ஓவியர் உசேன்: இந்துமத வெறியாட்டமும் ஒத்து ஊதும் காங்கிரஸும்

 

ussain பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மதவெறியர்களும், அவர்களுக்குப் போட்டியாகக் கிளம்பிய சில காங்கிரஸ்காரர்களுமாக சேர்ந்துதான் அவர் வெளிநாட்டுக்குப் போய் தங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தினர். அவருடைய ஓவியங்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் தொடர் பிரச்சாரங்களைச் செய்தது. காலம் காலமாக எவ்வாறு இந்துக்கடவுள்கள் பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டு வந்தனவோ, அதே போன்று தனது ஓவியத்திறமைகளால் அந்தக் கடவுள்களை சித்தரித்ததுதான் எம்.எப்.உசேன் செய்த குற்றம் என்று கூறினார்கள். ஏதாவது ஒரு மதரீதியான பிரச்சனையைக் கிளப்புவதற்காகக் காத்திருக்கும் பாஜக இதைக் கையில் எடுத்துக் கொண்டது.

1996 ஆம் ஆண்டில் உசேனின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் தெற்கு மும்பையில் உள்ள உசேனின் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்தனர். இது நடந்தபோதெல்லாம் உசேனுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. உசேனின் கண்களைத் தோண்டுபவருக்கோ அல்லது அவரது கைகளை வெட்டி எறிபவருக்கோ 1 கிலோ தங்கம் தருவதாக குஜராத்தைச் சேர்ந்த ஜசுபாய் படேல் வெளிப்படையாகவே அறிவித்தார். இதே காலகட்டத்தில் தான் மத்தியப் பிரதேச காங்கிரசின் சிறுபான்மைப்பிரிவு, உசேனின் கைகளை வெட்டி எறியும் தேச பக்தருக்கு 11 லட்சம் தருவதாகக் கூறியது. இத்தகைய வெறியூட்டும் வன்முறைப் பேச்சுகள் உசேனை விரட்டியது.

இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் பேச்சுகளுக்கு எதிராக சட்டம் தனது கடமையைச் செய்ததா..? இல்லை. கட்சிகள் வெளிப்படையாக வருத்தமாவது தெரிவித்தனவா...? கிடையவே கிடையாது. மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் வாயை மூடிக் கொண்டன. இந்தியா முழுவதும் பல நீதிமன்றங்களில் உசேன் மீது வழக்கு தொடரப்பட்டது. எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சூரத் நீதிமன்றத்தில் ஏப்ரல் 2006ல் வாரண்ட்டும் அவர் மீது வழங்கப்பட்டது. இது தவிர வெளிவாழ்க்கையிலும் அவர் மீது வசைமாரி பொழியும் வேலையை மத வெறியர்களும், உசேனை விரட்டுவது மூலம் அரசியல் லாபம் பெற நினைத்த சில காங்கிரஸ்காரர்களும் செய்து வந்தனர்.

இதற்கிடையில் நாடு முழுவதுமுள்ள வழக்குகளை 2006 டிசம்பர் 4 அன்று தில்லிக்கு மாற்றுவதென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் வந்த தீர்ப்பு உசேனுக்கு சாதகமாகவே இருந்தது. 2008 மே8 அன்று இந்தத்தீர்ப்பு வந்தது. கலை மற்றும் பேச்சுக்கான உரிமை உள்ளது என்று சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்தத்தீர்ப்பை வழங்கினார். இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் இமாச்சலப் பிரதேச மாநில அரசு தனது பள்ளிப்பாடத்திட்டத்தில் உசேன் குறித்த பாடத்தை நீக்கியது. அது மாணவர்களை எந்தவிதத்திலும் உத்வேகப்படுத்தும் பாடமாக இருக்காது என்பது மாநில அரசின் கருத்தாகும். நடைபாதையிலிருந்து தலைசிறந்த ஓவியர் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஒருவரின் வாழ்க்கை உத்வேகம் அளிக்காது என்று கூறினால் வேறு யாருடைய வாழ்க்கையைக் கற்றுத்தரப்போகிறார்கள்..?

