்கள்.வெளியே வருவது பூனையா?பெருச்சாளியா? விரைவில் தெரிந்து விடும்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 5. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது? நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம். // சரியாகச் சொன்னீர்கள்

  பதிலளிநீக்கு
 6. அன்னா குறித்த மிக முக்கியமான பதிவு இது மாதவ், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. Would like to know what have u done for fighting against corruption? Have u ever followed traffic rules, helped others, ever visited govt hospital and offered help to needy? Ever been to udhavum karangal and hales orphaned children by taking tutions? Ever ensured you didn't drop garbage on the road ? Ever ensured u used only toilets and not roads to urinate? If u r following any one of these then I wud say u have every right talking abt this movement. Else please do something to society before bitching about it...

  பதிலளிநீக்கு
 8. Ha ha ha... Good joke... When u can't even make comments section public why the hell do u write something??

  பதிலளிநீக்கு
 9. namy!

  இந்தப் பதிவில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், அதையெல்லாம் மிக சுலபமாகக் கடந்து,//Sir , you are affected with 'Modi phobia'.because Anna congradulate his gov.. Ok// என்று எளிதாக பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள்.


  இரா.எட்வின்!
  மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்.


  சிலந்தி!
  ஆம், அப்படியும் பார்க்க வேண்டி இருக்கிறது.


  காஸ்யபன்!
  மிக்க நன்றி தோழர். நீங்கள் மேலும் பல விஷயங்களை எடுத்து அடுக்கி இருக்கிறீர்கள்.பார்ப்போம்.


  பகுத்தறிவு!
  மிக்க நன்றி நண்பரே!


  ரமேஷ்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஆனந்த்!

  ஓஹோ, இவையெல்லாம் கடைப்பிடித்தால்தான், இந்த ஊழலைப் பற்றி பேச வேண்டுமோ.அப்படியானால், இதையெல்லாம் கடைப்பிடித்தவர்கள்தாம் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார்களோ? சிரிப்பாய் இருக்கிறது.

  பை த பை, நண்பரே, என்னால் முடிந்தவரை இச்சமூகத்தில் நேர்மையானவனாகவே இருந்து வருகிறேன். என்னை வார்த்த இடதுசாரி இயக்கம் எனக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் பணிபுரியும் தொழிற்சங்கம் அதற்கான உரத்தைத் தந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. கேரளாவில் இடதுசாரிகள் சரத்பவாருடன் கை கோர்த்து உள்ளனரே.அவர்களா ஊழலை ஒழிப்பார்கள்.? :-)

  பதிலளிநீக்கு
 12. தொலைக்காட்சிகள் எல்லாம் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கும்போது அதற்கான வாய்ப்பு ஏது?
  அதோடு இடதுசாரிகளும் ஊழல் அரசியல் வாதிகளின் பின்னால்தான் அணிவகுத்துக் கொண்டு நிற்கிறார்களே. என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
 13. சகோதரர் மாதவராஜ் அவர்களுக்கு உண்ணாவிரதம் என்பது இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மிகப்பெரிய உரிமை , ஆயுதம் என்று சொல்லலாம் ...
  இந்த ஊடகங்கள் இதற்கு முந்தய காலங்களில் எத்தனயோ இந்தியர்கள் இருந்த உண்ணாவிரதங்களை எல்லாம் சாதாரண செய்தியாக மட்டும் வெளியிட்டார்கள்.
  எல்லா உன்னாவிரதங்களிலும் ஒரு உத்தமமான காரணம் இருந்த்திரிக்கிறது.

  இதில் கொடுமையான விஷயம் நாங்கள் எங்கள் கல்லூரிக்காக இருந்த உண்ணாவிரத்தில் எங்களை அடித்து உதைத்து சாகும் வரை உண்ணாவிரத்தை முடிக்கவைத்தனர். அப்போது இந்த ஊடகங்களுக்கு எவ்வளவோ தகவல் கொடுத்தும் அது வெளியே தெரியாமலே போனது .

  ஊடகங்கள் நேர்மையாக நடந்தால் ஜனநாயகத்தின் நாலாவது தூண் நிமிர்ந்து நிற்கும்

  பதிலளிநீக்கு
 14. First of all I apologise for not writing in Tamil.

  I am not here to say Hazare is genuine person but could you justify your complaints about Hazare with proof which will make all of us to think. How can I trust your complaints??? excluding 1 or 2 incidents. We can give "n" number of incidents for a person in either good manner or in a bad manner.

  I suppose none of the leaders in this world is 100% genuine, atleast through hazare we got a mob which is against corruption. If hazare is wrong in any aspect we can also identify him with the right to information act(introduced by hazare itself)

  Regarding the ministers included in Janlok pal we(supporters of hazare) are already against it and we working for the same itself. If you have any ideas about how this community can be organised and can be formed as a original community against corruption with none of the blood suckers in it (may be any one me, you, hazare, etc)then let us know. I am sure we can take hazare out of committee if he doesn't have the qualifications.

  I think this will better guide the community rather than criticising it.

