பதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்

 

பதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை  மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனிதர்களை, அவர்களது ஆற்றலை, சிந்தனைகளை போற்றுகிறேன். வியக்கிறேன். சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இவையனைத்தின் மீதும் கரியைப் பூசி விடுவதைப் பார்த்து ஏமாற்றம் கொள்கிறேன். வருத்தமும், சங்கடமும் சூழ்கின்றன.  தோன்றிய சில விஷயங்களை இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் போல இருக்கிறது.

என்னிலிருந்து இதை துவக்குவதே இந்த நேரத்தில் சரியானதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் என்னோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பற்றி நண்பர் ஒருவர் நேற்று பதிவு எழுதி இருக்கிறார். அந்தப் பதிவுக்கு என்னால் வரிக்கு வரி அல்ல, எழுத்துக்கு எழுத்து (பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம்?) பதில் சொல்ல முடியும். அவரைப் போல தந்திரங்களைக் கையாள முடியும்தான். பதிலும் எழுதுவதில்லை, பதிவும் போடுவதில்லை என முடிவெடுத்து விட்டேன். தனியாக அது குறித்து பிறிதொரு சமயம், அந்தப் பதிவை refer  செய்யாமல் எழுத நேரிடலாம்). அப்படி முடிவெடுத்ததுக்கு ஒரு காரணம் உண்டு. கருத்துக்குப் பதிலாக அந்த நண்பர் என்னை முன்னிலைப் படுத்தியதுதான் அது. என் கருத்தின் மீது மட்டும் கோபம் இல்லை. என் கருத்தின் மீது மட்டும் முரண்பாடு இல்லை. என்னோடும் சேர்த்து அந்த நண்பருக்கு எல்லாம் இருப்பதை அறிய முடிந்தது. நான் பதில் சொல்ல நேர்ந்தால் விவாதம், தனிப்பட்ட விரோதங்களையே உருவாக்கும். எனவே இப்போது அமைதியாய் இருக்க முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த நண்பர் சொன்னது எல்லாம் உண்மையாகிவிடுமா என்ன?

பதிவர்களுக்கு நான் சொல்ல வந்தது இதுதான்.  கருத்துக்களோடு எந்த சமரசமுமில்லாமல் கடுமையாக விவாதங்கள் அமைந்திடலாம். எந்த இடத்திலும், அந்தக் கருத்துக்களுக்குரியவர் மீதான விமர்சனமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வலையுலகில் நான் பார்த்து, படித்து அறிந்த பல மோதல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணியாக இந்தத் தனிநபர் மீதான கருத்துக்களே/தாக்குதல்களே இருக்கின்றன.

எல்லோருக்கும் ஒத்த கருத்துக்கள் இருக்க முடியாது. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இருக்கும் சூழல், கற்றுத் தெளிந்த அல்லது தெளியாத அறிவு, அனுபவம் சார்ந்த புரிதல், இயக்கம் சார்ந்த அணுகுமுறை, தொனி என எல்லாம் சேர்ந்து ஒருவரது கருத்துக்களை உருவாக்குகின்றன. எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடுத்தது, அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.  பக்குவமும், நிதானமுமே பிரதானமானது.

முகம் சுளிக்கும் கொச்சையான வார்த்தைகளும், அர்த்தங்களும் என்ன திருப்திக்கு கையாளப்படுகின்றன என்று தெரியவில்லை.  வார்த்தைகள் அசிங்கமானவை. அழகானவை. ஆபத்தானவை. முக்கியமாக உங்கள் மனது போன்றவை.  மறைக்கவும் செய்யும். காட்டிக் கொடுக்கவும் செய்யும். இன்று நம்மிடம் ஆயுதமாக இருக்கும். நீங்கள் பிரயோகித்த பிறகு, நாளை எதிரியிடமிருந்து நம்மைக் குறிபார்த்துக் கொண்டும் இருக்கும். மிகுந்த நேர்மையோடும், உண்மையோடும் கையாண்டாக வேண்டும். இல்லையென்றால் வார்த்தைகள் சர்வநாசம் செய்துவிடக் கூடியன.

ஆட்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னை மறந்த வேகமும், கோபமும் கூட  வரக்கூடும். அருகில் இருந்து ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதை நிச்சயம் அறிவார்கள். அதை எந்தச் சார்பும் இல்லாமல் சொல்லும் உறுதி வேண்டும். சுட்டிக்காட்டுவதில் தயக்கமே இருக்கக் கூடாது. சுற்றி நின்று, கச்சை கட்டிக்கொண்டு கும்மியடிப்பது வீண் சண்டைகளையே உருவாக்கும்.

இங்கு யாரை யார் வெற்றி கொள்ளப் போகிறோம். யாரிடம் யார் தோற்கப் போகிறோம். எதுவுமில்லை. நம் கருத்தை பதிவு செய்கிறோம். அதிலிருந்து மேலும் சில புரிதல்கள், மேலும் சில விளக்கங்கள், மேலும் சில தெளிவுகள் நமக்கோ பிறகுக்கோ கிடைத்தால் அது வெற்றி. எல்லோருக்கும் வெற்றி. அதற்காக சிந்திப்பது, உழைப்பது ஆரோக்கியமானது.

