10 கிராம் நகையும் அஞ்சலக சேமிப்பும்!



கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே.

திண்டுக்கல் ஸ்டேட் பாங்க் (மெயின்)கில் ரூ.3,170ம், சென்னை அண்ணா நகர் இந்தியன் வங்கியில் ரூ.38ம் பணம் வைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் நேருஜி நகர் இந்தியன் வங்கியில் ரூ.1000 கட்டியுள்ளார்.

தனது ஊரான கதிரணம்பட்டி அருகேயுள்ள ரெட்டியார் சத்திரம் அஞ்சலகத்தில் சிறு சேமிப்பில் ரூ.42,472ம், தொடர் வைப்பு நிதியில் ரூ.43 ஆயிரமும் வைத்துள்ளார். கட்சியில் கொடுக்கும் ஊதியத்தைக் கொண்டு மாதா மாதம் கடந்த பல வருடங்களாக சேமித்த தொகைதான் இந்த 85,472 ரூபாய் ஆகும்.

மேலும் நகைகளாக 2 கிராம் தோடு, 8 கிராம் செயின் வைத்துள்ளார். இந்த 10 கிராம் நகையும் கடந்த 10 வருடங்களாக அவர் வைத்துள்ள நகைதான். கடந்த தேர்தலின் போதும் இந்த நகைகளை கணக்கில் காட்டினார். அன்றைக்கு 2 கிராம் தோடுக்கு ரூ.1200 விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதன் இன்றைய மதிப்பாக ரூ.3950 காட்டப்பட்டுள்ளது. இதே போல் 8 கிராம் செயினுக்கு ரூ.6400 அன்றைய மதிப்பு. அந்த செயினுக்கு இன்றைய மதிப்பு ரூ.15,600 காட்டப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து230 ரூபாய் 96 பைசாதான் அவரது சொத்து மதிப்பு. கையிருப்பு ஏதும் இல்லாமல் போட்டியிடுகிறார். வேட்புமனுத்தாக்கலின்போது அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை பார்த்து கையிருப்பே இல்லாத வேட்பாளர் கே.பாலபாரதி என பத்திரிகைகள் எழுதின.

எதிரணியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பால்பாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற சொற்களுக்கு சொந்தக்காரர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பதற்கு ஓர் இலக்கணமாக உள்ளார் கே.பாலபாரதி.

- இலமு, திண்டுக்கல்
நன்றி: தீக்கதிர்
 
தொடர்புடைய இடுகை::
 

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Appadi irunthal santhosam... makkalukkaka vazhum ivargalaip ponrorai namm therntheduppa thillaiyey....

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நல்ல விஷயம். ஏன் அவர தொடர்ந்து எம்.எல்.ஏ. சீட்டுக்கு போராடி மற்றவர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை? அதுவே பெரிய சொத்து மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. This news giving aarudhal...compare to hearing 200 crores & 2 lacs crores news.

    (no tamil fonts)

    பதிலளிநீக்கு
  4. அருமையான சட்டமன்ற உறுப்பினர்,நல்ல தலைவி.

    பதிலளிநீக்கு
  5. இது உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான். இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுப்பது தான் நமது கடமை. இலவசங்களை எண்ணி ஏமாறாமல் இனிமேலாவது சிந்தனை செய்வோமா ???????????

    பதிலளிநீக்கு
  6. அரசியல் சேற்றில் வளர்ந்த செந்தாமரை, என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

    பதிலளிநீக்கு
  7. Being not rich alone cannot be a criterion for contesting in election, what has she done in has past tenure(s)? What are the problems she (or with her party) has analyzed and what improvement plans identified for her area? How does she plan to implement it?

    பதிலளிநீக்கு
  8. என்னத்த எழுதுறீரு தோழர்.
    கொஞ்சம் ஜாக்கியை போல முய்ற்சி செய்யவும்.வருதான்னு பார்ப்போம்.
    மொத்தத்துல ஒங்க இடுகைகள் சுத்த வேஸ்டு

    பதிலளிநீக்கு
  9. இப்படிப்பட்டவர்களை மக்கள் அங்கீகரிக்கவேண்டும். இது ஏதோ ஒரு தனிமனிதரோட எளிமையான நேர்மையான் அடையாளம இல்லாமல் அந்த இடதுசாரி இயக்கத்தின் அரசியல் என்று புரிந்துகொள்ள வைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் இந்த மாதிரி மனிதர்களா! ஜனநாயகம் முழுக்க செத்துப் போயிரல போல. பகிர்வுக்கு நன்றி மாது!

    பதிலளிநீக்கு
  11. she is not eligible to enter tamil assembly. becasue such a person need not politics. only multimillionaire, notorious &criminals are basic qualifications of politics

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!