கை கொடுங்கள் சச்சின்!

 

முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம் கூட வந்தது.

அப்போது மத்தியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தது. வாஜ்பாயின் மூட்டு வலிக்கும், அத்வானியின் வயிற்றுவலிக்கும் கூட பாகிஸ்தான் காரணம் என்னும் அளவுக்கு இந்துத்துவா பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு கிரிகெட் தொடரில் பாகிஸ்தானை வென்றதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தோஷம் தான். கொண்டாடப்பட வேண்டியதுதான். நம் வீரர்களூகு அது மிகப் பெரிய ஊக்கமாகவும், ஆதரவாகவும் இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் மற்ற வெற்றிகளுக்கும், பாகிஸ்தானிடம் அடைந்த வெற்றிக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதுதான் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. அதற்காக விசேஷ சலுகைகள் ஒரு அரசு அளிக்கிறது என்றால் அந்த அரசுக்கு கிரிக்கெட்டைத் தாண்டி வேறொரு நோக்கமிருக்கிறது என்பதை புரிந்தாக வேண்டி இருந்தது.

தொடரின் நான்காவது விளையாட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது  'பாகிஸ்தானைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது சந்தோஷமளிக்கிறது' என்று சச்சின் சொன்னார். எந்த அணியை வென்றாலும் அவருக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் என்ற அழுத்தம் ஏன் என்று கேள்வி எழுந்தது. அது அவரின் உண்மையான சந்தோஷமா? யாரையாவது திருப்திப் படுத்த அவர் அடைந்த சந்தோஷமா? அல்லது அவரும் சூழலின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அடைந்த சந்தோஷமா? எப்படியிருந்தாலும் தவறு என்றே பட்டது. அந்த வார்த்தைகள் வாய் தவறி வந்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொள்ளவே தோன்றியது. எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும்,  சுற்றிலும் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிற வேளையிலும் விவேகமாய் விளையாடக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னை ஒரு கணம் இழந்து விட்டாரோ என்று அடி மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது.

இன்று அதே சச்சினை நினைத்தால் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. விளையாட்டில் நான் நேசிக்கும் ஒரு வீரர், வாழ்க்கையிலும் நான் நேசிக்கிற மனிதராகி இருக்கிறார். அதிகாரமும், ஆணவமும், குறுகிய நலனும், பாசிச முகமும் கொண்ட இயக்கங்களுக்கு எதிராக, தைரியமாகவும், அமைதியாகவும், “மும்பை மாநகரம் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறி இருக்கிறார். பீகாரிகளை மும்பையை விட்டு விரட்டி விரட்டி அடித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பிடிக்காது. இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தததற்காக “ஆஷ்மியின் தந்தூரியை செய்து கொண்டு வாருங்கள்” என்று சொன்ன அங்கிளுக்கும், ஆஷ்மியை அடித்த மருமானுக்கும் இந்த வார்த்தைகள் தாங்க முடியாதவை. பாரத ஸ்டேட் வங்கியில், மராட்டியர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு போய்விட்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் கொதிப்பை ஏற்படுத்துபவை. தான் செய்வது இன்னதென்று அறிந்தே, இந்தக் காரியத்தை செய்திருப்பதால்தான் சச்சினை மிகவும் பிடிக்கிறது.

சமூகம் மதிக்கிற முக்கியமான மனிதர்கள் இதுபோன்ற தருணத்தில் உண்மையை பேசாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பது, பெரும் கேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இளைஞர்களின் முன்னுதாரணமாய் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி உண்டு. அவை சுயநலன்களைத் தாண்டி, சமூகப் பொறுப்போடு வெளிப்படும்போது ஆரோக்கியமானதாகின்றன.

கலைஞர்களும், விளயாட்டு வீரர்களும் தத்தம் பிரதேசங்களின் தூதுவர்கள். அவர்களது ராஜ்ஜியம் எல்லையற்றது. தங்கள் திறமையின் மூலம் தங்கள் மண்ணை, அங்கு வாழும் மக்களை உலகமே நேசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவரது விளையாட்டுக்கு பெருமை. அவருக்கும் பெருமை.