  பதிலளிநீக்கு
 15. இந்த காந்தியின் மறு அவதாரம் அண்ணா ஹஜரே நடத்திய உண்ணாவிரத சிலவு 50 லட்சமாமே உண்மையா

  பதிலளிநீக்கு
 16. அன்னாஹசாரே என்ற திடீர் புரட்சியாளரை எதற்காக இத்தனை ஊடகங்களும் இப்படித் தூக்கிப்பிடித்துக் காட்சிப்படுத்துகின்றன என்ற மர்மங்களெல்லாம் கொஞ்சநாட்களில் விடுபட்டுவிடும். அதன்பிறகு அவர்களும் வேறுவிஷயங்கள் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள். தார்மீக ஆதரவு காட்டும் நம் இளைஞர்களும் அடுத்த கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகிவிடுவார்கள். தங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மைக்குப் பாராட்டுக்கள் மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 17. கேரளாவில் மார்க்சிசுட்டுகளுக்கு சுமார் ஐயாயிரம் கோடி சொத்து உள்ளது. கேரளாவில் குண்டாயிசத்தை பரப்பியதே (அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில்) கம்யுனிஸ்ட்டுகள் தான் என்கிறார் எனது கேரளா மேலாளர். இதனால் காங்கிரசும் அதன் வழியிலேயே பயணிக்கும் என்றும் சொன்னார். பிரச்சினை எந்த சித்தாந்தத்தில்? திருப்பூரில் கம்யுனிஸ்ட்டுகள் எப்படியெல்லாம் பணம் பண்ணுகிறார்கள் என்பது சந்தி சிரிக்கிறது இதில் எனக்கு தனிப்பிட்ட பட்டறிவு உள்ளது. அதெப்படி ஒரே சித்தாந்தம், தொழிற்சங்கம் ஆளுக்கு ஆள் மாறுபட்ட கொள்கைகளை கற்பிக்கிறது?

  பதிலளிநீக்கு
 18. ரகு!

  இந்த தேசத்தை ஊழல் மயமாக்கியதில் பெரும் பங்கு கொண்ட காங்கிரஸை எதிர்த்து, கேரளாவில் சரத்பவாரின் காங்கிரஸோடு தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறது சி.பி.எம். அவ்வளவுதான். கேரளாவில் ஆளும் கட்சியாயிருக்கிற சி.பி.எம் மீது இந்த காங்கிரஸ் கட்சியால் என்ன ஊழல் குற்றச்சாட்டுக்களை இதுவரை சுமத்த முடிந்திருக்கிறதாம்?

  பதிலளிநீக்கு
 19. //ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம். //

  போராடுவதற்கான தேவைகள் அத்தனையும் இந்தியாவில் இருந்தும் கூட,இடதுசாரிகள் உழைக்கும் வர்க்கத்தின் குரலாக இருந்தும் கூட இரவல் வாங்கிய சித்தாந்த பெயரால் தோற்றுப் போகிறார்கள் என நினைக்கிறேன்.

  முழுவதுமாக அழுகிப் போன அரசியல் அமைப்பாக இந்தியா மாறி விட்டதால் மூழ்கிப்போகின்றவன் கிடைத்ததைப் பற்றிக்கொள்கிற மாதிரி திடீரென ஒலித்த ஹசாரேவின் குரல் எல்லோரையும் கவர்ந்தது.

  கிரிக்கெட்டிற்கு மக்கள் ஆதரவும்,சிலரின் எதிர்ப்பும் மாதிரி ஹசாரேவுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்.

  நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் கருணாநிதி மாதிரி பால் தாக்கரேவும்,மோடியும் அந்த மாநில மக்களின் பிதாமகன்கள்:)இதில் ஹசாரேவை நொந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

  பதிலளிநீக்கு
 20. //I suppose none of the leaders in this world is 100% genuine, atleast through hazare we got a mob which is against corruption.//

  There you are!நம்ம ஊரு சினிமா மொழியில சொல்லனுமின்னா அது:)

  பதிலளிநீக்கு
 21. mirror!

  நன்றி வருகைக்கு. ரகுவிற்கு சொன்னதுதான் தங்களுக்கும்.

  எவனோ ஒருவன்!
  உண்மைதான். இங்கு ஊடகங்களும் ஊழல் செய்கின்றன. அதை இன்னொரு பதிவில் விரிவாக ஆராய்வோம்.


  மு.இசக்கியப்பன்!
  ஹசாரே மீதான் எந்த complaintக்கு proof கேட்கிறீர்கள்? ராஜ் தாக்கரேவையும், மோடியையும் ஆதரித்ததற்கா? லிங்க் தரலாம்.

  மற்றபடி, திடீர்னு வானத்தில் இருந்து குதித்து, நானே உங்கள் இரட்சகன் என்று சொல்கிற முன்பின் தெரியாத எவரையும் நான் உடனடியாக நம்புவதாயில்லை. நம்மோடு இருந்து, நமக்காக தொடர்ந்து போராடுகிறவர்கள் மீதுதான் நம்பிக்கை இருக்க முடியும்.