இங்கு யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது. நான் சொல்வதுதான் சரி என்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.  அதை நிலைநாட்ட முயற்சிகள் செய்தால் அதைவிட ஆணவம் வேறெதுவும் கிடையாது. கருத்துக்கள் சுதந்திரமானவையாக இருக்கும் வரை அவை பறந்துகொண்டே இருக்கும். உயர உயரப் பறந்துகொண்டே இருக்கும். வலையுலகம் அப்படியான வானம் போல இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. வேண்டுகோள்.

பி.கு: 1) தனிநபர்களைக் குறிப்பிடாமல் வலையுலகம் குறித்த அக்கறையுடன் எழுதப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனானிகளுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. நமக்கு நாமே பொது நெறிகளை, நியதிகளை உருவாக்கிக் கொள்ளும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள்

41 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. // எல்லோருக்கும் ஒத்த கருத்துக்கள் இருக்க முடியாது. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இருக்கும் சூழல், கற்றுத் தெளிந்த அல்லது தெளியாத அறிவு, அனுபவம் சார்ந்த புரிதல், இயக்கம் சார்ந்த அணுகுமுறை, தொனி என எல்லாம் சேர்ந்து ஒருவரது கருத்துக்களை உருவாக்குகின்றன. எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடுத்தது, அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பக்குவமும், நிதனமுமே பிரதானமானது//
  I agree with all these points.
  When one holds an opinion, the other person is free to hold an entirely opposing view or opinion. One can not argue that his view alone is right.

  பதிலளிநீக்கு
 2. முகம் சுளிக்கும் கொச்சையான வார்த்தைகளும், அர்த்தங்களும் என்ன திருப்திக்கு கையாளப்படுகின்றன என்று தெரியவில்லை. வார்த்தைகள் அசிங்கமானவை. அழகானவை. ஆபத்தானவை. முக்கியமாக உங்கள் மனது போன்றவை. //

  பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் தங்கள் மீதான அனுமானத்தை வாசிப்பவருக்கு கொடுக்கின்றன என்பதை உணராதவர்களே இத்தகைய வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 3. கருத்து சுதந்திரம் வேண்டும், கருத்து யுத்தம் இருக்க வேண்டும், ஆனால் கருத்து சொல்பவர் மீதி தனிப்பட்ட தாக்குதல் இருக்க கூடாது.

  நீங்கள் குறிப்பிடும் பதிவு நானும் தலைப்பு பார்த்தேன், முழுதும் படிக்க வில்லை, படிக்க விருப்பமும் இல்லை.

  நீங்கள் வழக்கம் போல உங்கள் எழுத்துக்களை தொடர வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 4. //எனவே இப்போது அமைதியாய் இருக்க முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த நண்பர் சொன்னது எல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? //

  உங்களின் இந்தமுடிவு மிகச்சரியானதே. இதைச்சொல்ல எனக்கு அனுபவமிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆயினும் இன்று வலையுலகில் நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை அவ்வப்போது கண்டு முகம் சுழிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். தாங்கள் அமைதியாய் இருக்க முடிவுசெய்ததுபோல் பிற அன்பர்களும் முடிவுசெய்தால் ஒற்றுமை மேம்படும்.

  குறித்த நேரத்தில் தேவையான இடுகை...

  பதிலளிநீக்கு
 5. அன்பின் மாதவ்,

  நேற்று முன்னிரவில் கிட்டத்தட்ட அரை மணிநேரம் நாம் பேசிக்கொண்டிருந்ததைப் பதிவாக்கியிருக்கிறீர்கள். பேச்சின் மொழியும் எழுத்தின் மொழியும் வேறுபட்டிருப்பது உங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது.

  எனினும் எல்லோரிடமும் அதே பக்குவத்தை எதிர்பார்ப்பது தவறு. கட்டற்ற சுதந்திரம் தந்த ஒரு எதிர்மறை விளைவு இது.

  எழுத்துக்களால் அறியப்படுகிறோம் என்ற சுயவுணர்தலற்ற பிதற்றல் அது. என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எப்படித் திரித்து வேண்டுமானாலும் எழுதலாம். எனினும் எழுதியவற்றிற்கு இன்றில்லாவிட்டாலும் வேறொரு நாள் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதியவன் பதில் சொல்ல நேருமென்பதை மறந்து விடுகிறான் வசதியாக.

  நீங்கள் சொன்ன உண்மைக்கும் நான் சொன்ன உண்மைக்கும் நடுவில் உண்மையான உண்மை ஒளிந்திருக்கிறது என்பதுதான் உலக இயல்பு. நான் சொல்லுவது என் சார்புநிலையில் அதே போலத்தான் சம்பவத்தின் மீது உங்கள் சார்பேற்றிச் சொல்லுவீர்கள். இங்குதான் பொது மனிதர்கள் தேவைப் படுகிறார்கள். நடந்த சம்பவத்தில் அவ்வாறானவர்கள் மெளனம் சாதித்து ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை ஏதும் பதிலில்லை.