தாங்க முடியாமல் சச்சினைப் பார்த்து “விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியல் வேண்டாம் உங்களுக்கு” என்கிறார் மூத்த தாக்கரே. மைதானத்தைத் தாண்டியும் உலகம் விரிந்து இருக்கிறது. சச்சினிடமிருந்து பந்துகள் இப்படி எல்லைக்கோட்டைத் தாண்டுவது பார்ப்பதற்கே நல்லாயிருக்கிறது. கைகொடுங்கள் சச்சின்!

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தைரியமாகவும், அமைதியாகவும், “மும்பை மாநகரம் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறி இருக்கிறார். //

    மிகுந்த துணிச்சல் வாய்ந்த கருத்துதான். பொறுக்காமல் பொங்கும் தாக்கரே போன்ற ஆட்களின் கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள தோழரே

    அருமையான பதிவு.. சரியான நேரத்தில் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கிறீர்கள்..பிரபலமானவர்களுக்கும் சமுகப் பிரச்னைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை உடைத்து சச்சின் தைரியமாக கருத்து தெரிவித்துள்ளார்..

    பதிலளிநீக்கு
  3. சச்சினையும் அரசியலுக்கு இழுந்துட்டு வராம நாம ஓயப்போறதில்லைன்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  4. நெத்தியடி முஹம்மத்17 நவம்பர், 2009 அன்று PM 10:12

    இவ்வளவு காலம் சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது வாய் திறக்கிறார் என்றால், கவனிக்க வேண்டிய விஷயம், உலகப்புகழ் பெற்ற சச்சின் இனி சீக்கிரம் அரசியலில் குதிக்க போகிறார். அதாவது, மாநில அரசியலில் அல்ல.... மத்திக்கு...! சிவசேனாவுக்கு இதிரான ஒரு மத்திய கட்சியில் அவர் எதிர்காலத்தில் சேரக்கூடும் என உள்ளுக்குள் பட்சி சொல்கிறது. வருக சச்சின். பாராளுமன்றத்தில் சிக்சர் அடிக்க....!

    பதிலளிநீக்கு
  5. நெத்தியடி முஹம்மத்17 நவம்பர், 2009 அன்று PM 10:35

    டெண்டுல்கரே சற்று நிதானித்து, "டெஸ்ட் மேட்ச்" ஆடினாலும் இனி தாக்கரேக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் 'தொல்லைகள்' மூலம் "20/20" ஆடி-அவரையும் ஆட வைத்து சேர்க்க வேண்டிய இடத்தில் (MP) கொண்டுபோய் சரியாக வைத்து விடுவார்கள். வெல்க சச்சின்.

    பதிலளிநீக்கு
  6. ”தல” யை வாழ்த்தி எழுதியதற்காக கே.கே. நகர் சச்சின் ரசிகர் மன்றத் தலைவர் ”ஜோ” இந்தப் பொன்னாடையை மாதவராஜூக்குச் சூட்டுகிறார்!

    ;-))


    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அங்கிள்! கடைசி வரிகள் சூப்ப்பர்!

    பதிலளிநீக்கு
  7. //வருக சச்சின். பாராளுமன்றத்தில் சிக்சர் அடிக்க....!//



    நீங்க சிக்ஸ் அடிக்க கூப்பிட்டிருக்கிறதால சச்சினுக்கு மகாராஸ்டிர சட்டமன்றமோ இந்தியா நாடாளுமன்றமோ பிரச்சனை இல்ல. என்னா சிக்ஸ் அடிக்க அவரு ஹெல்மெட் போட்டு பாதுகாப்பா தானே வருவாரு...இல்லேன்னா இப்படி எல்லாம் பேசிட்டு தைரியமா அங்க எல்லாம் போக முடியுமா. தந்தூரி பண்ன்னிடமாட்டான்க்க.

