‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம்

 

முகம் காணாமல் அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டு இருக்கும் சென்னை என்னும் ஒரு பெருநகரத்தில் தொடர்பற்ற சில சம்பவங்களும், மனிதர்களும் காண்பிக்கப்படுகின்றனர். காரணமறிய விழையும் பார்வையாளனுக்கு சுவராசியம் மேலோங்க, அதிலொரு மனிதன் கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய கட்டிடத்தின் மேலேறி உச்சிக்குச் செல்கிறான். இந்த இடம் மிக முக்கியமானதாகிறது. உயரத்திலிருந்து  அவன் டிஜிட்டல் நுட்பத்தோடு ஒரு செஸ் விளையாட்டை நடத்துகிறான். கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருக்கும் செல்போன் மூலம் தன் முதல் காயை நகர்த்த ஆரம்பிக்கிறான். போலீஸ் கமிஷனருக்கு அழைப்பு விடுக்கப்பட, அவர் பதிலுக்கு கீழேயிருந்து தன் காயை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார். பெரும் படைபலத்தோடு கீழே இருப்பவனை, ஒற்றை மனிதனாய் மேலிருப்பவன் நெருக்கடிக்குள்ளாக்குகிறான். விரிந்து கிடக்கும் சென்னை ஆடுகளமாகிறது. முதலில் பார்த்த தொடர்பற்ற மனிதர்கள் இப்போது ஒவ்வொருவராய் அந்த ஆட்டத்தின் காய்களாகின்றனர். சிறையில் இருக்கும் நான்கு தீவீரவாதிகளும் திடுமென கட்டங்களுக்கு வந்து நிற்கவும், திரையின் வசமாகிப் போகின்றனர் பார்வையாளர்கள்.

மேலே இருப்பவனே அனைத்துக் காய்களின் அசைவுகளையும் தீர்மானிக்கிறான். போலீஸ் கமிஷனரின் அசைவையும் அவனேச் சொல்கிறான். எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது. கீழே இருப்பவர்களுக்கு அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிய முடியாமல், ஆட வேண்டிய அல்லது அசைய வேண்டிய நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவுக்கும் காலக்கெடு விதிக்கப்பட, ஆட்டத்தின் வெப்பம் கூடுகிறது. இறுதியில் சில காய்கள் எதிர்பாராமல் வெட்டப்படுகின்றன. ஆட்டம் முடிவுக்கு வருகிறது. உயரத்தில் இருப்பவன் சாதாரண மனிதனாக இறங்கி தன் வீடு நோக்கிச் செல்கிறான். கீழேயிருந்து விளையாடிய போலீஸ் கமிஷனர், தோற்றுப்போகாமல்  நிம்மதியடைந்தாலும், ஆட்டத்தின் நினைவுகள் அலைக்கழிக்கின்றன.

‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இப்படியும் பார்த்துக் கொள்ளலாம். உரையாடல்கள் மூலமே அசையும் இந்தப் படம், பார்வையாளனுக்குள் சில குறிப்பிட்ட தாக்கங்களையும், சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான பார்வைகளையும் செலுத்துவதுதான் இந்தப்படத்தின் சிறப்பு. அதைவிட நோக்கம் என்றால் சரியாய் இருக்கும்.
தீவீரவாதத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற இந்தக் காலக்கட்டத்தின் ஒரு சாதாரணன் படுகிற வலியையும், பொதுவெளிகள் நிச்சயமற்றதாய் பயமுறுத்துவதையும் இந்தப்படம் பேசுகிறது. சம்பந்தமில்லாத மனிதர்கள் பலியாகி, குடும்பங்களுக்குள் பெரும் வேதனை நினைவுகள் சுருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தின் பிரச்சினை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு, சினிமா என்னும் கலை பேசியிருக்கிறது. அதுவும் பிம்பங்களையும், மயக்கங்களையும் செலுத்துகிற ஆட்ட பாட்டங்கள் இல்லாமல் பேசியிருக்கிறது. அந்த அளவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ முக்கியமான ஒரு திரைப்படம்தான். தமிழில் கொண்டு வந்ததற்கு கலைஞன் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று பிற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும்  கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போதெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது. பார்வையாளர்களின் புலன் வழியே வேறு முலாம் பேசுகிறது. அந்த ‘சம்பவாகி யுகே யுகே’வானது  உயரத்தில் போய் பொதுமனிதன் உட்கார்ந்து கொள்வதற்கு என்ன தோற்றத்தை உருவாக்கும்? அதை நிச்சயப்படுத்துவது போல, ஆட்டத்தின் முதல் அசைவு நகர்ந்ததும் பொதுமனிதன் “நடந்தது நன்றாகவே நடந்தது” என்று போலீஸ் கமிஷனிரிடம் பேசுகிறார். இது a wednesdayயில் இல்லாதது. கவனிக்கத்தக்கதும், ஆபத்தானதும் ஆகும். மதவேறுபாடுகளைக் கடந்து படத்தில் பேசப்படும் வசனங்களுக்கு ஊடே ஏன் இந்த ‘சுருதி’பேதம்?

இன்னொன்று அந்த பப்பெட் ஷோ. இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு பற்றி முசரப் கேட்க, புஸ் கொட்டாவி விடுவது பெரும் கிண்டல். ஆனால் படத்திற்கு சம்பந்தமில்லாதது போலத் தோன்றினாலும், தீவீரவாதம் என்றால் மூஸ்லீம்கள்தான் என விதைக்கப்படும் பிம்பங்களை இந்தப் படமும் உருவாக்குகிறதே? வருத்தமாயிருக்கிறது.  இன்றைய வரலாற்றில், அரசியலில் ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘தீவீரவாதம்’ குறித்து வேண்டுமென்றே விதைக்கப்படும் சொல்லாடல்களை, புரிதல்களை, தகர்க்க முடியாதது படத்தின் தோல்வியாகப்படுகிறது. மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டும் வளர்த்துவிட முடியாது.

வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் தமிழில் காட்சி வருகிறது. ஹிந்தியில் ஒரு சினிமாக் கதாநாயகன் வருவதாகவும் “இவங்கதான் நம்ம ஹீரோக்கள், பாருங்க” என்று போலீஸ் கமிஷனர் சொல்வார். இப்படி ஒரு கிண்டல் தொனி சினிமாக் கதாநாயகர்கள் மீது வரவேண்டாம் என கமல்ஹாசன் ஏன் நினைக்க வேண்டும். அதுபோல, A wednesdayவில் இந்த அமைப்பின் மீதும், அரசு மீதுமான வசனங்கள் கடுமையாய் இருக்கும். இங்கே மெல்லிய முனகலாய் மட்டுமே ஒலிக்கிறது.

ஹிந்தியில் அந்தப் பொது மனிதனின் கோபம் மிக நுட்பமானது. எளிமையாய் சொல்லப்பட்டு வலிமையாய் பார்வையாளனுக்குள் இறங்குவது. நேற்றுவரை கூடவே எலக்டிரிக் டிரெய்னில் வந்து ஹலோ சொல்லிச் சிரித்த, நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி வாழ்த்துக்களைப் பெற்ற ஒரு இளைஞன், இந்தப் பொதுமனிதன் எலக்டிரிக் டிரெய்னில் பயணம் செய்யாத ஒரு வெள்ளிக்கிழமையில், வெடிகுண்டுகளுக்கு இரையான புள்ளியில் இருந்து துவங்குவது. தமிழில் கமல்ஹாசன் பெரும் கலவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கோரக் காட்சிகளை குரல்வழியே சித்தரிக்கிறார். அனுபவங்களைத் தாண்டிய இந்த மன உணர்வு முக்கியமானது என்றாலும், காட்சிப்படுத்தும்போது அவனை ஒரு சாதாரண/பொது மனிதனிலிருந்து விலக்கி வைக்கின்றன.

