கடைசியாக யாரோ சென்ற பாதையில் அவன் வந்து கொண்டு இருந்தான். தரையெல்லாம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. பல வண்ணங்களில் அழகழகாய்த்தான் பார்த்த கணம் தெரிந்தது. காலையில் பக்கத்துத் தெருவில் அந்த நீல நிற வீட்டில் சங்கு ஊதிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது. சுளிப்புடன் கவனமாய் விலகி நடக்க ஆரம்பித்தான். ‘வாசல் படியில் நின்று என்னேரமும் தெருவைப் பார்த்துக் கொண்டு இருக்குமே ஒரு அம்மா, அதுவாய் இருக்குமோ’ என அலைக்கழித்தன. பூக்களிலிருந்து இப்போது மரணத்தின் வாசனை வீசியது அவனுக்கு. இரண்டு ஆடுகள் அந்தப் பூக்களின் அருகில் சென்று முகர்ந்து பார்த்து, சாவகாசமாய் சாப்பிட ஆரம்பித்தன.
பூக்களை நுகரும் மனித மனம் எப்போதும் ஒரு சஞ்சலத்திலேயே எதையும் பார்க்கிறது. சஞ்சலமற்ற மன நிலை மனிதம் உணருமா?
பதிலளிநீக்குஉங்க எழுத்தப் படிச்சு பல மன ஓட்டங்கள்.
நல்ல பதிவு
பதிலளிநீக்குஅருமை அண்ணா....
பதிலளிநீக்குஅருமை மக்கா!
பதிலளிநீக்குசேது!
பதிலளிநீக்குஎனக்கு வந்த மன ஓட்டங்கள்தானே இவை. நன்றி சேது!
சிந்தன்!
நன்றி தோழா!
சே.குமார்!
மிக்க நன்றி தம்பி.
பா.ரா!
மக்கா. உற்சாகமாய் இருக்கிறது.