நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்!

நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்.
எதாவது ஒரு கோவில் முன்பாகவோ
பள்ளிக்கூடம் அருகிலோ
பேருந்து நிறுத்தங்களிலோ
சிலநேரம் உங்கள் தெருக்களிலோ கூட
நிச்சயமாய் பார்த்திருக்கக் கூடும்.
எங்கிருந்தாலும் மண்ணோடுதான்
இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.
மக்கிப்போன கந்தல் ஆடைகளைச் சுற்றியபடி
குளிக்காமல் சிக்குப் பிடித்த முடிகளோடு
நாற்றமெடுக்கும் அவர்களைப் பார்த்து
முகம் சுழித்து விலகிப் போயிருக்கவும் கூடும்.
வான் நோக்கி சிரித்தபடி ஓடுகிறார்கள்
காற்றோடு சதாநேரமும் கதை பேசுகிறார்கள்
எல்லோரிடமும் கைநீட்டி நிற்கிறார்கள்
யார், எப்படி, எது, என்ன, எங்கு, எப்போது
என ஆரம்பித்து எதாவது ஒரு கேள்வி
அவர்களைப் பற்றி எழுந்திருக்கிறதா?
பிரக்ஞையற்ற அவர்களின் அந்தரங்க அவயங்கள்
உங்கள் பார்வையில் பதிந்திருக்கக் கூடும்
காமம் வெளியேறிய உடலா அது
ஒருகணம் யோசித்திருக்கிறீர்களா?
அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
என்றைக்காவது வந்திருக்கிறதா?

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு பரிதாபப் பார்வையோடோ அல்லது பயத்துடனோதான் கடந்து வந்திருக்கிறேன்! :( உங்கள் கவிதை யோசிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. //சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
    என்றைக்காவது வந்திருக்கிறதா?//

    சிரமப்பட்டு எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போதாவது.....!

    பதிலளிநீக்கு
  3. //அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
    நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்//

    ஏனோ நேஹாவை வயிற்றில் சுமந்ததிலிருந்து இப்படிப் பல சமயம் தோன்றத் தான் செய்திருக்கிறது. ஆனால் அந்த எண்ணம் வலி மிகுந்ததாய் இருக்கவே உடனே மறக்கவும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  4. நானும், சந்தனமுல்லை அவர்களை போலவே ஒரு பரிதாபத்தோடுதான் கடந்து வந்திருக்கிறேன் :(

    பதிலளிநீக்கு
  5. /
    அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
    நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
    /

    /சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
    என்றைக்காவது வந்திருக்கிறதா?
    /

    வெட்கப்படுகிறேன்
    :(((((((((

    பதிலளிநீக்கு
  6. intha kavithaiyai
    eluthiyatharkku pathil....

    chchappentru
    arainthirukkalaam...

    பதிலளிநீக்கு
  7. அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
    நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
    சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
    என்றைக்காவது வந்திருக்கிறதா? *

    :( யோசிக்க தூண்டும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமை!!!! மனதில் பதியும் பதிவு!!!!

    பதிலளிநீக்கு
  9. உண்மைகளை முகத்திலறையும் கவிதை, நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  10. அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
    நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
    சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
    என்றைக்காவது வந்திருக்கிறதா//

    நினைப்போம் எல்லோருமே...!
    இது போன்று யாரேனும் கேட்கும் போது, அல்லது அன்றாடங்களின் நெருக்கடியில் சில நேரம் நாமும் அவர்களின் நிலைக்கு தள்ளப்படும் போது..!!

    அறைகின்றது சொற்சித்திரம்

    பதிலளிநீக்கு
  11. முகமது பாருக்23 ஜூன், 2009 அன்று 11:58 AM

    // ஒருகணம் யோசித்திருக்கிறீர்களா?
    அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
    நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
    சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
    என்றைக்காவது வந்திருக்கிறதா? *//

    கண்டிப்பாங்க ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்கும் விடைதெரியாத கேள்விகள் அண்ணா நம்ம தெரிவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள நம் உறவுகள்..

    ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..செய்வோம்..

    மிகவும் அருமையான மற்றும் தேவையான பதிவும் பகிர்வும்..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  12. சந்தனமுல்லை!
    நன்றி. யோசிப்பதே பெரிய விஷயம்தான்.


    கதிர்!
    சிரமம்தான்!


    தீபா!
    உன் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது.


    பட்டாம்பூச்சி!
    பகிர்வுக்கு நன்றி.


    மங்களூர் சிவா!
    நன்றி.


    இலக்கியா!
    நான் என்னையேத்தான் அறைந்திருக்கிறேன் பதிவில்.


    அமிர்தவர்ஷிணி அம்மா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    ஜான் பொன்ராஜ்!
    நன்றி.


    யாத்ரா!
    நன்றி.


    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.


    முகமது பாருக்!
    என்ன தம்பி கொஞ்ச நாளாய் உங்களைப் பார்க்கவில்லை.
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. முகமது பாருக்24 ஜூன், 2009 அன்று 12:19 AM

    நான் தொடர்ந்து படிச்சிகிட்டுதான் இருக்கேன் அண்ணா!!.. சமீப கால நிகழ்வுகள் ரொம்ப வலியை ஏற்படுத்திகிட்டே இருக்குங்க..




    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!