    பதிலளிநீக்கு
  8. இத்தனை வருஷமா எந்தவித controversial statements ம் கொடுக்காத சச்சின் பேசி இருப்பது சந்தோசம் தான். ஆனால் அதையே சொல்லி / சொல்லி அவருக்கு மேலும் தொந்தரவு தருவது என்று அனைத்து மீடியாக்களும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றன. பார்க்கலாம்.

    அதுசரி, சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றதை சற்று அதிகமாக மதிப்பிட்டால் என்ன பிரச்சனை ? எனக்கு என்னவோ உங்களை போன்றவர்கள் தான் பலவித கலர் கொண்ட கண்ணாடி போட்டுக்கொண்டு அனைத்தையும் பரிசீலிக்கிரீர்கள். உங்களுக்கு தேவைப்பட்ட கலரை எடுத்துக்கொண்டு கருத்து தெரிவிக்கிறீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து sporting contest ட்டிலும் neighbouring nation கூட இருக்கும் விளையாட்டு சற்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் பாகிஸ்தான் என்றால் இன்னுமே அதிகம் :)- (இதுவும் பாகிஸ்தான் டீமின் தரத்தை குறித்து தான் நான் சொல்கிறேன்)

    பதிலளிநீக்கு
  9. தோழர்,
    பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பிரமாண்டமானது என்பதாகப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனோ ரீதியாக இந்தியா பாகிஸ்தான் போட்டியே ஒரு போர் என்கிற ரீதியில்தான் வீரர்கள் உணர்கிறார்கள். அந்தப் போரில் தோற்றால் தோற்ற அணி படும் பாடு உங்களுக்கே தெரியும். அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பற்றி இந்திய வீரரும், இந்தியாவுக்கு எதிரான வெற்றி பற்றிப் பாகிஸ்தானிய வீரரும் பெருமை கொள்வது அதிசயமில்லை.

    இந்திய வீரர்களாவது பரவாயில்லை. சமீபத்தில் யூனுஸ் கான் ‘நாங்கள் நிச்சயம் இந்தியாவை வீழ்த்துவோம் என்று பேட்டி கொடுத்தார். ஏன் அவுஸ்திரேலியாவை வீழ்த்துவோம், சிறிலங்காவை வீழ்த்துவோம் என்று பேட்டி கொடுத்திருக்கலாம்தானே? இதாவது பரவாயில்லை. 2007 20-20 உலகக் கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்த பாகிஸ்தான் தலைவர் சொயப் மல்லிக் சொன்னார் ‘உலகெங்கும் வாழ்கிற முஸ்லிம் சகோதரர்கள் எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம்' என்று. இது எப்படிப்பட்ட ஒரு அபத்தமான கருத்து. இதை யாரும் கண்டுகொள்ளவேயில்லை. (இத்தனைக்கும் அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் சிறப்பாட்டக்காரர் இர்ஃபான் பதான். ஷாரூக் கான் மல்லிக்கின் உளறலைக் கேட்டு மைதானத்திலேயே அதிருப்தியுடன் தலையசைத்தார்). என்ன செய்வது, எல்லாம் பொதுப்புத்தியில் விழுந்துவிட்ட விதை.

