முன்னும் போக முடியாது, பின்னும் போக முடியாது


குறுகலான வளைவொன்றில் எதிரெதிரே ஒரு பஸ்ஸும், இன்னொரு பஸ்ஸும் முட்டிக்கொள்கிற மாதிரி போய் நின்றன.

“நான் ஹார்ன் அடிச்சுக்கிட்டே வந்தேன்...” என்றான் மேற்கிலிருந்து வந்த பஸ் டிரைவர்.

“நானுந்தான் ஹார்ன் அடிச்சுட்டே வந்தேன்” என்றான் வடக்கிலிருந்து வந்த பஸ் டிரைவர்.

“சரி...கொஞ்சம் பின்னால் போ... அப்பத்தான் முன்னாலப் போகமுடியும்...”
“ஏன் நீ பின்னால் போகக் கூடாதோ?”

தத்தம் வாகன இயந்திரத்தை அணைத்துவிட்டு, மாறி மாறி டிரைவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

அந்தந்த பஸ்ஸின் பயணிகள், தத்தம் டிரைவர்களை ஆதரித்துக் குரல் எழுப்பினர்.

சிலர் மௌனமாக, கடிகாரத்தைப் பார்த்து பார்த்து பதறிக்கொண்டு இருந்தனர்.

இரண்டு பஸ்ஸின் பின்னாலும் கார்களும், லாரிகளும், பஸ்களுமாய் வரிசைகள் நீண்டு கொண்டே இருந்தன.

ஹார்ன் சத்தங்கள் ஓயாது அலறிக்கொண்டு இருந்தன.

“ஆக்ஸிடெண்டா...” “யாராவது மறியல் பண்றாங்களா...” பின்னாலிருந்த வாகனங்களிலிருந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

யார் மீது தவறு என்று அங்கங்கு ஆராய்ச்சிகள், சர்ச்சைகள் நடந்து கொண்டு இருந்தன.

வரிசையை மீறிக்கொண்டு இருசக்கர வாகனங்கள் கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து அவை பாட்டுக்கு ஒரு வழியில் போய்க் கொண்டு இருந்தன.

கார்க்காரர்கள் வரிசையை மீறிக்கொண்டு போய், இருந்த சின்ன வழியையும் அடைத்துவிட்டனர்.

“என்னய்யா அவசரம்” என்று அவர்களை சிலர் கைநீட்டிச் சத்தம் போட்டனர்.
அதற்குள் அவர்களுக்குப் பின்னால் இன்னொரு வரிசை ஒழுங்கற்று நீள ஆரம்பித்தது இருபக்கமும்.

முட்டிக்கொண்டு நின்ற பஸ்கள் இரண்டுமே. 

இப்போது முன்னும் போக முடியாது, பின்னும் போக முடியாது.

*

Comments

14 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இது அன்றாடம் நடப்பவை! ஒழுங்கீனத்தின் வெளிப்பாடு தான் இவை!

    ReplyDelete
  2. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  3. விட்டு கொடுத்தால் தன்னை இந்த சமூகம் ஏளனம் செய்து விடும், என்ற அர்த்தமில்லா நம்பிக்கையே, இதற்கு காரணம்.

    பதிவு அருமை

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  4. :-))))

    இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

    அழகான மிக அவசியமான பதிவு.
    விட்டுக் கொடுப்பதின் மகத்துவமே நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

    ReplyDelete
  5. வேடிக்கை பார்ப்பது பெரும்பாலானவர்களின் தொழிலாகப் போய்விட்டதும் ஒரு காரணம்.

    ReplyDelete
  6. எல்லாருக்கும் அவசரம் இன்னொருத்தன் எக்கேடு கெட்டா என்ன அப்படிங்கற மனோபாவம். என்னத்த செய்ய :((

    ReplyDelete
  7. மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் குப்பன் யாஹூ.பாராட்டுகள்.
    சிரிக்க, சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  8. அருமையான பதிவு என்பதா? படித்துவிட்டு வெட்கப்படுவதா என்றே தெரியவில்லை.

    ReplyDelete
  9. இப்போதுதான் வேலனின் கதம்பத்திற்குச் சென்று மோசமான சலைகள் மற்றும் மக்களின் civic sense - இதில் என்ன சிரமம் என்பதன் அரசியல் குறித்த எரிச்சல் பற்றி ஒரு ஓட்டு போட்டு விட்டு வந்தேன் ... hmmm ...

    ReplyDelete
  10. “விட்டுக்கொடுத்தல்” என்பது உறவுகளுக்குள் மட்டுமில்லாமல் சமூகத்திலும் இருக்கவேண்டும். ஆனால் கொம்பு சீவுவதற்கு சிலர் இருப்பதால் பிரச்சனை வளர்கிறது.

    ReplyDelete
  11. மிக அருமையான பதிவு, அவசியமானதும் கூட.

    ReplyDelete
  12. அடிக்கடி சென்னை சாலைகளில் அதுவும் அகலம் குறைவான திருப்பங்களில் நிகழும் ஒன்று.

    ReplyDelete
  13. ஹ்ம்ம்..வெட்டி ஈகோதான்! :-) நல்ல இடுகை!

    ReplyDelete
  14. செந்தில்வேலன்!
    ராமலஷ்மி!
    குப்பன் யாஹூ!
    தீபா!
    கணேஷ்!
    மங்களூர் சிவா!
    ச.முத்துவேல்!
    குடந்தை அன்புமணி!
    நந்தா!
    ஹரிஹரன்!
    யாத்ரா!
    வடுவூர் குமார்!
    சந்தனமுல்லை!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி. தீபா சொல்லியிருப்பது போல இதனை போக்குவரத்துக்கும் மட்டுமின்றி, வாழ்வின் பல விஷயங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். மிக எளிதாக தீர்க்கப்பட வேண்டியவற்றை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு தவிக்கிறோம்.

    ReplyDelete

You can comment here