தன் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துப்பாக்கியால் கமல்ஹாசன் துடைப்பது போல இன்னும் சில முக்கியக்காட்சிகளைச் சொல்லலாம். ஆனால் சொல்லாமல் விட முடியாதது, கமல்ஹாசன் இடதுகையால் கையொப்பம் இடுவதும், அதுகுறித்து கேட்கும்போது, அவர் காந்தி பற்றி சொல்வதும். தன்னைப்போலவே காந்திக்கு இரண்டு கைபழக்கமும் உண்டு என்கிற தகவல் இங்கு முக்கியமானது. அதுதான் இடதா, வலதா என்கிற குழப்பம் கமலிடம் நீடிக்கிறது போலும்! இவையெல்லாமே, ஹிந்தியில் இருந்து தமிழில் படத்தை ஆக்கும்போது கமல்ஹாசன் செய்த மாற்றங்கள்.

ஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரம் சினிமாவையும், அதன் மொழியையும் அறிந்து வைத்திருக்கும் கலைஞன் கமல்ஹாசனுக்கு எங்கு குழப்பங்களும், தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இந்தப்படம் பார்த்தது, அப்படியொரு அனுபவமாகி இருக்கிறது.

படம் பார்க்கும்போது பொதுமனிதனாக கமல் வருகிறார் என்கிற பிரக்ஞை வருவதை தவிர்க்க முடியவில்லை. நஸ்ருதின்ஷாவிடம் அது தெரியவில்லை. ஸாரி இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

*

கருத்துகள்

25 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான அனுபவம் பகிர்ந்தமைக்கு நனறி..

    பதிலளிநீக்கு
  2. //வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் //

    அது சினிமா நடிகர்தான். அதுவும் ஒரு பெரிய நடிகரின் உடல்மொழியை வைத்து கிண்டல் அடித்திருப்பார்கள். ‘டாக்டர்’னு பட்டத்தை வேறு அழுத்தி சொன்னபிறகும் உங்களுக்கு புரியவில்லையா என்ன?

    பதிலளிநீக்கு
  3. மேலோட்டமாக பார்க்கும் பதிவுலக சமுதாயத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது இந்த விமர்சனம்
    (எங்க பார்த்தாலும் ஆகா ஓகோக்கள் தான் )

    பதிலளிநீக்கு
  4. நீங்களே யோசித்து யோசித்து தேடி பிடித்து தான் குறைகள் கண்டு பிடிக்க முடிகிறது போல.

    அப்படியானால் படத்தில் நிறைகளே மேம்பட்டு இருக்கின்றன போலும்.

    ஒரு பதிவரின் விமர்சனத்தில் கூட மொதன்லாளின் நடிப்பு, அதனால் கமலிடம் ஏற்படும் தாக்கம் குறித்து சரியாக பதிவு செய்யப் பட வில்லை.

    பதிலளிநீக்கு
  5. ராம்ஜி!
    நான் இந்திப்படத்தையும், இதையும் பார்த்ததால் ஏற்பட்ட அனுபவமாக எழுதியுள்ளேன். விமர்சனமாக எழுதியிருந்தால், இன்னும் சில விஷயங்களைச் சொல்லி இருக்கலாம்தான்.

    உன்னைப்போல் ஒருவனில், லஷ்மியைத் தவிர அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் உடல்மொழி பிரமாதமாக இருக்கிறது.

    மோகன்லால் அருமையாக நடித்திருக்கிறார்தான். ஆனால் அனுபம்கெரை இன்னும் நெருக்கமாக உணரமுடியும்.

    பதிலளிநீக்கு
  6. தீப்பெட்டி!
    நன்றி.