    அதே போல் நீங்கள் சுட்டியது போல் சச்சின் போன்றோரால் சில பூனைகளுக்கு நிச்சயம் மணிகட்ட முடியும். 2007ல் இந்தியா கொண்டாடும் சச்சினுக்கு இந்துத்வா அமைப்புகள் செய்த இன்னொரு தொல்லையை ஞாபகப்படுத்துகிறேன். அப்போது இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தது. ஒரு ஓவியர் தான் சச்சினின் ஓவியங்களை வரைந்திருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட முடியுமா என்றும் அழைத்திருக்கிறார். சச்சினும் சென்று, உணவருந்தி அளவளாவிவிட்டு வந்திருக்கிறார். அடுத்தநாள் சில இந்துத்வா அமைப்புகள் ‘இந்துமதத்தை சச்சின் அவமதித்துவிட்டார். இந்தியாவில் உள்ள ஏராளமான இந்துக்களின் மனத்தை சச்சின் காயப்படுத்திவிட்டார்' என்றெல்லாம் கூச்சலிட்டார்கள். ஏன் தெரியுமா? அந்த ஓவியர் ஒரு இந்திய முஸ்லீம். அப்போது சுற்றுலாவில் இருந்ததால் ஐ.சி.சி விதிமுறைகளுக்கமைய சச்சின் வாய்கட்டி இருந்தார். அந்தக் கோபமும் சேர்ந்துதான் இப்போது வெடித்ததோ என்னவோ தெரியவில்லை. (வீரர்கள் தயக்கமில்லாமல் கருத்துச் சொல்ல முதலில் குறுக்கே நிற்கும் ஐ.சி.சி. யைக் காய்ச்ச வேண்டும் தோழரே)

    பதிலளிநீக்கு
  10. //
    தொடரின் நான்காவது விளையாட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது 'பாகிஸ்தானைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது சந்தோஷமளிக்கிறது' என்று சச்சின் சொன்னார். எந்த அணியை வென்றாலும் அவருக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் என்ற அழுத்தம் ஏன் என்று கேள்வி எழுந்தது. அது அவரின் உண்மையான சந்தோஷமா? யாரையாவது திருப்திப் படுத்த அவர் அடைந்த சந்தோஷமா? அல்லது அவரும் சூழலின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அடைந்த சந்தோஷமா? எப்படியிருந்தாலும் தவறு என்றே பட்டது. அந்த வார்த்தைகள் வாய் தவறி வந்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொள்ளவே தோன்றியது. எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், சுற்றிலும் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிற வேளையிலும் விவேகமாய் விளையாடக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னை ஒரு கணம் இழந்து விட்டாரோ என்று அடி மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது
    //

    ஏன், இதில் என்ன பிரச்சினை??

    பாகிஸ்தானை குறிப்பிட்டு சொன்னதில் என்ன தவறு?? இதில் யாரையோ திருப்திபடுத்த என்று சொல்வது, கலர் கண்ணாடி போட்டிருப்பது அவரா இல்லை நீங்களா என்று கேள்வி எழுப்புகிறது...நீங்கள் யாரை திருப்திபடுத்த முயற்சிக்கிறீர்கள்???

    கிரிக்கெட் பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்தது இந்திய பாகிஸ்தான் ரைவல்ரி...இது இந்தியா பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இங்லண்ட் ஆஸ்த்ரேலியாவுக்கும், ஆஸ்த்ரேலியா நியூசிலான்டுக்கும் கூட உண்டு...

    அதை விடுத்தும் lets be frank...இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வாஜ்பாயி, அத்வானி காலத்திற்கு முந்தியே பிரச்சினை உண்டு...அது கிரிக்கெட்டில் மட்டுமல்ல...காஷ்மீர் பிரச்சினையிலிருந்து மும்பை படுகொலை வரை பாகிஸ்தானின் பயங்கரவாத கரங்கள் கொன்று குவித்துக் கொண்டு தான் இருக்கின்றன....

    உலக பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தானை சொல்லும்போது உங்களை போன்றவர்களுக்கு ஏன் சங்கடம் ஏற்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை....

