போதி மரத்தடியைச் சுற்றி சுற்றி வந்தேன். ஒரு இலையைக் கூட தரையில் காண முடியவில்லை. காற்றில் உதிரும் இலைகளுக்கென்று பலர் காத்திருந்தார்கள். அவர்களுடன் போட்டி போடவும் ஒருமாதிரி இருந்தது. இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து ஒரு இலையைக் கூட கொண்டு போகாமல் திரும்பவும் மனமில்லை. யாரும் பார்க்காத நேரத்தில் லேசாக குதித்து சில இலைகளைப் பறித்துவிடத் தோன்றியது. அதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அங்குமிங்கும் சிலர் கண்காணித்துக்கொண்டும் இருந்தனர். உள்ளே சென்று தடாகத்து மீன்களுக்கு பொரி போட்டு மீண்டும் வந்தேன். என் அருகே சருகான இலை ஒன்று விழுந்தது. மீன்களின் கிருபை என்றெண்ணி, எடுத்து நிமிரும்போது, தானும் எத்தனித்து அருகே வந்த வயதான மனிதர் என் முகத்தைப் பார்த்தார். கண்கள் கெஞ்சின. எடுத்ததை அவரிடம் கொடுத்துவிட்டு அண்ணாந்து போதிமரத்தைப் பார்த்தேன். கரைபுரண்டோடிய காலவெள்ளத்திற்குள்ளிருந்த புத்தர் இலைகளின் ஊடே கதிர்களாய் தெரிந்தார்.
புத்தரைப் பார்த்தேன்!
பிப்ரவரி 03, 2010
18
Tags
அருமை சார் புத்த தரிசனம்
பதிலளிநீக்குBack to form uncle!
பதிலளிநீக்குசொற்சித்திரம் அசத்தல்...!
எவ்வளவு எளிதாக,எவ்வளவு சுருக்கத்தில் முக்தி அடைந்து விடுகிறீர்கள் மாது! :-)
பதிலளிநீக்குதிருப்பி திருப்பி வாசிக்கிறேன்...
அந்த மீன் கிருபை சருகிலையை வச்சிருந்து எனக்கு தந்திருக்கலாம் நீங்கள்.நானும் கெஞ்சத்தான் செய்கிறேன்...
fantastic மக்கா!!!
V.Radhakrishnan எழுதிய இந்த கமெண்ட்டை publish செய்வதற்கு பதிலாக reject செய்துவிட்டேன். அவரிடம் வருத்தம் தெரிவித்து அந்த கமெண்ட்டை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்:
பதிலளிநீக்குசில வரிகளில் ஒரு காவியம் படைத்துவிட்டீர்கள்.
Fantastic Fable Anna :)
பதிலளிநீக்கு/மீன்களின் கிருபை என்றெண்ணி,/ :-)ரசித்தேன்!
பதிலளிநீக்குநானும் கூட கயா சென்ற போது இரண்டு இலைகளை எடுத்து வந்தேன். வீடு வந்து பார்த்தால் அவை அழுகி விட்டிருந்தன.
பதிலளிநீக்குஅருமை நண்பரே...
பதிலளிநீக்குபுத்தர் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் செய்தி....
பதிலளிநீக்குஒரு முறை ஆனந்தன் புத்தரிடம் சென்று கேட்டாராம்..
எனக்குப் பின் வந்தவர்களெல்லாம் விரைவில் ஞானம் பெற்றுச் செல்ல எனக்கு மட்டும் ஏன் இன்னும் ஞானம் வரவில்லை என்றாராம்..
அதற்குப் புத்தர் நீ சென்று மரத்தில் இலை பறித்து வா என்றாராம்..
பறித்து வந்து இலையோடு நின்ற ஆனந்தனிடம் புத்தர் சொன்னாராம்..
உன் கையில் உள்ள இலை நான் உனக்குக் கற்றுத்தந்தது..
நீ பறித்த மரத்தில் உள்ள இலை நீ கற்றுக்கொள்ள வேண்டியது என்றாராம்..
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குஒளிவட்டம் நெருங்குகிறது மாதவராஜ்!
ஓஷோ சொல்வதுண்டு, டோன்ட் பி எ புத்திஸ்ட் பி எ புத்தா! ன்னு.
உங்களுக்கு மரங்களின் இடையே கிடைத்த புத்த தரிசனம், பாக்கியவான் நீங்கள். உங்களுக்கு கதிர்களில் புத்தர், அவர்களுக்கு காய்ந்த இலைகளில் புத்தர், ஆக கயாவிற்கு சென்றால் புத்தரை பார்த்து விடலாம், புத்தர் கயாவில் மட்டுமா இருக்கிறார்?
எத்தனை பெரிதாய் விரிகிறது இந்த பதிவு... வாமனனாய்... நிறைய எழுத தூண்டுகிறது...
அன்புடன்
ராகவன்
Mathavji! U wanted to jump and pluck a pupul leave.A sighn board warns u not to do it.Therwere people watching u. The suseptability of man is presented in its correct and contradictory form...beauty......kashyapan.
பதிலளிநீக்குஇன்னும் அந்த மரமும் அதைச்சுற்றி ஓடிய ஆறுவயது பிக்குவையும்
பதிலளிநீக்குமறக்கமுடியாது மாது.
Ilaigal sala salakkum. Manadhirkkul..aasaigal, yekkangal, yedirpaarpugal, yemattrangal..ippadi yethanai yethanai ilaigal? Kilaigal? Nuniyum, Adiyum puriyadha pudhiraai..Kann moodi mouna chripudan Buddhar.!
பதிலளிநீக்குநேசமித்ரன்!
பதிலளிநீக்குதீபா!
பா.ரா!
v.ராதாகிருஷ்ணன்!
நிலாரசிகன்!
சந்தனமுல்லை!
திலீப் நாராயனன்!
முனைவர் குனசீலன்!
ராகவன்!
காமராஜ்!
அனைவருக்கும் மிக்க நன்றி.
விட்டுத் தரும்போது புத்தி தெளிய ஆரம்பித்து விடுவதை அழகாகக் காட்டுகிறது..
பதிலளிநீக்கு//கரைபுரண்டோடிய காலவெள்ளத்திற்குள்ளிருந்த புத்தர் இலைகளின் ஊடே கதிர்களாய் தெரிந்தார்.
பதிலளிநீக்குஅருமையான வரிகள்,மிகவும் அற்புதமான இடுகை
பூங்கொத்து மாதவராஜ்! மனம் ஆனந்தத்தில் மிதக்கிறது படித்தவுடன்!
பதிலளிநீக்குநல்லா இருந்தது. இதையே அங்கங்க எண்டர் தட்டிருந்தீங்கன்னா கவிதை பாஸ் :))
பதிலளிநீக்கு