அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்?

 

நேற்றைய எனது பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இதில் ஏன் மறைந்து மறைந்து பேச வேண்டும் எனத் தெரியவில்லை. டோண்டு சார் மாதிரி வெளிப்படையாகவே பேசலாமே.

உசேன் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது சில எதிர்மறையான கருத்துக்கள் வந்திருக்கின்றன. அவைகளை இப்படித் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

1. உசேன் ஒரு முஸ்லீம். இந்து மத வெறுப்பாளன். எனவே அவர் இந்து மதக் கடவுள்களைப் பற்றி படம் வரைந்திருக்கக் கூடாது.

2.அவர் சார்ந்த மதம் குறித்து உசேன் இப்படி வரைவாரா? முகம்மதுவையும், கதிஜா அம்மையாரையும் ஏன் உசேன் நிர்வாணமாக வரையவில்லை?

3.உசேன் என்ன வரைந்தார் என்பதை ஏன் சொல்லப்படவில்லை.ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

இவைகளோடு, உசேனுக்காக இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தஸ்லிமா நஸ்ரின் விஷயத்தில் மேற்கு வங்க அரசு நடந்து கொண்ட விதத்தைப் பற்றி ஒன்றும் வாயைத் திறக்க மாட்டேன்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்கின்றன. அதையும் வேதனையான விஷயமாகவே  பார்க்கிறேன். எங்கோ பிழைகள் இருந்திருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் அவை தடுமாற்றங்கள். தவறுகள். ஆனால் உசேன் விஷயத்தில் நடந்திருப்பது குற்றங்கள். அதைத்தான் ராஜீவ் தவான் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் சில கேள்விகளை எதிர்பார்த்தேன். ஏன் அவை அழுத்தமாக வரவில்லை எனத் தெரியவில்லை. இப்போது சில உண்மைகளையும், எனக்குப் புரிந்த கருத்துக்களையும் சொல்ல வேண்டியது அவசியம் என உணர்கிறேன்.

எம்.எப். உசேன் ஒன்றரை வயதிலேயே ‘தாயை இழந்து’ விட்டார். சிறுவயதில் இவர் ராம லீலா நாடகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர், மன ஆறுதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோது அதிகமாக தாயற்ற பிள்ளையாய் பல பயங்கரக் கனவுகளைக் கண்டு அலறுவது உண்டு! ஆனால் ராமலீலா இவருக்கு சுகபலத்தைக் கொடுத்தது என்கிறார். வால்மீகி ராமாயணத்தையும், துளசிதாசர்  ராமாயணத்தையும் தெளிவாகப் படித்துத் தேறியவர். கீதையை விரும்பிப் படித்தவர். உபநிஷத்துக்களைப் படித்து உள்வாங்கியவர். ஒருமுறை 1968 ஆம் ஆண்டு ராம்மனோகர் லோகியா, ராமாயணக் காவியத்தை சித்திர வடிவங்களில் வரைந்து தன்திறமையைக் காட்ட வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று ஏழு ஆண்டுகள் செலவு செய்து ராமாயணத்தை விளக்கும் 150 சித்திரங்களைப் படைத்தார். இவர் விநாயகர் உருவத்தை வரைவது உண்டு. அப்படி நூற்றுக் கணக்கான சித்திரங்களை பல மாடல்களில் வரைந்து தள்ளினார். இவர் ஒரு பெரிய கேன்வாசில் சித்திரம் வரையும் வேலைகளைத் துவங்குவதற்கு முன்பாக ஒரு விநாயகர் உருவத்தை வரைந்து விட்டுத்தான் பிறகு பெரும் வரைவுப் பணியைத் துவக்குவார்.

இவரிடம் சில முஸ்லீம்கள், ஏன் நீங்கள் இசுலாமிய தத்துவத்தை விளக்கும் வகையில் சித்திரங்கள் வரையக் கூடாது என்ற கேட்ட போது உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது, ஒரு எழுத்து வடிவத்தில் தவறு வந்து விட்டாலும், அந்தச் சித்திரத்தைக் கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று பதில் சொன்னார்.