கலைப்படைப்பைப் படைக்க உசேனுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அவர் மீதான மற்ற வழக்குகளுக்கும் இந்தகதிதான் நேரும். மாறியுள்ள சூழலில் அரசும் அவருக்கெதிரான வழக்குகளை விரைவில் முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்திய சட்டமுறைகள் குற்றம் சாட்டுபவருக்கு சாதகமாக இருக்கிறது. அதனால்தான் உசேனுக்கு எதிரான வழக்குகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன. இத்தனைக்கும் உசேன் மன்னிப்பே கேட்டுவிட்டார். இருந்தாலும் அரசியல் லாபத்தைக் கணக்கில் கொண்டவர்கள்தான் வழக்கு போட்டுள்ளதால் அவர்கள் முடிந்தவரையிலும் நீதிமன்றத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளப்போவதில்லை.

இந்நிலையில் வழக்குகள் மீது தீர்ப்புகளை விரைவுபடுத்த அரசு நினைக்கிறது. இந்தியாவுக்கு உசேன் திரும்பிவரும் நிலையில் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு தரவும் மத்திய அரசு தயாராகவுள்ளது. பெரும்பான்மை மதத்தைச்சேர்ந்தவர்களின் மத உணர்வுகளை ஓவியர் எம்.எப்.உசேனின் சில ஓவியங்கள் பாதிக்கின்றன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது என்று 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் காங்கிரசைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தில்லி மற்றும் மும்பை காவல்துறை ஆணையர்களுக்கு செய்தி அனுப்பினார். அதே கட்சி தற்போது அவரை மீண்டும் தனது பகடைக்காயாக மாற்ற நினைக்கிறது. அதற்காக வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கும் அவரை நாட்டிற்கு அழைத்து வந்து உச்சபட்ச பாதுகாப்பு என்ற கூண்டில் அடைக்கப்போகிறார்கள்.

ஆதாரம் :
ராஜீவ் தவான் கட்டுரை
(மெயில் டுடே-நவ.2)
நன்றி : தீக்கதிர்

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இவர் சார்ந்த மதம் பற்றி ஓவியம் வரைவாரா? இல்லை நீங்கள் வரைவீர்களா துணிச்சலுடன்?

    கொஞ்சம் கேள்வி கேட்டுப்பாருங்கள் மத வெறியாட்டங்கள் பற்றி.

    பதிலளிநீக்கு
  2. இதுவே ஹுசைன் முகம்மது மற்றும் கதீஜா அம்மையாரை நிர்வாணமாக வரைந்திருந்தால் இப்போது உயிருடன் பிழைத்திருப்பாரா? சாலமன் ரஷ்டிக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ஒரு முசல்மான் இந்துக் கடவுளரை பற்றி அசிங்கமாக படம் வரைவது கொழுப்புதானே? கோவில்களில் இருக்கும் சிலைகள் பக்தியுடன் பார்க்கப்படுபவை. அவற்றையும் இந்த இந்து வெறுப்பாளன் வரைந்துள்ள நிர்வாண ஓவியங்களையும் எவ்வாறு ஒப்பிட இயலும்?

    கராத்தே ஹுசைனி பிரெஸ் மீட் கூட்டி அந்த நிர்வாண படத்துக்கு இரண்டே ஸ்ட்ரோக்குகளில் பக்தியுடன் புடவை வரைந்து கௌரவப்படுத்தினார். கூடவே ஹுசைனின் நிர்வாணப் படத்தையும் வரைந்து பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். அப்போது மட்டும் இசுலாமியர் கூக்குரலிட்டனர்.

    மரியாதைக்குரிய ஹுசைனி எங்கே இந்த சில்லுண்டிப் பயல் ஹுசைன் எங்கே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  3. தோழர் தேவையான பதிவு. எல்லா இந்திய சட்டத்திற்குட்பட்டு இந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்றதற்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினருக்கு அடி,உதை.
    இந்த நாட்டில் தனிமனித சுதந்திரமே கவலைக்கிடமாக உள்ள நிலையில் கலை,இலக்கிய சுதந்திரத்தை பற்றி என்ன சொல்றது போங்க!!!

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு!

    பதிலளிநீக்கு
  5. //
    காலம் காலமாக எவ்வாறு இந்துக்கடவுள்கள் பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டு வந்தனவோ, அதே போன்று தனது ஓவியத்திறமைகளால் அந்தக் கடவுள்களை சித்தரித்ததுதான் எம்.எப்.உசேன் செய்த குற்றம் என்று கூறினார்கள்.
    //

    இவ்வளவு பிரஸ்தாபிக்கும் நீங்கள் ஹூசைன் என்ன வரைந்தார் என்பதையும் சொல்லியிருக்கலாம்....அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்???

    பொய்யான தகவல் பரப்புவது மட்டும் தவறில்லை...சில நேரங்களில் கான்டெக்ஸ்ட்டுக்கு தேவையான உண்மையை மறைப்பதும் தவறு தான்...

