கோட்சேவை இயக்குனர் சீமான் ஆதரிக்கலாமா?

seeman

“எங்களைப் பொறுத்தவரையில், தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்” என்று சண்டே இந்தியன் என்னும் இதழில் இயக்குனர் சீமான் அவர்கள் இப்படியொரு கருத்தை சொல்லியிருக்கிறார். வருத்தமாக இருக்கிறது.

சீமானின் உணர்வுகளை, அதிலிருக்கும் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முன்பிருந்தே சீமானுக்கு தமிழ் உணர்வும், பெரியாரின் கொள்கைகள் மீது மிகுந்த ஈர்ப்பும் உண்டு. இரண்டு வருடத்துக்கு முன்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் அவரோடு கலந்து கொண்ட ஒரு கலை இலக்கிய இரவில், அவரது பேச்சை அருகில் இருந்து கேட்டிருக்கிறேன். ஆச்சரியமாய் இருந்தது. அனுபவச்செறிவோடு, பெரியாரின் வார்த்தைகளுக்கு வேகம் கொடுத்தார். தங்குதடையற்ற சரளமான அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

ஆனால், இலங்கைப் பிரச்சினையில், சமீபத்திய அவரது சில கருத்துக்கள் எல்லை மீறியதாகப் படுகிறது. அதை அவரே அந்தப் பேட்டியில் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். “சாவு வீட்டில் இலக்கணச் சுத்தமாகவா அழ முடியும்” என்று நியாயமும் கற்பிக்கிறார். இனம், இன உணர்வு குறித்த பிரச்சினைகள், அனிச்சையாகவே உணர்ச்சிவசப்பட வைக்கும் ஆற்றல் கொண்டவையாக மனித சமூகத்தில் இருக்கின்றன. அதிலும் ஒரு பெரும் அழிவு கண்ணெதிரே நடக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் கண்மூடித்தனமான கோபத்தை நிச்சயம் உருவாக்கும். சட்டென நிதானத்தை இழக்க வைக்கும். அது மேலும் சிக்கலகளையே உருவாக்கிவிடும்.

இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது. வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது. இந்த கொந்தளிப்பான மனநிலை ஒருவித அடையாள அரசியலுக்குள் மனிதர்களை அரவமில்லாமல் நகர்த்திவிடுகிறது.

இவ்வகையான அரசியலுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உலகளாவிய பிரச்சைனைகளை பொருட்டாக மதிப்பதில்லை. தன் நாடு, தன் மக்கள் என்று துண்டித்துக் கொண்டு அதிலேயே தீவீரம் காட்டுவார்கள். தன்னை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களோடு கரம் கோர்க்க துடிப்பார்கள். ஆதரவு தரும் சக்தியின் வரலாறு, பின்னணி எதுவும் தேவையில்லாமல் போகும். அதுதான் சீமானுக்கும் நேர்ந்து விட்டதோ என வருத்தமாய் இருக்கிறது.

ஒரு பெரும்பான்மையான சமூகத்துக்கும், சிறுபான்மையான சமூகத்துக்கும் இடையில் கலவரங்கள் வெடித்த போது மகாத்மா காந்தி யார் பக்கம் நின்றார் என்பது இந்த தேசத்தின் மறக்க முடியாத அத்தியாயம். கையில் மலர்களோடு நவகாளியில் அமைதிக்காக யாத்திரை சென்ற அந்த மனிதரை இப்படியா புரிந்து கொள்வது? அவரது மரணமே இந்த தேசத்தின் விடிவு என்று கையில் பகவத் கீதையோடும், துப்பாக்கியோடும் புறப்பட்ட  ஒரு பெரும்பான்மை சமூகத்து வெறியனா, உங்கள் ஆதரவாளனாக இருக்க முடியும்?

சீமான், வருத்தமாயிருக்கிறது.

 

பிற்சேர்க்கை:
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் படைப்பாளி நடராசா சுசிந்தரனுடன் எழுத்தாளர்.ஆதவன் தீட்சண்யா நடத்திய உரையாடல் விசை பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதனை இங்கே படிக்கலாம்.

 

*

கருத்துகள்

63 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Gandhi godcah period is over tamilan still suffering.don't mis understand seeman speech. when child dies infront of us what we will do .we will try to save the child all the way. thats what seeman doing don't misunderstand.

    பதிலளிநீக்கு
  2. சிறுபிள்ளைத்தனமான பதிவு .பார்வை.

