டாவாலியின் சத்தத்தில்
யாதும் நிசப்தமானது.
பொதுவாக கும்பிட்டு விட்டு
காந்திஜிக்குக் கிழே அமர்ந்தார்
கனம் கோர்ட்டார் அவர்கள்.
ஆங்கிலேயன் கொடுத்த
வௌவால் உடையணிந்தவர்கள் அனைவரும்
உள்ளே எழுந்து நின்றனர்.
செல்போன்களை பதற்றத்தோடு
செயலிழக்க வைத்துவிட்டு
மிகுந்த மரியாதையோடு நின்றனர்
வெளியே வாய்தாவுக்கு வந்தவர்கள்.
வளாகத்திற்குள் அதுபாட்டுக்கு
நுழைந்த தெருநாய் ஒன்று
தெரிந்த செடியருகே சென்று
பின்னங்காலைத் தூக்கி
இயற்கையின் முதல் அழைப்பை
நிறைவேற்றி விட்டு
முக்கிய வேலை இருப்பதாய் வெளியேறியது.
“ஆர்டர்...ஆர்டர்...”
..
சாம்பல் நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் அவ்வள்வாக எடுபடவில்லை. இதற்கு முந்தைய அமைப்பு மிகவும் நன்றாக இருந்ததே!
ReplyDeleteஅப்புறம் பதிவுகளுடன் இருக்கும் ஓவியங்கள் வெகு பிரமாதம்
தீபா!
ReplyDeleteபழைய லே அவுட்டில் பலருக்கு பதிவுகள் சரியாகத் தெரியவில்லை, இடது பக்கம், பல வார்த்தைகள் தெரியவில்லை என்றார்கள். என் லேப்-டாப் அகன்ற திரை என்பதால், எனக்குப் பிரச்சினை தெரியவில்லை. அதானல்தான் மாற்றியிருக்கிறேன். இப்போது சாம்பல் வண்ணத்தை இன்னும் அடர்த்தியாக்கியிருக்கிறேன். பரவாயில்லையா?
yes... ithu nalla irukku!
ReplyDelete