    ஸ்ரீதர் நாராயணன்!
    அப்படியா...! சினிமா நடிகர் மாதிரியா அவர் இருப்பார். நீங்கள் a wednesday பாருங்கள். வித்தியாசம் புரியும். அதில் நான் முக்கியமாக சொல்ல வந்தது கமிஷனரின் கமெண்ட். அது இங்கு மிஸ்ஸிங்.

    பாலா!
    இது விமர்சனமாக இல்லாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் எழுதி இருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நான் யார் என்பது முக்கியமில்லை.
    எப்படி, தமிழ்நாட்டில், தமிழர்கள் அதிகமோ, ஆந்திரத்தில் தெலுங்கர்கள் அதிகமோ, அப்படி, இன்றைய காலகட்டத்தில், தீவிரவாதத்தில் ஈடுபடுவது பெருன்பான்மை முஸ்லிம்கள் தான். அதனால், எங்கு தீவிரவாதம் பற்றி பேச்சு வந்தாலும், முஸ்லிம்கள் பேசப்படுவது, தவிர்க்க முடியாதது. அதற்காக, உங்கள் முஸ்லிம் நண்பனை சந்தேகிக்க சொல்லவில்லை. இந்த வார நிகழ்ச்சி: அமெரிக்காவில், டென்வெர் நகரில், கொஞ்ச நாள் முன் வரை ஒரு பஸ் டிரைவராக இருந்த ஒருவர், கைது செய்யப்பட்டு விசாரித்ததில், அவர், பாம் செய்வது பற்றி படித்து;/எழுதி வைத்துள்ளார். பாகிஸ்தானில், அதற்க்காக பயிற்சி எடுத்துள்ளார். இந்த விசராணைக்கு முன் தினம் வரை, அவர் எல்லோருடனும் நன்கு பழகியுள்ளார், அனைவரும் அவரை ஒரு நல்ல சக மனிதனாக நடத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் கணக்கில் அடங்க. நாமே ஒரு பட்டியல் தயாரித்து அவற்றுக்கு மதம் என்ற ஒரு அடையாளம் கொடுத்தால், பெருவாரியான அத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர்கள் தாம், என்பது தெளிவாகும். அதனால், இவை இரெண்டையும், ஒரே மூச்சில் சொல்வது, தவறொன்றும் இல்லை. அணைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது தவறு, ஆனால் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்பது நடைமுறை உண்மை. அதை நாம் உணராதவரை, உணர்ந்து அதை தடுக்க வழிகள் செய்யாதவரை, நம் மீது, டிசம்பர் 26 போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாடு மக்கள் அத்தகைய உண்மையை உணர்ந்து, அரசாங்கம் எடுக்கும், தற்காப்பு நடவடிக்கைகளை, ஏற்று கொண்டதால் தான், அந்த நாடுகளின் மீது தீவிர வாத செயல்கள் இதுவரை (கடந்த பெருஞ்சயலுக்கு பின்) நடக்கவில்லை. இந்த உண்மையை, நாம் உணராத வரையில், நம் அரசாங்கம், மக்கள் வோட்டுக்கு பயந்து, கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில், நம் நாட்டின் மீதான தீவிர வாத செயல்கள், நடந்து கொண்டு தான் இருக்கும். இந்த உண்மை கசக்கிறதா? அதை கசப்பு மருந்து என்று உட்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் இந்த நோய்க்கு நம்மை பலி கொடுப்பதை தவிர வேறு வழிஇல்லை. இதில் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பதையும், பதிவிடுவதையும் விடுத்தது, உண்மையை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், நாம் நம் நாட்டிற்கு, மக்களுக்கு, செய்யும், பெரும், உதவி, அது நம் கடமையும் ஆகும்.

    பதிலளிநீக்கு
  8. அனானி நண்பருக்கு வணக்கம்!

    ஆரோக்கியமாக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறீர்கள். நன்றி.

    முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். ‘உன்னைப் போல ஒருவன்’ படம் முஸ்லீம் சகோதரர்களுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் சொல்லவில்லை. இந்த சமூகத்தில், தொடர்ந்து திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் சொல்லாடல்களுக்கும், புரிதல்களுக்கும் ஒத்துப்போவதாக இருக்கிறது என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன். தவறான கற்பிதங்களுக்கு, தன்னை உட்படுத்தி இருக்கிறது.

    அந்தத் தவறான புரிதல்களைத்தான் தாங்களும் எழுதி இருக்கிறீர்கள். எங்கு தீவீரவாதம் வந்தாலும் முஸ்லீம்கள் பேர் அடிபடுவது தவிர்க்க முடியாதது என்று சொல்கிறீர்களே அதைத்தான் சொல்கிறேன். ஒரு பிரச்சினையை மேலோட்டமாக பார்ப்பது விடுத்து அதனை சகல பரிமாணங்களிலும் பார்க்கத் தவறுகிறோம் நாம் எல்லோருமே. கண்ணெதிரே பார்க்கும் காட்சிகள் அப்படித்தோன்றினாலும், தீர விசாரிக்க வேண்டும் என்று சொல்வது அதற்குத்தான்.

    சகலருக்கும் தெரிய பகிங்கரமாக நடத்தப்படும் கொடூரங்கள் இங்கு மதக் கலவரங்கள். ரகசியமாக வைக்கப்படும் வெடிகுண்டுகள் தீவீரவாதம். ஏவுகணைகளால், பீரங்கிகளால் நடத்தப்படும் தாக்குதல் இங்கு படையெடுப்பு. விமானங்களால் இரட்டைக்கோபுரத்தைத் தகர்த்தால் தீவீரவாதம். ஒன்று மற்றொன்றை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி இங்கு பிசாசுகளாய் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டுமே அப்பாவி மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றன. அடிப்படையில் இரண்டையுமே வேரோடு பிடுங்கி எறியவேண்டும். ஒன்று இருந்தால் இன்னொன்றும் இருக்கும். வளரும். இதுதான் வரலாற்றுப் பூர்வமான, அறிவியல் பார்வை. இதில் ஒருத்தர் மீது மட்டும் பிம்பங்களும், முத்திரைகளும் குத்தப்படுவது ஒருபோதும் பிரச்சினையை தீர்க்க உதவாது. அது மேலும் சிக்கலகளையே உருவாக்கும்.

    இன்னும் இது குறித்து புரியவில்லையென்றால், நீண்ட விளக்கமான பதிவிடுகிறேன் விரைவில்...

    பதிலளிநீக்கு
  9. ayyo ayyo intha pathivarunga thollai thaanga mudiyalaiye.
    Oruthar ennana kamalai paththa satha manushannnu ninaikka mudiyale. athilayum avar esura olaga alvula vishaya gnanam paththa kamalnnu vaara ninaippa thadukka mudiyallennu iththanaikkum avar kamaloda rasiganaam
    Inge orthar kamalai paththa saamnyannu prkjnai varthunnu solraru.
    onnu theriyuthu ongapathvarunga vimarisanam ellam padichchu mudivukku varakoodathungo

    பதிலளிநீக்கு
  10. உ.போ.ஒ இணையத்தில் கிளப்பி இருக்கும் சூடான சர்ச்சை சமயத்தில் வெளிவந்திருக்கும் முக்கிய பதிவு. தொடர்ந்து பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  11. //ஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. //

    for me too... and your view is entirely different from others .. nice really nice.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு...

    எனக்கென்னமோ... மோகன்லாலிடம் இருந்த கம்பீரம் அனுபம் கெர்-இடம் இல்லையோ என்று தோன்றியது..