    “எங்களைப் பொறுத்தவரையில், தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்” -இதிலே என்ன தவறு கண்டீர்கள் ? இப்போது நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் , நெருக்கடியில் ஈழப்போராட்டத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் யோக்கியதையை பார்க்க மாட்டோம் .அதனை வரவேற்போம் என்பது தான் இதன் கருத்து என தெளிவாக தெரிகிறது.

    அதைவிடுத்து ஏதோ சீமான் காந்தியை எதிர்ப்பதாகவும் ,கோட்சேவை ஆதரிப்பதாகவும் இதற்கு அர்த்தம் கொடுப்பது விஷமத்தனமானது.

    அவர் சொல்ல வந்தது "ஈழப்போராட்டத்தை காந்தியே எதிர்த்தாலும் அவரையே எதிர்ப்போம் ' என்பது தான் ..அதன் அர்த்தம் காந்தியை உயர்வாக நினைப்பத்துவல்லாமல் சிறுமைப்படுத்துவதல்ல .

    ஐயா ..அப்போ நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஈழப்போராட்டத்தை காந்தி எதிர்த்தால் நானும் எதிர்ப்பேன் என்றா? அப்படியென்றால் அது உங்கள் குருட்டுத்தனமாக காந்தி என்ன சொன்னாலும் கேட்பேன் என்பதையே காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7 மே, 2009 அன்று AM 11:16

    nallathu evalavooo seeman sollgirar atai podunge,eluthunge,yenn akka,thangai,kudambathai oruvan alithu kondu erukiran...nan yaridam utavi ketpathu ? nallavaro ketdavaro..yennaku yar utavi seigiraro avarudan serthutane nan yenn kudumbai kapatre vendum..DONT MISSUNDERSTAND.

    பதிலளிநீக்கு
  4. சீமான் சொல்றது என்னன்னா , பச்சிளங்குழந்தைகள் கண்முன்னே கொல்லப்படும்போது , காந்தி மலர் கொண்டு அமைதி காத்தால் நாங்கள் எதிர்ப்போம். கோட்சே அந்த குழந்தையை காக்கவோ , இன்னொரு குழந்தை கொள்ள படாமல் இருக்க வன்முறையை கையாண்டால் நாங்கள் ஆதரிப்போம் எனபது தான்.

    அங்க சாவுரது உன் பொண்டாட்டி , உன் பிள்ளை , உன் பெற்றோர் என நினை. தத்துவமாக சீமான் மீது வறுத்தபடுவது கேவலமாக படும்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா7 மே, 2009 அன்று AM 11:34

    Probably Seeman thinks that the end justifies the means. One can understand his feelings. When one is very emotional it is difficult to expect rational thoughts from him. Whatever may be, one can't doubt Seeman's commitment to Tamil cause.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7 மே, 2009 அன்று AM 11:34

    //வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது.//

    உங்கள் அளவுக்கு யாரும் இவ்வளவு சரியாக சீமானின் பேச்சுக்கு எதிர்வினை கொடுக்கவில்லை.
    கண்மூடித்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். அவரின் சமீபத்திய பேச்சுக்கள் மிக அதீதமாகவே உள்ளது. உதாரணம்: வேசிமக்கள், கோட்சே ஆதரவு, ஜெஜெ ஆதரவு........
    --ராஜா

    பதிலளிநீக்கு
  7. சுந்தர மீனாட்சி!
    ஜோ!
    அனானி!

    அனைவருக்கும் வணக்கம். வருகைக்கு நன்றி.
    ஈழத்தில் நடக்கும் இன அழிப்பும், கொடூரக் காட்சிகளும் அலைக்கழிக்கிறது.
    அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது எல்லோருக்குள்ளும் துடிப்பாய் இருக்கிறது.
    வழிமுறைகளை யோசிக்கும்போது, வரலாற்றில் இருந்துதான் தேட வேண்டியிருக்கிறது.
    அதில் தவறாய் யோசனைகளை முன்வைத்து விடக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.
    அது வேறுவிதமான முடிவுகளுக்கும், அபிப்ராயங்களுக்கும் இட்டுச் சென்று விடும் என அஞ்சுகிறேன்.
    இன்னொன்று, சீமான் இந்த பிரச்சினையில் மிகுந்த துடிப்பாய் இருக்கிறார் என்பதாலேயே, அவர் சொல்வது எல்லாவற்றையும் ஆதரிப்பது எப்படிச் சரியாகும்.
    தயவு செய்து தவறாக கருத வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  8. அவருடைய கூறியதற்கு நேரடி பொருள் கொள்ளுதல் சரியல்ல என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  9. நண்பர்களே!