இவர் தன் மகள் ரயீசாவுக்குத் திருமணம் நடத்தியபோது இவர் திருமண அழைப்பிதழ் முஸ்லீம்கள் பலரை அதிரவைத்து விட்டது. சிவன் தொடையில் பார்வதி அமர்ந்திருப்பது போலவும், சிவனுடைய ஒரு கை பார்வதியின் மார்பின் மேல் உள்ளது போலவும் அதில் இவர் வரைந்த சித்திரம் இருந்தது. உலகம் பூராவும் உள்ள தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். இவரின் உணர்வில், இரத்தத்தில் எது ஊறிக் கிடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அவர் தன்னை ஒரு முஸ்லீமாக பார்க்கவில்லை. இந்துமத வெறுப்பும் அவருக்குள் ஓடவில்லை. இந்த மண்ணின் வரலாற்றை, மரபை, கலாச்சாரத்தை நேசித்த் ஒரு ஓவியர். அவர் வரைந்திருக்கும் எண்ணற்ற ஓவியங்கள் குறித்து உலகமே பேசுகிறது. வியக்கிறது. ஆனால் அவருடைய ஒருசில ஓவியங்களை மட்டுமே இந்தியா சர்ச்சைக்குள்ளாக்கி பேசிக்கொண்டு இருக்கிறது. இதுதான் விந்தையும், துயரமும் ஆகும். அவர் மீது கல்லெறிபவர்கள் அவரது அற்புதமான ஓவியங்கள் குறித்தும்,  மகத்தான கலைமனம் குறித்தும் மௌனமே சாதிக்கிறார்கள்.

இந்து மதமாக இன்று கற்பிக்கப்படும் மதத்தின் புராணங்களில் பரிசுத்தத்திற்கு மறு பெயர் நிர்வாணம் என்று சொல்லுகிறது, புனிதம் என்று சொல்லுகிறது. கோயில்களில் உள்ள சிலைகள், தெய்வங்களின் கதைகள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், மகா பாரதம் - இவைகள் நிர்வாணம் என்பதை தெய்வ வடிவில்தான் பார்க்கின்றன. சிவலிங்கம் என்பதே படைப்பின் ரகசியம் பொதிந்த குறியீடாகவே இருக்கிறது. இதையெல்லாம் கற்றுத் தெளிந்த உசேன் இந்து பெண் தெய்வங்களை அந்த நோக்கில்தான், ஒரு ஓவியர் என்ற உணர்வோடு வரைந்தார். அதில் கலைத்தன்மையை பார்ப்பதை விட்டுவிட்டு உள்ளர்த்தம் கற்பிக்கவே சிலர் இருந்தார்கள்.

mother india

ஒரு ஓவியத்தில் சோகமே உருவகமாக, விரிந்த கூந்தலுடன் மண்டியிட்டுச் சரிந்துகிடக்கும் ஒரு பெண்ணாக இந்தியாவைச் சித்தரித்திருந்தார் உசேன். நிர்வாணமான அந்த பெண் அழுதுகொண்டு இருப்பாள். பெரும் கலவரங்களால் சோதனைகளுக்குள்ளாகியிருந்த தேசத்தின் நிலை குறித்து வெதும்பிய ஒரு கலைஞனின் பார்வை அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஓவியத்தை வாங்கிய ஒருவர் அதைப் 'பாரத மாதா' எனப் பெயரிட்டு அழைத்தபோது நெருக்கடி தொடங்கியது. 'பாரத மாதா'வை உசேன் ஆபாசமாகச் சித்தரித்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி, அவரது ஓவியங்களை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.