  அவர் நிஜத்தில் ஊழலை எதிர்க்கிற போராளியாக இருந்தால் முதலாளிகள் அவரைத் தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். ஆனால் இன்று அவர்களே ஹசாரேவை ஸ்பான்ஸர் செய்கின்றனர்! அவருக்குப் பின்னால் மக்களைத் திரட்டியது ஊடகங்களே. இதுதான் விந்தை!


  ஊழலை நிஜமாகவே நாம் ஒழிக்க வேண்டுமென்றால், அதன் ஊற்றுக்கண்ணாய் இருக்கிற தனியார் மயத்தையும், தாராள மயத்தையும் எதிர்த்தாக வேண்டும். இதுதான் இயக்கத்தை சரியான திசையில் எடுத்துச் செல்ல உதவும் என நினைக்கிறேன்.

  வாழ்த்துக்கள்.


  பரணி!
  ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். தெரியவில்லை.


  அமுதவன்!
  இதுவும் வருத்தமளிக்கிறது. நம் மக்கள் சீசனுக்கு ஏற்றாற்போல், எதையாவது கொஞ்ச நாள் தூக்கிப் பிடிக்கிறார்கள். பிறகு வேறொன்றின் பக்கம் ஓடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த மத்திய தர வர்க்கம் இருக்கிறதே, அது செய்கிற அழிச்சாட்டியம் அதிகம். அவர்கள் அப்படி இருப்பதுதான் இந்த முதலாளித்துவ அமைப்புக்குத் தேவை. மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கண்காணிக்கிறவர்களாக, கேள்விகள் எழுப்புகிறவர்களாக இருந்தால், பலம் பெரும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.


  செந்திலான்!
  சி.பி.எம், கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றன. தமிழகத்திலும்தான் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும், கட்சிக்கென்று சொந்த அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றனர்.எல்லாமே மக்களிடம் திரட்டியதுதான். ஊழல் செய்து அல்ல. அதே வேளையில் ஊழல் செய்து பிழைக்கும் கட்சிகளுக்கென்று எந்த மாவட்டத்தில் சொந்தமாக அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றன என யோசியுங்கள். விஷய்ங்கள் தெளிவாகும்.

  சி.பி.எம்தான் குண்டாயிசத்தை வளர்த்தது என்பது தவறு. சி.பி.எம் ஒன்றும் காந்தியவாதிகள் அல்ல. அடிபட்டாலும் திருப்பி அடிக்காமல் குனிந்து கொண்டே இருப்பதற்கு. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று மார்க்ஸ் ஒன்றும் சொல்லித் தரவில்லை. அடித்தால் திருப்பி அடிப்போம்,பழி செய்தால் பழி தீர்ப்போம் என்பதில் சி.பி.எம்மிற்கு ஒன்றும் சமரசமில்லை. பாட்டாளிவர்க்க ஆக்ரோஷம் இது. இது குண்டாயிசம் என்றால், அந்த குண்டாயிசம் தேவையே!

  பதிலளிநீக்கு
 22. அவர்கள் வளர்த்த குண்டாயிசம் என்பது அக்மார்க் குண்டாயிசம் நீங்கள் சொல்வது ஏதோ பதிலடி மாதிரி சொல்கிறீர்கள். அதாவது மாமூல், கட்டப்பஞ்சாயத்து, உள்ளூர் தாதாக்களாக வலம் வருவது போன்றவை.

  // கேரளாவில் ஆளும் கட்சியாயிருக்கிற சி.பி.எம் மீது இந்த காங்கிரஸ் கட்சியால் என்ன ஊழல் குற்றச்சாட்டுக்களை இதுவரை சுமத்த முடிந்திருக்கிறதாம்?//
  பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்களை எந்த வகையில் சேர்ப்பது?

  பதிலளிநீக்கு
 23. நல்ல கட்டுரை!!

  சகாயத்தை என்ற ஆட்சியரை வலைப்பூ மூலமாகத்தான் நிறைய பேருக்கு தெரிய வந்தது. நம்து மீடியாக்கள் ரெம்ப ஜாக்கிரதையானவர்கள். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. ஒருவர் என்னிடம் கேட்டார். ஏன் இடதுசாரிகள் இந்தமாதிரி சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கவில்லை என்று. சிலர் தும்மினாலே செய்தியாகிறது, ஆனால் விலைவாசி உயர்வுக்காகவும் சாமன்ய மக்களை பாதிக்கிற பெட்ரோல் டீசல் விலைவாசியை கண்டித்து இடதுசரிகள் போராட்டம் நடத்தி சில்ருடைய மண்டையை போலீஸ் நொறுக்கினாலும் செய்தியாவதில்லை. இதுவும் ஒரு அரசியல் என்பது நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறதே! என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 24. நம் உடல் முழுவதும் புரையோடிருக்கிற ஊழலை எதிர்க்கக் கூடிய சக்தி நம் மக்களுக்கு இருக்குன்னு உணர்த்தியிருக்கிற அன்னா ஹசாரேயின் இந்தப் போராட்டத்தை நீங்கள் குறை சொல்வது சரியான பார்வைஎன்று தோன்றவில்லை. அவரது உள்நோக்கத்தை குறை சொல்வதன் மூலம் யாரும் பலன் அடையப் போவதில்லை.