    இங்கு கேள்விக்குரியதாக இருப்பது உங்கள் நேர்மை!

    பதிலளிநீக்கு
  6. //
    இதுவே ஹுசைன் முகம்மது மற்றும் கதீஜா அம்மையாரை நிர்வாணமாக வரைந்திருந்தால் இப்போது உயிருடன் பிழைத்திருப்பாரா? சாலமன் ரஷ்டிக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    //

    ச‌ரியான‌ கேள்வி டோண்டு ஸார்!

    நிர்வாண‌மாக‌ கூட‌ இல்லை...அல்லாவின் உருவ‌ம் என்று எதையாவ‌து வ‌ரைந்திருந்தால் என்ன‌ ஆகியிருக்கும்???

    தின‌ம‌ல‌ரில் ஒரு முறை ஒரு கார்ட்டூன் வ‌ந்து பெரும் பிர‌ச்சினையான‌ ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து....அப்பொழுதெல்லாம் க‌ருத்து சுத‌ந்திர‌ம் ப‌ற்றி மாத‌வ்ராஜோ ம‌ற்ற முற்போக்கு(!) ப‌திவ‌ர்க‌ளோ ப‌திவிட்டார்க‌ளா என்று தெரிய‌வில்லை!

    பதிலளிநீக்கு
  7. judge yourself of Husain's paintings

    Please check the following link.

    http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/

    பதிலளிநீக்கு
  8. இஸ்லாமிய மதத்தில் சிலை வணக்கம் என்பதே கிடையாது .அப்படி இருக்க முகமதுவயோ கதிஜவையோ எப்படிவரையமுடயும் ?ஆனால் மற்ற மதங்களில் சிலை வணக்கம் என்பது உண்டு .சிலைகள் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்ல்லை .டோண்டு சார் சிலை வணக்கங்களில் நிர்வாண சிலைகள் இல்லை என்று உங்களால் நிருப்பிக்க முடயும்மா ?

    உருவ வழிபாடு இல்லாத மதம் தான் இஸ்லாமிய மதம் .இது குடவா தெரியவில்லை .

    இவ்வளவு பிரஸ்தாபிக்கும் நீங்கள் ஹூசைன் என்ன வரைந்தார் என்பதையும் சொல்லியிருக்கலாம்....அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்???

    பதிலளிநீக்கு
  9. இன்றைய சூழலில் கொளதிவிட்டு கூத்து பார்க்க தான் எல்லாரும் முன்னிலையில் இருக்கிறார்கள் இப்படி இருக்க நாட்டில் எப்படி அமைதிபிறக்கும்

    பதிலளிநீக்கு
  10. கல்விக்கடவுள் அன்னை கலைவாணியின் படத்தை நிர்வாணமாக வரைந்தான் இந்த சில்லுண்டிப்பயல் ஹுசேன்.

    இசுலாமியனாக இருந்தால், உருவ வழிபாடு கூடாதுதான், அதற்காக மற்ற மதத்தினரின் கடவுளை இந்தப் பயல் எப்படி வரையலாம்?

    தன்னுடைய படத்தையாவது அல்லது தனது குடும்பப் பெண்கள் படத்தையாவது வரைந்து நாசமாகப் போவதுதானே.

    இங்குள்ள போலி மதசார்பற்றவர்கள் செய்யும் அலம்பல்கள் சகிக்கவில்லை. சாலமன் ரஷ்டிக்கெதிரான ஃபத்வாவுக்கு அவர்கள் வாயைக் கூட திறக்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இதில் ஏன் மறைந்து மறைந்து பேச வேண்டும் எனத் தெரியவில்லை. டோண்டு சார் மாதிரி வெளிப்படையாகவே பேசலாமே.

    உசேன் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது சில எதிர்மறையான கருத்துக்கள் வந்திருக்கின்றன. அவைகளை இப்படித் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

    1. உசேன் ஒரு முஸ்லீம். இந்து மத வெறுப்பாளன். எனவே அவர் இந்து மதக் கடவுள்களைப் பற்றி படம் வரைந்திருக்கக் கூடாது.

    2.அவர் சார்ந்த மதம் குறித்து உசேன் இப்படி வரைவாரா? முகம்மதுவையும், கதிஜா அம்மையாரையும் ஏன் உசேன் நிர்வாணமாக வரையவில்லை?