hussains-saraswati.jpg சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து விட்டார் என ஒரே அலறல்களும் கூப்பாடுகளும் கேட்கின்றன.இந்தியாவின் முக்கிய கலை விமர்சகர்களில் ஒருவராகிய ஷில்பி அகர்வால் அந்த ஓவியம் குறித்து ஆழமான விளக்கங்கள் கொடுக்கிறார். “சரஸ்வதி கலையின் தெய்வம். தன்னை முழுவதுமாய் கரைத்துக்கொண்டு, சகலத்தையும் கலையில் இழந்து, தன்னையே மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் சித்திரம் இது. கலையும், கலைஞனின் ஆன்மாவும் ஒரு புள்ளியில் காணாமல் போகும் தருணம் இது. மீன்கள், தாமரை, மயில் எல்லாவற்றோடும் ஒளி ஊடுருவும் அறிவியல் விதியையும் உள்ளடக்கியிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பு. ஆச்சரியமாக, நமது மரபுகளும், விழுமியங்களும் ஒரு கலைப்படைப்பில் பெண்ணுக்கும், தாய்க்கும் உள்ள வித்தியாசங்களை புரியவைக்கின்றன. நாம் மோனலிசாவில் கலையின் அழகாக ஒரு பெண்ணைப் பார்த்தால், உசேனின் சரஸ்வதியில் ஒரு தாயைப் பார்க்கலாம்” என்கிறார். இந்த வித்தியாசங்களும், நுட்பங்களும் அறியாதவர்கள்தாம் உசேனை ஓட ஓட துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

உசேனின்  வீடு தாக்கப்பட்டது. மதிப்புமிக்க அவரது ஓவியங்கள் சிதைக்கப்பட்டன. அவரது ஓவியக் கண்காட்சிக்கு எங்கும் அனுமதி இல்லை. தேசத்தையும், இந்துக் கடவுள்களையும் அவமதித்துவிட்டதாக அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.உசேன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்குகளை விசாரிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்தைப் பணித்தது. மகத்தான தீர்ப்பு ஒன்று மாண்புமிகு நீதிபதி சஞ்சய் கிஷன் அவர்களால் வழங்கப்பட்டது.

காமசூத்ரா'வை உருவாக்கிய தேசத்தின் பாலியல் அணுகுமுறைகள் குறித்த வரலாற்றுரீதியிலான சான்றுகளைத் தன் தீர்ப்பில் நினைவுகூர்கிறார் கௌல். பாலியல் ஒரு கலை என்னும் ஆரோக்கியமான புரிதலைக் கொண்டவை நம் மரபுகள். இந்தியர்கள் பாலியலை ஒரு கலையாகக் கற்றுக்கொண்டனர்; பரிசோதனைகளை மேற்கொண்டனர்; அதன் நுட்பங்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துகொண்டனர்; பிறகு அவற்றை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் காப்பியங்களாகவும் நடனங்களாகவும் மாற்றித் தொடர்ந்துவரும் தலை முறைகளுக்குக் கையளித்துச் சென்றனர். பாலியல் செயல்பாடுகளை அவர்கள் ஒருபோதும் பாவமாகக் கருதியதில்லை, மூடிய கதவுகளுக்குள் விவாதிக்கும் ஒரு விஷயமாகவும் கருதவில்லை. வாழ்வை முழுமைப்படுத்தும் அதன் உன்னதமான ஒரு பகுதியாகவே பாலியலை இந்தியர்கள் கருதினர் எனக் குறிப்பிடும் கௌல், பண்பாட்டைத் தூய்மைப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகள் உண்மையில் தேசத்தை மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்தைய ஒரு காலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறார்கள் எனக் கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்து மரபின் தொன்மையான பண்புகளாக விளங்கிய சகிப்புத்தன்மையையும் பன்முக அடையாளங்களையும் சுட்டிக்காட்டும் நீதிபதி, அடிப்படைவாதம் அந்தக் கூறுகளை அழித்துவிட்டதுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். சகிப்புத்தன்மையும் பன்முக அடையாளங்களுக்கான அங்கீகாரமுமே ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருக்க முடியும் எனவும் வலியுறுத்துகிறார் கௌல். அடிப்படைவாத நடைமுறைகளால் உருவாகியுள்ள பதற்றம், மனித உரிமை, கருத்து படைப்புச் சுதந்திரம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கும் இத்தீர்ப்பின் ஒரு முக்கியமான வரி, அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியாகக் கருதப்படுவதற்கும்கூடத் தகுதியானது.