  இருவரையும் நன்கறிந்தவர்கள் இருந்தபோதும் ஏன் ஒன்றும் செய்யாமல் அமைதி காத்தார்கள். சில நேரங்களில் ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஒரு தரப்புக்குத் துணை போவதென்பது அறியாதவகளா அவர்கள்?

  அவ்வாறான என்னுடைய முயற்சி ஒன்றிற்கு, வன்முறையாளன் எனக் குற்றம் சாட்டப்பட்டேன். எனக்கென்ன வேத்தா வடிகிறது? எப்படியும் அடித்துக் கொண்டு சாகுங்கள் என விட்டு விட்டேன்.

  ரோசா தரப்பு வெளியே வந்ததும் என்னை அழைத்து அண்ணாச்சி நீங்கள் கேட்டது ஞாயம்தான் எனச் சொல்லுகிறார்கள்.

  போங்கய்யா போய்ப் புள்ள குட்டிகளப் படிக்க வைங்க என்று வடிவேல் சொன்னது நூறு சதவீதம் நம்மைப் போன்றவர்களைப் பார்த்துதான் போல.

  பரிசல் சொன்னது போல இந்த இசங்களிற் பாற்படாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்ட என் போன்றவர்கள் பாக்கியவான்கள், உங்களையும் சேர்த்துத்தான்.

  கட்டுடைக்கவும் வேண்டாம். பின் மூக்குடைக்கவும்/மூக்குடைபடவும் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 6. //இங்குள்ள மனிதர்களை, அவர்களது ஆற்றலை, சிந்தனைகளை போற்றுகிறேன். வியக்கிறேன்.//

  இதை தொடர்ந்து போற்றுவோம். இங்கு குறிப்பிட்ட மனிதர்கள் பெரும்பான்மையானவர்கள்.

  //சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இவையனைத்தின் மீதும் கரியைப் பூசி விடுவதைப் பார்த்து ஏமாற்றம் கொள்கிறேன்.//

  பல நூறு பதிவர்களில் ஒன்றோ, இரண்டோ இதை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
  இவர்களை முழுக்க முழுக்க புறக்கணிப்போம்... அதுவே இப்போதைய தேவை...

  "அன்பை வளர்க்க வந்தோம், வம்பை வளர்க்க அல்ல" என்ற வரிகளை மீண்டும் நினைவு கொள்வோம்.

  தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை ரசித்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. வடகரை வேலனின் பின்னூட்டத்தை வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்

  பதிலளிநீக்கு
 8. சுமார் நான்கு மாதங்களாக நான் வலைப் பதிவுகளை மிகவும் விருப்புடன் அலசிவரும் தொலைவில் தமிழ் தொலைந்து போய்விடாதிருக்க வழிதேடி தடமிடுபவனாக வாழும் சாதாரணன்.

  இங்கு நடக்கும் சில முறைமைசாரா விவாதங்கள் பல உரவல்களைக் காணுறும்போது மானிடனாக நானும் கவலைகொள்கிறேன். இணையம் தண்த அளப்பெரிய விரிதளமாகவுள்ள வலைப் பதிவுகள் சில எம்மை ஈர்க்கின்றன. சில மகிழ்வூட்டுகின்றன. சில மிகவும் அரியதான தகவல்களையும் அறிவு சார் சிந்தனையைத் தூண்டுபவையுமாக இருக்கின்றன. சில எம்மையும் எழுதத் தூண்டுகின்றன. எனவாகத் தொடரும்போது சிலச்சில அருவெறுப்பையும் தரவுமே செய்கின்றன. இது பூவுலக யதார்த்தமாகவே நான் நினைக்கிறேன்.
  "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் -அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு"
  நம் அறிவே எதையும் உள்வாங்கவும் புறந்தள்ளவும் தீர்மானிக்கப்போகிறது.
  ஐயா மாதவராஜ் அவர்களே!
  என்னைக் கவர்ந்த எழுத்துக்குரியவர்களில் நீங்களும் ஒருவர்.
  "காய்க்கின்ற மரம்தான் கல்லடிபடும்"('நம்மூர் பழமொழி')
  -முகிலன்
  தோரணம்

  பதிலளிநீக்கு
 9. விஷயம் என்னவென்று தெரியவில்லை... இருந்தாலும் அண்மைய சம்பவங்களை மனதில் கொண்டு பார்க்கும்பொழுது பின்னணியை பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.... மறுபடி நடந்ததைக் கிளறி சிலரை அதில் குளிர் காய விட வேண்டாம்.... நீங்கள் எடுத்த முடிவு சரிதான் !!

  //எனக்கென்ன வேத்தா வடிகிறது? எப்படியும் அடித்துக் கொண்டு சாகுங்கள் என விட்டு விட்டேன்.//

  அண்ணாச்சியே இப்படி வெறுத்துப் போகிற அளவுக்கு... ம்ம்ம்....

  பதிலளிநீக்கு
 10. நிச்சயமாக உங்களுடைய இந்த பதிவானது, எங்களிடையே உங்கள் மேல் இருக்கும் மதிப்பை உயர்த்துகிறது, சகோதரரே !