    இந்தியை விட தமிழில் பின்னணி இசை பல இடங்களில் வசனத்தை மென்று தின்று விட்டது

    பதிலளிநீக்கு
  13. நசுரூதீன்ஷாவின் நிறைய படங்களை நாம் பார்த்ததில்லை.அவர் நடித்த படங்கள் சொற்பமே.ஆனால் கமல் அப்படியில்லை.அதனால் அந்த பிம்பம் தவிர்க்க இயலாது.உங்கள் கோணம் எனக்கு பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. /நான் யார் என்பது முக்கியமில்லை.
    எப்படி, தமிழ்நாட்டில், தமிழர்கள் அதிகமோ, ஆந்திரத்தில் தெலுங்கர்கள் அதிகமோ, அப்படி, இன்றைய காலகட்டத்தில், தீவிரவாதத்தில் ஈடுபடுவது பெருன்பான்மை முஸ்லிம்கள் தான். அதனால், எங்கு தீவிரவாதம் பற்றி பேச்சு வந்தாலும், முஸ்லிம்கள் பேசப்படுவது, தவிர்க்க முடியாதது. அதற்காக, உங்கள் முஸ்லிம் நண்பனை சந்தேகிக்க சொல்லவில்லை. இந்த வார நிகழ்ச்சி: அமெரிக்காவில், டென்வெர் நகரில், கொஞ்ச நாள் முன் வரை ஒரு பஸ் டிரைவராக இருந்த ஒருவர், கைது செய்யப்பட்டு விசாரித்ததில், அவர், பாம் செய்வது பற்றி படித்து;/எழுதி வைத்துள்ளார். பாகிஸ்தானில், அதற்க்காக பயிற்சி எடுத்துள்ளார். இந்த விசராணைக்கு முன் தினம் வரை, அவர் எல்லோருடனும் நன்கு பழகியுள்ளார், அனைவரும் அவரை ஒரு நல்ல சக மனிதனாக நடத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் கணக்கில் அடங்க. நாமே ஒரு பட்டியல் தயாரித்து அவற்றுக்கு மதம் என்ற ஒரு அடையாளம் கொடுத்தால், பெருவாரியான அத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர்கள் தாம், என்பது தெளிவாகும். அதனால், இவை இரெண்டையும், ஒரே மூச்சில் சொல்வது, தவறொன்றும் இல்லை. அணைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது தவறு, ஆனால் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்பது நடைமுறை உண்மை. அதை நாம் உணராதவரை, உணர்ந்து அதை தடுக்க வழிகள் செய்யாதவரை, நம் மீது, டிசம்பர் 26 போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாடு மக்கள் அத்தகைய உண்மையை உணர்ந்து, அரசாங்கம் எடுக்கும், தற்காப்பு நடவடிக்கைகளை, ஏற்று கொண்டதால் தான், அந்த நாடுகளின் மீது தீவிர வாத செயல்கள் இதுவரை (கடந்த பெருஞ்சயலுக்கு பின்) நடக்கவில்லை. இந்த உண்மையை, நாம் உணராத வரையில், நம் அரசாங்கம், மக்கள் வோட்டுக்கு பயந்து, கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில், நம் நாட்டின் மீதான தீவிர வாத செயல்கள், நடந்து கொண்டு தான் இருக்கும். இந்த உண்மை கசக்கிறதா? அதை கசப்பு மருந்து என்று உட்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் இந்த நோய்க்கு நம்மை பலி கொடுப்பதை தவிர வேறு வழிஇல்லை. இதில் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பதையும், பதிவிடுவதையும் விடுத்தது, உண்மையை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், நாம் நம் நாட்டிற்கு, மக்களுக்கு, செய்யும், பெரும், உதவி, அது நம் கடமையும் ஆகும்//

    மிக சிறந்த பதில்..அதை பிரசுரித்த உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  15. //அதுவும் ஒரு பெரிய நடிகரின் உடல்மொழியை வைத்து கிண்டல் அடித்திருப்பார்கள். ‘டாக்டர்’னு பட்டத்தை வேறு அழுத்தி சொன்னபிறகும் உங்களுக்கு புரியவில்லையா என்ன?//


    ”ஒரு பெரிய நடிகரின்” என்ற பதத்தை ரசித்தேன்! பாவம் டாக்டர் எல்லா பக்கமும் குத்து வாங்குறார்!