    3.உசேன் என்ன வரைந்தார் என்பதை ஏன் சொல்லப்படவில்லை.ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

    4.ஆனந்தன் என்று ஒரு நண்பர் மிக முக்கியமான் கேள்வி ஒன்றை பின்னூட்டத்தில் எழுப்பியிருந்தார். ‘தஸ்லிமா நஸ்ரின் விவாகரத்தில் மே.வங்க அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லையா? இதுதான் உங்கள் சமயச்சார்பின்மையா? என்று சரியாகவே கேட்டிருந்தார். ஆனால், இதில் இருந்த ’ங்கொய்யால’ போன்ற அர்த்தம் கெட்ட வார்த்தைகளுக்காக நான் அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. அனுமதிக்க மாட்டேன்.

    இன்னும் சில கேள்விகள் எதிர்பார்த்தேன். கேட்கப்படவில்லை.

    இவைகள் குறித்த எனது கருத்துக்களை விரிவாக இன்று ஒரு தனிப்பதிவாக எழுதுவேன்.

    கருத்துக்களில் முரண்பாடு இருக்கலாம். சொல்லும் விதத்தில் முரண்பாடு இருக்கலாம். ஆனால் விவாதங்கள் நாகரீகமானதாக இருக்க வேண்டும். ஆபாசத்தைப் பற்றிய உரையாடல்கள் கூட ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கோபமும், முரண்பாடுகளும் தரக்குறைவாக இருக்க நேரிட்டால் அந்த விவாதங்கள் அர்த்தமிழந்து போகின்றன. சில்லுண்டிப் பயல் என்று வார்த்தை வசவு பாடுவதால் என்ன சந்தோஷம்? யாருக்கு சந்தோஷம்?

    பதிலளிநீக்கு
  12. சில்லுண்டிப் பயலை சில்லுண்டிப் பயல் என்றுதான் கூறவேண்டும். நான் யாரையுமே மரியாதையுடன் விளிப்பவன் என்பதை இங்கு பலர் அறிவார்கள். நானே அம்மாதிரி கூற வேண்டுமானால் இந்த சில்லுண்டிப் பயல் எனது கோபத்தை எவ்வளவு கிண்டியிருக்க வேண்டும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  13. வார்த்தைகள் அல்லது சொல் என்பது ஒலி வடிவமானது, அதற்கு உருவம் இல்லை, ஆனால் நாம் எழுத்து என ஒரு உருவம் கொடுக்கவில்லையா!?

    அதுபோல் அல்லாவுக்கு ஒரு உருவம் கொடுத்து அதே போல் நிர்வாணமாக வரைந்தால் அல்லா கோவிச்சுகிட்டு எல்லாம் கண்ணையும் குத்திபுடுவாரோ!

    அல்லது முகமது நபி பாலைவனத்துல குதிரை கூட சல்லாபிக்கிற மாதிரி ஒரு கதை எழுதி அதுக்கு தகுந்தா மாதிரி படம் வரைஞ்சா நபி என்னை சபிச்சிருவாரோ!

    என்ன இருந்தாலும் ஹுசேன் வரைந்த படங்களை காண எனக்கு ஆவலாய் தான் இருக்கு! ஏன்னா நான் ஒரு நாத்திகன்!

    பதிலளிநீக்கு
  14. //கல்விக்கடவுள் அன்னை கலைவாணி//

    அதெப்படிங்க இந்து மதத்துல மட்டும் கக்கா போறதுக்கு கூட ஒரு கடவுள் இருக்கு!

    பதிலளிநீக்கு
  15. அன்பு மாதவராஜ்,

    எனக்கு மிச்சமாய் இருப்பது ஆச்சரியம் தான். இதன் பின்னூட்டங்களை படிக்கிற போது. கடவுளை பக்தியுடன் கோயிலில் மட்டுமே பார்ப்பவன் மூடன் என்று சொல்லாமல் என்ன சொல்வது. எல்லாவற்றிலும், எல்லாருக்குள்ளும் இறைவனை, இறைமையைப் பார்ப்பவர்களுக்கு இதை ஏன் ஒரு கலையாய் பார்க்க முடியவில்லை என்பது எனக்கு புரியவே இல்லை. யார் வகுத்தது இந்த விதிமுறைகளை, கொங்கைகளை சிவலிங்கமாக வழிபட்டவனும், சிவலிங்கம் ஆணின் குறியாகவும்,அது அமையபெற்றதை யோனியாகவும் போற்றி ஆலிங்கனங்கள் பற்றி பேசும் இந்து மதத்தில் எங்கிருந்து வந்தது இது போன்ற கற்பிதங்கள்.
    இது வேறு மார்க்கத்தில் இருக்கும் ஒரு பிரபலமானவரின் மேல் உள்ள பொச்சரிப்பாய் பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது என்பதை இந்த அனானிகளும் டோண்டு ராகவன் சாரும் தெளிவுப் படுத்தவேண்டும்.