  பதிலளிநீக்கு
 11. கருத்து மோதல் இருக்கலாம், இருக்க வேண்டும் என்று கூட நான் நினைப்பதுண்டு,

  அது ஆரோக்கியமான பகிர்வை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.

  பதிவுலகம் மூலம் நட்பு ஒன்றையே விரும்பி நாம் இணைந்து இருப்பதே நலம்.

  தனிநபர் மோதலினால் என்ன பயன் என்பது எனக்கு புரியவில்லை:(

  கருத்துக்கள் வேறு, நட்பு வேறு என்ற நிலைப்பாடு நான் வைத்திருக்கிறேன்,

  கருத்து மோதல் என்பது அந்த இடுகை, அல்லது அந்த நாளோடு போய்விட வேண்டும்,

  நட்பு என்றும் தொடர வேண்டும்

  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 12. இந்தப் பதிவை, 'பதிவுலக விழிப்பு உணர்வு' கட்டுரை என்பேன்.

  - குளோபன்

  பதிலளிநீக்கு
 13. அன்பார்ந்த தோழரே


  13 மாதங்கள் என்பது மிகவும் வியப்பைத் தருகிறது. நான் கடந்த 6 மாதங்களாக உங்கள் பதிவுகளைப் பார்த்து வருகிறேன். ஓரளவுக்கு பதிவுலகின் போக்கை கவனித்தும் வருகிறேன்.கட்டற்ற சுதந்திரத்தில் ஒழுங்கைக் கடைப்பிடிக்காத தன்மை தான் நமது நாட்டின் சாபக்கேடு...
  இலக்கிய உலகில் பொதுவாக இந்தப் போக்கை நாம் பார்த்திருக்கிறோம். மிகப் பிரபலமான படைப்பாளிகள் கூட கருத்து முரணைத் தாண்டி தனிமனித விமரிசனங்களை மிகவும் ஆபாசமாக முன் வைத்ததை என்னால் நினைவு கூர முடிகிறது. பதிவுலகம் என்பது குறிப்பிட்ட, ஈடுபாடு கொண்ட, சிலர் மட்டுமே உலவுகின்ற உலகம்...மிகப் பெரிய தோட்டத்தில் உலவும் போது பலவித மலர்களைப் பார்த்து ரசிப்பது போன்றே பதிவுகளையும் படித்து கடந்து செல்ல வேண்டும்.. கருத்துப் பகிர்வுகள் பதிவுலகின் மிகப் பெரிய வரம்... இதில் பல்வேறு கருத்துக்களை நாம் புரிந்து, உள்வாங்க முடிகிறது.. அவரவர் தங்களுடைய முழுநேரப் பணிகளைத் தாண்டி, ஓய்வின் நேரத்தையோ அல்லது குடும்பத்துடனான குதுகலத்தையோ குறைத்து தான் பதிவுகளை உருவாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கழிப்பறையில் கெட்ட வார்த்தைகள் எழுதுகிற வக்கிர உணர்வின் வெளிப்பாடு, பின்னுட்டங்களில் இருப்பது கண்டிக்கத்தக்கது..

  பதிலளிநீக்கு
 14. தமிழ்மணம் படிக்காததால் என்னவென்று தெரியவில்லை.

  நீங்கள் வழக்கம் போல உங்கள் எழுத்துக்களை தொடர வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 15. //அப்படி முடிவெடுத்ததுக்கு ஒரு காரணம் உண்டு//

  அவரது பதிவு அப்படித்தெரியவில்லை அண்ணன்.

  பதிலளிநீக்கு
 16. இந்த பதிவுக்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்கள் மனதை அது ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது. இப்படியான மன நிலையிலும் உங்கள் எண்ணங்களின் தெளிவும் அதை அப்படியே உங்களால் சொல்ல முடிந்திருக்கிறதும் என்னை நிறைய ஆச்சர்யப் படவைக்கிறது. அந்த பக்குவம் என்னை கவர்கிறது.

  //எல்லோருக்கும் ஒத்த கருத்துக்கள் இருக்க முடியாது. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இருக்கும் சூழல், கற்றுத் தெளிந்த அல்லது தெளியாத அறிவு, அனுபவம் சார்ந்த புரிதல், இயக்கம் சார்ந்த அணுகுமுறை, தொனி என எல்லாம் சேர்ந்து ஒருவரது கருத்துக்களை உருவாக்குகின்றன. எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடுத்தது, அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பக்குவமும், நிதானமுமே பிரதானமானது. //

  மிக மிக உண்மையான வரிகள். ஒருவரின் வேறுபட்ட கருத்துக்கும் மரியாதை கொடுப்பது எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது. ஆனால் இது நிச்சயமாக எல்லோரும் கடை பிடிக்க வேண்டும் என்பது என் கருத்து. தொடர் முயற்சியால் அது கைகூடும் இதுவே நம்மை பண்படுத்தும் என்றும் நம்புகிறேன். இந்த பதிவு ஒரு சிலருக்கு மாற்று கருத்தை எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டியாக கூட இருக்கலாம். இந்த பதிவை எழுதிய உங்களை பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. பதிவர்களுக்கு நான் சொல்ல வந்தது இதுதான். கருத்துக்களோடு எந்த சமரசமுமில்லாமல் கடுமையாக விவாதங்கள் அமைந்திடலாம். எந்த இடத்திலும், அந்தக் கருத்துக்களுக்குரியவர் மீதான விமர்சனமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வலையுலகில் நான் பார்த்து, படித்து அறிந்த பல மோதல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணியாக இந்தத் தனிநபர் மீதான கருத்துக்களே/தாக்குதல்களே இருக்கின்றன. //

  நல்ல கருத்து கருத்து மோதல் இருக்கலாம் ............
  தனிப்பட்ட விரோதம் எதற்கு

  பதிலளிநீக்கு
 18. கிங்!
  அந்தத் தலைப்பே உங்களுக்கு உறுத்தலாய் இல்லையா.