    பதிலளிநீக்கு
  16. muthalil ungal anubava pagirthalukku nanri ;-)

    //படத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று பிற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும் கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போதெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது//

    Yosithen, yosikkeren..naanun intha muranai padal ketkum pothu unarnthen aanal antha keeta vaarthaikallukku appothu sariyaga artham theriyavillai... yosikkavendum..

    unmaithan, hindi version- i partha piragu tamil versionil sila idankalil oppidamuiyavillai..
    utharanam, 1. cinema hero scene,2.Police commissioner anupam ker
    3.kadaisi 20 nimidangal. 4.kamalin thuppaakki, 5. alavukku meeriya technoly - tholainokki utpada...
    but tamilukku sarva nichayamaga ithu puthu padamthaan..

    varumpothu autokaarar aluthukkondar- "enna sar,padathulla heroyiniye illa "--

    sarva nichayamaga tamillukku ithu puthu padam than.. ;-)

    Vaalthukkal tholare

    பதிலளிநீக்கு
  17. பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
    http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  18. அனானி!
    நன்றி.


    சரவணக்குமார்!
    நன்றி.


    செல்வேந்திரன்!
    பேசுவோம்.


    ராமன் பக்கங்கள்!
    மிக்க நன்றி.


    கதிர்!
    நன்றி.
    மோகன்லாலை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அனுபம் கெர் முதலி யூனிபார்மிலேயே வரமாட்டார். காமன்மேனை ‘பாஸ்டர்ட்’ என்றுதான் அறிமுகப்படுத்துவார். வெடிமருந்து கொடுத்தவனை கோபத்தில் அவரே அறைவார். கடைசிக் காட்சியில் அவரது பார்வை நிறைய பேசும். வேகம், கோபம், நிதானம் எல்லாம் காண்பிக்கிற காட்சிசித்தரிப்புகள் ஹிந்தியில் தரியும். இது நான் உணர்ந்தது. அவ்வளவே. கம்பீரம்தான் போலீஸ்காரனின் அங்கலட்சணமாக நாம் நினைத்துக்கொண்டு இருப்பது சரியா?



    மங்களூர் சிவா!
    நன்றி.


    தண்டோரா!
    நன்றி.
    அனானிக்கு நான் அளித்திருக்கும் விளக்கங்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?


    மண்குதிரை!
    நன்றி.


    வால்பையன்!
    நன்றி.


    ஜெனோவா!
    நன்றி.

    சாமுண்டி!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. //சினிமா நடிகர் மாதிரியா அவர் இருப்பார். நீங்கள் a wednesday பாருங்கள். வித்தியாசம் புரியும். //

    நான் பார்தத்தினால்தான் சொல்கிறேன். உங்களுக்குப் புரியவில்லையென்றால் விடுங்கள் :)

    பதிலளிநீக்கு
  20. இந்த படத்தில் அதிக ஆங்கில வசனம். சில இடங்களில் இது தமிழ் படமா என சந்தேகமாக இருக்கிறது. மற்றபடி, எனக்கு ஹிந்தி படம் பிடித்த அளவுக்கு இப்படம் பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீதர் நாராயணன்!
    சரி விட்டுருவோம்.

    பின்னோக்கி!
    சரிதான்.

    பதிலளிநீக்கு
  22. I have watched " A wednesday" many times and I could not stop admiring the brilliance of director & Nasrudeen Shah in the movie, each time.

    Having watched the original movie, watching few clips of UPO in TV, made me disgusting. I did not see UPO. Still I have few comments to make. AFAIK, the big mess lies in:

    In Hindi, no body can guess the common guy's religion. Even if you assume that he is a muslim, his feelings would be understood.

    But in UPO, kamal did not act a common man. One can understand that Kamal was very much afraid of being blasted as " anti-Islam", and so he tried the path of any typical pseudo secular. Worse, he has been criticised as Paarpaniyanist. Poor Kamal.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!