    யாரை யாருடன் ஒப்பிடுவது என்பது ஒரு வரையறுக்குள்ளும் சிக்காமல் சில்லுண்டு பய என்று பேசுவது ஒரு காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு என்ன? யாரை, எதைக் காப்பாற்ற இவர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அனானி(கள்) பதிவை முழுமையாக படிக்கவில்லை, என்றே தோன்றுகிறது. மிதமிஞ்சிய வெறுப்பும், கலை பற்றிய போதுமான புரிதல்களும் இல்லாதவர்களின் வெறும் காற்றுப்பை கூச்சல்கள் இவை. மிருகங்களை புனர்தல், பரீட்சார்த்த முறையில் சொல்லப்பட்ட, உருவகிக்கப்பட்ட காதல், கலவி, காமம் பெயர்க்கும் சிற்பங்களும் இருக்கிறது எல்லா கோயில்களிலும், இதை அவமானச் சின்னமாகக்கொள்வோமா, கோபுரங்களில் இருக்கும் எல்லா கலவி நிலை சிற்பங்களிலும் கடவுளர்கள் இல்லை என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது. சரஸ்வதியின் ஓவியத்தை வேறு ஒரு தீவிர இந்து அல்லது அதன் போர்வையில் இருப்பவர்கள் வரைந்திருந்தால், வனைந்திருந்தால் இது போல தான் எதிர் வினையாடுவார்களா என்பது கேள்வியே! ஜெயதேவர் அஷ்டபதியில் இல்லாத வர்ணனைகளா, பெண் தெய்வங்களின் கொங்கைகளையும், யோனிகளையும் பாடாதவர்கள் மிகக்குறைவு இந்து சமயத்தில். நான் எங்கிருந்து சொல்கிறேன் என்பதை விட நான் என்ன சொல்ல முற்படுகிறேன் என்பது அவசியம் என்று நினைக்கிறேன். ஏசுவை பழித்திருக்கிறோம், சதியின் மீதான தடையை எதிர்த்திருக்கிறோம். இன்னும் எத்தனை எரிக்கவேண்டிய பழமைகளை கட்டி ஆண்டு கொண்டிருக்கிறோம். இதை ஏற்றிவிடுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  16. ஒருவர் பின்பற்றும் சமயம் என்பது அவருடைய நம்பிக்கை சார்ந்தது.. அதில் குறைந்த பட்ச கண்ணியததை பின்னூட்டம் இடுபவர்கள் கடைப்பிடித்தால் நன்று.

    என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருன்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருன்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.

    குரானில், அடுத்தவரின் சமய நம்பிக்கைகளை திட்டாதீர்கள் என்று கட்டளை இருக்கிறது..

    முதலில், ஒன்றை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.. எந்த ஒரு முஸ்லிமும் ஹுஸைனை பெருமைக்கு உரியவனாக நினைக்க வில்லை.. எந்த ஒரு முஸ்லிமும் அவனுக்கு அடைக்கலம் கொடுப்பேன் என்று சொல்லவில்லை.. அப்படி இருக்கையில் தேவையே இல்லாமல் நபி (ஸல்) அவர்களின் மீதும் கதீஜா அவர்களின் மீதும் அவதூறு சொல்வது அருவருக்கதக்க விஷயம்..

    ஹூஸைன் ஒரு முஸ்லிம் பெயருள்ளவர் என்பதற்க்காக தேவை இல்லாமல் இஸ்லாத்தை இழுப்பது கீழ்த்தனமான செயல்.

    ஆனால் மோடி வெளிப்படையாக தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுக்கிறென் என்றார்.. அவர் அடைக்கலம் கொடுப்பதில் ஒன்றும் இல்லை.. ஆனால் முஸ்லிம்கலே இருக்க கூடாது என்றெண்ணும் ஒருவர் இஸ்லாத்தை பற்றி அவதூறு பரப்பிய ஒருவருக்கு கொடுப்பதை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் உசேனுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள்.கலை-கருத்துரிமை என்கிறீர்கள்.அதே வாதம் தஸ்லீமாவிற்கு பொருந்தாதா?
    தஸ்லிமாவின் நூலை தடை செய்தது மே.வங்க அரசு.
    டென்மார்க்கில் யாரோ கேலிச்சித்திரம் வரைந்தால் அதற்கு இங்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது இ.கம்யுனிஸ்ட் கட்சி கருத்துரிமை என்றா வாதிட்டது.
    யாருக்கு ஆதரவாக அப்போது
    நீங்கள் இருந்தீர்கள்.
    போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு
    கருத்துரிமை மீது என்ன அக்கறை என்று எங்களுக்குத் தெரியாதா?