  அந்தப்பதிவை தரக்குறைவானது என்று சொல்லவில்லை. ஆனால் தனிநபர் குறித்த கருத்துக்கள் தேவையில்லாதது என்று மட்டும்தான் அந்தப் பதிவைப் பற்றி நான் சொல்ல வந்தது.

  மற்றவை, பதிவுலகத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தே. புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  எல்லாவற்றுக்கும் அடியில் தனிநபர் குறித்த கருத்துக்கள் இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறேன். அதைத் தவிர்த்தால் ஆரோக்கியமான விவாதம் இருக்குமே என்று ஆதங்கப்பட்டு இருக்கிறேன். அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 19. //என் கருத்தின் மீது மட்டும் கோபம் இல்லை. என் கருத்தின் மீது மட்டும் முரண்பாடு இல்லை. என்னோடும் சேர்த்து அந்த நண்பருக்கு எல்லாம் இருப்பதை அறிய முடிந்தது. நான் பதில் சொல்ல நேர்ந்தால் விவாதம், தனிப்பட்ட விரோதங்களையே உருவாக்கும். எனவே இப்போது அமைதியாய் இருக்க முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த நண்பர் சொன்னது எல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? //

  வைர வரிகள். இந்த நிதானமும் பக்குவமும் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? )

  பதிலளிநீக்கு
 20. \\\\இங்கு யாரை யார் வெற்றி கொள்ளப் போகிறோம். யாரிடம் யார் தோற்கப் போகிறோம். எதுவுமில்லை. நம் கருத்தை பதிவு செய்கிறோம். அதிலிருந்து மேலும் சில புரிதல்கள், மேலும் சில விளக்கங்கள், மேலும் சில தெளிவுகள் நமக்கோ பிறகுக்கோ கிடைத்தால் அது வெற்றி. எல்லோருக்கும் வெற்றி. அதற்காக சிந்திப்பது, உழைப்பது ஆரோக்கியமானது\\தெளிவான, தேவையான பதிவு..

  பதிலளிநீக்கு
 21. தலைப்பு உறுத்தலான விசயம்தான்.


  மற்றும்படி இந்த வலையுலக பிரச்சனைகள் தன்முனைப்புகளின் மீது நிகழ்கிற விசயங்கள்..
  அதை பெரிதாக்க இருக்கவே இருக்கிறார்கள் பின்னூட்ட கண்மணிகள்

  இது எனக்கும் இன்னொரு பதிவருக்கும் இடையில் நடந்த உரையாடல் அதே கருத்துதான் எனக்கும்.

  பதிலளிநீக்கு
 22. பிரச்சனைகளுக்கெல்லாம் ஆரம்பமாக நான் குடியை பார்க்கிறேன்.

  நல்ல எழுத்தாளன் குடிகாரனாகத்தான் இருக்கவேண்டுமா? துரதிஷ்டவசமாக பலர் முன்னுதாரணங்களாக இருப்பதால், அதுவும் ஒரு எழுத்தாளனுக்கான / முற்போக்குச் சிந்தனையாளனுக்கான தகுதியாகிறதா?

  பதிலளிநீக்கு
 23. //
  பீர் | Peer said...
  பிரச்சனைகளுக்கெல்லாம் ஆரம்பமாக நான் குடியை பார்க்கிறேன்.

  நல்ல எழுத்தாளன் குடிகாரனாகத்தான் இருக்கவேண்டுமா? துரதிஷ்டவசமாக பலர் முன்னுதாரணங்களாக இருப்பதால், அதுவும் ஒரு எழுத்தாளனுக்கான / முற்போக்குச் சிந்தனையாளனுக்கான தகுதியாகிறதா?

  //

  இதில் ஏன்/எதற்காக குடியை இழுக்கிறீர்கள்?? நடந்த பிரச்சினைக்கும், நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைக்கும் குடி தான் காரணமா?? மதுவை தொடாத பல அதிகாரிகள் தான் லஞ்சம் வாங்கி குவிக்கிறார்கள்.....

  எதற்கெடுத்தாலும் மற்றவர்களையும் முடியாத போது மதுவையும் குறைசொல்வது ஒரு மோசமான போக்கு...When the fault is on you, be honest to accept it, trying to blame others/other things including Alcohol is nothing but escapism.