    இங்கே அஹோரி என்று ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஒருக் கருத்தை இப்படித்தான் எதிர்கொள்வதா?

    பதிலளிநீக்கு
  10. How many days you all gonna kill innocent tamil people in the name of Tamileelam?
    Does Seemaan ready to go Vanni and fight?
    Some innocent youngsters will fight for Tamil eelam and everyone will enjoy it. Ridiculous...
    Didn't you see LTTE attacking tamil people, who were fleeing from their control?
    Please open your eyes and save innocent tamils, instead of saving Prabhakaran.
    My father got injured in LTTE's attack. He is in Vavuniya right now. My family is safe now. But i wanna like to see all tamils being safe.

    பதிலளிநீக்கு
  11. அனானி!

    சீமானின் committment குறித்து பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தீப்பெட்டி!
    நான் நேரடியாக பொருள் கொள்ளவில்லை.
    வரலாற்றிலிருந்து சொல்கிறேன்.
    சில வார்த்தைகள் மேலோட்டமாக பார்க்க சாதாரணமாகத் தோன்றும்.
    ஆனால் அதன் பொருள் மிக ஆழமானதாயிருக்கும்.
    சீமான் எதோ வேகத்தில் கூட சொல்லியிருக்கலாம்.
    ஆனால் அதன் விளைவுகள் வேறாக இருக்குமே...

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா7 மே, 2009 அன்று AM 11:56

    //சீமானின் committment குறித்து பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்//

    I was not trying to question your opinions in post. Sorry if I gave that impression. Agree with your points. Mine was a general view on Seeman as a reply to your post.

    பதிலளிநீக்கு
  14. சீமானின் இந்த பேச்சு மிகவும் கண்டிக்கதக்கது. ஆத்திரத்தில் எதையும் பேசலாம் என்பது எப்படி சரியாக இருக்கும். சீமானின் பேச்சி சரியாக இருக்கும்போது அவரை பாராட்டுதில் நாம்தான் முண்னனியில் இருக்கிறோம். அவரின் பேச்சி தடுமாறுபோது அதை அவரிடம் நேரடியாக நீங்கள்பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டுவதிலும் நாம் தான் இருக்கிறோம் .என்ற வகையில் மிகவும் சரியான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  15. இலங்கையில் நிகழ்வது என்ன?போரில் யார் என்ன எந்த தவறு செய்கிறார்கள் என்பதை உலக ஊடகங்களுக்கு தெரிய அனுமதிக்காமல் நிகழும் மனித அவலங்களை உணர்வு பூர்வமாக பிரதிபலிக்கும் போது சீமானின் வார்த்தைகள் சில கட்டுடைப்புக்கள் செய்கிறது.அப்படி பொதுமேடை முழக்கங்கள் எந்த வித பலன்களை விளைவிக்கும் என்பது உணர்ந்து அதற்கான மூல காரணம் கண்டறியாத மாநில,மைய அரசுகளை என்ன செய்வது?

    உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.எழுத்துக்கும் அப்பால் உணர்ச்சிப் பிரவாகமாக பேசுவதில் ஜெயகாந்தன் சார் முன்னால் சீமான் சின்னக்குழந்தை.

    தமிழகத்தில் நிகழும் அரசியல் சறுக்குகள்,பேச்சுக்கள்,நிகழ்வுகள் மனதுக்கு சுகமாயில்லை.ஆனாலும் அவலப்படும் மக்களுக்கு ஏதாவது விடியலுக்கான தடயங்கள் கிடைக்கும் வரை இவற்றின் நீரோட்டத்திலேயே நாம் பயணிக்கவேண்டி வரும்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா7 மே, 2009 அன்று PM 1:09

    சீமான் சொன்னதன் உட்கிடக்கை உங்களுக்கு புரியவில்லையா? அடுத்தது அவரில் குற்றம் காண் முயலுகிறீர்களா? அல்லது காந்தியை திட்டியது பிடிக்கவில்லையா? நீங்களும் இந்திய ஒருமைப்பாட்டு விசுவாசியா? தமிழனுக்கு குனிய விட்டு குத்தப் போறாங்கள். அப்ப தெரியும் ஒருமைப் பாடு இறையாண்மை? நிதர்சனத்துக்கு கண்ணாடி தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  17. Mr. Sunder/ Joe...
    "when child dies infront of us what we will do .we will try to save the child all the way"

    yes we accept this because we faced many tims same problem by LTTE group during those period noboday speak from TamilNadu Like Mr Seeman, Dont misunderstand...

