பெரியார் இன்று இருந்திருந்தால்...!

சிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியார் பிறந்த பூமியா இது என்று  தலையில் அடித்துக் கொண்டார்.

 

 

இதற்கு அர்த்தம் பெரியார் இருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்பதாக இருக்கலாம். இது நடந்திருந்தால் பெரியார் சும்மா இருந்திருக்க மாட்டார் என்பதாகவும் இருக்கலாம். மூடப்பழக்கங்கள், அதுவும் கடவுள் வழிபாடு குறித்து பேசுகிறபோது அனிச்சையாகவே பலர் பெரியாரைப் பற்றி பேசுவது தமிழ்நாட்டு வழக்கிலிருக்கிறது. தமிழ் மண்ணில் அப்படியொரு பரப்பில் படிந்த நிழல் மட்டும் தானா அவர் என யோசிக்க வேண்டி இருக்கிறது.

 

 

அந்த திசையில், நமக்கும் பெரியார் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்க்க தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, தி.மு.க விலிருந்து அ.தி.மு.க தோன்றிய போது, காமராஜ் மறைந்த போது, எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த போது, வி.பி.சிங் மண்டல் கமிஷனை அமல்படுத்த முனைந்த போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, விநாயகர் ஊர்வலங்கள் பயங்கரமாய் உருவெடுத்த போது, சன் டி.வி என்ற பெயரில் சேனல் ஆரம்பிக்கப்பட்ட போது, ஜாதிக்கலவரங்கள் தென்தமிழ்நாட்டில் உருவெடுத்த போது, உலகமயமாக்கல் வளரும் நாடுகளை கபளீகரம் செய்கிறபோது, பா.ஜ.க ஆட்சியை பிடித்த போது, குஜராத்தில் மதக்கலவரம் தாண்டவமாடிய போது, அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி பா.ஜ.க வை ஆதரித்த போது அவருடைய சிந்தனைகளும், செயல்களும் என்ன எதிர்வினை கொண்டவைகளாக இருந்திருக்கும் என்று ஒரு வரலாற்று ஆவல் முன்வந்து நிற்கிறது. வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்த தீவீரமும், துணிச்சலும், உறுதியும் அவர் உயிர் வாழாத இந்த காலத்தின் காட்சிகளுக்கு சில குறிப்புகளைத் தருகின்றன.

 

 

இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வருடத்திற்கு இரண்டாயிரம் ருபாய் வருமானம் தரக்கூடிய வாணிபம் செய்து கொண்டிருந்த பெரியார் அதனைத் துறந்து காங்கிரசின் அறைகூவலை ஏற்று கதராடை அணிந்து, ஊர் ஊராக கதராடைகளைச் சுமந்து விற்றிருக்கிறார். காங்கிரசில் பீடித்திருந்த வர்ணாசிரமச் சிந்தனைகளால் வெறுப்புற்று அதிலிருந்து விலகுகிறார். சுய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் சென்று வந்து சமதர்மப் பிரச்சாரம் செய்கிறார். குலக்கல்வி முறையை அமல்படுத்திய இராஜாஜிக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற காரணமாகிறார். காமராஜருக்கு ஆதரவு தருகிறார். இந்தி கட்டாயத் திணிப்பை எதிர்த்து கிளர்ச்சி செய்கிறார். அண்ணா முதலமச்சரானதும் தி.மு.கவை ஆதரிக்கிறார். ரத்தினச் சுருக்கமாக சொல்ல முடிந்த இந்த அரசியல்  சுவடுகளோடு இன்னொரு பரந்த தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். மனு தர்மங்களை கடுமையாக தாக்கி இருக்கிறார். சாதியையும், தீண்டாமையையும் எதிர்த்திருக்கிறார்.  பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக பெருங்குரல் கொடுத்திருக்கிறார். கடவுளை மறுத்திருக்கிறார். மதங்களை இகழ்ந்திருக்கிறார். வர்க்கபேதமுள்ள சமூகத்தை சாடியும் இருக்கிறார்.