  இந்தப் போராட்டத்தில் ஹசாரே முதலாளிகளின் எடுபிடியாக செயல்படவில்லை. தனி மனிதரின் துவக்கத்தில் ஆரம்பித்து பற்றி எரிந்த ஒன்று. இந்தப் போராட்டத்தில் மோடிக்காகவோ அல்லது ராஜ் தக்கறேக்காகவோ நடந்த ஒன்று அல்ல. அவரே எதிர் பார்க்காத ஒன்று. மக்கள் சக்தியின் ஆதரவு பெருகும் சமயத்தில் முதலாளிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடி வந்தது தான் உண்மை.

  எந்த ஒரு போராட்டத்திலும் ஒரு அளவுக்கு மேல் முன் வைக்கும் போது யோசித்து தான் செயல் படவேண்டும். ஹசாரேயின் இலக்கு லோக்பால் சட்டம் அவரது எதிர்பார்ப்பு படி வரவேண்டும் என்று தான். அதற்கு அரசு ஏற்று கொண்டவுடன் அவரது போராட்டத்தை நிறுத்தியுள்ளார். இது சரியே. ஒரு மாணவர் சங்க அல்லது மாதர் சங்கப் போராட்டம் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதுடன் முடிவடைவது போலத்தான்.

  அரசு அமைக்கக் கூடிய கமிட்டியில் யார் இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு தான் பிரஷர் கொடுக்க முடியும். அதை தான் அவர் செய்துள்ளார்.

  ஹசாறேவின் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று எல்லோருக்கும் சந்தேகம் உண்டு. சந்தேகத்தை தெரிவிப்பது சரி. உள்நோக்கம் கர்ப்பிப்பது தவறு.

  பதிலளிநீக்கு
 25. செந்திலான்!

  ஊழலில் வளர்ந்து, ஊழலில் பெருத்துக் கிடக்கும் காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டுகள் இவை. இது எவ்வளவு அப்பட்டமான பொய்கள் என்பதையறிய இந்தச் சுட்டிகளை படிக்கலாம்.

  http://ganeshwrites.blogspot.com/2009/06/blog-post_12.html

  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=360:2009-08-31-06-26-31&catid=915:09&Itemid=144  ஹரிஹரன்!
  வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி.


  ஓலை!
  நான் உள்நோக்கம் கற்பிக்கவில்லை நண்பரே! சந்தேகப்படுகிறேன். அதற்கான பின்னணியைச் சொல்லியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. இந்தப் பணிகளைச் செய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக செய்யும் வழியை அரசு தேர்ந்தெடுத்தது.
  //
  இங்கே தான் இடிக்கிறது...இந்தப் புரிந்துணர்வு என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்.

  இதே போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் இங்கு இரு கழகங்களின் ஒப்பந்ததாரர்கள் மாறி மாறி "புரிந்துகொண்டு" "புரிகிறார்கள்"

  திரிபுரா நிரூபன் சக்ரவர்த்தியின் அளவுகோலை அப்படியே மாஸ்கோ மழைக்கு மதுரையில் குடை பிடிப்பது மாதிரி கேரளா விஜயன்களுக்கு பொருத்தமுடியாது. கேரளாவில் மிக மோசமான பேராசைத்தனமான நுகர்வுக் கலாச்சாரம் கொலேச்சுகிறது
  அதனால் விஜயன்கள் கொஞ்சம் புறங்கையை சுவைத்திருக்கலாம்.

  உங்களது பதிவுகளைப் படிக்கும்பொழுது நீங்கள் தவறான இடத்தில் இருக்கும் சரியானவர் என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் தீவிர கம்யுனிச எதிர்ப்பாளராக இருந்தார் எனது தந்தை. பின்னர் கம்யுனிஸ்டுகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் அவர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்றெல்லாம் பேசுமளவுக்கு மாறினார். ஆனால் நான் அவரிடம் கேரளா மற்றும் திருப்பூரில் அவர்கள் எப்படி ஊழல் புரிகிறார்கள் என்று விளக்கியதும் தெளிந்தார். இன்றும் அவர்க்கு கம்யுனிஸ்டுகள் மேல் ஒரு பொருந்தாத அனுதாபம் உள்ளது. நீங்கள் இருக்க வேண்டியது அங்கே அல்ல என்று தோன்றுகிறது. நிச்சயம் ஒரு முறையாவது உங்களுக்கு இது தோன்றி இருக்கும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 27. ***இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம்.***

  வடிகட்டின விதண்டாவாதம்!!!!

  பதிலளிநீக்கு
 28. நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள். ///

  மிகவும் அருமையான வார்த்தைகள் மாதவ்ராஜ் சார்...

  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆள் சேரவில்லை என்ற அங்கலாய்ப்புகளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினரே சுய பரிசோதனை செய்யவேண்டும்..