    “எங்களைப் பொறுத்தவரையில், தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்” -இதிலே என்ன தவறு கண்டீர்கள் ?
    still exactly u dont know who is காந்தி and who is கோட்சே

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா7 மே, 2009 அன்று PM 2:31

    ஐயா, காந்தி எதை செய்தாலும் அது நியாயமா? என்ன பேச்சு இது? சீமான் சொல்வது முற்றிலும் இந்த விஷயத்தில் பொருந்தும்.
    - தமிழ்நாட்டுத்தமிழன்

    பதிலளிநீக்கு
  19. இதில் ஆய்வதற்கு ஒன்றுமல்ல. சீமான் பின் நவீனத்துவ கவிதை எதையும் எழுதவில்லை. தீயவனாகவே இருந்தாலும், தனி ஈழத்தை ஆதரிப்பவனின் பக்கமே இருப்பேன் என்கிறார், உத்தமனாக இருப்பினும் அவன் ஈழத்தை எதிர்க்கையில் அவனது கூட்டை முறிக்கச் சொல்கிறார். மீண்டும் இதில் தமிழக அரசியலையோ, கோட்சேவையோ கொண்டு புது அர்த்தங்கள் கற்பித்தல் அபத்தமானது.

    பதிலளிநீக்கு
  20. மாதவராஜ்,
    அடிப்படையாகவே நம் நாட்டில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ஆதரவும், எதிர்ப்பும் ஆதாயங்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு பலி என இப்போதைக்கு சீமான். சீமான் கருத்துக்களில் பலவற்றோடு நான் முரண்படுகிறேன். கருத்தில் நேர்மையற்றவர்கள் அரசியல் செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்பதென் கருத்து. சேகுவேராவின் படம் அச்சிடப்பட்ட ஆடையணிவதால் மட்டுமே புரட்சி வந்து விடுமா என்ன..? புரட்சியென்பதை காட்சியாக மட்டுமே பிரபலப்படுத்தியவர் சீமான். ஒலிபெருக்கியைப் பிடித்து இலங்கைத் தமிழருக்கும், விடுதலைப் புலிகளுக்குமான ஆதரவை பேசிவிட உங்களுக்கும், எனக்கும், நம்போன்றோருக்கும் எவ்வளவு கணம் பிடிக்கும். வெறும் பேச்சல்ல நடைமுறை வாழ்க்கையென்பது. போலி புரட்சியாளர்களும், அவர்களுடைய போக்கும் குறித்து சிந்தனையாளர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இது சீமானின் ‘கோட்சேவையும் ஆதரிப்பேன்‘ என்பதற்கான பதில் அல்ல. பொதுப்போக்கில் சீமானின் நடவடிக்கைகள் குறித்த கருத்து.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  21. வரும் மே 13 ஆம் தியதி தெரியும் தமிழகவாகாளர்கள் யார்பக்கம் என்பது

    பதிலளிநீக்கு
  22. மாதவராஜ், தாங்களின் கருத்து முழுவதும் எனக்கு ஏற்புடையதே...

    இலங்கை பிரச்சினையில் தமிழ் சினிமாக்காரர்களின் விளம்பர மோகத்திற்கும் அவர்களின் உண்மையான செயல்களுக்கும், யாரும் நியாயம் கற்பிக்கவே முடியாது...

    பதிலளிநீக்கு
  23. தமிழ் ஈழமக்களுக்கு மட்டும் அல்லாமல் புலிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதால் நீங்கள் சீமானை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறீர்கள்.

    ஈழத்தில் ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.கொடூரமான முறையில் நாள்தோறும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என்ற் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் சிங்களர்கள் அழித்து வருகிறார்கள்.

    தண்ணீரில் தத்தளித்து மூழ்கும் நிலையில் உள்ளவன், அடுத்த கணம் மரணம் என்று எதிர்பார்த்து நிற்பவன் தன்னை நோக்கி வீசப்படும் கயிற்றை ஆரயவேண்டும் என்கிறிர்கள்.அந்த கயிறு எதனால் செய்யப்பட்டது? அதன் வலிமை எப்படி? ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா? என்று ஆராய வேண்டும் என்கிறீர்கள். அந்த கயிற்றை வீசுபவன் யார்? அவன் எப்படிப்பட்டவர்? அவர் ஜதகம்- குலம், கோத்திரம் என்ன என்று தெரிந்து கொண்டுதான் கயிற்றை பற்றி கரையேற வேண்டும் என்கிறீர்கள். இது உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?