 

 

எதையும் விடவில்லை. எல்லாவற்றையும் கேள்விகள் கேட்கிறார். அவைகளில் இருந்த உக்கிரம் தாங்க முடியாமல் போனார்கள். அநாகரீகமாக பேச்சுக்களும், செயல்களும் இருந்தன என்று அவரைப்பற்றி சொல்பவர்கள் உண்டு. பிராமணாள் ஓட்டல் என்று எழுதப்பட்டிருந்ததற்கு 'ஒரு தெருவில் ஒரு வீட்டில் இது பத்தினி வீடு என்று எழுதி இருந்தால் மற்ற வீடுகளுக்கு என்ன அர்த்தம்?' என்று கேள்வி கேட்டாராம். அத்தோடு நில்லாமல் அப்படி எழுதி இருந்த ஓட்டல்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டங்கள் செய்வாராம். தவறு என்று தான் அறிந்ததற்கு எதிராக தன்னால் ஆன கலகங்கள் அனைத்தையும் செய்திருக்கிறார். தான் கலகம் செய்வது நியாயமா என்பதைக் காட்டிலும், நியாயம் பிறக்கும் என்பதற்காகவே கலகம் செய்திருக்கிறார். 

 

 

பிரச்சாரம். பிரச்சாரம். பிரச்சாரம். பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். இரத்தம் சிந்திய போராட்டங்கள் இல்லை. உணர்ச்சிகரமான அறைகூவல்கள் இல்லை. மனசாட்சியை தட்டி எழுப்புகிற தொடர் முயற்சி. அரசுக்கு எதிரான போராட்டத்தை விட இந்த அமைப்புக்கு எதிரான போராட்டமே அவரிடம் முன்னின்றது. மக்களைத் திரட்டுவதைக் காட்டிலும் மக்களை திருத்துவதே முக்கியமானதாகப் பட்டிருக்கிறது அவருக்கு.

 

 

பெரியாரைப்பற்றி நிறைய நிறைய விமர்சனங்கள் உண்டு. அவதூறுகள் உண்டு. கண்டனங்கள் உண்டு. கேலிகள் உண்டு. சுயமரியாதை இயக்கம் என்பது சைவமதத்தை அழிப்பதற்கு சில வைணவர்களின் சூழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள். பெரியாருடையது பகுத்தறிவு இயக்கமே அல்ல என்று பதவுரை, பொழிப்புரை தந்திருக்கிறார்கள். வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே என்று மட்டம் தட்டி இருக்கிறார்கள். தேசம், உலகம் குறித்த பார்வை அவருக்கில்லை என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். கடவுளை கண்மூடித்தனமாக எதிர்த்தவர் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி இயக்கமாக்கவில்லை என்று குறைகூறி இருக்கிறார்கள். பெரியாரின் வழிவந்தவர்களில் குறிப்பிடும்படியான சிந்தனையாளர்களோ கலைஞர்களோ இருந்ததில்லை என்று கோடிட்டு இருக்கிறார்கள். அவரது வழிமுறைகள் சரியில்லை என விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

 

 

அவை குறித்து விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் எதற்கும் இடமின்றி ஒன்று தெரிகிறது. அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, தமிழ்நாடு எத்தனையோ தலைவர்களைப் பார்த்துவிட்டது. மக்களின் செல்வாக்கு அவர்களுக்கு கிடைத்திருக்கலாம். அரசை நடத்தியிருக்கலாம். ஆனால் சமூகத்தின் மீது அவர்களின் செல்வாக்கு  என்னவாக இருந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது பெரியார் அருகில் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். சுயநலமற்ற சிந்தனைகளும், மனித நேயமும், சமூகத்தின் விழிப்புணர்ச்சியில் தொடர்ந்த ஈடுபாடும், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமையும், இலட்சியங்களுக்கான வாழ்வுமே அவரை தனியாக நிறுத்தி இருக்கிறது.

 

 

எளிமையாக மனிதர்களை அணுகியவர், பூடகமற்றவர். தமிழக அரசியலில் வேப்பமரமாய் இருந்தவர். பெரிய தத்துவ விசாரணைகளுக்குள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மைகளை உடைத்து காண்பித்தவர். வர்க்க பேதத்தை முறியடிக்கும் முன்னால் ஜாதி பேதத்தைக் களைய வேண்டுமென்றும் அதற்கு அடிப்படையாய் கடவுள், வர்ணாசிரமச் சிந்தனை, மனுதர்மம் போன்ற பார்ப்பனச் சதிகள் இருப்பதாய் புரிந்து கொண்டவர். இந்த கருத்தினை மேலும் மேலும் தனக்குள்ளூம், வெளியிலும் வளர்த்துக்கொண்டே இருந்தார். சகல சமூகக் கேடுகளையும் அவர் இந்த பூதக் கண்ணாடி வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

