பிரிட்டிஷாரின் இறுதி நாட்களும், சோதனைகளோடு வந்த சுதந்திரமும்!

வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தீவீரமான வேளையில், வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள், இந்திய விடுதலைக்கான இன்னொரு தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். இந்தியர்களுக்கு உதவுவது மூலமாக நேசநாடுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை பலமாகச் செய்ய முடியும் என ஜெர்மனி திட்டமிட்டது. சுபாஷ் சந்திர போஸ், சோவியத் யூனியனுக்கு எதிரான நிலையெடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில்தான் தெற்காசியாவில் பிரிட்டன் தோற்றுப்போனது. அந்த படையில் இருந்த 60000 இந்திய சிப்பாய்கள் ஜப்பானிடம்

rash bihari bose  ராஷ்பிகாரி போஸ் கத்தர் கட்சியில் இருந்து இந்தியாவுக்கு காமகாதமாரு கப்பலில் வந்தபோது பிரிட்டிஷாரால் தாக்கப்பட்டு, தலைமறைவாகி ஜப்பானில் அடைக்கலம் புகுந்து, இந்திய வீரர்களைக்கொண்டு படை நிர்மாணிக்க முயற்சி செய்தவர்.

போர்க்கைதிகளாயினர். ஏற்கனவே பிரிட்டிஷ் அடக்குமுறைகளிலிருந்து தப்பி ஜப்பானில் அடைக்கலம் புகுந்திருந்த புரட்சியாளர் ராஷ்பிகாரி போஸ் இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு ‘இந்திய தேசீய இராணுவத்தை (ஐ.என்.ஏ)’ உருவாக்கினார். சக்திவாய்ந்த தலைவர் ஒருவர் ஐ.என்.ஏ-வுக்குத் தேவைப்பட, ஜெர்மனியிலிருந்த சுபாஷ் சந்திர போஸுக்கு அழைப்பு விடுத்தார். 90 நாட்களுக்கு மேல் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக கடலுக்கு அடியில் பிரயாணம் செய்து 1943 மே மாதம் 6ம் தேதி சுபாஷ் சந்திர போஸ் சுமத்ராவுக்கு வந்தார். சுபாஷ் சந்திர போஸுக்கு சிங்கப்பூரில் இந்திய மக்களால் எழுச்சி மிக்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. 1943 ஜூலை 4ம் தேதி பெருந்திரளான மக்கள் கூட்டத்தில், அவர் இந்திய தேசீய இராணுவத்தின் தலைவரானார். ‘ஜெய் ஹிந்த் ‘ பெரும் முழக்கமாக எழுந்தது.

 


captain lakshmi
கேப்டன் லட்சுமி

as chief of ina

1943 அக்டோபர் 21ம் தேதி வியாழக்கிழமை சுபாஷ் சந்திர போஸினால் ஒரு ‘இந்திய சுதந்திர நாடு’ பிரகடனம் செய்யப்பட்டு இறுதி யுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சுபாஷ் பிரிகேட், காந்தி பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சி பிரிகேட் என நான்கு பிரிவுகளாக ஐ.என்.ஏ அமைக்கப்பட்டது. ஜான்சி பிரிகேட்டின் தலைவராக கேப்டன் லட்சுமி இருந்தார். பிரிட்டனோடு நேருக்கு நேர் போரிட்டு இந்திய எல்லைகளுக்குள் ஊடுருவவும், மெல்ல தேசத்தைக் கைப்பற்றவும், நாட்களை குறிவைத்து சுபாஷ் சந்திர போஸ் காத்திருந்தார். நாட்டு விடுதலைக்காக மக்களை மீட்க- வெள்ளையரை விரட்ட -நேதாஜி என அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் இந்திய இராணுவம் வருகிறது என்பதே இந்திய மக்களின் கனவாகவும்,  பேச்சாகவும் இருந்தது.

