இந்தப் படத்தையும் பாருங்கள், விமர்சனம் செய்யுங்கள்!

திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் பதிவுலகப் பெருமக்களுக்கு தனி ஆர்வமும், சிரத்தையும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதைப் படிப்பவர்களுக்கும் அப்படியே. சினிமாவுக்கென்று மக்கள் தம் சிந்தனையில் தனி இடம் ஒதுக்கி, தனி கவனம் செலுத்துகிறார்கள். அவர்களை கொஞ்சம் இந்தப்பக்கமும் பாருங்கள் என்று இப்போது அழைக்கிறேன்.

நேற்று ஒரு குறும்படம் பார்த்தேன். எடுத்தவர் ரவிக்குமார். திருப்பூர்க்காரர். துறுதுறு இளைஞர். என் நண்பர். பதிவரும் கூட.

ravikumar

கிடைத்த வாய்ப்பு வசதியில் இப்படி ஒரு படம் எடுப்பது முக்கியமான விஷயம்தான். காமிரா கோணம், எடிட்டிங் எல்லாமே உறுத்தாமல் இருக்கிறது. இசைதான் ஒட்டவில்லை. என்றாலும் பரவாயில்லை.  இன்னும் ரவிக்குமாருக்கு சினிமா மொழி கூடிவர வேண்டியிருக்கிறது. எனினும், கண்ணாமூச்சி என்னும் 17 நிமிடங்களே ஒடும் இந்தப் படம், வாழ்வின் நுட்பமான விஷயத்தைச் சொல்லியபடி நகர்கிறது. தாத்தா நமக்குள் நிறகிறார்.

பல, பிரபல, தமிழ்ச்சினிமாக்களை விட அருமையாக இருக்கிறது.

இப்படியொரு நல்ல முயற்சிக்காகவும், இவ்விதமான கதைகளைச் சொல்ல வேண்டுமென்கிற துடிப்பிற்காகவும் ரவிக்குமாரை கைதட்டி வரவேற்கிறேன்.

நீங்களும் பாருங்களேன். விமர்சனம் செய்யுங்களேன்! அதைவிட வேறென்ன ரவிக்குமாருக்கு வேண்டும்....!

கருத்துகள்

34 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பதிவு உலக இலக்கணம், சம்ப்ரதாயங்கள் தெரிய வில்லை போல உங்களுக்கு.

  ஆங்கிலப் படங்களை காப்பி அடித்து எடுக்கப் படும் தமிழ் படங்களுக்கு மட்டுமே நாங்கள் விமர்சனம் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பகிர்வு,அறிமுகம் மாது.

  ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க ரவி.குழந்தைகளின் மனசை,தாத்தாக்களின் மனசை அப்படியே பதிவு பண்ணுகிறீர்கள்.வசனம் மிக யதார்த்தம்.தாத்தா ஜெயிக்க வேணுமே என சல்லிசான வேண்டுதல் கூட மனசில் வருகிறது.முடித்ததில் கவிதை திருப்பம்.
  அழகிய குறும் படம்.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அருமை... குறும்படம் முடியும்போது நம் உதட்டில் புன்னகை...
  தாத்தா செஸ் கற்க்கும் சில இடங்களில் சற்றே தொய்வானதாகத் தோன்றுகிறது.. பேரனின் வேண்டுகோளைக் கேட்ட தாத்தாவின் முகத்தில் தோன்றும் சோகம் சற்றே கூடுதலாகத் தெரிகிறது...
  மற்றபடி மிக நேர்த்தியான படைப்பு..
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபட இரா.இரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. Naala kadhai,Romba naala pannirukaru. Yentha oru yedathaliyum thadumatram illamal neirthiyaka yeduthuirukaru. Ravi avarkal memmelum Valara Vazhukal.

  பதிலளிநீக்கு
 6. please check

  http://www.sindhan.info/

  பதிலளிநீக்கு
 7. வாவ்!

  ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது!
  கடைசி ட்விஸ்ட் எதிர்பார்க்காதது!


  கதை கேட்டே பையன் தூங்கிவிடும் காட்சி கவிதையாக வந்திருந்தது.
  புத்தகக்கடைக்குச் சென்று செஸ் புக் தேடுவதெல்லாம் அபாரம்.
  செஸ் போர்டுக்குள் தாத்தா நடப்பதும்.

  சபரியும் தாத்தாவும் நல்ல தேர்வு!
  நன்றாக நடித்திருந்தார்கள்.
  தாத்தாவின் மகனையும் குரலாக மட்டுமே ஒலிக்க விட்டிருக்கலாம்; அப்போது தாத்தாவின் முகபாவனையை மட்டும் காட்டி. அவர் வந்து பேசுவது கொஞ்சம் செயற்கையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 8. Excellant potrayal of human values regarding human realations.