  நல்ல எழுத்தாளன் குடிகாரனாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை...ஆனால், ஒரு குடிகாரன் நல்ல எழுத்தாளனாகவும் இருக்கலாம்...குடிப்பவனெல்லாம் அயோக்கியன், நல்லவன் அதுவும் நல்ல எழுத்தாளன் குடிக்க மாட்டான் அல்லது குடிப்பவனை நல்ல எழுத்தாளனாக அங்கீகரிக்க மாட்டோம் என்ற சமூக கட்டமைப்பை உடைப்பதற்கே பல எழுத்தாளர்கள் தாங்கள் குடிப்பதை பொதுவாக்குகிறார்கள்....அதற்கு இந்த சமூகத்தின் அங்கீகாரம் காலியான மதுபாட்டில் என்று தூக்கி எறிகிறார்கள் என்று அர்த்தம்....மூளை செத்துப் போன சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று மூளை உள்ளவர்கள் ஏங்க மாட்டார்கள் என்று அர்த்தம்....

  மதுவுக்கும் முற்போக்கு சிந்தனைக்கும் எந்த தொடர்பும் இல்லை...ஆனால் மது அருந்துவது தான் எல்லா பிரச்சினைக்கும் ஆரம்பம் என்பது பிற்போக்கு சிந்தனை!

  மது அருந்துபவர்கள் மற்றவர்கள் மீது தங்களை திணிப்பதில்லை...ஆனால், மது அருந்தாதபவர்கள் தான் தாங்கள் ஏதோ தேவ தூதர்கள் போல தங்களை மற்றவர்கள் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டே இருக்கிறார்கள்...!

  (Sorry Madhav Raj...This is not exactly related to your Post. But I couldn't stop protesting against this crucifixion. I have different opinions regarding your post. If I can find time, i will write it tomorrow. Thanks. N)

  பதிலளிநீக்கு
 24. //
  நான் பதில் சொல்ல நேர்ந்தால் விவாதம், தனிப்பட்ட விரோதங்களையே உருவாக்கும். எனவே இப்போது அமைதியாய் இருக்க முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த நண்பர் சொன்னது எல்லாம் உண்மையாகிவிடுமா என்ன?
  //

  I don't know which blog you are referring here, so its better I skip this part. But on principle, I totally agree with you. Since all blogs are sort of public opinions, every single reader is entitled to post his/her own opinion, but it *must* be based on opinions rather caste, religion, gender etc. But we do know its not the reality here, especially in Tamil blogs.

  பதிலளிநீக்கு
 25. //
  ஆட்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னை மறந்த வேகமும், கோபமும் கூட வரக்கூடும். அருகில் இருந்து ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதை நிச்சயம் அறிவார்கள். அதை எந்தச் சார்பும் இல்லாமல் சொல்லும் உறுதி வேண்டும். சுட்டிக்காட்டுவதில் தயக்கமே இருக்கக் கூடாது. சுற்றி நின்று, கச்சை கட்டிக்கொண்டு கும்மியடிப்பது வீண் சண்டைகளையே உருவாக்கும்.
  //

  Once again, I can understand what you are referring to, but not exactly as I have no idea about the close circle....and what they did or didn't do. But it is possible that they were in the same sort of confusion and shock as everybody else.

  பதிலளிநீக்கு
 26. //
  இங்கு யாரை யார் வெற்றி கொள்ளப் போகிறோம். யாரிடம் யார் தோற்கப் போகிறோம். எதுவுமில்லை. நம் கருத்தை பதிவு செய்கிறோம். அதிலிருந்து மேலும் சில புரிதல்கள், மேலும் சில விளக்கங்கள், மேலும் சில தெளிவுகள் நமக்கோ பிறகுக்கோ கிடைத்தால் அது வெற்றி. எல்லோருக்கும் வெற்றி. அதற்காக சிந்திப்பது, உழைப்பது ஆரோக்கியமானது.
  //

  Healthy?? Possibly that's the only consolation.
  I have been reading blogs for about a year or so, and if i have to count what i have lost/gained apart from some good friendships the sum comes to a zero or possibly a big negative!. In short, blogging is a fruitless exercise, almost like smoking (yeah, i am a smoker). You know smoking costs you a lot and sucks life out of you.

  And again, blogging is like smoking, because its an addiction, once started difficult to get rid off it. The sane thing would be to quit blogging and very particularly reading blogs.

  Having said that, I must shamefully accept it, i am still blogging, but i am seriously considering leaving it altogther. Let me try.....

  பதிலளிநீக்கு
 27. And Tamil blogs are not much different from the society itself. The society is built on hypocrisy and nothing but hypocrisy. This is the society cries so much about morality, right from my very own bed room to public life. But at the same time, this is the society where corruption is at the peak....where bribing is part of life rather than an exception....where dowry is number one rule of marriage...where drinking is shame where as taking bribe and earning a lot out of bribe is a skill....People with morality is useless (and sometimes called as mentally retorted) and people with immoral and corrupt characters are the leaders....

  Tamil blogs as a whole, just mirrors the society....And in that way, it just records the culture and the lifestyle of the people at the time we are living....

  Let what may come but i have to say this... apart from a very few, blogs sucks....big time...( My blog is not an exception. If somebody thinks my blog sucks too, I have no problem with it).