 

உலகப்போர் பற்றியெரிய- இந்திய நிலைமை படுமோசமாய் ஆகியிருந்தது. பிரிட்டிஷ் அரசு போர் நடவடிக்கைகளில் மட்டும் கவனமாயும், அதற்கு மட்டுமே செலவு செய்வதாகவும் இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. வங்காளத்தில் 1943ல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உணவுப்பற்றாக்குறை வாட்டி வதைக்க, பொது வினியோகம் என்பது சுத்தமாய் துடைத்தெறியப்பட்டுப் போனது. சில இந்திய வியாபாரிகள் கூட இதுதான் சமயம் என கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

 

இன்னொரு பக்கம் இந்து- முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்க தூபம் போட்டுக்கொண்டும், தூண்டி விட்டுக் கொண்டும்  பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகள் இருந்தன. அதில் குளிர் காய்ந்து இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என்பது ஆங்கிலேயரின் வக்கிர புத்தியாய் இருந்தது. சிறையில் இருந்த காந்தி 1943 பிப்ரவரி 10ம் தேதி முதல் 21 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அவரது உடல்நலம் கருதி விடுதலை செய்யப்பட்டார்.

 

ina comes

1944ல் சுபாஷ் சந்திர போஸ் தனது ராணுவத்தாக்குதலை ஆரம்பித்தார். ஐ.என்.ஏ வீரர்கள் இந்திய எல்லையைத் தொட்டவுடன் கண்களெல்லாம் நீர்ப்பெருக்கெடுத்தோட, கீழே விழுந்து தாய் மண்ணை முத்தமிட்டனர். ஆயுதங்களோடு முன்னேறினர். இந்த நேரத்தில்தான் உலகப்போரில் ஜப்பானுக்கு மோசமான காலம் ஆரம்பமானது. சோவியத் படைகள் ஜெர்மானியப் படைகளை முறியடித்ததன் மூலம் நேசநாடுகளுக்கு புதிய உத்வேகம். 1945 ஆகஸ்ட் 14ல் ஜப்பான் தோல்வியுற்றது. பிரிட்டிஷாரால் ஐ.என்.ஏ தோற்கடிக்கப்பட்டு இந்திய வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சிலதினங்களில் நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்து போனதாக ஜப்பான் ரேடியோ தெரிவித்தது. ஐ.என்.ஏ மகத்தான தேசபக்தியின் அடையாளமாய், நினைவாய், மக்கள் மனங்களில் சுடர் விட்டுப் பிரகாசித்தது.

 

nov_2_45

இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனி, ஜப்பானின் தோல்வியில் மட்டும் முடியவில்லை. பிரான்ஸ், பிரிட்டனின் வல்லமையைப் பலவீனப்படுத்தவும் செய்திருந்தது. காங்கிரஸ் மீதிருந்த தடை நீக்கப்பட்டது. மக்களின் கோபமும், கொந்தளிப்பும் அடங்கவில்லை. எங்கும் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும். இந்த சமயத்தில்தான் இந்தோனேஷியா, வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டங்களை முறியடிக்க இந்தியச் சிப்பாய்களை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது. இதற்கெல்லாம் மேலாக கைது செய்யப்பட்ட ஐ.என்.ஏ வீரர்களை பிரிட்டிஷ் அரசு நடத்திய விதத்தை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 


bombay rally ina ஐ.என்.ஏவுக்கு ஆதரவாக பம்பாயில் ஊர்வலம்

calcutta ina rally

ஐ.என்.ஏவுக்கு ஆதரவாக கல்கத்தாவில் ஊர்வலம்

1945 நவம்பரில் ஐ.என்.ஏ முன்னணித்தலைவர்கள் ஷா நவாஸ்கான், செகல், தில்லான் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது.  ஜவஹர்லால் நேரு உட்பட பலர் ஐ.என்.ஏ வீரர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகி வழக்கை நடத்தினார்கள். கல்கத்தா, பம்பாய், கராச்சி நகரங்களில் மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்து தேசம் முழுவதும் வியாபித்தது.
கடையடைப்புகளும், வேலைநிறுத்தங்களுமாய் இருந்தன. 1946 பிப்ரவரியில், ஐ.என்.ஏ ஆபிஸர் அப்துல் ரஷித் என்பவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்து முஸ்லீம் என வேறுபாடின்றி மாணவர்களும், தொழிலாளர்களுமாய் கொதித்து எழுந்தனர். மக்களுக்கும் போலீஸூக்கும் நடந்த மோதலில் நூறு பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். விமானப்படையில் பைலட்களும், ஆபிஸர்களும், இந்தியப்படைவீரர்களுமாய் ஆங்காங்கு வேலைநிறுத்தம் செய்தனர். இதன் உச்சக்கட்டமாய் ஆரம்பித்தது கப்பற்படை எழுச்சி!  பிரிட்டிஷ் அரசுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணிய சரித்திர நிகழ்ச்சி!