    பதிலளிநீக்கு
  18. சில்லுண்டிப்பயல்களும், காண்டுப்பயல்களும் அடித்துக்கொண்டு ஒழிந்தால்தான் இந்த உலகம் உருப்படும். பழைய பண்டார,பன்னாடப்பயல்கள்! கோபப்படவேண்டிய விஷியத்துககேல்லாம் படாமல் விட்டுவிட்டு, ரொம்ப ஒழுங்குப்பயல்கள் போல இருந்துவிட்டு, எவனோ எதையோ அம்மணமா வரஞ்சானாம், அதுக்கு வீரப் பேச்சு பேசிக்கொண்டு, தன் வேட்டியை தானே உருவிக்கொண்டு நடுவீதியில் அம்மணமாக நிற்கிறார்கள். நேருக்கு நேர் வாடா என்றால் எங்கே இருப்பார்கள் என்றேத் தெரியாது! மாதவராஜ் சார், மனசாட்சியை தூக்கி எறிந்துவிட்டு இவங்களையெல்லாம் விளாசுங்க! காட்டுப்பயல்கள்! ( எத்தனைப்பயல்கள்?! அனாநிப்பயல்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்!) ராகவன் சாருக்கும் ஒரு தொப்பித் தூக்கு!
    சில்லுண்டிப்பயல் என்பதை பிரசுரித்தது நியாயமென்றால் இதையும் பிரசுரியுங்கள். நான் சொல்வதும் நியாயம்தானே?

    பதிலளிநீக்கு
  19. ஒரு ஓவியரின் கற்பனைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் ஓவியம் வரையலாம். அது சரி தான். அந்த வகையில் நீங்கள் சொல்லி இருக்கும் சட்டம், லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் சரி தான்.

    கலைவாணியை அம்மணமாக வரைந்தது உங்களுக்கு ஒரு நல்ல கற்பனையாக, ரசிப்புத்தன்மை மிக்க விஷயமாக இருந்திருக்கிறது. சரி அது கூட பரவாயில்லை.

    அதே உசேன், அவருடைய தாயை அம்மணமாக வரையவும் தயங்கமாட்டார். ஆனால், நாங்க அப்படி இல்லை.

    பெரும்பான்மையானவர்கள் நம்பி தாயாக வழிபடும் கலைவாணியை அவமானப்படுத்தியவர் உசேன். அதற்கு இந்த சிறு தண்டனை கூட இல்லையென்றால் எப்படி?

    டென்மார்க் ஓவியம், தினமலர் ஓவியம், தஸ்லிமா நஸ் ரீன்.சல்மான் ருஷ்டி கதைகளெல்லாம் இருக்கு.

    இந்த மாதிரி ஒருதலைப்பட்சமான கருத்துக்களே போலி மதர்ச்சார்பின்மை.

    பதிலளிநீக்கு
  20. "மாதவ்ராஜ்:
    ஆனந்தன் என்று ஒரு நண்பர் மிக முக்கியமான் கேள்வி ஒன்றை பின்னூட்டத்தில் எழுப்பியிருந்தார். ‘தஸ்லிமா நஸ்ரின் விவாகரத்தில் மே.வங்க அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லையா? இதுதான் உங்கள் சமயச்சார்பின்மையா? என்று சரியாகவே கேட்டிருந்தார். ஆனால், இதில் இருந்த ’ங்கொய்யால’ போன்ற அர்த்தம் கெட்ட வார்த்தைகளுக்காக நான் அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. அனுமதிக்க மாட்டேன் "

    நீங்கள் எப்படி அந்த வார்த்தைக்காக அனுமதி மறுக்கிறீர்களோ, அதே எண்ணத்தோடு தான் ஹுசைனின் ஓவியத்தை எதிர்க்கிறோம் ஐயா.

    பதிலளிநீக்கு
  21. எம் எஃப் ஹுசைன் ஒரு விளம்பரப் ப்ரியர் தான். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை ரொம்ப அதிகம்.