இந்த கோட்டுச் சித்திரங்களோடு, பெரியார் இன்று இருந்திருந்தால் என்கிற ஆராய்ச்சியில், பல விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் சுவராஸ்யமான அபிப்பிராய பேதங்கள் வரலாம். பெரியாரின் மரணத்துக்கு பின்பு, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரது பிறந்தநாளைக்கூட கொண்டாட அரசு தடை விதித்தது. பின்னாளில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எப்போதும் அவரைப் பிடிப்பதேயில்லை.  மூடநம்பிக்கையாளர்களுக்கும் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்துவத்தையும், வெறுமையையும் அவரது எதிரிகளே சமூகத்திற்கு மிகச்சரியாக  சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் வழி வந்தவர்கள் வழுக்கியும், தடுக்கியும் விழுந்து விலகிய இடம் இதுவாகவே இருக்கிறது. அவரை சரியாக விமர்சித்து வந்தவர்கள் அவரைச் நெருங்கிய இடமும் இதுவாகவே இருக்கிறது. அவரை கடுமையாய்ச் சாடி வந்தவர்கள் முழுமையாக எதிர்த்து நிற்கிற இடமும் இதுவாகவே இருக்கிறது.

 

 

எனது நண்பர் அடர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் நிழல் சுருங்கிப் போனதாய் வருத்தப்படுகிறார். அதன் வேர்களோ இந்த தமிழ் மண்ணில் கலந்து பரவி ஆழமாய் ஊடுருவி இருக்கின்றன. எந்தக் கோடையையும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. கொஞ்சம் கசக்கும். அவ்வளவுதான்.

 

*

கருத்துகள்

40 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்.

    (உங்கள் ஆவணப்படங்கள் போலவே)

    கடைசிப்பத்தி எல்லாவற்றையும் சொல்லிவிட்டது..!

    பதிலளிநீக்கு
  2. சொன்னா கோவிச்சுகாதீங்க....
    சில பதிவுகளை படிக்கவே புரியாது... ஆனா இவ்ளோ நான் படிச்சும் எனக்கு ஒன்னும் புரியலைங்க... நீங்க என்னதான் சொல்ல வாறீங்க...
    (சத்தியமா நையாண்டி இல்லே... எனக்கு புரியலே அதனாலே கேட்டேன்)

    பதிலளிநீக்கு
  3. ///// பெரியார் அருகில் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். சுயநலமற்ற சிந்தனைகளும், மனித நேயமும், சமூகத்தின் விழிப்புணர்ச்சியில் தொடர்ந்த ஈடுபாடும், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமையும், இலட்சியங்களுக்கான வாழ்வுமே அவரை தனியாக நிறுத்தி இருக்கிறது\\\


    பெரியார் ஒரு சகாப்தம்

    பதிலளிநீக்கு
  4. மிகத் துல்லியமான தராசு முள் ஆகாயம் பார்க்கும் கட்டுரை
    சரியான வரலாற்று மேற்கோள்கள்
    தேவையான தருணத்தில் வெளிவந்திருக்கும் பதிவு இது

    பதிலளிநீக்கு
  5. மிக எளிதான, தெளிவான கோட்டில் அனுகியுள்ளீர்கள், நன்றாக உள்ளது.
    He was a formidable fighter, no weapon, no blood, but vast impact - he was a gentleman.
    புத்தரை அவ்வளவாக் வாசித்தது கிடையாது, விவேகானந்தரை வாசித்தது உண்டு, இப்போது பெரியாரை வாசிக்கிறேன்.
    அவர்களுக்கிடையே ஒரு பரந்த்த ஒற்றுமை காண முடிகிறது என்னால் :‍‍‍-)

    பதிலளிநீக்கு
  6. //பெரியாரின் மரணத்துக்கு பின்பு, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரது பிறந்தநாளைக்கூட கொண்டாட அரசு தடை விதித்தது. பின்னாளில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எப்போதும் அவரைப் பிடிப்பதேயில்லை. மூடநம்பிக்கையாளர்களுக்கும் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்துவத்தையும், வெறுமையையும் அவரது எதிரிகளே சமூகத்திற்கு மிகச்சரியாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.//

    உண்மையிலும் உண்மை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்.