 


1946 பிப்ரவரி மாதம் 18ம் தேதி திங்கட்கிழமை பம்பாய் கடற்கரையில் இருந்த எச்.எம்.ஐ.எஸ் ‘தல்வார்’ கப்பற்படை பயிற்சிக்கப்பலில் இந்திய மாலுமிகள் - கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கினார்கள். காங்கிரஸின் மூவர்ணக்கொடி, முஸ்லீம் லீகின் பச்சை நிறக் கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள், சுத்தியல் பொறித்த செந்நிறக்கொடி ஆகியவை ஒருசேர கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. செய்திகள் வேகமாகப் பரவ- ஒவ்வொரு கப்பலிலும் இதே நிலைமை. பிப்ரவரி 19ம் நாள் காலையில் வேலைநிறுத்தம் செய்த மாலுமிகள் பம்பாய்த்தெருக்களில் “இன்குலாப் ஜிந்தாபாத்”, வெள்ளையர் ஆதிக்கம்

royal_indian_navy_mutiny_ 
கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக மக்கள்

காங்கிரஸ் தலைவர்களுக்கு கப்பற்படை வீரர்களின் கஷ்டங்களிலும், குறைபாடுகளிலும் அனுதாபம் இருந்தாலும் அவர்கள் கம்யூனிஸ்டுகளை நம்புவதிலும், பலாத்காரம் பற்றி பேசுவதிலும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது
-நேரு ப்த்திரிக்கையாளர்கள் கூட்டத்தில்..
”தெருவில் பல பேர் இருந்தனர். அவர்களை வெறிபிடித்த கூட்டம் எனச் சொல்லவே முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி யோசனைப்படி அவர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவில்லை”
-நேரில் பார்த்த பிரிட்டிஷ் ஆபிசரின் ரிப்போர்ட் (தடைசெய்யப்பட்ட ரஜின் பாமிதத்தின் இன்றைய இந்தியாவில்

ஒழியட்டும்”, “இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்” என்ற கோஷங்களோடு ஊர்வலம் வந்தனர். போராட்டக்குழுவிற்கு எம்.எஸ்.கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.என்.ஏ வீரர்களின் விடுதலை, நல்ல உணவு, இந்தோனேஷியாவில் உள்ள இந்தியப் படைகள் வாபஸ், வெள்ளை மாலுமிகளுக்கு நிகரான சம்பளம் போன்றவை இந்தியக் கப்பற்படை எழுச்சி முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள் என்றாலும் சுதந்திர தாகமே இதன் அடிநாதமாக இருந்தது.

 

கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கில் மாணவர்களும், தொழிலாளர்களும் கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கினர். பம்பாய் ஸ்தம்பித்துப் போனது. பிரிட்டிஷ் அரசு பம்பாயை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பீரங்கிகளும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டன. இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிழந்தார்கள். காங்கிரஸும், முஸ்லிம்லீகும் இந்தக் கிளர்ச்சியை நிறுத்துமாறி அறிக்கைகள் விட்டன. மாலுமிகள் சரணடையுமாறும், அவர்கள் பழிவாங்கப்படாமல் இருக்க காங்கிரஸ் துணை நிற்கும் எனவும் வல்லபாய் படேல் கூறினார். இறுதியாக “நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம், பிரிட்டனிடம் அல்ல!” என கப்பற்படை வேலைநிறுத்தக் கமிட்டி சரணடைந்தது. மாலுமிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான சிறைத்தண்டனைக்குள்ளானார்கள்.

 


ராணுவத்திற்குள் ரகசிய சங்கங்களை அமைத்துப் பல காலமாக பிரிட்டிஷாருக்கு எதிராக சிப்பாய்களை ஒன்று சேர்த்து வந்த மேஜர் ஜெய்ப்பால்சிங் கைது செய்யப்பட்டார். துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும், தேசப்பற்றையும் வளர்த்து வந்திருந்தார் அவர். நாட்டிலிருந்த புரட்சிகர சக்திகளுக்கு ராணுவத்திலிருந்து ஆயுதங்கள் கொடுத்து உதவியிருந்தார். பிரிட்டிஷார் ராணுவத்திற்குள் புரட்சி நடத்த ஏற்பாடு செய்தார் என அவரைக் குற்றம் சாட்டியது. சிறையிலிருந்து தப்பி தலைமறைவானார். ராணுவத்தை விட்டு ஏன் வெளியேறினாய் என விசாரணையில் கேட்டபோது “நாடு அழைத்தது, அதனால் சென்றேன்” என நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார். இவர் பின்னாளில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

