தினமும் அப்பாவுக்கு விடிகாலையில் நடப்பது வழக்கமாயிருந்தது.
பத்ரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் போது, யாரோ ஒருவன் அருகில் வந்து முறைத்துவிட்டுச் சென்றதாய் ஒருநாள் சொன்னார்.
என்.ஜி.ஓ காலனியருகே நான்கைந்து நாய்கள் சுற்றி நின்று குரைப்பதாய் இன்னொருநாள் கவலைப்பட்டார்.
பஜாரில் லாரி ஒன்று, சட்டை வேட்டி முழுக்க சேற்றை வாரியிறைத்துச் சென்றதாக பிறிதொருநாள் அங்கலாய்த்தார்.
ஆனாலும் அப்பா நடப்பதை ஒருநாளும் நிறுத்தவில்லை. அம்மாவும் “பாத்துப் போங்க” என்று சொல்வதை நிறுத்தவில்லை.
அருமை,
பதிலளிநீக்குஆனாலும் சமீபத்தில் படித்த தமயந்தியின் பதிவில் வந்த நெல்லைஅப்பர் தேரோட்டம் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது , என்ற வரிகள் ஏனோ எனக்கு ஞாபகம் வருகிறது.
சொல்வதற்கு அம்மா இல்லையென்றாலும், அப்பா பார்த்து தான் போக வேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான ஒரு பதிவு.
பதிலளிநீக்குஎழுத்து நடை அமை
http://tamilpp.blogspot.com/
நிங்களும் பார்த்து போங்க....
பதிலளிநீக்குஅப்பா நடப்பதை நிறுத்தவே வேண்டாம்.
பதிலளிநீக்கு"ஆனாலும் அப்பா நடப்பதை ஒருநாளும் நிறுத்தவில்லை. அம்மாவும் “பாத்துப் போங்க” என்று சொல்வதை நிறுத்தவில்லை."
பதிலளிநீக்குவயதான காலத்துல தான் அவங்களுக்குள் இருக்கும் காதல் ஜாஸ்தியாகும் ....
அப்படி உங்க அப்பா பேசும் பொழுது ..நீங்க அவருக்கு SUPPORTIVE ஆ பேசுங்க ...(ஒரு குழந்தையிடம் பேசுவது போல்)
இயல்பு..
பதிலளிநீக்கு