நேற்றிரவு முதலையிடமிருந்து யானையை கிருஷ்ணர் காப்பாற்றிய கதையை பாட்டி அவனுக்குச் சொன்னாள். இன்று காலையிலேயே ஆட்காட்டி விரலில் அம்மாவின் வளையல் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டான். விரலை சுழற்றிக்கொண்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். முகம் சிரித்துக் கொண்டிருந்தது.
"என்ன பண்ணிட்டிருக்கிறே இங்க உட்கார்ந்து?"
"அக்கா, இது கிருஷ்ணரோட சக்கரம்!"
"அப்படியா..!" ஆச்சரியமான பாவனை செய்தாள் அக்கா.
"இத நா அப்படியே விட்டா என்ன செய்யும் தெரியுமா"
"என்ன செய்யும்?"
"எங்க கிளாஸ் மிஸ்ஸோட தலையைத் தனியா எடுத்துரும்..."
000
ஹஹஹஹஹாஆஆ
பதிலளிநீக்குஅந்தச் சிறுவனுக்கு கம்ஸனே அவனுடைய ஆசிரியைதான் போலும் அதுதான் கிருஷ்ண சக்கரத்தை ஆசிரியை மேல் ஏவி விடுகிறான் போலும்
இந்தக் காலத்து பிள்ளைகளிடம் மிக ஜாக்கிறதையாத்தான் இருக்க வேண்டும்
நல்ல நகைச்சுவை
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்பு தோழரே சிறப்பான படைப்பு, சமூகத்தின் மீதான கோபத்தை விட ஆசிரியர்கள் மீதாத வன்மம். இன்றைய கல்வி குறித்த சாட்டையடி.
பதிலளிநீக்குஅன்பின் மாதவராஜ்.. என்னை என் பள்ளிக்கூட வாழ்க்கைக்கு அழைத்துச்சென்றுவிட்டது உங்களின் இந்த கதை...
பதிலளிநீக்குஇன்றும் அனேக பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் இவர்களின் அணுகுமுறை மாற்றப்பட்டாலும்.. படிக்கும் பிள்ளைகளின் அணுகுமுறை மாறாமல் அப்படியே உள்ளது அது தான் வேதனையான விஷயம்.
வாழ்த்துக்கள்..
அன்புடன் இளங்கோவன்,, அமீரகம்
தமிழ்த்தேனீ!
பதிலளிநீக்குநகைச்சுவை தாண்டி, தீவீரமாக சிந்திக்க வேண்டியதும் இருக்கிறதல்லவா?
உரிமையுடன்!
பதிலளிநீக்கு//இன்றைய கல்வி குறித்த சாட்டையடி.//
உண்மைதான். குழந்தையின் சாட்டையடி.
இளங்கோவன்!
பதிலளிநீக்குகுழந்தைகள் குண்டூசியால் குத்தப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளைப்போல வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று மாண்டோசுவரி சொன்னதுதான். தவறு குழந்தையிடமும் இல்லை, டீச்சரிடமும் இல்லை. அமைப்பில் இருக்கிறதென நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த உலக சமூகத்தின் வாழும் அனைத்து மனிதர்களின் இயலாமையும், மடமையும் தான் அதற்கு காரணம்.
பதிலளிநீக்குஇந்த பதிவு நிறைய யோசிக்க வைக்கிறது தோழரே வாழ்த்துக்கள்
தோழமையுடன்
முகமது பாருக்
தலையை சீவவேண்டும்...... மாணவர்களின் கலைந்து இருக்கும் தலைமுடியை ஆசிரியர்கள் சீவி விட்டுயிருந்தால் மாணவன் ஆசிரியையின் தலையை சீவவேண்டிய நிலை வந்து இருக்காது
பதிலளிநீக்குமுகமது பாருக்!
பதிலளிநீக்கும்....நிறைய யோசிக்கலாம். தங்கள் வருகைக்கு நன்றி.
விடுதலை!
பதிலளிநீக்குஆஹா..!
இது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல.
பதிலளிநீக்குகூர்ந்து பார்த்து அராயப்பட வேண்டிய சமுதாயப் பிரச்சனை.
சொல்லி இருக்கும் விதம் மிக அருமை.
கார்த்திகேயன்!
பதிலளிநீக்குஉங்கள் புரிதல் சரியானது. உங்கள் வலைப்பக்கத்திற்கு சென்றிருந்தேன். வளமான மொழிநடை.வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கு நன்றி.
நகைச்சுவையா - வலிமையான சிந்தனையில் உட்கருத்துடன் எழுதப்பட்ட பதிவா ......
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் - என்ன செய்வது .....
சீனா!
பதிலளிநீக்குதங்கள் புரிதலுக்கு நன்றி. யோசிப்போம்.
இது விவாதத்திற்கு உரிய கருத்து - பள்ளியில் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆராய வேண்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஆசிரியப்பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி
என்ற சீரிய கருத்தினை கொள்கையாகக் கொண்ட ஆசிரியப்பெரு மக்கள் இன்னும் இருக்கிறார்கள்
நல் வாழ்த்துகள் அன்பின் மாதவராஜ்