FREEDOM OF SPEECH HAS NO MEANING IF THERE IS NO FREEDOM AFTER SPEECH...

(கருத்து வெளிப்பட்ட பின்னர் சுதந்திரம் இருக்கவில்லையெனில் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்தப் பொருளும் இல்லை.)

தீர்ப்பின் தொடக்கத்தில் பாப்லோ பிக்காசோவின் மேற்கோள் ஒன்றினை எடுத்தாண்டிருக்கிறார் நீதிபதி. 'கலை ஒருபோதும் புனிதமானதல்ல, அதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமிருந்தும் ரசிப்பதற்குப் போதிய அளவு தயாராகாதவர்களிடமிருந்தும் விலக்கப்பட்டிருப்பதே கலை. ஆம், அது அபாயகரமானது. எங்கே புனிதம் நிலவுகிறதோ அங்கே கலை இருப்பதில்லை' என்னும் அந்த மேற்கோளைத் தொடர்ந்து அடிப்படைவாதிகள் உசேனின் ஓவியத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார் கௌல். குறிப்பிட்ட அந்த ஓவியம் ஆபாசமானதோ அருவருக்கத்தக்கதோ அல்ல, பாலியல் தூண்டலை உருவாக்கும் எந்த அம்சமும் துயரம் ததும்பும் அப்பெண்ணின் நிர்வாணத் தோற்றத்தில் இல்லை எனக் குறிப்பிடும் அவர், இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதல்களால் நாட்டைவிட்டு வெளியேறிக் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அயல்நாடுகளில் வசித்துவரும் 92வயது எம். எப். உசேன் இத்தீர்ப்பின் மூலம் தாய் நாட்டுக்குத் திரும்பித் தன் கலைப் பணியைத் தொடர்வார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்

ஆனால், உசேன் நாடு திரும்புவதற்கு இன்னமும் தடங்கல்களும், தடைகளும் இருக்கின்றன.  கொலைவெறியோடு அவரை வெறுப்பவர்களிடமிருந்து அவருக்கு என்ன பாதுகாப்பு இந்த அரசு கொடுக்க இருக்கிறது. ஒரு மகத்தான கலைஞனை கொண்டாடுவதற்கு பதில் கொன்று தீர்ப்பதற்கு ஒரு கும்பல இருக்கிறதே என்பதே நம் கவலை.

உசேன் மீது விமர்சனம் இருக்கலாம். உசேனின் ஓவியங்கள் குறித்து வேறு பார்வைகள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் அவரைத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் அறைகூவல் விடப்பட்டுள்ளது எப்படி சரியாகும். அதை கண்டித்து இங்கு யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது என் கவலை.

விவாதிப்போம்.

ஆதாரம்:
1.செம்மலர் பிப்ரவரி 2009
2.Hussain’s Saraswati Breathes A New Life From The Eyes Of An Artist
(An artical regarding M.F Hussain's artwork "Saraswati")
3.கருத்துக்குப் பின்னரும் சுதந்திரம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு (காலச்சுவடு தலையங்கம்)

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஓவியரை பற்றி இவ்வளவு விசயங்கள் எனக்கு புதுசு!

    மற்றும் நான் எவ்விடத்திலும் வன்முறைக்கு ஆதரவாளன் கிடையாது!
    சாதி, மத வெறியர்களுக்கு மட்டும் காயடிக்க வேண்டும் என விரும்புவேன், அது ஒரு சிகிச்சை மட்டுமே!

    படங்கள் வெளியிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இவரிடம் சில முஸ்லீம்கள், ஏன் \\நீங்கள் இசுலாமிய தத்துவத்தை விளக்கும் வகையில் சித்திரங்கள் வரையக் கூடாது என்ற கேட்ட போது உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது, ஒரு எழுத்து வடிவத்தில் தவறு வந்து விட்டாலும், அந்தச் சித்திரத்தைக் கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று பதில் சொன்னார்.//
    ஹூம்.......