    அருமையான கட்டுரை. பெரியாரை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் குறைவு தான். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் பிரதிபலித்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. இன்றைக்கு ஜாதி பெயரை இணைத்து பெயரை எழுதுவது என்பது வழக்கொழிந்து போனதற்கு பெரியார் ஏற்படுத்திய அதிர்வு காரணம். பெண் விடுதலை குறித்த அவரது கருத்துக்கள் இன்றைக்கும் சனாதனிகளால் ஜீரணிக்க முடியாதவையே. பொது வெளியில் விவாதிக்க வேண்டிய கருதுக்குவியல் பெரியாரின் சிந்தனைகள்.
    உங்கள் பதிவில் மிக சுருக்கமாக ஆனால் அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பவித்ரா.

    பதிலளிநீக்கு
  8. கடைசிவரிகள் எல்லாவற்றையும் உணர்த்திவிட்டது! நல்ல கட்டுரை!!

    பதிலளிநீக்கு
  9. சமூக நீதி காத்த வீராங்கனை விருது வழஅங்கிய திராவிட சுடர் வீரமணி எங்கே.

    களத்தில் இறங்கி போராடலாமே.

    பதிலளிநீக்கு
  10. முகமது பாருக்5 ஆகஸ்ட், 2009 அன்று 10:37 PM

    அருமையான பதிவு அண்ணா...

    //ஆனால் சமூகத்தின் மீது அவர்களின் செல்வாக்கு என்னவாக இருந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது பெரியார் அருகில் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். சுயநலமற்ற சிந்தனைகளும், மனித நேயமும், சமூகத்தின் விழிப்புணர்ச்சியில் தொடர்ந்த ஈடுபாடும், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமையும், இலட்சியங்களுக்கான வாழ்வுமே அவரை தனியாக நிறுத்தி இருக்கிறது.//

    மண் உள்ளவரை நமக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார் என்றுமே..

    //வேப்ப மரத்தின் நிழல் சுருங்கிப் போனதாய் வருத்தப்படுகிறார். அதன் வேர்களோ இந்த தமிழ் மண்ணில் கலந்து பரவி ஆழமாய் ஊடுருவி இருக்கின்றன. எந்தக் கோடையையும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. கொஞ்சம் கசக்கும். அவ்வளவுதான்//

    இது உங்களுக்கே உரித்தான எழுத்துநடை அண்ணா..மனிதம் காக்கும் வேர் அது..

    தந்தை பெரியாரின் பாதையே ஒவ்வொரு மனிதம் உள்ள மனிதனின் (தமிழனின் = திராவிடனின்) பாதையாக இருத்தல் வேண்டும் என்பதே அவா!!!

    தோழமையுடன் தம்பி

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  11. கம்யூனிஸ்டுகள் குறித்து பெரியார் தமிழர்களை எச்சரித்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தால் கட்டுரை நேர்மை உடையதாக இருந்திருக்கும் :-)

    பதிலளிநீக்கு
  12. Nice post Mr.Madhavaraj.
    "Thanthai Periyar is the crusader of social justice."
    http://tharanis.blogspot.com/2005/09/thanthai-periyar-crusader-of-social.html

    Regards,
    Tharani.

    பதிலளிநீக்கு
  13. சுருங்கிய நிழலினடியில் சுகம் காணும் வல்லூறுகளின் வல்லமை தந்த விளைவே, நம்மில் பலரும் நெருங்காமலிருக்கக் காரணம்.

    தெளிந்த கருத்துக்களுடனான பதிவு, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. Very detailed article. fine. His visit to soviet was omitted.

    பதிலளிநீக்கு
  15. இன்று எல்லாமே அசத்தல் பதிவுகளாகத் தென்படுகின்றன.
    உன்னோட பெரியார், மருத்துவர் ஷாலினியோட பெரியார்,
    ஆண்ட்டொவோட கல்விக்கடை.
    எல்லோருக்கும் அன்பும் வாழ்த்தும்.

    பதிலளிநீக்கு
  16. இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி இருந்திருந்தால் என்று ஒரு கற்பனைக்குள் நீங்கள் இருப்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே தெரியவில்லை.