    பதிலளிநீக்கு
  11. மணியின் கருத்துத்தான் எனதும். பாகிஸ்தானோடு விளையாடும்போது பெரும் வெற்றிதான் உண்மையில் சிறந்தது என ஒவ்வொரு விளையாட்டு ரசிகரும் என்னும் ஒன்று. நீங்கள் சொல்வதுபோல் சமச்சீராய் பார்க்கும் அளவிற்கு அவர்களது யோக்கியத்தனம் இல்லை. நான் துபையில் இருந்தபோது ஆசிரியராய் வேலை பார்த்த எனது நண்பர் சொன்னார், பாகிஸ்தான் குழந்தையை என்னவாக ஆக விரும்புகிறாய் என கேட்டால் I want to join army and fight with Indian... இது தான் அவர்கள் சொல்லித்தரும் பாடம். இப்போதைய கருத்தை வரவேற்கிறேன், முதலில் சொல்லியதில் எள்ளளவும் தவறில்லை எனவும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் தோழரே!

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  12. தமிழ் நாட்டைத்தாண்டினால் வடக்கில் எங்கு போனாலும் யாருக்கும் தமிழ் நாடு என்ற ஒன்று உள்ளது என்ற உணர்வு வராது. அவ்வவவுதான் தமிழ் நாட்டின் மகிமை. இங்கிருந்தது கொண்டு மும்பை நிலவரத்தை அலசக்கூடாது என்று நினைக்கிறேன்.
    சச்சினின் கருத்தும் விசுவின் முதலில் நான் இந்தியன் பிறகு தான் தமிழன் என்ற கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக நான் கருதவில்லை. ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டுபற்றுக்கும் உள்ளானவர்களுக்கு (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்) தான் இனத்தைவிட நாடு பெரிதாக தெரியும். தான் இந்தியன் அதற்கு பிறகுதான் இந்து என்று விசுவோ சச்சினோ கூறமாட்டார்கள் என்பது என் கருத்து. இதே கருத்தை வெறு யாராவது கூறியிருந்தால் அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும்.
    சச்சின் கூறியதை நான் பிழையாக கருதவில்லை. ஆனால் பால்தக்ரே சொல்வது ஒன்றும் பிழையல்ல.
    இந்தியா தமிழர்களுக்கு செய்துவரும் அநியாயம் போல மற்ற இனங்களுக்கு செய்யவில்லையா? நேபாளத்தில் அரசியல் புரட்சி, அசாம் சிக்கல், இருந்து அந்தமான் சுனாமியில் சிக்கிய மக்களுக்கு என்ன நடந்தது? இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏதோ அநியாயம் நடக்கி்ன்றது.
    புத்திசாலித்தனமாக பிரிந்து போன பாக்கிஸ்தான் தான் இந்திய மக்களுக்கு ஒரே கவலை. மற்றும் படி பாக்கிஸ்தான் இந்திய கிரிகெட் முழுமையாக இன, மத வெறிகொண்ட ஒரு சண்டையே. அங்கு மனிதநேயத்தையோ மயிரையோ எதிர்பார்கவேண்டாம். இந்திய வல்லாதிக்க வெறியும் பாக்கிஸ்தானின் மதவெறியும் தான் அங்கே உள்ளது. மற்றும் படி சிறிலங்காவிற்கு முரளி போல வெளியுலகிற்கு காட்டத்தான் அசாரும் அப்துல் கலாமும். இந்தியாவின் வல்லாதிக்க கனவில் மராட்டியர்களும் பாதிப்படைந்திருக்கலாம். யதார்த்தை உணருங்கள். அப்படித்தான் என்று சொல்லவரவில்லை.
    உங்கள் தமிழ்நாட்டில் எத்தனை மலையாளிகள், வடஇந்தியர்கள் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஆனால் கேரளாவில் தமிழன் கடலை விற்கிறான். ஒரு கேவலமான தமிழன் கருணாநிதியை வைத்து 8கோடி தமிழர்களை முட்டாள் ஆக்வில்லையா இந்தியா? அதுபோல ஏதுவும் செய்திருக்கலாம். பால்தக்ரே இந்து வெறியராக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் வடஇந்தியர்களை கூட்டு சேர்கவில்லை. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். அதே வேளை தம் மக்களின் உழைப்பிற்காக தமிழர்களின் இருப்பை வெறுத்தார். அவர் ஒன்றும் கருணாநிதிபோல விலைபோகவில்லை.

