வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.
முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீதி இளைஞர்கள் குதிராம் போஸும், பிரபுல்லசகியும் குண்டி வீசினர். கிங்ஸ்போர்டு தப்பி விட்டான். போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்லசகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.
சிறையில் 16 வயதே நிரம்பிய குதிராம் போஸ் எழுதி வைத்திருந்த பாடல்:
“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை. இவர்களின் காலடித்தடங்கள் வழியாகத்தான் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவுக்கு வந்தது.
*
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
பதிலளிநீக்குவீரர்களும் அவர்தம் தியாகங்களும் இறப்பதில்லை. நல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள உதவும் தங்கள் பதிவுக்கு
பதிலளிநீக்கு//பிறந்தது நான்தான் என்பதையறிய
பதிலளிநீக்குகுழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்//
மனம் கனக்கிறது.
விடுதலை வேட்கை என்பதா, வெறி என்பதா...
பதிலளிநீக்குசிலிர்க்கிறது....
இப்போது நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால்,...
அவர்களின் வலியை மிதிப்பது போல இருக்கிறது
வரலாற்றில் இன்று என்ற பகுதியை துவக்கலாம்.
பதிலளிநீக்குதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ப்பா! இதுதான் கவிதை.இல்ல, அதுக்கும் மேல. இன்று அவரை அறிமுகப்படுத்தி, நன்றியோடு நினைக்கவைத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகுதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.
//
நல்ல பகிர்வு...
குதிராம் போஸ் இதே உணர்வுகளுடன் சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தால் தானே தூக்கிட்டு இறந்திருப்பார் இல்லையேல் சுதந்திர இந்தியாவின் அரசியல்வாதிகள் அவரை மீண்டும் தூக்கிலிட்டிருப்பார்கள்!
இத்தனைத் தியாகங்களுக்கிடையில் பெற்ற விடுதலையை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழும்பாமலில்லை!! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு//சிறையில் 16 வயதே நிரம்பிய.. //
பதிலளிநீக்கு"குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
படிக்கும் போதே சிலிர்க்கின்றது.
_______________________________
திரு. மாதவராஜ் அவர்களுக்கு
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். மற்றும் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள்.
ஹரிஹரன் சொன்னதை ஆமோதிக்கிறேன் மாது
பதிலளிநீக்குராஜாராம்!
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்களுக்கும், பகிர்வுக்கும் நன்றி.
சுல்தான்!
நன்றி.
அமுதா!
நன்றிங்க.
யாத்ரா!
பகிர்வுக்கு நன்றி.
ஆதவா!
உண்மைதான்.
ஹரிஹரன்!
நீங்கள் சொன்னதையே தமிழும் சொல்லிவிட்டார். யோசிக்கணும்.
முத்துவேல்!
ஆமாம். வருகைக்கு நன்றி.
அதுசரி!
வருகைக்கும், உங்கள் கோபத்திற்கும் நன்றி.
சந்தனமுல்லை!
உங்கள் கேள்விதான் இந்தத் தலைமுறையின் சவாலும் கூட.
முத்துராமலிங்கம்!
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பகிர்வுக்கும் நன்றி.
தமிழ்!
பார்ப்போம்.முடிந்தவரை செய்யலாம்.
இப்படி தூக்குக் கைற்றில் பெற்ற சுதந்திரம்...சிலர் குடும்பச் சொத்தாகிவிட்டது.
பதிலளிநீக்கு