  மத்திய தர வர்க்கத்தின் கோவம் நீக்கமற நிறைந்திருக்கும், ஆனால் உருவமில்லாத எதிரியான ஊழல் அரசியல்வாதிகளுக்கெதிரானது.. மிகப் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு அரசியல் போராட்டத்திற்காக இளவயதினர் தயாரவது இப்போதுதான்..இது ஒரு தொடக்கமே...இந்த நிலை முதிர்ச்சியடைய ஆண்டுகளாகலாம்.

  மற்றபடி அன்னா ஹசாரே தொடர்பான குறைகள் நொட்டைச்சொற்களாகவே தெரிகின்றன.. உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கும், கீழ்க்கண்ட என் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், இரண்டுமே வலியத் திணிக்கப்பட்டவை...

  குற்றச்சாட்டு 1 - இடதுசாரிகள் ஈழப்படுகொலையின்போது ஏன் 'பாரத் பந்த்' அறிவிக்கவில்லை...
  குற்றச்சாட்டு 2 - ஈழப்படுகொலையை கண்டித்து, இந்திய அரசைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஏன் புத்ததேவ் பதவி விலகவில்லை...

  பதிலளிநீக்கு
 29. கட்டுரை மிக அருமை.அவசியமான காலத்திற்கேற்ற பதிவு.எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியதுதான் தோழர். சினிமா பாணியில் ஒரு பாட்டு முடிவதற்குள் ஊழலை ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள். ( அவர்கள் ஓட்டுக்கு காசு வாங்குவது வேறு விசயம்).

  தென் மாநில மக்கள் தான் இவ்வாறான இன்ஸ்டண்ட் மனநிலையாளர்கள் என்ற என் எண்ணத்தை ஹஸாரேவின் வருகை மாற்றியிருக்கிறது. நம்மாளுக பூராம் இப்படித்தான் போல.

  லோக் பாலுக்கு ஹஸாரே சில மக்கள் பிரதிநிதிகளை பரிந்துரைக்கிறார் போல. அவர்களின் வண்டவாளங்கள் சில வாரங்களில் வெளிவந்தே தீரும்.

  வாழ்த்துக்கள் தோழர். எல்லாருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களைப்போல சிரமம் எடுத்து, நேரம் ஒதுக்கி, கட்டுரையாக்கி, வெளியிடுவது மிகவும் முக்கியமானது. தொடரட்டும் பணி. .

  தோழமையுடன்,
  அ.உமர் பாரூக்

  பதிலளிநீக்கு
 30. எப்போதெல்லாம் அநியாயம் தலையெடுக்கிறதோ
  அதர்மம் கோலோச்சிகிறதோ
  அப்பொதெல்லாம் ஒரு அவதாரம் தோன்றுவார்
  மக்கள் கொதித்தெழுமுன் அவர் ருத்ரதாண்டவம் ஆடி
  அல்லது எத்தனை அடித்தாலும் தாங்கிகொண்டு
  ...அஹிம்சை வழியில் போராடி
  மக்களை அப்போதைக்கு comprimise பண்ணி
  பெரிய புரட்சி பண்ணியதாக பேர் பண்ணுவார்
  உலகம் அல்லது அரசாள்வோர் பாரட்டுவர்
  மக்களும் அதானே பார்த்தேன் அடி பின்னிட்டாரே
  நம்ப ஆளு என்று பெருமை கொண்டு மீண்டும்
  அதே வாழ்க்கையில் விழுந்தது...
  இந்த சீசனுக்கு இன்னொரு ரட்சகர்
  வாழ்க ஊழல்! வளர்க அதை ஒழிப்போர் !

  பதிலளிநீக்கு
 31. Where was Gandhiji before fighting for Indian independence? Where was Chandra Skehar rao and why he started fasting for Telengana suddenly? Why he didnot do this earlier? Where was Anna Hazare before fasting? Yes. we can ask any number of questions like this which doesn't make any sense. There is a proverb "it is better late than never". Lets be proud that atleast the country is now united and fighting against corruption.I appreciate Anna Hazare for taking a lead on this.

  Anna Hazare didnot jump from Moon or mars, he was doing his best in Maharashtra which was appreciated by many of us. He and some of the social activists in his team should get the credit for introducing RTI act. Because of this RTI act only, Adarsh scam and CWG scam was noticed by Govt and CBI.Please note that, no political parties exposed these scams.

  Why he started fasting suddenly?. Please understand that he did not start his fasting suddenly. Lokpal bill didnot pass in the parliment during last December and his team sent letters to PM and Sonia to discuss about the bill and nobody listened to him. Some of the documents of the Lokball bill that was introduced during Dec. is missing from Govt and this shows the seriousness the Govt. is showing on this bill (Though I don't have any proof for thiis). He already announced that he will be fasting from 5th. of Apr. and Govt did not listen to him and he started his fasting. How do you say he started his fasting suddnely?.