  பதிலளிநீக்கு
 28. //
  பி.கு: 1) தனிநபர்களைக் குறிப்பிடாமல் வலையுலகம் குறித்த அக்கறையுடன் எழுதப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனானிகளுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. நமக்கு நாமே பொது நெறிகளை, நியதிகளை உருவாக்கிக் கொள்ளும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
  //

  I can totally understand and the good intention behind it.....But....any regulation, even if that's a self regulated one will be impotent without a force behind it...A snake with no teeth will never bite....In that scenario, what you are proposing could very well become a censor board, and that's not a good thing....At the moment, no blogger have any power over the other....Even then, there is a lot of things going on with direct and indirect attempt to stifle other bloggers using the name of caste, religion, jingoism (call it nationalism) etc etc....

  In this situation, think about some sort of censor board....

  பதிலளிநீக்கு
 29. //இங்கு யாரை யார் வெற்றி கொள்ளப் போகிறோம். யாரிடம் யார் தோற்கப் போகிறோம். எதுவுமில்லை. நம் கருத்தை பதிவு செய்கிறோம். அதிலிருந்து மேலும் சில புரிதல்கள், மேலும் சில விளக்கங்கள், மேலும் சில தெளிவுகள் நமக்கோ பிறகுக்கோ கிடைத்தால் அது வெற்றி. எல்லோருக்கும் வெற்றி//

  வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 30. தீர்க்கமான இடுகை! கருத்து வாதங்கள், விவாதங்கள் தவிர தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டியதும் இல்லை! நீங்கள் எப்போதும் போல் தொடர்ந்து பதிவிடுங்கள்..!!

  பதிலளிநீக்கு
 31. கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றிகள்.

  என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு சிறு விவகாரத்திலிருந்து, வலையுலகில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன் அல்லது இன்னும் வலையுலகம் ஆரோக்கியமாக திகழ்வதற்கு ஆசைப்பட்டு இருக்கிறேன்.

  தனிப்பட்ட எந்த நிகழ்வையும் மையப்படுத்தியோ, நோக்கியோ விவகாரங்கள் சென்றுவிடக்கூடாது என நினைத்தேன். நம்மக்கள் உண்மையிலேயே ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆதங்கங்களையும் கொட்டியிருக்கிறார்கள். வந்த சில விவகாரமானவற்றை நான் வெளியிடவில்லை. அது தேவையுமில்லை.

  எல்லோரும் சொன்னதுபோல நாம் இங்கு கருத்துக்களை முன்வைப்போம். கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நட்பும், பிரியமும் விலகாமல் கருத்துக்களோடு சண்டையிடுவோம். தனிநபர் தாக்குதல்களை தவிர்ப்போம்.

  யோசித்துப் பார்க்கும்போது நானுமே, இந்தக் குறைகளோடு பல சமயங்களில் எழுதியிருப்பதாகப் படுகிறது. இனி நிச்சயம் அப்படி என் எழுத்துக்களில் இருக்காது.

  அதுசரி அவர்கள் சொன்ன விஷயங்களில் சில உறுத்துகிறது. வலையுலகம் என்பது புகை பிடிப்பது போல, ஒருவகையான போதை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். போதை என்பதை ஒரளவுக்கு ஒத்துக் கொள்கிறேன். சில போதைகள் நல்லதே. ஆனால் புகை பிடிப்பது போல என்பது எவ்வகையில் சரி? அதுவும் ஒருவகை வெறுப்பில் சொன்னதாகவே பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. தலையும் புரியலை.. காலும் புரியலைண்ணே..!

  அந்தப் பதிவு.. அந்தப் பதிவு என்கிறீர்கள்.. எந்தப் பதிவைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தேடிப் பார்த்து அலுத்ததுதான் மிச்சம்.

  அதற்கு லின்க் கொடுத்துவிட்டு பின்பு உங்களது தரப்பு வாதத்தை வைத்திருக்கலாம். என்னை மாதிரியான புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்..!

  பதிலளிநீக்கு
 33. உண்மைத்தமிழன்!

  அந்தப் பதிவு தேவையில்லை. அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் தேவையில்லை.(அதிலொன்றும் சீரியஸாகவும், சுவராஸ்யமாகவும் இல்லை). நான் சொல்லியக் கருத்துக்களை விமர்சனம் செய்யும்போது, ஊடே என்னை முன்னிலைப்படுத்தி சில அர்த்தங்கள் வந்திருந்தன. அவ்வளவுதான். இதுபோன்ற அனுபவங்கள் இங்கு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். தனிநபரை முன்னிலைப்படுத்துவது இல்லையென்றால், இங்கு கருத்துக்கள் ஆரோக்கியமாக இருக்கும். வலையுலகில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் குறையும் என்பதுதான் இங்கு முக்கியமானது. தேவையானது.

  பதிலளிநீக்கு
 34. அண்ணே..

  அந்தப் பதிவு தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்பு எதற்காக உங்களுடைய பதில் பதிவு..?

  புறக்கணிப்பு என்றால் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம்..!

  நீங்கள் உங்களது கருத்துக்களை இப்படி பொதுவில் எழுதியிருக்கும்போது, அவருடைய கருத்துக்களையும் பொதுவில் வைப்பதுதான் நியாயமானது.