    கலையையும் கலைஞனையும் இந்த அளவு இழிவு படுத்தும் வன்முறையாளர்களுக்கு கலைவாணியின் மீது என்ன பக்தி இருந்து என்ன?

    கோயில் சிலைகளில் அழகிய கலை என்பதைத் தவிர என்ன புனிதத்தைக் கண்டீர்கள்? அதை வடித்ததும் ஒரு மானிடன் தானே? அந்தச் சிற்பி ஒரு முஸ்லிம் இல்லை (அநுமானம் தான்) அதனால் அவை எப்படி இருந்தாலும் பரவாயில்லை?

    அவர் மன்னிப்புக் கேட்ட பிறகும் (கேட்டிருக்க அவசியமில்லை என்பது என் கருத்து) வன்மங்கள் தொடர்வது அக்கிரமம்.

    ஷிஹான் ஹுசைனி: அந்த ஆள் பெரியவரை விடப் பல மடங்கு விளம்பரப்பிரியர். :-) வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

    பதிலளிநீக்கு
  22. இஸ்லாத்தில் உயிரோட்டங்களை வரைவதோ அதை வீட்டில் பிரேம் போட்டு மாட்டிவைப்பதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. அப்படி செய்தால் அவன் முஸ்லிம் அல்லாதவராவார், எனவே ஹுஸைன் பெயரளவில் மட்டுமே முஸ்லிம், உண்மையான தெய்வ நம்பிக்கையுள்ள எவருமே இதை செய்ய முயற்சிக்க்க கூட மாட்டார்கள்.

    இஸ்லாம் எந்த மதத்தையும் புண் படுத்த சொல்லித்தருவதில்லை, அப்படி செய்தவரை நிச்சயம் கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் புண்படுத்தும் அளவிற்கு முஸ்லிம்களீன் வழிகாட்டியாக விளங்கும் முகம்மது அவர்களையும், துனைவியார் கதீஜா அவர்களையும் இந்த அநாகரிக விவாதத்திற்குள் இழுத்துவிட்டதை வண்மையாக கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. I don't find any difference between dondu and mf.hussain. Both are coming in the same category-not bothering about other's faiths. I condemn both.

    பதிலளிநீக்கு
  24. டோண்டு சார்!
    மீண்டும் மீண்டும் அந்த சில்லுண்டிப் பயல் என்னும் வார்த்தைகளை பயன் படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு எதாவது சந்தோஷம் கிடைக்குமென்றால், அப்படியே சொல்லிக்கொண்டு இருங்கள்.வாழ்த்துக்கள்.



    வால்பையன்!
    திரும்பத் திரும்ப நான் படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுடைய இதுபோன்ற கமெண்ட்களையெல்லாம் தொகுக்க்லாம்.!!!


    ராகவன்!
    கோபமான, வித்தியாசமான ராகவனை இந்தப் பின்னூட்டத்தில் பார்த்தேன். மனிதர்களாய் இருக்க்கும் எவருக்கும் எழும் இயல்பான வேகம் இது. பூமியையே நேசிக்கும் கவிமனதின் கோபம் இதுவென்று நினைக்கிறேன்.



    நாஸியா!
    உசேனின் ஒவியங்கள் நீங்கள் சொல்கிறஉள் நோக்கம் கொண்டவையல்ல. அவர் முஸ்லீமும் அல்ல, இந்துவும் அல்லை. நல்ல கலைஞர்!


    பெரியார் விமர்சகரே!
    இப்படி எத்தனை நாள்தான் அலுக்காமல் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்?



    அனானி நண்பரே!
    பகிர்வுக்கு நன்றி.நாம் பொறுமையாகவே பேசுவோம்...


    கபிலன்!
    உங்கள் சகிப்புத்தன்மையையும், ரசிப்புத்தன்மையையும் உங்கள் பின்னூட்டத்தில் அறிய முடிகிறது!!


    தீபா!
    பகிர்வுக்கு நன்றி.


    அபு!
    பகிர்வுக்கு நன்றி.


    UFO!
    இது உங்கள் கருத்து. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. //வால்பையன்!
    திரும்பத் திரும்ப நான் படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுடைய இதுபோன்ற கமெண்ட்களையெல்லாம் தொகுக்க்லாம்.!!!//

    என்னை வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே!

