சாயங்காலம் திடுமென மேகங்கள் அடர்ந்து வர, வெளியெல்லாம் சிலிர்த்த காற்றுடன் லேசாய் இருண்டது.
கொப்பளிக்கும் வெயிலில் அவிந்து கிடந்த உடல் இதமாக, மனசு நெகிழ ஆரம்பித்தது.
மெல்லிய தூறலில் எழுந்த மண்வாசனை, மூழ்கிப் போயிருந்த என் பால்யத்தை கத்திக்கப்பலோடு மீட்டுக் கொண்டு வந்தது.
ஒவ்வொரு வாசத்திலும் ஒரு நினைவு உறங்கிக் கொண்டிருக்கிறது என்றே படுகிறது.
கருப்பட்டி வாசனையில், செம்மண்ணோடு பனைவோலை சடசடக்க என் ஊரே திரண்டு வரும்.
லிரில் சோப்பில் திருமணக் காலத்தின் புதிய நாட்கள் வெட்கம் விட்டு சிரித்து வரும்.
சாளை மீன் கொதிக்கும் போது, உச்சி முகரும் செங்குழி ஆச்சி வாஞ்சையோடு அருகில் வருவார்கள்.
பால் குடித்த தம்ளருக்குளிருந்து, ஒரு குழந்தையின் உதடும் கன்னமும் பூவாய்த் தீண்டும்.
மல்லிகையும், முல்லையும் சேர்ந்து கொண்டால், மாரியம்மன் கோயில் திருவிழாக் காலத்து பெண்கள் சிரிப்போடும், கொலுசுச் சத்தங்களோடும் என் தெருவில் நடப்பார்கள்.
விபூதி, சீயக்காய், பன்னீர் என ஒவ்வொன்றின் வாசனையிலும் ஒரு நினைவு உறங்கிக் கொண்டு இருக்கிறது.
புத்தகத்தின் வாசனையில் மட்டும் காணாத ஒன்றைத் தேடிக் கரைந்து போகிறேன் எப்போதும்.
0000
நண்பர்களே!
இது எனது 200வது பதிவு.
*
Congrats!!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பதிவுகள்! வாழ்த்துக்கள் அண்ணா..........
பதிலளிநீக்குகவிதை அழகான நினைவுப் படிமம்.
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன்.
உயய (200) வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்.
வாழ்த்துக்கள் அண்ணா
பதிலளிநீக்குவாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குஇப்போதான் 200ஆ? ன்னு கேட்கலாம்போல.அதான், எழுதித் தள்றீங்களே! பொறாமையா இருக்குது.
பதிலளிநீக்கு200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅதைவிட பதிவு சிறப்பு. அதற்க்கு பாராட்டுக்கள்
வாழ்த்துகள்! மிக அழகாக இருக்கிறது சொற்சித்திரம்! உண்மைதான்..ஒவ்வொரு வாசத்துக்கும் நினைவு இருக்கிறது..சிலசமயங்களில், இசைக்குக் கூட நினைவுகள் இருக்கிறது!
பதிலளிநீக்குஎப்படி இர்ருக்கிங்க மாதவராஜ் .வாழ்த்துக்கள் 200 பதிவுக்கு. தொடரட்டும் உங்களின் பயணம் . கொஞ்சம் நாட்களாக உங்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை.படித்துவிட்டு வருகிறேன் .
பதிலளிநீக்குநண்பர் மாதவராஜ் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஎனது அன்பான வாழ்த்துக்கள்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
vaazhththukkal thozha. many more
பதிலளிநீக்குmemories return
congrats - all are good sir,
பதிலளிநீக்குமிக சரியான பதிவு...நீண்ட நாளாக நானும் எழுத நினைத்த ஒரு விஷயம்....இந்த வாசனைகள் நம்மை தூண்டிவிடுவதற்கு எல்லையே கிடையாது...
பதிலளிநீக்குநன்றி தங்கள் பதிவிற்கு
தொடரட்டும் பதிவுகள்! வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகான பதிவு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகார்த்திகேயன்!
பதிலளிநீக்குஅண்டோ!
முத்துராமலிங்கம்!
ஜே!
வித்யா!
நசரேயன்!
முத்துவேல்!
முரளிக்கண்ணன்!
சந்தனமுல்லை!
ஜீவா!
அகநாழிகை!
காமராஜ்!
ரெஷு!
சரவணன்!
பட்டாம்பூச்சி!
அமுதா!
அனைவருக்கும் நன்றி.
இந்த வாழ்த்துக்கள்தான் தொடர்ந்து எழுத வைக்கிறது.
சேர்ந்து பயணிப்போம்.
ovvoru vasathukkum oru ninaivu..
பதிலளிநீக்குamaaam thozharey!
yethanai idhamana vasanaigal?
pala vendaadhavaiyum kooda...
adaithaan andru ungalidam ketten..
ninaivugal udhirumaa yena?
irunooraavadhu padhivu!
pudhiya puthahathin manathai pola
gummendru..manam muzhusum vaasanai..
vaasika vaasika vaasanaiyaha..
அதி அற்புதமான பதிவு.. கடைசி வரி கவிதையே தான்! புல்லரித்துப் போனது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அங்கிள்.
200 வது பதிவுக்கு வாழ்த்துகள், வாசம் அழைத்துச் செல்லும் நினைவுகள் அலாதியானது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மாதவராஜ்
பதிலளிநீக்குஅன்பின் மாதவ்ராஜ்
பதிலளிநீக்கு200வது இடுகைக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்.
எங்கிருந்து உங்களுக்கு எழுத நேரம் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு இடுகையா - அப்படிப்பார்த்தாலும் 2009ல் 135 நாட்களில் 152 இடுகைகள்.
வாழ்க வளமுடன் !
சிறுவயது நிகழ்வுகளைச் சிந்தித்து அசைபோட்டு மகிழ்வது மனதிற்கு இதமாக இருக்கும்.
கத்திக்கப்பல்
கருப்பட்டி வாசனை
செம்மண்
பனைவோலை
லிரில் சோப்பின் குறும்பு
சாளை மீன்
செங்குழி ஆச்சி
மழலையின் தீண்டுதல்
மல்லிகை - முல்லை
சிரிப்பு கலந்த கொலுசுச்சத்தம்
திருவிழாவில் பெண்கள்
அத்தனை வாசனைகளிலும் சிறந்தது புத்தகத்தின் வாசனை
அருமை அருமை மாதவராஜ்
பொறுமை - உழைப்பு - சிந்தனை - அத்தனைக்கும் பாராட்டுகள்
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க சார்.
பதிலளிநீக்கு