    பெரியாருடைய மனித நேயத்தைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். கீழவெண்மணியில் 42 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளை எரித்தபோது, அது எங்கே இருந்தது எவர்பக்கம் நின்றது என்பது மறந்து விட்டது போல.இங்கே யுவக்ரிஷ்னா கேட்டது போல, எரித்தவனை விட்டு விட்டு, கூலிஉயர்வு கேட்ட போராட்டத்திற்கு ஆதரவாக நின்றதற்காக, கம்யூனிஸ்ட் கட்சியையே தடை செய்ய வேண்டும் என்று பேசியதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்!

    இன்றைக்கும் அவருடைய பேச்சுக்களை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டால், தலித் மக்கள் மீது அவர் கொண்டிருந்த 'உண்மையான அக்கறை' கேள்விக்குரியதாகி விடும்' என்பதாலும், உருவாக்கிவைத்திருக்கும் புனித பிம்பம் ஆட்டம் கண்டு விடும் என்பதாலுமே, அவற்றை இன்னமும் வெளியிடவும், நாட்டுடைமையாக்கவும் அவருடைய வழித் தோன்றல்கள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    சாதியை எதிர்த்தவர் கடைசிவரை ராமசாமி நாயக்கர் என்றே கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தது இன்னொரு நகைமுரண்.

    பிராமண எதிர்ப்பு என்ற போர்வையில், அன்றைக்குச் செட்டியார்களும், முதலியார்களும், பின்னால் வெள்ளாளர்களும், சேர்ந்து கொண்ட ஒரு அமைப்பு, தங்களுடைய சுய நலத்திற்காக, முதலில் நீதிக் கட்சியாகி, அப்புறம் திராவிடர் கழகம் என்று ஆனதை மறைத்து விட முடியுமா?

    சீர்திருத்தம் பற்றி நிறையப் பேசியிருக்கிறார், உண்மைதான்! பேசுவது மிக எளிதான ஒன்று தானே? அதன் வழியிலேயே. வீராவேசமான வசனம் எழுதி ஒருத்தர், ஆட்சிக் கட்டிலையே பிடிக்கவில்லையா? சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டை குரு சீடர் இவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ளாமல் தான் எழுதினீர்களா, இல்லை நக்கலடிப்பதற்காகவா?

    பதிலளிநீக்கு
  17. எளிமையாக மனிதர்களை அணுகியவர், பூடகமற்றவர். தமிழக அரசியலில் வேப்பமரமாய் இருந்தவர். பெரிய தத்துவ விசாரணைகளுக்குள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மைகளை உடைத்து காண்பித்தவர். வர்க்க பேதத்தை முறியடிக்கும் முன்னால் ஜாதி பேதத்தைக் களைய வேண்டுமென்றும் அதற்கு அடிப்படையாய் கடவுள், வர்ணாசிரமச் சிந்தனை, மனுதர்மம் போன்ற பார்ப்பனச் சதிகள் இருப்பதாய் புரிந்து கொண்டவர். இந்த கருத்தினை மேலும் மேலும் தனக்குள்ளூம், வெளியிலும் வளர்த்துக்கொண்டே இருந்தார். சகல சமூகக் கேடுகளையும் அவர் இந்த பூதக் கண்ணாடி வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். /

    ஆழமான நோக்கு ..
    நல்ல பார்வை..
    தரமான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  18. எளிமையாக புரிகிற ஆழமான பதிவு

    பதிலளிநீக்கு
  19. மாதவராஜிற்குத் தகவலுக்காக...

    /தி.மு.க விலிருந்து அ.தி.மு.க தோன்றிய போது/

    அப்போது பெரியார் உயிருடன் இருந்தார். எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறியது 1972. பெரியார் இறந்தது 1973.

    மேலும் வழக்கம்போல் அவதூறு பரப்பும் அனானிக்காக...

    /இன்றைக்கும் அவருடைய பேச்சுக்களை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டால், தலித் மக்கள் மீது அவர் கொண்டிருந்த 'உண்மையான அக்கறை' கேள்விக்குரியதாகி விடும்' என்பதாலும், உருவாக்கிவைத்திருக்கும் புனித பிம்பம் ஆட்டம் கண்டு விடும் என்பதாலுமே, அவற்றை இன்னமும் வெளியிடவும், நாட்டுடைமையாக்கவும் அவருடைய வழித் தோன்றல்கள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்./

    வக்கிரமான நகைச்சுவைக் கற்பனை.