    பதிலளிநீக்கு
  26. பன்முக தன்மை கொண்ட நாட்டில் ஒரு மதத்தினர் வணங்கும் கடவுளை நிர்வாணமாக(அது போன்று கோவில்களில் இருந்தாலும்)வரைவது என்பது கண்டிக்க தக்கது.அந்த மதத்தை சாரதவர் செய்வது என்பது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் செய்லாக அமையும்.இல்லையென்றாலும் பாதிக்க செய்ய சில அமைப்புகள் இருக்கின்றன.

    இசுலாம் தடை செய்த ஒன்றை(ஒவியம்) செய்யும் ஒருவரை அதிலும் மற்ற மதத்தினர் மனம் புண்படும் படி ஒவியம் வரைந்தவரை இசுலாத்துடன் ஏன் சேர்ந்து பார்க்க‌ வேண்டும்.அத‌னால் தான் முக‌ம‌து ந‌பி ம‌ற்றும் க‌திஜா அவ‌ர்க‌ளை தேவையில்லமால் இழுக்கிறார்க‌ள்.அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் புண்ப‌ட்ட‌ மாதிரி இசுலாமிய‌ர்க‌ளின் ம‌ன‌மும் வேத‌னை ப‌டும் ஏன் உண‌ர‌வில்லை.

    பதிலளிநீக்கு
  27. //சில்லுண்டிப் பயலை சில்லுண்டிப் பயல் என்றுதான் கூறவேண்டும். நான் யாரையுமே மரியாதையுடன் விளிப்பவன் என்பதை இங்கு பலர் அறிவார்கள். நானே அம்மாதிரி கூற வேண்டுமானால் இந்த சில்லுண்டிப் பயல் எனது கோபத்தை எவ்வளவு கிண்டியிருக்க வேண்டும்?//

    சில்லுண்டி என்றால் என்ன பொருள்? தமிழில் நான் கேள்விப்படாத சொல்.

    கோபம் வராதபோழ்து மரியாதை மறக்காமலிருத்தல் பெரிய விடயமல்ல.

    கோபம் வரும்போழ்தும் மரியாதை மறக்காமலிருப்பதே கற்றோருடைய பண்பாடு.

    பதிலளிநீக்கு
  28. நான் டோண்டு ராகவனின் பதிவில் எழுதிய பின்னூட்டக்கருத்தையே இங்கும் போடுகிறேன்.

    ஓவியம் கலை சார்ந்தது. கலைஞன் அனைத்தையும் கலையாகத்தான் பார்க்கிறான். அவன் பார்வையின் வடிவங்களே கலைப்பொருட்களாகின்றன. நம்மில் பலர் ரசிக்கிறோம். அவனுக்காக அவன் படைத்து, பின்னர் திருப்தியடைந்தால் நாமும் பார்க்க வைக்கிறான்.

    அவன் எந்தப்பொருளையும் எடுத்துக்கொள்ளலாம். இருக்கும் அல்லது இல்லாத பொருள்களும். (அதாவது வெறும் கற்பனைப்பொருள்களும்). சிலசமயங்களில் அக்கற்பனைப்பொருள்கள் பாமரர்களுக்குப் புரியாதவை. e.g salvador dali, piccaso.

    இதைப்போலவே, சரசுவதியையும். அது நிர்வாணமாகவும் இருக்கலாம் அது அவன் கலைசார்ந்த விருப்பம். மற்ற மதக்கடவுளர்கள்? ம்...அவையும் சேர்த்தே.

    எங்கே பிரச்சனை ஆரம்பிக்கிறது? பார்வைக்கு வைக்கும்போழ்து. வைக்காமலிருந்தால்? அவன் ஓவியக்கொட்டகையில் மட்டுமிருந்தால்? பிரச்னையில்லை.

    பார்வைக்கு வைக்கும்போழ்து, பார்வையாளரைப்பொருத்தே எதிர்வினை எழுகிறது.

    பிக்காசோவின் ஓவியங்களைப்பார்த்து கொட்டாவிவிடுபவர்களிடமும், டாலியில்ன் ஒவியங்களைப்பார்த்து, ‘பைத்தியம’எனச்சொல்பவர்களும் எப்படிப்பார்வையாளர்களிடையே தப்பாக வந்து மாட்டிக்கொள்கிறார்களோ, அப்படி, ஹுசைனின் ஓவியங்கள் டோண்டு போன்றோரிடம் மாட்டிக்கொண்டதுதான் தவறு. Art and Dondu-like persons are strange bedfellows.

    சுருக்கின், He should exhibit his works of art only among those who can appreciate art; such people are found in all religions.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!