நான்கு நான்குகளாக கொடுத்துக்கொண்டிருந்த பவுலரை அடுத்த ஓவர் வீசவிடவில்லை. நாக்குத் தள்ளியபடி அவன் மைதானத்தை விட்டு வெளியேற, புதிதாக ஒருவன் கை, கால்களை உதறியபடி மைதானத்துக்குள் நுழைந்தான். விக்கெட் கீப்பரோடும், பௌலரோடும் கேப்டன் நடுவில் நின்று பேசினான். இரண்டு ஸ்லிப்புக்குப் பதில் மூன்று ஸ்லிப்பு இருந்தால் நல்லது என்று தேர்ட் பாயிண்டில் நின்றவனை அருகில் கொண்டு வந்தான். ஸ்கொயரில் தள்ளி நின்றவனை ஸில்லிப் பாயிண்டில் ஹெல்மட்டோடு நிற்கச் செய்தான். மிட் ஆஃபை கல்லிக்கு மாற்றினான். சுற்றும் முற்றும் பார்த்தான். கேப்டனின் புத்திசாலித்தனமான வியூகம் என்று வர்ணனையாளர் ஒருவர் அறிவித்துக்கொண்டு இருந்தான்.
மீண்டும் அதே திசையில்தான் பந்து மைதானத்தைக் கடந்தது. ஆனால், இந்த தடவை தரைவழியாக அல்ல. நடப்பது சூதாட்டம் என்பது தெரியாமல், சுருட்டப்பட்ட தேசீயக் கொடிகளோடு பதினோராயிரம் பேர் கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆண்ணே !!! ஒண்ணும் பிரியல.. கார்ட்டூன் பிரியுது ஆனா கண்டென்ட் :)
பதிலளிநீக்குJust an eye wash to pass the puck. No I was not referring the Ministerial reshuffle but on Mr. Madhu`s article. Country goes for SIXER to benefit the FIXER.
பதிலளிநீக்குஎனக்கு ஜீ
பதிலளிநீக்குஇந்த உரையாடல் கவிதை வியூகம் ஜீ
புரியுது ஜீ
மாதவ் ஜீ
அப்பாடா இந்த நாலு 'ஜீ'க்கே நாக்கு தள்ளுதே
எப்படீண்ணே சிக்ஸர்லாம் அடிக்குறாங்க :)