  பதிலளிநீக்கு
 9. வந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்த அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ரவிக்குமாரை தட்டிக் கொடுக்கும். மெலும் செதுக்கும்.

  இதுவரை 706 பேர் இந்தப் பதிவை பார்த்திருக்கிறார்கள் என விட்ஜெட் சொல்கிறது. எத்தனை பேர் படத்தை முழுமையாக பார்த்தார்கள், எத்தனை பேர் படம் பார்க்காமல் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுபோன்ற தளிர்விடும் முயற்சிகளை ஆதரிக்கும் சில வார்த்தைகளைச் சொல்லி இருக்கலாம். கோடி கோடியாய் பணம் செலவழித்து குப்பை குப்பையாய் கொட்டுவதுதான் சினிமா என்று நாம் ஒத்துக் கொள்கிறோமா? இதுவும் சினிமாதான். வருத்தமாயிருக்கிறது நண்பர்களே!

  குறையோ, நிறையோ மனம் விட்டுச் சொல்லுங்கள். இதுபோன்ற முயற்சிகளை நாம் ஆதரிப்பது, மாற்று சினிமாவுக்கான வழிகளை உருவாக்கும்.

  மன்னித்து விடுங்கள், ஜான் ஆபிரகாம்!

  பதிலளிநீக்கு
 10. நண்பர் ரவிக்குமாருக்கு!
  இந்தப் படத்தின் குறுந்தகட்டை தாங்கள் அனுப்பி வைத்த அன்று மாலையே, பர்த்துவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. குறைகள் என சுட்டிக்காட்ட என பல இருந்தாலும், சொன்ன விஷயமும், சொல்லிய விதமும் அருமை.

  அந்த வீட்டிற்குள் இருக்கிற ஒரு பெண்ணுக்காக, ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பார்த்து, அவர்களையும் நடிக்க வைத்து, சிரமங்கள் பட நீங்கள் தயாரில்லை. குரல் வழியாகவே படத்தைச் சொல்லி இருந்தீர்கள். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. மகனுக்கும் அது போலவே செய்திருக்கலாம் என தீபா சொல்வதில் நியாயமிருக்கிறது.

  மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஹாண்டி காமிரா சொதப்பும். அது இருக்கிறது. என்ன செய்ய நம் கையில் இருப்பதை வைத்துத்தானே எடுக்க முடியும்.

  இரா,நடராஜன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஒரு சிறுவர் கதையின் சாயல் இதில் இருக்கிறது. அதில் அப்ப்பாவுக்கும், மகனுக்குமான உரையாடல்களில் கதை செல்லும்.

  நிறைய இடங்களை ரசிக்க முடிந்தது. குறிப்பாக, முதலில் செஸ் காய்களை விட தாத்தா சிறுத்துப் போயிருப்பது, பிறகு, செஸ் காய்களை விட தாத்தா உயரமாய் இருப்பது.

  இன்னும் ஒரு ஐந்து நிமிடங்கள் குரைத்து, சில காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும். இந்தப் படம் 10 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான காட்சிகளை யோசித்தால் நீங்கள் சினிமா மொழியை கற்றுக்கொள்கிறீர்கள் என்பேன்.

  வாழ்த்துக்கள் நண்பரே!
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பகிர்வு. முடிவாக நீங்கள் முன் வைத்திருக்கும் ஆலோசனைகளும் நன்று.

  @ ரவிக்குமார்,

  அருமையான படம். தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகளும் மேலும் பல படங்கள் செய்ய வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 12. எனது குறும்படத்தை பார்த்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துகளால் எனது அடுத்த படைப்பு இன்னும் செழுமைப்படும். நன்றி.

  இவண்
  இரா.இரவிக்குமார்.

  பதிலளிநீக்கு
 13. மாதவராஜ் தோழருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.என் படைப்பு அதன் பலனை அடைந்து விட்டதாகவே கருதுகிறேன். நீங்கள் சொன்னதுபோல் படத்தை குறுக்கியிருக்கலாம். அடுத்த படைப்பில் உங்களை ஆச்சர்யபடுத்துகிறேன், பொறுங்கள்.தீபா அவர்களின் கருத்துக்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தது.மீண்டும் ஒரு முறை மாதவராஜ் தோழருக்கு என் அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. Very natural..Good luck . My family enjoyed watching this.

  பதிலளிநீக்கு
 15. It is wonderful! we liked the music also. To incorporate a certain level of graphics in this short film is just awesome! Congratulations

  பதிலளிநீக்கு
 16. I too liked - நிறைய இடங்களை ரசிக்க முடிந்தது. குறிப்பாக, முதலில் செஸ் காய்களை விட தாத்தா சிறுத்துப் போயிருப்பது, பிறகு, செஸ் காய்களை விட தாத்தா உயரமாய் இருப்பது.