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். அனானியாக வரும் கருத்துக்களை நாம் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. //இவைகளோடு, உசேனுக்காக இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தஸ்லிமா நஸ்ரின் விஷயத்தில் மேற்கு வங்க அரசு நடந்து கொண்ட விதத்தைப் பற்றி ஒன்றும் வாயைத் திறக்க மாட்டேன்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்கின்றன. அதையும் வேதனையான விஷயமாகவே பார்க்கிறேன். எங்கோ பிழைகள் இருந்திருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் அவை தடுமாற்றங்கள். தவறுகள். ஆனால் உசேன் விஷயத்தில் நடந்திருப்பது குற்றங்கள்.//
    எப்படி கூறுகிறீர்கள்? ரஷ்டி விஷயம் என்னாச்சு? அந்த ஃபத்வாவுக்கான ஹுசைனின் எதிர்வினை என்ன? உங்கள் எதிர்வினை என்ன?

    //உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது,//
    அதாகப்பட்டது நீங்கள் இந்துக்கள் போல இளிச்சவாயர்கள் இல்லை என்றுதான் அவர் கூறுகிறார். அதிலும் மதச்சார்பற்ற இந்து மாதிரி ஆஷாடபூதி பேர்வழிகளாகவும் முசல்மான்கள் இல்லை.

    ஒரு அடாவடிப் பேர்வழியும் ஒரு ஆப்பாவியும் சண்டை போட்டால் சுற்றியிருக்கும் வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் அப்பாவிக்குத்தான் அத்தனை புத்திமதிகளும் சொல்வார்கள். ஏற்கனவே பல முறை இதை பார்த்தாயிற்று.

    பேசாமல் ஹுசைன் பாகிஸ்தானில் வசிக்கட்டும்.

    நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  5. ****
    உசேன் மீது விமர்சனம் இருக்கலாம். உசேனின் ஓவியங்கள் குறித்து வேறு பார்வைகள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் அவரைத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் அறைகூவல் விடப்பட்டுள்ளது எப்படி சரியாகும். அதை கண்டித்து இங்கு யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது என் கவலை
    ****

    சரியான கருத்து மாதவராஜ். கண்டிக்கப்படவேண்டிய நிகழ்வு. இந்தியாவிற்கு சீக்கிரம் திரும்புவார் என்று நம்புவோமாக.

    (இந்த பதிவை டோண்டு எழுதி இருந்தால் பலரும் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் இட்டிருப்பார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நீங்கள் எழுதும் போதும் அதே நிலையை எடுக்கவேண்டிய கட்டாயத்தை புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர். அவன் ஒழுங்கா ? முஸ்லிம் படம் போட்டபொழுது சப்போர்ட் பண்ணினா ? இப்ப மட்டும் எதுக்கு வரான் ? இதுமாதிரியான கேள்விகளில் பதிவில் உள்ள கருத்துக்களே காணாமல் போய்விடுகின்றன. அரசியல் வந்துவிடுவது துரதிஷ்டவசமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  6. Let him NOT be partial. He painted all HINDU related GOD/GODDESS in NUDE, but HIS family and MUSLIM persoanlities were in fully claded. He has stated that I paint NUDE whom I HATE like HITLER. What do YOU say? Did Hussain deserve this FAIR exposer by people like YOU? M.S.Vasan

    பதிலளிநீக்கு
  7. I belive one should restrain himself doing any act which hurts a person or section of society's sentiments. Simple human behaviour.

    Its clear from his comments on "christian paintings" that he does his try outs to the religious community which allows tolerance.
    Looks likes he wants to test the limits of it.Its evident that he keep doing this act of painting this naked materials even after some one expresses displeasure several times.

    I wonder he never felt bad when some one expresses displeasure but keep continue his act of hurting.

    I don't understand there are lot in this world to draw or exhibit instead of doing this naked paintings religious stuff to particular community for personal happiness.

    Or if he still wants to see something naked let him start from his home or his supporters home where people enjoy his thinking. Who cares?