    /சாதியை எதிர்த்தவர் கடைசிவரை ராமசாமி நாயக்கர் என்றே கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தது இன்னொரு நகைமுரண்./

    போகிற போக்கில் என்ன அவதூறை வேண்டுமானாலும் அவிழ்த்துவிடலாம் என்ற கொழுப்பு அவ்வளவு சீக்கிரம் உருகாது போலும். அப்படி பெரியார் கையெழுத்திட்ட ஒரே ஒரு பிரதியையாவது காட்ட இயலுமா?

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி இப்பதிவுக்கு. பெரியார் என்ற சகாப்தத்தைப் பற்றி மிக நேர்மையாக, எல்லாக் கோணங்களிலிருந்தும் சித்தரித்து இருக்கிறீர்கள்.

    //பாசிச சக்திகளுக்கு எப்போதும் அவரைப் பிடிப்பதேயில்லை. மூடநம்பிக்கையாளர்களுக்கும் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்துவத்தையும், வெறுமையையும் அவரது எதிரிகளே சமூகத்திற்கு மிகச்சரியாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் வழி வந்தவர்கள் வழுக்கியும், தடுக்கியும் விழுந்து விலகிய இடம் இதுவாகவே இருக்கிறது.//

    எவ்வளவு உண்மை!

    //தான் கலகம் செய்வது நியாயமா என்பதைக் காட்டிலும், நியாயம் பிறக்கும் என்பதற்காகவே கலகம் செய்திருக்கிறார். //

    மிகவும் முக்கியமான வரிகள் இவை. ரொம்பப் பிடித்தது எனக்கு!

    பதிலளிநீக்கு
  21. சிறப்பான பதிவு. இன்றைய சூழலில் இது மிகவும் அவசியம்.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஆரூர்.

    பதிலளிநீக்கு
  22. "What Periyar actually was?" - is never going to emerge. If Periyar was a so-called "Rationalist" - then why did he not oppose Allah or Jesus?? Probably he knew well about the repercussions and he also knew well that Hindus were not a threat whatsoever crap you utter !! His biggest achievement was marrying a girl less than half his age!! What a great revolutionist approach?? And, today, his stooges are doing their best to swindle the wealth that still exists in the form of trusts !!

    பதிலளிநீக்கு
  23. மாதவராஜ்,

    நல்ல பதிவு.

    பெரியாரின் இயங்குதளம் விசாலமானது. தேசம், தேசியம், மொழி, மதம், சாதி, பாலினம் எவையும் அவருக்கு பெரிதல்ல. அவையனைத்தும் ஆதிக்கத்திற்கு ஆயுதமாக்கப்பட்டதை வன்மையாக எதிர்த்தவர். எல்லாவற்றையும் கடந்த மானுடம், சம உரிமை அவரது இலட்சியக் கனவாக இருந்தது. அதனால் தான் அவர் இறந்து தசாப்தங்கள் பல கடந்தும் அவரது கருத்துக்கள் நிலைத்திருக்கின்றன. சமூக அநீதிகளை பொறுக்காதவர்கள் அவரை தேட வைக்கிறது. ஆதிக்கத்திற்கு காரணமாக இருக்கும் பாசிச சக்திகளுக்கு அவர் எதிரியாக இருக்கிறார்.

    பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. அன்பு சகோதரர் அவர்களுக்கு,
    இதன் பின்னூட்டமாக எனது பிளாக்கில் ஒன்றை தொடர்ந்திருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
    அன்புடன்
    ஆரூர்

    பதிலளிநீக்கு
  25. When there was a mass murder in Keezhvenmani how did Periyar respond?. He was critical of the left parties in his statement. He never recognised the contributions of the left parties and was against them. Did he ever fight against the big capitalists after he left congress. Did he ever launch a mass movement to protect the interest of the working class.
    Do you know his views on the trade unions founded by the left?. When DMK govt. took anti-labor positions and brutally suppressed the struggles of the working class did he support the working class.
    DK or PDK never supported the trade unions of the left. PDK branded left as anti-Tamil and Pro-Malayalee.So neither periyar nor his followers had good opinion about the left. The shameless left is today projecting him as saviour. It worships him even as his followers spit at the face of the left and write that left is nothing but another face of brahminism.