 

”வெடிமருந்துக் கிடங்குள்ள கப்பல் நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்டது போன்ற நிலைமையில் 1947 மார்ச்சில் இந்தியா இருந்தது.. நெருப்பு வெடிமருந்தை நெருங்கும் முன்பு அதை எப்படி அணைப்பது என்பதே எங்கள் பிரச்சினை. உண்மையில் நாம் அப்போது செய்வதைத்தவிர வேறொன்றும் செய்ய வழியில்லை”
-மவுண்ட் பேட்டன் செயலகத்தில் தலைமை அதிகாரியாக இருந்த இஸ்மே
‘மவுண்ட்பேட்டனோடு தூது” என்னும் புத்தகத்தில்....

எல்லை மீறிய ஆவேசத்துடன் தொழிற்சங்கங்கள், மாணவர்கள், மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றார்கள். போராட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலிருந்து, தொழிலாளர்களின் தலைமைக்கு ஏறத்தாழச் சென்று விட்டன. ராணுவத்தில், கப்பற்படையில், விமானப்படையில் இந்திய வீரர்கள் இனி மேலும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள் என்கிற நிலைமை பிரிட்டிஷ் அரசுக்கு முகத்தில் அறைகிற உண்மையாய் உறைத்தது. அடித்தளங்கள் ஒவ்வொன்றாய் நொறுங்கிச் சிதறிக்கொண்டு இருப்பதை காலுக்கடியில் உணர்ந்தான் ஆங்கிலேயன். இனி இந்த இடத்தில் நிற்கக் கூட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் அவர்கள். தன்னிடம் உள்ள குறைந்தபட்ச வெள்ளைக்கார போலீஸை, சிப்பாய்களை வைத்துக்கொண்டு இனி எந்த நாளையும் தள்ளிப்போட முடியாது என்கிற நெருக்கடி பிரிட்டிஷாருக்கு வந்தது.

 


1946 மார்ச் 24ம் தேதி பிரிட்டிஷ் பிரதம மந்திரி அட்லி இந்தியத் தலைவர்களோடு பேசுவதற்கு கிரிப்ஸ், லாரன்ஸ், அலெக்சாண்டர் அடங்கிய கேபினட் மிஷனை அனுப்பி வைத்தார். ஒரு இடைக்கால அரசு அமைப்பது என்றும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு குழு அமைப்பது என்றும் அந்தக் குழு யோசனை தெரிவித்தது. மூன்று அடுக்குகளால் ஆன ஒரு அரசியலமைப்பை முன்மொழியவும் செய்தது. தகவல் தொடர்பு, இராணுவம், அயல்நாட்டு விவகாரம் போன்றவற்றை கவனிக்க மத்திய அரசாங்கம் என்றும், அடுத்ததாக மாகாணங்கள் என்றும், சமஸ்தானங்கள் என்றும் வரையறுக்கப்பட்டது. சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி அரசாங்கங்களுடன் சேர்ந்து கொள்ள உரிமை கொடுக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி காங்கிரஸ், முஸ்லிம்லீக், இதர சிறுபான்மையினர் பிரதிநிதிகளை வைசிராய் கலந்தாலோசித்து ஒரு இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்த முயற்சித்தார். முஸ்லிம் லீக் காங்கிரஸுக்கு இணையான பிரதிநிதித்துவம் வேண்டும் என்றது. மேலும் முஸ்லிம் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் உரிமை தனக்கே வேண்டும் என வலியுறுத்தியது. காங்கிரஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “பாகிஸ்தான் எங்கள் தனிநாடு” என்ற கோஷத்தை முஸ்லிம் லீக் முன்வைத்தது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு நேரு பிரதம மந்திரியானார்.

 

gandhi navakali
”முன்னூறுக்கும் மேற்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் ஒரு வீட்டில் வைத்து தீவைத்துக் கொளுத்தப்பட்டதன் அடையாளங்களாய் எலும்புத்துண்டுகளை இன்னொரு இடத்தில் பார்க்க சகிக்க முடியாமலிருந்தது”
-ஆச்சாரியா கிருபாளினி 1947 மார்ச்சில் ஜ்ஜுன் 15ம்தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்.