  How many of us know Anna Hazare before two weeks? Good question, but how many of us know Lokpal bill before two weeks though it was not passed for the past 42 years? I agree communists were fighitng for this bill, but more than 50% of the citizens came to know about this bill after his fasting only.
  I agree that this bill can only cut the branches of the tree but atleast they are cutting branches.What are we doing, we are pouring water to that tree by not even voting. Please don't reply me saying "I have voted in all the elections. If you have voted then it is good. Now start making your second step on campaigning for 100% vote in elections. If you have done the second step also, look for third." This bill was pending for 42 years and this will definitely help us like the way how RTI is helping. Please don't put some connent like "Will these make India as a corruption free country." Definitely no, but something is better than nothing.

  It is sad that people like Kapil Sibal, Chidambaram part of the commitee, but what to do? Show me some five ministers who are clean in the present Govt. Please understand that we are tho one who is chossing these corrupted leaders again and again.

  It is also sad that Sagayam is not recognized by media. Atleast our TN media should have done that, but what to do? All our media is in political leaders hands.

  Finally, there are many people like Anil Ambani, Amithabh Batchan appreciated Narendra Modi like Anna Hazare. I just want to say one simple thing " I like nature doesnot mean I like tsunamis and earth quakes also". I hope you should be able to understand this and this is just my personal comment.Please don't paint the same color to all those who like Narendra Modi.

  Thanks.

  பதிலளிநீக்கு
 32. வருண் has left a new comment on your post "அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை!":

  அன்னா ஹாஸரேவும் மோசமான ஆளா?

  ***மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? ***

  அவர் செய்த சாதனை, உங்க பார்வையில் காந்தியைக்கூட நல்லவராக்கி விட்டாரே? :)))

  ஓ.. அம்பேத்கார் பத்தி பேசும்போது காந்தி கேவலமானவராகி விடுவாரே? இல்லையா?? :)))

  யாருதான் யோக்கியன்?

  நீங்க, நான் அப்புறம் வினவு சகோரர்கள், உண்மைத்தமிழன், ராஜ நடராஜன் எல்லாருமா? நீங்க இல்லையா? ஏன்? உங்க மனசாட்சி நீங்க நல்லவர்னு சொல்ல மறுக்குதா?? :))))

  ஏதோ லஞ்சத்க்தையும் ஊழலையும் வித்தியாசமா எதிர்த்து இருக்காரு . அதை பாராட்டாமல். ஏங்க இப்படி?? :(

  பதிலளிநீக்கு
 33. மாதவராஜ்! இந்த இடுகையில் உங்கள் நிதானத்தை இழந்தது போலான ஒரு மயக்கம் உண்டாகிறது.

  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்கிற துறை புதிதாய் நுழைந்து எல்லோரையும் லென்ஸின் வழியே துப்பறிவாளன் போலப் பார்க்க நினைக்கிறது.

  ராசாவையும் நீரா ராடியாவையும் பார்க்கும் அதே கோணத்தில் அன்னா ஹஸாரேயையும் பார்க்கச் செய்கிறது.

  அன்னா ஹஸாரே என்கிற ஒரு தனிமனிதரின் வாழ்க்கை என்ன என்பதை நாம் 1965ல் இருந்து பார்க்க ஆதாரங்கள் இருக்கின்றன.

  வெறும் பெயருக்காக நடத்தப்படும் மெரீனா கடற்கரை உண்ணாவிரதங்களுக்கும் இதற்குமான நோக்கங்கள் மாறுபடுகின்றன.

  அன்னா ஹஸாரேயின் தளமும் விக்கிபீடியாவும் விரிவாக அவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அவரின் சிந்தனைகளையும் தொகுத்துத் தருகிறது.

  www.annahazare.org
  en.wikipedia.org/wiki/Anna_Hazare

  மாற்றம் குறித்தும் ஊழல் குறித்தும் சுரண்டல் குறித்தும் உதிர்க்கப்படும் பரபரப்பான வார்த்தைகளையும் விட அத்திசையில் நகரும் செயல் முக்கியமானதாகத் தெரிகிறது.

  மக்கள் தங்களை வழிநடத்திச் செல்ல ஒரு தலைமையை தங்கள் வடிவத்தில் எளிமையான தோற்றத்தில் ஒருவரை எதிர்பார்த்திருந்த பொழுது அன்னா ஹஸாரே அதில் பொருந்தினார்.

  ரத்தம் சிந்தாமல் எத்தனை போராட்டங்கள் ஒரு அரசை நான்கு நாட்களில் பணிய வைத்திருக்கின்றன?

  அரசின் நோக்கம் இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் தெரிகிறதென்றாலும் அன்னா ஹஸாரேயால் அரசுக்கு எழுதப்படும் கடிதங்கள் நேர்மையானதாகவும் துணிச்சல் மிக்கவையாகவும் பதிலளிக்கமுடியாத கேள்விகளைக்கொண்டதாகவும் இருக்கின்றன.

  நோக்கம் தவறானதாக இருக்கும் எந்த ஒரு பயணமுமே வெகு சீக்கிரம் இலக்கை இழந்துவிடும்.

  எல்லோரையும் சந்தேகிப்பது எல்லோரையும் நம்புவதை விடவும் மிக ஆபத்தானது மாதவராஜ்.

