-->

முன்பக்கம் , , , , , � கண்முன்னால் கடவுள் இறந்துவிட்டார்!

கண்முன்னால் கடவுள் இறந்துவிட்டார்!மருந்து மாத்திரை  பலனளிக்கவில்லை. செயற்கை சுவாசம் செலுத்த முடியவில்லை.  டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அற்புதங்களை நிகழ்த்திய கடவுள், கண்முன்னால் இறந்து போய்விட்டார். 

தொலைக்காட்சிகளில்  கடவுளின்  மரணம் முக்கியச் செய்திகளாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. கடவுளின்  உடல் மட்டும்தான் நம்மை விட்டு நீங்கியிருக்கிறது என தேற்றிக்கொண்டவர்கள் மத்தியில்  ‘கடைசி வரையில் அவரது முடி மட்டும் அப்படியே இருந்தது’ என்றார் பரவசம் பொங்க ஒரு பக்த கோடி.

கடவுள் சேர்த்து வைத்த கோடி கோடியான  சொத்துக்கள் உயிரோடு இருக்கின்றன. கட்டிக் காப்பாற்ற  ஒருவர் வேண்டும். நாளை அடுத்த கடவுள் வந்துவிடுவார் எப்படியும்.
Related Posts with Thumbnails

20 comments:

 1. Very good Satire.

  I liked it very much, would like to share this in English in my facebook, with the youtube link for his miracles.

  ReplyDelete
 2. //http://www.dinamalar.com/News_Detail.asp?Id=230645//

  இவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருப்பவர் கண்டிப்பாக கடவுளே!

  ReplyDelete
 3. இத்தனை லட்சம் கோடி சொத்துக்களை விட்டு கடவுளுக்கு எப்படித்தான் உயிர் பிரிந்ததோ.!

  ReplyDelete
 4. எனக்கு இன்னும் ஒரு விசயம் புரியவேயில்லை...

  சாய்பாபா எமனுடன் போராடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது, ஏன் காவல்ர்கல் குவிக்கப்பட்டார்கள். ஆன்மீகவாதி இறந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகுமா?

  ஒருவேளை அடுத்த சீடர் அதாவது ஆஸ்திக்கு யார் என்ற போட்டியில பிரச்ச்னை வருமா??

  ReplyDelete
 5. Ithu thaan india

  Thanks
  Joseph
  Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.
  Contact: Kannan: 94435-87282
  Work Location: Kanyakumari Dist.

  ReplyDelete
 6. மாதவ்ஜி! 45000 கோடி ரூ என்று ஒரு தொலைக்காட்சி சொல்கிறது.காஞ்சி மடத்துக்கு 25000 கோடி என்கிறார்கள்.---காஸ்யபன்.

  ReplyDelete
 7. அரைகுறையாக கடவுள் என நினைத்துக்கொண்டு இருந்தவர்கள் இனி முழு கடவுள் என அறிவித்துவிடுவார்கள் அல்லது அறிவிக்கப்பட்டுவிடுவார். ஆனால் அவர் இறந்து
  அடக்கம் செய்யும்வரை இவ்வளவு காவலர்கள் ஏன்? எல்லாம் பில்ட் அப்பிலேயே சமூகத்தில் அறிவு கட்டமைக்கப் படுகிறது.இனி டிரஸ்டி,கோவில் கும்பாபிஷேகம் சொத்து,கோடிக்கணக்கான சொத்துக்கு ஆட்கள் வேண்டுமே.அனாமதேய சொத்துக்களை அரசாங்கமா எடுக்கப்போகிறது?

  ReplyDelete
 8. இனி கோவில் டிரஸ்டி, சொத்து, பரப்புரை,இன்னுமொரு கடவுள் இருந்தும் பலவற்றை கொடுத்தவர் இனி கல்லூரிகள் பள்ளிக்கூடங்களையும் கொடுப்பார்(சுயநிதியாக)
  இவர் இறந்தபோது ஏன் இவ்வளவு காவலர்கள?இது புரயாத புதிராகவே இருக்கிறது. கணேசன்.

  ReplyDelete
 9. ஆசிரம சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்! அப்போதுதான் கார்ப்பரேட் சாமியார்களின் சொத்து சேர்க்கும் ஆர்வம், இனி வரும் காலங்களில் தடைபடும்!

  ReplyDelete
 10. ஒரு சாமியாருக்கு இந்தியக்குடியரசுத்தலைவர் முதற்கொண்டு விஜயகாந்த் வரை இரங்கல் தெரிவிக்கிறார்கள். 14 வயதில் தன்னை ஷ்ரீடியின் மறுபிறவி என்று பொய் சொன்னதிலிருந்து அவரது சித்து வேலைகள் துவங்கியிருக்கிறது. தமிழகத்திலும் கூட தனது 14 வயதில் ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை ஒருவருக்கு. அங்கே கல்யாணமாகாத பிரம்மச்சாரியின் சொத்து மட்டும் 40,000 கோடி; இங்கே குடும்பத்துடன் சேர்த்தால் அதையும் மிஞ்சும். அது ஆன்மீகமென்று சொல்லுகிறார்கள். இது அரசியல் என்று வாய் பிளக்கிறார்கள். வாழ்க பாரதம்

  ReplyDelete
 11. சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

  ReplyDelete
 12. ஜி.நாகராஜனின் நிமிடக் கதை ஒன்றில் ‘சாமியார் செத்துப்போயிட்டாரு’ என்று கத்திக்கொண்டே ஓடுவானே ஒரு சிறுவன்.. அதை நினைத்துக்கொண்டேன்.