    பதிலளிநீக்கு
  8. in one of M.F's drawings,
    Out of the four leaders M. Gandhi is decapitated and Hitler is naked. Husain hates Hitler and has said in an interview 8 years ago that he has depicted Hitler naked to humiliate him and as he deserves it ! How come Hitler's nudity cause humiliation when in Husain's own statement nudity in art depicts purity and is in fact an honour ! This shows Husain's perversion and hypocrisy.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு
    நல்ல அறிமுகம்

    பதிலளிநீக்கு
  10. தோழர் உசேன் பற்றி தெளிவான பார்வை உண்டாகியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. இவ்வளவு பேர் தற்குறிகளாக இருக்கும் நாட்டில் ஜனநாயகம் என்ன ஆகுமோ என மெளன்ட்பேட்டன் வெளியேறும் போதும் கவலைகொண்டிருக்கிறார்.கலைஞர்களும் இதை கருத்தில்கொள்ள வேண்டும்.ஏனெனில் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் அராங்கத்தைவிட்டு அரசியல்வாதிகள் வெளியேறி விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. //Or if he still wants to see something naked let him start from his home or his supporters home where people enjoy his thinking. Who cares?//

    இது ரசிக்கும்படியான எழுத்தும் இல்லை கருத்தும் இல்லை. இப்படிக் கொப்பளிக்கிற கோபம் அந்நிய முதலீடுகள், கட்டற்ற ஊடக சாக்கடை, இந்திய வளங்களைச் சூறையாடும் மல்டிநேசனல் குறித்து வாய் திறப்பதில்லையே ஏன். கொக்கொகோலா நிறுவணத்தின் வியாபார மேலாளரிடம் ''உங்கள் எதிரி யார்'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு '' இந்தியாவின் நீர்நிலைகள் தான் எங்கள் எதிரி '' என்று சொன்னாராம். அதை இந்த தேசபக்தர்கள் அப்படியே ஜாய்சில் விட்டு விட்டு ஓயாமல் முகமதியர்களையே குறிவைத்துக் காத்திருக்கிறார்கள். வீரம் என்பது எளியோர் மீது பாய்வதல்ல.

    பதிலளிநீக்கு
  13. இதைப் பாருங்கள்

    http://jeyamohan.in/?p=4864

    பதிலளிநீக்கு
  14. You are doing a very good job as an inspiring, good hearted person. Please continue with no worries about why people can't think right.
    You are thinking right. Your stream of thoughts, will certainly bring more goodness. My wishes for your strength and good will.

    பதிலளிநீக்கு
  15. You are doing a very good job as an inspiring, good hearted person.
    Please don't worry about why people can't think right.
    You are thinking right and your writings will certainly bring goodness around you. My heartful wishes for your strength and goodwill.

    பதிலளிநீக்கு
  16. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    பதிலளிநீக்கு
  17. டோண்டு அவர்களே !
    தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நேரு மண்ணில் அடைக்கலமாகிவிட்டார். சீன நாடு நம்மைஜன்ம விரோதியா பாவித்து வர இதுவும் ஒரு காரணம். நாம் இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா உதவ
    ஆரம்பித்துவிடும் என்று இந்தியா ஆயுதங்களையும், யுத்த தளவாடங்களையும் வாரி வாரி வழங்கியது. அங்கு தமிழர்கள் லட்சகணக்கில் இறந்தனர். ஒரு தலாய் லாமாவுக்காக அத்தனை பெரிய நாட்டின் விரோதத்தையே விலை கொடுத்து வாங்கலாம் என்றால் ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்தை காக்க சில க்ராஸ் பெல்ட்டுகளின் எதிர்ப்பை பெற்றால் தான் என்ன ? அதற்குபயந்து அவரை பாக்கிஸ்தானுக்கு அனுப்புவதா?

    பதிலளிநீக்கு
  18. அவரைத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் அறைகூவல் கடைசியா எப்ப விடப்பட்டது ?