  நான் கூறிய கருத்துக்கள் உங்கள் எழுத்தின் மேலும் உங்களின் மேலும் இருக்கும் அக்கறையால் பிறந்தது அன்பு மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 34. பாண்டியன், அண்ணாமலை, படையப்பா, சிவாஜி, இந்தியன், அந்நியன், காக் கந்தசாமி, நரேந்திரமோடி, அன்னா ஹசாரே....
  இக்பால்

  பதிலளிநீக்கு
 35. உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று. இது வரை கமெண்ட் எழுத வில்லை. இப்போது எழுதுகிறேன். மோடியை பாராட்டி விட்டார் என்பதற்காக இப்படி வறுத்து எடுக்க வேண்டாமே. அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் கூட அவரின் வெற்றிக்கு (?) காரணமாக இருக்கலாம். குஜராத் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களை ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்கள். அதன் வளர்ச்சி எப்படி என்று அறிய முடியும். மத சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் கட்சிகளை ஒரு பிடி பிடியுங்கள் நண்பரே. ஏனெனில் எந்த சார்பும் இன்றி பதிவு எழுத உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

  பதிலளிநீக்கு
 36. @செந்திலான்!

  கழகங்களின் ‘புரிதலுக்கும்’, இடதுசாரிகளின் ‘புரிதலுக்கும்’ நிச்சயம் கொலைகாரர்களின் கையிலி இருக்கும் கத்திக்கும் டாக்டரின் கையில் இருக்கும் கத்திக்குமான வேறுபாடு உண்டு. அந்த புரிந்துணர்வின் பேரில் என்ன ஒப்பந்தம் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறதே.

  எனக்கு கம்யூனிஸத்தின் மீது விருப்பம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது.

  @வருண் &
  செங்கதிர்ச்செல்வன்!
  மிக்க நன்றி.


  @tharaitiket!
  :-)))))

  @Bakkiya!
  ஊழலுக்கு எதிராக தாங்கள் நிற்பதிலும், அதில் சில நல்ல விளைவுகளை அன்னா ஹாசாரேவின் இயக்கம் ஏற்படுத்தும் என்னும் உங்கள் நம்பிக்கைக்கும் என் வணக்கங்கள் நண்பரே!

  என் கேள்விகளும், என் சந்தேகங்களும் மிக அடிப்படையானவை. அவற்றை நம்பிக்கையின் பேரில் கடந்துவிடவேச் சொல்கிறீர்கள் நீங்கள் உட்பட. உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு திரும்ப ஒருமுறை என் பதிவைப் படித்துப் பார்த்தேன். எந்தத் தவறும் இருப்பதாகப் படவில்லை.

  இதற்கு முன்பே, லோக்பால் குறித்து இடதுசாரிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இடதுசாரிகள் 99% ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனியார் மயமும், தாராளமயமும்தான் ஊழலுக்கு ஊற்றுக்கண் என காரணத்தையும் சொல்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடவேயில்லை.

  அன்னா ஹசாரேவும் லோக்பால் குறித்துப் பேசுகிறார். ஆனால் ஊழலுக்கான காரணங்களைப் பற்றி அவர் ஆழமாக எதுவும் சொல்லவில்லை. அவர் பேச்சு எடுபடுகிறது.

  ஊழல் என்பது தனிநபர் கோளாறுகள் அல்ல. அமைப்பின் கோளாறு. இந்த உண்மையிலிருந்து நாம் விலக்கிவைக்கப்படுகிறோம் கவனமாக.


  இதுதான் அரசியல். இதுதான் அவரை ஊடகங்கள் முன்னிறுத்தக் காரணம். எப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில்,காந்தியை இந்திய முதலாளிகள் ஆதரித்தார்களோ, அது போல.


  இப்படித்தான் நான் முரண்படுகிறேன். நரேந்திர மோடியை அவர் புகழ்ந்ததும், அந்த முரண்பாடு இன்னொரு பரிமாணம் கொள்கிறது. அவ்வளவே.

  எதோ ஒரு வகையில் ஊழல் குறித்து பேசுகிறோமோ, அன்னா ஹசாரவை வைத்து,அந்த வரையில் சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 37. சுந்தர்ஜி!

  நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து ஒருவாரம் ஆகிறது. நிதானமாகவே விஷயங்களை அறிந்த பின்னரே எழுதி இருக்கிறேன்.

  நாம் நம்பி ஏமாந்தவைகளும், மோசம் போனவைகளுமே அதிகம். அதுவே நம் கடந்தகால வரலாறாகவும் இருக்கிறது. சந்தேகித்து ஏமாந்ததாகவும், மோசம் போனதாகவும் என்ன இருக்கிறது, நம் தன்னம்பிக்கை தவிர!

  பதிலளிநீக்கு
 38. @sambaldhesam!

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  @Revolt!
  நண்பரே! அன்னா ஹசாரே மோடியைப் பாராட்டியது உபகதை. கதை அதுவல்ல.

  பதிலளிநீக்கு
 39. @ACUPUNCTURE HEALERS ORGANISATION!

  அன்புள்ள உமர் பாரூக்!