    பதிலளிநீக்கு
  26. வந்து வாசித்தவர்களுக்கும், கருத்துப் பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    பெரியார் குறித்து சில எதிர்மறையான கருத்துக்கள் சொன்ன அனானி அவர்களுக்கு மிதக்கும் வெளி சில கேள்விகள் எழுப்பி விளக்கங்கள் தந்திருக்கிறார். அனானி அவர்கள் அதற்குப் பிறகு எதுவும் சொல்லாமலிருப்பது உணமைகளைச் சொல்கிறது.

    வெண்மணி சம்பவத்தின்போது பெரியாரின் நிலை குறித்து இன்னொருவர் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். வரலாற்றில் அதுபோன்ற சில தடுமாற்றங்கள் இருக்கவேச் செய்கின்றன. நான் பெரியார் குறித்து மிகப் பொதுவான ஆனால், அழுத்தமான சில புரிதல்களை சொல்லவே முற்பட்டு இருக்கிறேன்.

    அவரை கம்யூனிஸ்டுகள் விமர்சனங்கள் செய்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளை அவரும் விமர்சனம் செய்தே இருக்கிறார். ஆனால் அவரது வழித்தோன்றல்களைக் காட்டிலும் பெரியாரை மிகச் சரியாக புரிந்து கொண்டவர்களாகவும், பெரியாரை இப்போதும் மதித்து அவரது பங்களிப்பை சரியாகப் போற்றுவதும் இடதுசாரிகளும்தான் இன்றைக்கு. இதை நான் பதிவிலேயே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

    நையாண்டி நைனா!
    உண்மையிலே நான் எழுதியது புரியலையா.....!

    பதிலளிநீக்கு
  27. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான உணர்வுக்கெல்லாம் பெரியார் வண்ணம் பூசவேண்டுமா? இது போன்ற முட்டாள்த்தனமான காரியங்களுக்கும், நமது பாரம்பரியமான தீக்குளிப்புக்கும் கொஞ்சம்தான் வித்யாசம்.

    உங்கள் நண்பரைபோன்றவர்கள், பெரியாரைக்கூட மற்றவர்கள் சரியாகப் புரிதுகொள்ள உதவமாட்டார்கள். இதற்க்கெல்லாம் பெரியார் கதை பேசாமல், தன மட்டில் முயற்சி எடுக்க சொல்லுங்கள். என்ன செய்தாரம் அவர் இதற்க்கு? கேட்டீர்களா?

    //பெரியாரைப்பற்றி நிறைய நிறைய விமர்சனங்கள் உண்டு. அவதூறுகள் உண்டு. கண்டனங்கள் உண்டு. கேலிகள் உண்டு. சுயமரியாதை இயக்கம் என்பது சைவமதத்தை அழிப்பதற்கு சில வைணவர்களின் சூழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள். பெரியாருடையது பகுத்தறிவு இயக்கமே அல்ல என்று பதவுரை, பொழிப்புரை தந்திருக்கிறார்கள். வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே என்று மட்டம் தட்டி இருக்கிறார்கள்//

    இதற்க்கெல்லாம் காரணம் உங்கள் நண்பர் போன்றவர்களின் செய்ற தன்மைதான். முற்போக்கு விஷயங்களையும், பகுத்தறிவு என்பதையும், யாருக்கும் அடயாளமாக்கும், குத்தகைதாரர் ஆக்கும் மூடத்தனங்களை விடுங்கள்.

    எல்லோரும் முட்டாள்கள் அல்ல; உள்நோக்கங்களைப் புரிந்து கொள்வார்கள் என்பதஎல்லாம் புரிய வையுங்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. நையாண்டி நைனா நையாண்டி செய்வதை நீங்கள் நினைத்தால் அது அபத்தம். நான் சொல்கிறேன் அவர் ஒருவேளை நாகரிகம் காக்கலாம்

    பதிலளிநீக்கு
  29. //சமூக நீதி காத்த வீராங்கனை விருது வழஅங்கிய திராவிட சுடர் வீரமணி எங்கே.

    களத்தில் இறங்கி போராடலாமே.//

    அவருக்கு வேறு வேலை இல்லையா?

    ___________

    //மிகத் துல்லியமான தராசு முள் ஆகாயம் பார்க்கும் கட்டுரை
    சரியான வரலாற்று மேற்கோள்கள்
    தேவையான தருணத்தில் வெளிவந்திருக்கும் பதிவு இது//

    உண்மை

    _____________

    //மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்.