    தனி மனிதனோ, அவனுடைய படைப்புகளோ பிரபலமாக ஆக ஆக அவனுடைய படைப்புகள் negative crticism உள்ளாகும், இது ஒன்னும் புதுசு இல்லையே...தமிழ் நடிகைகள் முதல், அமிதாப் பச்சன் வரை எல்லாரும் மாட்டிகிட்டு மன்னிப்பு கேட்டுருகாங்க...அதுக்கு ஏற்ற மாதிரி அவிங்களும் இப்ப ஜாக்கிரதையா இருக்காங்க.

    ஹுசேன் உலகத்தில் தலை சிறந்த ஓவியர், சரி. ஏன் அவருடைய படைப்புகள் அவரை அறியாமலே, குறிபிட்ட ஒரு சில சமூகத்தினரை சங்கடப்படுத்துது அப்படின்னு தெரிந்தும் அந்த மாதிரி கலைகளில் ஏன் அவர் குறியா இருந்தார் ?....அதற்கு அவர்க்கு கிடைத்த பரிசு தான் தற்போதைய சூழ்நிலை.

    இன்னொரு ஐயம், நல்ல பணக்காரர் தானே அவர், அவரே தனக்கு சொந்த காவல் வைத்து கொள்ள வேண்டிதானே ? சொந்தமாக நல்ல வக்கீல் வைத்து வழக்குகளை சந்திக்கலாமே ? மனிதனுக்கு எதுக்கு அரசாங்க உதவி தரனும்.

    பதிலளிநீக்கு
  19. I 2nd in ak. Stick to one statement.

    பதிலளிநீக்கு
  20. மணிகண்டன் ..........


    காமராஜ்........
    வழிமொழிகிறேன்




    அருமையாய் சொன்னீங்க காமராஜ் சார்......இவர்கள் கொட்டமெல்லாம் அப்பாவிகளிடம் மட்டும் தான்....பன்னாட்டு கம்பனியிடம் கான்பித்தார்கலேன்றால் இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவான் அவன்.

    பதிலளிநீக்கு
  21. பூச்சி மருந்தடித்ததும் மறைந்திருக்கும் பூச்சிகள் துடிதுடித்து வெளி வருவது போல்...
    சிலரின் பின்னூட்டங்களின் மூலம் மதவெறி எந்த அளவு தலை விரித்தாடுகிறது என்பது புரிகிறது.

    கோபத்திலும் வருத்தத்திலும் எனக்கு வாயடைத்துப் போகிறது.
    தயவு செய்து இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்.

    அந்த ஓவியத்தில் யாதொரு தவறும் எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. இல்லாத கலைவாணிக்கு எத்தனைப்பேர் வக்காலத்து! தாயாம்,தங்கையாம்! இலங்கையில் தமிழ் பெண்களின் பிணங்களையும் புணர்ந்தார்களே, அப்போது எங்கேப்போனார்கள் இந்த பூணூல் பேர்வழிகள். ஏதோ படம் போட்டதற்கு இவ்வளவு பெரிய கூச்சல்!

    பதிலளிநீக்கு
  23. சில வருடங்களுக்கு முன் இந்த சரஸ்வதி படத்தை பார்க்க நேர்ந்தது...எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை...அது வரை பார்த்த சரஸ்வதி படமெல்லாம் காலண்டரிலும், பள்ளி நோட்டு புத்தக அட்டையிலும் பார்த்தது...ஹூசைனின் படம் வெறும் கோட்டோவியமாக வித்தியாசமாக இருந்தது...

    ஹூசைன் அவர் கோணத்தில் வரைந்திருக்கிறார்...அவ்வளவே... அதை விமர்சிக்கலாம்...உண்மை நோக்கம் குறித்து கேள்வி எழுப்பலாம்..ஆனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுவது ரவுடித் தனம் அன்றி வேறில்லை......

    அதே சமயம், சாத்தானின் கவிதைகளை தடை செய்த இந்திய அரசும், டவின்ஸி கோடை தடை செய்த பகுத்தறிவு பகலவன் கருணாநிதியின் அரசும் ஹூசைனின் இந்த ஓவியம் குறித்து என்ன சொல்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது...