  தங்களைப் போன்றவர்கள் வருகையும், பகிர்வும் என் கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன. மிக்க நன்றி தோழர்!

  பதிலளிநீக்கு
 40. Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site

  http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005

  The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site
  http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
  but this is a paid site.

  பதிலளிநீக்கு
 41. முதலாளிகளிடம் நிதி வாங்கிய காரணத்தினால் தானே பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஊழல் செய்கின்றன. அதே வழியில் அன்னா ஹசாரெவும் ஜிண்டாலிடமும், HDFC போன்ற முதலாளிகளிடம் 80 லட்சம் வரை வாங்கியிருக்கிறார். கொஞ்சம் ஞாநி எழுதிய கட்டுரையை கல்கியில் அன்ன ஹசாரேவை ஆதரிக்கும் அன்பர்கள் படிக்கவும்.


  என்னுடைய பார்வையில் அரசியலில் ஒரு polarisation ஆகிக்கொண்டிருக்கிறது, மக்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அதிகம். ஹசாரே ஆதரிப்பதல் பாஜக மக்களை கவர்ந்துவருகிறது. காங்கிரஸ் அல்லது பாஜகவின் 2009 வருடத்திய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், ஊழலுக்கெதிராக ஒன்றும் இல்லை. சிபிஎம் ந் தேர்தல் அறிக்கை 2004லும் ,2009ம் லோக்பால் மசோதாவை கொண்டுவருவோம் என்று சொல்கிறது. மக்கள் கிரிக்கேட் பார்த்துமுடித்துவிட்டு பீரியாக இருக்கும் நேரத்தில் கம்யூனிஸ்ட்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். நடிப்பவர்களையும், கொள்கைஉருதியோடு இருப்பவர்களயும் பிரித்துப்பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 42. அன்னா ஹாசரே மகாராஷ்டிராவில் ஊழலுக்கு எதிராக எத்தனை முறை போராடியிருக்கிறார் என்று தெரியுமா.மே.வங்கம்,கேரளாவில் லோக்பால் போல் லோக் அக்யுதா என்ற அமைப்பு ஏன் இல்லை. கர்நாடகாவில் இருக்கிறது,சந்தோஷ் ஹெக்டே அதன் தலைவர்.அரசு ஊழியர்கள் பலர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பட்டியலிட்டு அம்பலப்படித்தினார்..லோக் அக்யுதாவின் அதிகாரம் குறைவானது.அவர்களால் பணி நீக்கம் செய்ய முடியாது.

  லோக்பால் சட்டம் குறித்து அன்னா செய்ததை கரத்தோ பர்தனோ செய்திருக்கலாம்.ல்ட்சணக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்தியிருக்கலாம்.அல்லது உண்ணாவிரதம் என்று அறிவித்து போராடியிருக்கலாம்.ஜனவரியிலிருந்தே இதற்கான இயக்கம் துவக்கப்பட்டது அதன் உச்சகட்டம்தான் தில்லியில் நடந்த உண்ணாவிரதம்.இடதுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.
  அன்ன்னா செய்ததை ஏன் இடதுசாரிகள் செய்யவில்லை.
  உங்களால் செய்ய முடியாது, அடுத்தவர் செய்தால் குறை சொல்வது.இடதுசாரி கட்சிகள் ஏன் மக்களை திரட்டி இதில் போராடவில்லை என்று கேள்வி நாங்கள் கேட்கிறோம்.

  பதிலளிநீக்கு
 43. 'நாம் நம்பி ஏமாந்தவைகளும், மோசம் போனவைகளுமே அதிகம். அதுவே நம் கடந்தகால வரலாறாகவும் இருக்கிறது. சந்தேகித்து ஏமாந்ததாகவும், மோசம் போனதாகவும் என்ன இருக்கிறது, நம் தன்னம்பிக்கை தவிர!'

  இப்படி எழுதுகிறவர் சிபிஎம் தலைமை மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறாரே, என்னத்த சொல்ல.

  பதிலளிநீக்கு
 44. லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார்.

  நல்லையா தயாபரன்

  பதிலளிநீக்கு
 45. மாதவ் தோழருக்கு
  மனதைப் பிழிந்தெடுத்த பதிவு. உள்ளத்தில் ஒளி உண்டெனில் வாக்கினில் ஒளி உண்டு என்றவன் பாரதி அல்லவா? ஒவ் வொருவர் மனதிலும் இறைந்து கிடக்கும் மனச் சில்லுகளை எல்லாம் ஒன்றாக்கி பாசாங்கற்ற உயிர்களைப் படைத்திருக்கிறது உங்கள் விரல்கள். அவற்றை எழுத்துகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நேற்றுப் போல் இருக்கிறது. விருதுநகர் லாட்ஜ் பெயர் நினைவில்லை. ஆனால் படுக்கையின்மேல் சாய்ந்தபடியே நீங்கள் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த உயிர்க்கணங்கள். மீண்டும் சந்திக்க மெல்ல ஆசை எழும். எழுத்துகளின் வாசம் இங்குவரை வீசுகிறது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!