  Smoking scenes could have been avoided.

  -Rathna

  பதிலளிநீக்கு
 17. நம் உதட்டில் புன்னகை... கவிதை ...கவிதை ....கவிதை ...
  www.onlineinet.com

  பதிலளிநீக்கு
 18. siddhanandha Das was an expert in Marxian easthetics and an art critic.Ray used to show him his first copy before announcing it to the press.I had an oppurtunity to meet him when he had comeover to Madurai."critizize what is presented by the artist,not that you whanted him topresent he said. With this prelude , Mathavji I go into that fine wonderfull engrossing.excelent short film KANNAMUCHI. Grandpa and grandsons relationship is finely presented. Infact the first three four minitues visuals are so beautifully etched the edotor Ram deserves allkudos.The boy sits and interact.Then he comes closer to the grandpa. He lies on the floor.Mental fatigue and sleepishness encompasses him.He keeps his face onthe lap of grandpa.
  his eyelids have become heavy. He fights to become awake but couldnot.If not surpassing Ram equals Lenin,Vijayan,and Srikar Prasad.It was on wednesday Grandpa starts learning.He wants to perfect his game. He practises with many people.The director registers here the pain the old man takes to win the game with Harish and see his Sabari is happy.He is not having proper sleep proper medicatin.Afterall Sabari is achild slowly growing as aboy. On Sunday Sabari comes with a cricket bat.Grandpa takes that also as a chalenge.Mathavji.who is playing KANNAMUCHI? Sabari ,GRANDPA or the Director.A fine piece indeed...Kashyapan.

  பதிலளிநீக்கு
 19. Dear Sir

  By the time, I came to know of this blog and get to see the movie, this has been taken off. If you can send the link to colonel.rvs@gmail.com, I shall be obliged.

  For want of time, could not go through so many valuable pages yet. Shall get on connected, sometime later.

  With warm regards,
  mani

  பதிலளிநீக்கு
 20. hi mr .ravi braveable attempt u must improve ur language of cinema u have a bright future done a great job

  பதிலளிநீக்கு
 21. தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் காஸ்யபன்,பசுவா,வெங்கடசுப்ரமணி, டீம்சினிமா, உங்களது கருத்துக்கள் இன்னும் எனது படைப்புக்களை செழுமைப்படுத்திக்கொள்ள உதவும். நன்றி!

  பதிலளிநீக்கு
 22. முதலில் ரவிக்குமாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். குறும்படம் மிக மிக அருமை, மிகவும் ரசித்தேன்.

  மனதுக்கு நெருங்கிய கதைக்களத் தேர்வு, பல இடங்களில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் - தாத்தா பல பேருடன் செஸ் விளையாடுவது, சிகரெட் முடிவதைக்காட்டும் ப்ளாஷ்பேக் விவரணை, நேரமாவதைக்குறிக்கும் சுவர்க்கடிகாரக் காட்சிகள் அனைத்திலும் ரவிக்குமாரின் திறமை தெரிகிறது. தாத்தாவின் நன்றாக நடித்துள்ளார்.

  வசனங்கள் இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் ரவிக்குமார் :claps:

  பகிர்ந்தமைக்கும், ரவிக்குமாரை ஊக்கப்படுத்தும் எண்ணத்துக்கும் மாதவராஜ் அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் :).

  பதிலளிநீக்கு
 23. தங்களின் இந்தக்குறும்படம் அழிந்துவரும் கூட்டுக்குடும்ப உறவைச் சித்தரிக்கிறது.ஒரு சிறந்த தலைமுறையை அந்த தாத்தா உருவாக்குவதை நம்மிட்ம் காட்டுகிறது.இன்றைய சிறுவர்களின் எதிர்பார்ப்பையும்,அதை பெரிதுபடுத்தாமல் இருப்பதையும் காட்டுகிறது.ஏன் இந்த மாதிரியான குறும்படங்கள் திரையரங்கத்திற்கு வருவதில்லை?இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com

  பதிலளிநீக்கு
 24. ரவிக்குமாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். குறும்படம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 25. //ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது!
  கடைசி ட்விஸ்ட் எதிர்பார்க்காதது!//
  100% true..

  பதிலளிநீக்கு
 26. அருமையான கதைக்கரு.
  பாராட்டுகள் ரவிக்குமார்.
  மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. 17நிமிடப் படம்தான் இருந்தாலும் இரண்டு மணிநேர படத்தில் கிடைக்காத திருப்தி ஏற்பட்டது. முயற்ச்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!