  கொடுமை..

  ReplyDelete
 13. இந்தியாவில்
  கடவுள்கள் பிறக்கின்றார்கள்
  மனிதர்கள் அவதரிக்கின்றார்கள்

  ReplyDelete
 14. மனிதன் என்பவன் பிறக்கும் போதே இறப்பதும் உறுதியாகிவிடுகிறது.

  இறப்பை இயல்பாக ஏற்க மறுக்கிற பக்தர்களும் சீடர்களும் கொண்ட ஒரு ஆன்மீக குருவின் போதனை எத்தனை தோல்வியடைந்ததாய் இருக்கிறது?

  அதற்கு மேல் கணக்கிலடங்கா சொத்துக்களைக் குவித்த ஒரு ஆன்மீக குரு எதைத் துறந்தவராக இருந்திருப்பார்?

  ReplyDelete
 15. அட போங்கப்பா,சும்மா ரீல் விடாதிங்க,
  கடவுள் எந்தக் காலத்தில் இறந்திருக்கார்.
  செத்த அவதாரம் எடுத்திருக்கார்.

  ReplyDelete
 16. சாய் பாபாவைக் கடவுளாகக் காட்டி மக்களை முட்டாளாக்க ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது இது ஒரு தேவையான பதிவு! சாய்பாபாவைப் பற்றிய சிந்தனையைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.. நல்ல நடை! மகர சோதியைப் பற்றி எழுதும் போது //முஸ்லீம்களின், கிறித்துவர்களின் வழிபாட்டு முறையின் நம்பிக்கைகள் குறித்துப் பேசாத கம்யூனிஸ்டுகள், இந்துக்களின் வழிபாட்டு முறையை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்ற கேள்விகளும், மூஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் தாஜா செய்து ஓட்டுவங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் என்றும் கொதித்து எழுவார்கள். // என்று எழுதியது போல் இல்லாமல் நல்ல வேளைஎழுதினீர்களே! அதுவரையில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 17. காசேதான் கடவுளடா !இதை நீ என்றும் நினைவில் கொள்ளட ! கடவுளுக்கும் காசுதான் பிரதானம் ,காசு இல்லாவிட்டால் பாபாவும் வெறும் மனிதனட .காசு இருந்தால் மனிதனும் கடவுளாகலாம்.சிருங்கேரி, பூரி ,புட்டபர்த்தி,காஞ்சி,வாடிகன்,மேல்மருவத்தூர்,கஜ் மசூதி,எல்லா இடங்களிலும்,காசை குவித்ததும் மனிதன்தான் அங்கு கடவுளை உருவக்கியதும் மனிதன்தான் .காசை கட்டிகாப்பவன் கடவுளாகிறான். மனிதன் இறக்கிறான் ,கடவுள் பிழைக்கிறார். காசு உள்ளவரை கடவுளும் இருப்பார்.
  இதை சட்டயப்பன் சொன்னால் புரியுமா ?

  ReplyDelete
 18. சாமியார்கள் வருவதும், இறப்பதும் நமக்கு பழகிப்போனாலும் புதிய கடவுள்களை எதிர்பார்த்தவண்ணமும், ஏற்றுக்கொண்டுமே தொடர்கிறது வாழ்க்கை.

  சாய்பாபாவின் அருகில் இருந்த ஒரு அமெரிக்க டாக்டர் இயந்திரங்களின் உதவியோடு 10 வருடங்களுக்கு அவர் உயிரோடு (படுத்து)இருக்க முடியும் என்றார். ஆனால் என்ன நடந்ததோ ஓரிருநாட்களில் செயற்கை சுவாச கருவியை நீக்கி மரணத்திற்கு வழிவிட்டார்கள். அறக்கட்டளை சொத்திற்கு வாரிசு கிடைத்து விட்டதோ என்னவோ?

  ReplyDelete
 19. இவனுங்கள பத்தி கதச்சு பிரயோசனம் இல்ல. நம்ம சமூகத்தில இவனுங்கள மாதிரி ஒருத்தன் போனாலும் அடுத்தவன் அதே இடத்துக்கு வருவானுங்க.

  ReplyDelete
 20. சாய்பாபா இறந்த செய்தி என்னை எட்டியவுடன் நான் நண்பர்கள், தோழர்களுக்கு இப்படியொரு குறுஞ்செய்தியை உருவாக்கி உலவவிட்டேன்... இதற்கு நிறைய்ய பாராட்டுக்கள். அது இதோ:
  "தங்களுக்கு அவர்தான் காப்பாற்றும் கடவுள் எனும் அறியாமையில் பக்தர்கள் இருக்க, தானும் ஒரு சராசரி உயிரி மட்டுமே என்பதை மரணம் தழுவி மெய்ப்பித்தார் சாய்பாபா."
  - சோழ. நாகராஜன்

  ReplyDelete