ஆனால் இந்து - முஸ்லிம் ஒற்றுமை அறுந்துபோக கல்கத்தாவில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் மதக்கலவரங்களால் கொல்லப்பட்டார்கள். கல்கத்தாவில் நவகாளி வீதிகளில் காந்தி அமைதிக்காக கையில் மலர்களோடு யாத்திரை செய்தார். எழுபது வயதான முதியவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமாக நடந்தே போனார். சுழன்று அடித்த காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் காக்கும் பெரும்காரியம் அது. 12 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் லீகிற்கு 5 இடங்கள் கொடுக்கப்பட்டது. முஸ்லிம் லீக், அமைச்சரவையில் பேருக்குச் சேர்ந்து கொண்டது. அமைச்சரவை மூலம் சுதந்திர இந்தியாவுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாய் மதவெறி நாட்டை உலுக்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ்காரன் அடிமைப்படுத்திய போது ஒன்றாய் இருந்த இந்து-முஸ்லிம்கள், பிரிட்டிஷ்காரனை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றாய் இருந்த இந்து-முஸ்லிம்கள், பிரிட்டிஷ்காரன் இங்கிருந்து வெளியேறுகிற காலம் நெருங்குகிற போது எதிரெதிரே வன்மத்தோடு நின்றார்கள். மதக்கலவரங்களை இந்த மண்ணில் விதைத்த பிரிட்டிஷ்காரனே இருதரப்புக்கும் இடையில் உட்கார்ந்து பஞ்சாயத்து செய்த கொடுமை நேர்ந்தது.

 

1947 பிப்ரவரி 20ம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் அட்லி ‘பொறுப்புள்ள இந்தியர்கள்’ கையில் அதிகாரத்தை கொடுப்பதாக அறிவித்தார். அந்தப்பணி மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்டது. ‘இந்தியா’, ‘பாகிஸ்தான்’ என இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் கொடுக்கலாம் என யோசனை முன்வத்தார் அவர். முஸ்லிம்லீக் இதற்கு ஒப்புக்கொண்டது. முதலில் பெரும் எதிர்ப்புத் தெரிவித்த காந்தி, கடுமையான வருத்தங்களுக்கும், அதிருப்திக்கும் இடையே இதை ஏற்றுக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இதை எதிர்த்தது.

 

nehru on 15 aug 1947
1947 ஆகஸ்ட் 15 டெல்லியில்

1947 ஆகஸ்ட் 14ம்தேதி வியாழக்கிழமை நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதிகார மாற்றங்கள் நடந்தேறின. அன்று நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு பிரதமராகப் பொறுப்பேற்று, “உலகமே உறங்கும் நள்ளிரவில் இந்தியா விழித்துக்கொண்டது” என நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அன்னியர்கள் அமைத்த கோட்டைகளில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றார்கள்.

 


gandhi on aug 151947 ஆகஸ்ட் 15

கல்கத்தாவில்

சொல்வதற்கு எதுவுமில்லை என்று காந்தி சுதந்திர தினத்தன்று

 

அதே நேரத்தில், கல்கத்தாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை முஸ்லிம் வீட்டில் காந்தி நூல் நூற்றுக்கொண்டு அமைதியாக இருந்தார். சுதந்திர தினச்செய்தி என்று சொல்வதற்கு தன்னிடம் எதுவுமில்லை என்றார். சிலிர்ப்போடு காற்றில் பறக்க வேண்டிய தேசக்கொடி ஆடாமல் அசையாமல் துவண்டு கிடப்பதைப்போல காந்தியின் மௌனம் உறைந்து போயிருந்தது. தான் கனவுகண்ட ராஜ்ஜியம் அமையவில்லை என்பதை தார்மிகமாக மனம் ஒப்புக்கொண்டதன் அடையாளமாக அவரது தனிமை இருந்தது. அகிம்சாவழிப் போராட்டம் என்பதை வாழ்வின் மிகப்பெரிய நம்பிக்கையாக கொண்டிருந்த காந்தி, சுதந்திர இந்தியாவின் தொடக்கமே ரத்தமயமானதில் சுருங்கிப் போனார்.

 

(அடுத்த பதிவில் நிறைவு பெறும்...)

 

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - நான்காம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஐந்தாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஆறாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஏழாம் பகுதி

 

*

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தேசக்கொடி ஆடாமல் அசையாமல் துவண்டு கிடப்பதைப்போல காந்தியின் மௌனம் உறைந்து போயிருந்தது.//
    இந்த பதிவை படித்த பின் என் மனமும் ஐயா
    அருமையான பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சுதந்திர வரலாறு சொல்லும் அருமையான கட்டுரை. நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!