  இப்போது உங்களது தரப்பை மட்டுமே நியாயமென நம்பித்தான் பின்னூட்டங்கள் வந்திருப்பதாக கருத வேண்டியுள்ளது..

  அப்படி பார்க்கப் போனால் இது ஒரு சார்பு கட்டுரைதானே..!

  இதற்கு நீங்கள் எழுதாமலேயே இருந்திருக்கலாம்..!

  பதிலளிநீக்கு
 35. உண்மைத்தமிழன்!
  நான் திரும்பவும் சொல்கிறேன். இது அந்தப் பதிவிற்காக நான் சொல்ல வந்த கருத்துக்கள் மட்டுமல்ல. அது நோக்கமேயல்ல. தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சில பொதுவான அர்த்தங்களைத் தேடும் முயற்சி. பதிவின் ஆரம்பத்திலேயே //என்னிலிருந்து இதை துவக்குவதே இந்த நேரத்தில் சரியானதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் என்னோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.// என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

  அதைத் தொடர்ந்து..
  //சமீபத்தில் வலையுலகில் நான் பார்த்து, படித்து அறிந்த பல மோதல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணியாக இந்தத் தனிநபர் மீதான கருத்துக்களே/தாக்குதல்களே இருக்கின்றன.//

  என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.

  அந்தப் பதிவைச் சொல்லி, இந்த பதிவின் நோக்கத்தை என் சம்பந்தப்பட்டதாக மட்டுமே குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை.

  தயவுசெய்து என் நோக்கத்தை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 36. உண்மைத்தமிழன்!
  ஒருவேளை, அந்தக் குறிப்பிட்ட பதிவு, தனிநபரை முன்னிலைப் படுத்தியதா, இல்லையா என்பதைத் தாங்கள் அறிய விரும்புகிறீர்களா?

  பதிலளிநீக்கு
 37. //இங்கு யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது. நான் சொல்வதுதான் சரி என்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதை நிலைநாட்ட முயற்சிகள் செய்தால் அதைவிட ஆணவம் வேறெதுவும் கிடையாது.//

  இந்தப் புரிதல் தான் எப்போதும் தேவை. மாற்றம் என்னபது பக்கத்துத் தெருவில் இல்லை. நம்மிடமிருந்து தான் வரவேண்டும். அதற்கான முதல் படியாய் 'அந்தப் பதிவு'க்கு சுட்டி தராமல் கருத்தை மட்டும் முன்னிலைப் படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 38. உண்மை தமிழன், அந்த பதிவு இப்படி ஆரம்பிக்கும், மாதவ் என்ற நடுத்தர வர்க்க கம்யுனிஸ்ட்

  நான் முழுதாய் படிக்க வில்லை அந்த பதிவை, முதல் இரண்டு வரிகளிலேயே புரிது விட்டது அவரின் நோக்கம், எனவே முழுதும் படிக்க வில்லை, லிங்கும் சேமித்து வைக்க விருப்பமும் இல்லை.

  Unmaitamilan, but we need not waste our time on that post, it is worthless.

  பதிலளிநீக்கு
 39. //எதற்கெடுத்தாலும் மற்றவர்களையும் முடியாத போது மதுவையும் குறைசொல்வது ஒரு மோசமான போக்கு...//

  அதுசரி... ஒரு பிரச்சனையில், ஒருவரை முழுக்க குடிக்க வைத்து நிதானமிழக்கச்செய்து மற்றவர் நிதானமாகத் திட்டமிட்டு தாக்கினார் என்றும், அதை மறுத்து மற்றதரப்பு என மதுவையே இருதரப்பும் பிரதானமாக எடுத்து பேசும் போது குடியை விட்டு எதை பேசுவது?

  பதிலளிநீக்கு
 40. புறங்கையால் தள்ளி விட்டு பணியை தொடர்வதே சிறந்தது!

  பதிலளிநீக்கு
 41. இந்த பதிவுலகம் புதுசு நமக்கு,பிடித்த பதிவுகள் இருந்தா ரொம்ப ஆர்வமா விவாதம் பண்ணுவேன், ஆனா ஒரு பதிவர் விவாதத்தில் ஏண்டா போனோம்னு ஆயிடுச்சு, சரளமா கெட்ட வார்த்தைகள் கொட்டிட்டு இருந்தது, இதில் இன்னும் ஆச்சரியம், பதிவுலக நண்பர்கள் பலர் அதற்கு ஒன்னும் எழுதலை, எல்லாரும் ஆகா அருமை, சூப்பர் பதிவு அப்படின்னு தான் சொன்னாங்க. ஏன் சார் இப்படி எழுதறீங்கனு கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் எழுதும் பொது எந்த மன-தடயமும், அடுத்தவர்கள் குறைவாய் நினைப்பார்கள் என்ற நினைப்பும் இல்லாமல் எழுவது தான் சரி, அதில் இருந்து அந்த பக்கமே போறதில்லை.

  நீங்கள் விரும்பாத நீங்கள் சொல்லும் பதிவில், யாரவது பின்னுட்டமாக அவரை கண்டித்தார்களா என்பதை பார்க்கவும் ஆசை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!