    பதிலளிநீக்கு
  13. //20-20 உலகக் கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்த பாகிஸ்தான் தலைவர் சொயப் மல்லிக் சொன்னார் ‘உலகெங்கும் வாழ்கிற முஸ்லிம் சகோதரர்கள் எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம்' என்று.//

    குறித்து வைத்து கொள்ள வேண்டிய செய்தி!

    பாகிஸ்தான் தான் இஸ்லாமிய மக்களின் ஒட்டு மொத்த தலமையகமா!?

    பதிலளிநீக்கு
  14. //பாகிஸ்தான் குழந்தையை என்னவாக ஆக விரும்புகிறாய் என கேட்டால் I want to join army and fight with Indian... இது தான் அவர்கள் சொல்லித்தரும் பாடம்.//

    இதையே ஒரு இந்தியன் சொல்லியிருந்தா அது முஸ்லீம்களுக்கு எதிரான மதவாதமா திரிக்கப்பட்டிருக்கும் இல்லையா!?

    இந்த கூத்துல பாகிஸ்தான்ல குண்டு போடுறதும் இன்னோரு முஸ்லீம் தான்!
    ஆனா அவர்களுக்குள் பிரிவினை இருப்பதை ஒப்பு கொள்ளவே மாட்டார்கள்!

    இன்னோரு விசயமும் இருக்கிறது, சிவசேனா ஜோக்கர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும்(மத வெறியர்களை தான் சொல்றேன்) பெரிய வித்தியாசமில்லை!

    பதிலளிநீக்கு
  15. thiru athusari,
    vanakkam. you commented "ulaga bayangaravaathaththin maiyam pakistan". ok, let it be your view. please read my article in puthuvisai january 2009 titled "kalayaththil urangum saambalum oru jOdi kaalaNigalum". you may kindly express your view after that. awaiting. yours iqbal

    பதிலளிநீக்கு
  16. //வாஜ்பாயின் மூட்டு வலிக்கும், அத்வானியின் வயிற்றுவலிக்கும் கூட பாகிஸ்தான் காரணம் என்னும் அளவுக்கு இந்துத்துவா பிரச்சாரம் செய்யப்பட்டது.//

    இப்போ எது நடந்தாலும் அது இந்துத்வாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. //சமூகம் மதிக்கிற முக்கியமான மனிதர்கள் இதுபோன்ற தருணத்தில் உண்மையை பேசாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பது, பெரும் கேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இளைஞர்களின் முன்னுதாரணமாய் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி உண்டு. அவை சுயநலன்களைத் தாண்டி, சமூகப் பொறுப்போடு வெளிப்படும்போது ஆரோக்கியமானதாகின்றன//
    சிவசேனாவை தலையில் குட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பயன்படுத்தி கொண்ட இதே மாதவராஜ், இதே கொள்கையை 26/11 தீவிரவாத செயல் நடந்த பொது, வாய் மூடி மௌனமாய் இருந்த முஸ்லிம் சமூகத்தினரை பார்த்து சொல்வாரா?
    நம் மக்கள், "மத சார்பற்ற" என்றால் அது ஏன் "இந்து மத சார்பற்ற" என்று மட்டும் அர்த்தம் கொள்கின்றனர்?
    அல்லது சீனா நம் எல்லையில் செய்யும் அட்டகசங்களுக்கும், அவர்கள் திபெத்தை படுத்தும் பாட்டுக்கு மௌனம் சாதிக்கும் கம்யுனிஸ்டுகளை பார்த்து சொல்வாரா?

    பதிலளிநீக்கு
  18. இது மாதிரி பதிவுகளில் உங்களை எனக்கு ரொம்பவே பிடித்து போகிறது...

    பதிலளிநீக்கு
  19. Can you please let me know where you got your blog template ?. It is very nice, I also want to use the same

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!