    (உங்கள் ஆவணப்படங்கள் போலவே)//

    மாதவராஜ்! ஆவணப்படங்கள் எடுக்கிறீர்களா? அருமை

    _______________________

    //கம்யூனிஸ்டுகள் குறித்து பெரியார் தமிழர்களை எச்சரித்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தால் கட்டுரை நேர்மை உடையதாக இருந்திருக்கும் :-//

    அதை அப்படிப் புரிந்து கொள்ளக்கூடாது. பெரியார் தானும் ஒரு கம்யூனிஸ்டுதான் என்று சொல்லிக்கொண்டதற்கு, விமரிசனங்கள் வந்தால் கண்மணிகள் அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது :)

    பதிலளிநீக்கு
  30. //மாதவராஜ்! ஆவணப்படங்கள் எடுக்கிறீர்களா? //

    நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது நான் கேட்டதை

    பதிலளிநீக்கு
  31. @மிதக்கும் வெளி

    நீதிக்கட்சி என்பது பிராமணரல்லாத மேல் சாதிக்கரர்காளால் உருவாக்கப்பட்டது. அதில் தலித்துக்கள் ஏன் தலைமை பொறுப்பில் எல்லாம் இருக்கவில்லை? நான் போகிற போக்கில் அனானி போல் கொளுத்திப்போடவில்லை; ஆதாரம் காட்ட முடியுமா என்றெல்லாம் கேட்கேறீர்களே, என் இந்த கேள்விக்கு நீங்கள் கஷ்டப்பட்டு ஆதாரம் தேடவேண்டியதில்லை.

    அப்படி இல்லை என்பதனால் ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது என்பது எனக்குத் தெரியும். பொருத்தமான நபர் இல்லாமை கூடாகக் காரணமாய் இருக்கலாம். பெரியாரை நன்கு புரிந்து கொண்டவனாகவே என்னைக் கருதிக்கொள்கிறேன் (அவர் பெருமைகளை).

    ஆனால், நீங்கள் ஒரு முற்சாய்வு கொண்டிருப்பது போல் உங்களுக்குத்தொன்றவில்லை?

    @அனானி

    தாங்கள் அனானியாக கருத்து சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கலாம். அருண் ஷோரி கூறியது போல், அனானிகள் , தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள்தான் பெரும்பாலும் அநியாயத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுக்கிறார்கள். தாங்கள் அனானியாக எழுதியதற்கு சரியான காரணமிருந்தால் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
  32. என் இவ்வளவு குழப்பம்?

    http://www.tamilhindu.com/2009/08/subbu-column-28/

    பதிலளிநீக்கு
  33. அன்பு மாதவராஜ்,

    உங்களுக்கு ஒருவராக பேசிக்கொண்டிருப்பது பிடிக்குமா? எனக்குப் பிடிக்காது

    பதிலளிநீக்கு
  34. விழியன்!

    ஆமாம், நண்பரே. இதுவரை மூன்று ஆவணப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. இரண்டு படங்கள் எடிட் செய்ய அவகாசம் இல்லாமல் இருக்கின்றன. இன்று கூட எனது ஆவணப்படம் குறித்து பதிவிட்டிருக்கிறேன்.

    மன்னிக்கவும். ஒருவராக பேசிக்கொண்டிருப்பது யாருக்குத்தான் பிடிக்கும்? இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். கிடைத்த அவகாசத்தில் வலைப்பக்கத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. பதிலளிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  35. நன்றி மாதவராஜ்!

    குறும்படங்கள் நீங்களே எடிட் செய்யும் ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறீர்களா? எங்கேனும் வலைதொடர்பு கிடைக்குமா நீங்கள் ஏற்கனவே செதிருப்பவை பற்றி?

    ஓவியன்

    பதிலளிநீக்கு
  36. ஓவியன்!

    திருநெல்வேலியில் முனிஷ் மற்றும் ஈரோட்டில் சிபி சரவணன் என்னும் நெருக்கமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் எடிட் செய்வதில் நுட்பமானவர்கள். சாத்தூரிலும் ஏற்பாடுகள் நண்பன் பிரியா கார்த்தி ஸ்டூடியோவில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!