    ஹூசைன் விஷயத்தில் சில அமைப்புகள் ரவுடித் தனம் செய்கின்றன...ஸட்டானிக் வெர்ஸஸ் விஷயத்தில் இந்திய அரசும், டவின்ஸி கோட் விஷயத்தில் பகுத்தறிவு பகலவனின் அரசும் ரவுடித்தனம் செய்திருக்கின்றன...

    ஒட்டு மொத்தத்தில் மத உரிமை, மனம் புண்படும் என்ற போர்வையில் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வி கேக்க முடியாமல் அழுகிப் போன சமுதாயமாக இந்தியா மாறி விட்டதோ என்ற எண்ணம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  24. Actually, muslims should appose for his 'unislamic activities' which are against islamic fundamentals. But, he will not mind it, as he is not living as a muslim and hence muslims are silent.

    So, hindus opposing his pictures as he put same side goal. Anyhow, 'life threatening to an accused' is strictly out of democracy.

    பதிலளிநீக்கு
  25. நம் நாட்டில் அரசியல் செய்ய ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது, அந்த வகையில் உசைனின் இந்த சர்ச்சையும் ஒன்று. மதவெறி சாயம் பூசி அதில் உல்லாசமாக நீச்சலடிக்க ஒரு சிலபேர் கொடுக்கும் சப்போர்ட்தான் இது.

    உசைனின் முழு சரிதையும் தெரிந்துக்கொண்டேன், இனியாவது மதவெறியர்கள் திருந்துவார்களா

    நீதிபதியும் தீர்ப்பில் சொல்லப்பட்ட விளக்கங்கள் சரியானதும் ஆமோதிக்கவேண்டியம்தான்.

    பதிலளிநீக்கு
  26. இந்து மத பூணுல் ஆட்க்ள ஒன்றும் திறமில்லை. ஆனால் ~இதே குசெயின் ஏன் இதே போல் முஸ்லிம் மதத்தை பற்றியும் வரையலாம் தானே. இதற்காக நான் இந்து மத ஆதரவாளன் இல்லை. ஈழத்தில் தமிழ் மக்களை கொன்றொறித்தது இந்த இந்து மதவெறியர்கள்தான்.
    இந்து மத சுதந்திரத்தை தன் மத சுதந்திரம் இல்லா ஒருவர் பயன்படுத்துவது கொஞ்சம் உறுத்துகிறது. அல்லாவை படம் வரைந்தால் ஏற்பட்ட கலவரம் அறிந்ததே. அதேபோல் இந்து வெறியர்களும் முயற்சிக்கலாம். மற்றும் படி இரண்டும் ஒரே மதவெறிகூட்டம் தான். என்ன ஒன்று. இந்துக்கள் தங்கள் நலனுக்காக தமிழர்களையும் கொன்றொழித்தார்கள். அவ்வளவு இனவெறி முஸ்லிம்களில் கிடையாது. கிழக்கு ஐரோப்பாவிற்கு முஸ்லிம்களுடன் சண்டையிட கிழக்கிலங்கையில் இருந்து போராட போனவர்கள் 1000 முஸ்லிம்கள். அவர்களுக்கு அது எங்குள்ளது என்று கூட தெரியாது. இங்கே தமிழன் அறிவவே தமிழனை கொன்றொழித்தது இந்திய இந்து இலங்கை ஆரிய கூட்டு.

    பதிலளிநீக்கு
  27. கலையை கலையாக பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். அதில் மத உணர்வுகளை செலுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். உசேன் பற்றி இத்தனை கூறிய பிறகும், அவரை முஸ்லீமாக மட்டுமே பார்க்கிறவர்களை என்ன செய்ய? உசேன் தன் குடும்பத்தாரை நிர்வாணமாக வரையட்டும் என்றும், அவரது ஓவியங்களை ரசித்தவர்களையும் அப்படியே மோசமாக குறிப்பிட்டும்- “தாங்கள் சொல்வது என்னதென்று அறியாமல் சொல்லும்”- அவர்களையும் இரக்கத்துடனே பார்ப்போம்.

    உசேன் என்னும் கலைஞரை அறிந்தவர்களுக்கு நன்றி. அறியாதவர்களுக்கு அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!