தோசையில் உப்பு கூடிவிட்டதென்று உண்ணாவிரதம் இருந்தான். தலை வாரியச் சீப்பில் முடி சுற்றிக் கிடந்ததற்கு, வீடே நரகம் என முடிவுக்கு வந்தான். அலமாரியில் முதல் தட்டின் இடது ஓரத்தில் இருந்த நகவெட்டி இடம் மாறியதை நாளெல்லாம் சொல்லிக் காட்டினான். அன்றைய பேப்பரென்று பார்க்காமல், அதில் சப்பாத்தி உருட்டி வைத்ததற்கு குடியே முழுகிப் போனதென்று கத்தினான்.
ஒரே ஒருநாள், வாசலில் அந்த நேரம் பார்த்து காய்கறிக்காரன் வந்து நிற்கவும், ’குக்கரில் மூணு விசில் அடிச்சவுடனே அடுப்பை சிம்மில் வையுங்க’ என்று சொல்லி வெளியே சென்றாள்.
கொஞ்சம் கவனம் தப்பியவனுக்கு, அடித்தது முதல் விசிலா, இரண்டாவது விசிலா என்று தலை சுற்றியது.
அருமை, எங்கள் வீட்டில் பெரும்பாலும் நடக்கும் நிகழ்வு இது.
பதிலளிநீக்குஎனது தந்தையை இவ்வழி காண்கிறேன்...
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குஇதில் ஒரு கவிதை ஒழிந்திருக்கு.
பதிலளிநீக்குமுரண்பாடுகள்.
புள்ளி விவரங்களுடன் பேசுவதில் புலியாக இருந்தாலும்
பதிலளிநீக்குநூறு புள்ளி நூறு வரிசை என்று கணக்கு வைத்து
கைவிரல் மாவு கச்சிதமாக விழக் கோலம் போடத் தெரியாதவன் !
அரசாங்க பட்ஜெட்டை அங்குலம் அங்குலமாக விமர்சித்தாலும்
மாதாமாதம் மளிகை லிஸ்டில் மஞ்சளையும் கடுகையும் தவறாமல் மறப்பவன்!
எட்னா எரிமலையில் அக்கினிக் குழம்பு வெளிப்பட்டு எத்தனை வருடங்கள் ஆயிற்று என
பொது அறிவுப் பித்தனாக இருந்தாலும்
அடுப்பில் கொதிக்கும் குழம்பில் எத்தனை சிட்டிகை உப்பிட வேண்டுமென்று
என்றுமே புரிந்துகொள்ள முடியாதவன்!
விசில் கணக்குத் தெரியவில்லையென்று
சொல்வது ஆண் பாவம்!
ஏதோ, எங்க கஷ்டத்த புரிஞ்சிகிட்டதோட, அத ஒரு பதிவாவும் போட்டதுக்கு ரொம்ப நன்றி.மாதண்ணா.
பதிலளிநீக்குcooking is not an art. It is a way of living.For u people TAMILSELVAN is the only answer....Kashyapan
பதிலளிநீக்குஆண்கள் ஆண்கள் தான் .அவர்கள் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே .
பதிலளிநீக்குNice posting. Reflects the current mood in every home. But we realise this only when we grow old. Too late. - Swami
பதிலளிநீக்கு:-))))))
பதிலளிநீக்குஆஹாஹா!மாதவராஜுக்கு ஒர் ஓ போடுங்க்ப்பா!
பதிலளிநீக்குஇதைப் படிக்கும் பல ஆண்களுக்கு
பதிலளிநீக்குதலை சுற்றும். சுற்றி சுய நினைவுக்கு வரும் போதாவது
சக பெண்ணை நினைத்துப் பார்த்தால் நன்று
அபாரம்...
பதிலளிநீக்குஇதிலென்ன இருக்கிறது என்பதைக்காட்டிலும் நுட்பமான உணர்வை அளிக்கவல்ல கவிதையாகவே காண்கிறேன்...
எத்தனை தலை சுற்றல்...
அன்பின் மாதவராஜ்
பதிலளிநீக்குஇது இயல்பு வாழ்க்கை - இதிலும் மகிழ்ச்சி உண்டு - இருவருக்குமே - எங்கள் வீட்டு வாழ்க்கை இது மாதிரித்தான்.
நல்லாருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
:) நல்லா இருக்குங்க..
பதிலளிநீக்குவணக்கம் மாது.
பதிலளிநீக்குநல்லாருக்கீங்களா?நேசன்,ராகவன்,மாது,அடுத்து காமு வீடு.
முன்னதாக,முல்லை விமர்சனம் பார்த்தது.பின்னூட்டம் போடும்படியான விமர்சனம்.ராகவன் கொஞ்சம் கோபக்காரர்.(நீங்கதான் வரவே மாட்டேங்கிறீங்க என்பது கோபம் இல்லை.தாங்க முடியாத தேடல்.இல்லையா?) அதனால் அங்கு மறைச்சிட்டேன்.
yaavarum nalamthaane makkaa?
onnum vaasikkalai.summaa vanthanam.
adutthathu en ratthatthin rattham... :-)
தி.மு.க. தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா? இந்த இருவரையும்
பதிலளிநீக்குதவிர்த்து
நாடகம் ஆடுகிறார்கள் அந்த கட்சி காரர்களை ஏமாற்ற .
ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஆண்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று பத்மா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்கள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. :-))))))