    பெரும்பான்மை சமுகத்துக்கும், சிறுபான்மை சமுகத்துக்கும் இடையே கல்வரம் ஏற்பட்டபோது, காந்தி யார் பக்கம் நின்றார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். ஈழத்தில் பெரும்பான்மை சிங்களர்கள், சிறுபான்மை தமிழ் மக்களை பூண்டோடு அழித்து வருகிறார்கள். ஆனால் புலிகளுக்கு எதிரான உங்கள் கருத்து எந்த சமுகத்துக்கு உதவும் என்று உங்களுக்கு புரியவில்லையா?

    பதிலளிநீக்கு
  24. முத்தனன் -கொழும்பு!

    வருகைக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை.
    இங்கிருப்பவர்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
    உங்களுக்கு யாராவது பதில் சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். ம்ஹூம்.

    பதிலளிநீக்கு
  25. அனானி!
    //I was not trying to question your opinions in post. Sorry if I gave that impression. Agree with your points. Mine was a general view on Seeman as a reply to your post.//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. விடுதலை!
    தங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ராஜ நடராஜன்!
    //சீமானின் வார்த்தைகள் சில கட்டுடைப்புக்கள் செய்கிறது.அப்படி பொதுமேடை முழக்கங்கள் எந்த வித பலன்களை விளைவிக்கும் என்பது உணர்ந்து அதற்கான மூல காரணம் கண்டறியாத மாநில,மைய அரசுகளை என்ன செய்வது?//

    வந்த பின்னூட்டங்களில் உங்களுடையது மிக நேர்மையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் நான் பார்க்கிறேன். ஆரோக்கியமானதானதும் கூட. இங்கு அதிகாரத்தை நோக்கியே வாக்குறுதிகளும், கொள்கைகளும் அறிவிக்கப்படுகின்றன. தொலை நோக்கு பார்வையற்றதாகவும் இருக்கின்றன. ராஜீவ் காந்தியின் மரணம் வைத்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் அழிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்த சிலர் துடிக்கின்றனர். சகலவித அரசியலும் தலைதூக்கும் களமாக என் தமிழர்களின் மரணம் ஆகிவிட்டதே!

    பதிலளிநீக்கு
  28. pukalini!

    சீமான் சொன்ன இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் அதற்கு எத்தனை அர்த்தங்கள் உங்களால் கொடுக்க முடிகிறது! இதைத்தன் நான் விமர்சனம் செய்கிறேன்.
    எந்த அடக்குமுறையையும் எதிர்க்கும் வல்லமை மனித சமூகத்திற்கு உண்டென்று உறுதியாக நம்புகிறவன் நான்.
    எந்த அழிவிலிருந்தும்ம் அந்த வேட்கை மீளும், மீண்டு வரும்.
    அதற்காக மனிதகுல விரோதிகளிடமா நம் புகலிடம் என்பதுதன் என் கேள்வி.

    பதிலளிநீக்கு
  29. asfar!

    ஆமாங்க. எனக்கு காந்தியும் தெரியாது. கோட்சேவும் தெரியாது!!!!
    இனவெறிக்கு எதிராக இயக்கம் நடத்தும்போது, இன்னொரு இனவெறியை கட்டமைப்பது சரியா என நான் கேட்டால், நான் ஒன்றும் தெரியாதவன் ஆகிப் போகிறேன் உங்களைப் போன்றவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  30. அனானி
    //ஐயா, காந்தி எதை செய்தாலும் அது நியாயமா? என்ன பேச்சு இது?//

    இதையே நான் திருப்பிக் கேட்கிறேன்.
    சீமான் என்ன சொன்னாலும் அது சரியா?

    பதிலளிநீக்கு
  31. மாதவராஜ்,

    உங்கள் சமீபத்திய பதிவுகளில் அதிக விமர்சனத்துக்குட்படுத்தப்படும் பதிவாகவும் இது இருக்கலாம்!!! குற்றம்சாட்டுவதற்கும், இப்படி பன்ணியிருந்தா நல்லாயிருந்திருக்குமே என்று ஆதங்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் என்பதை உணர முடிகிறது.

    அதுவும் உணர்ச்சி வேகத்தில்தான் பேசுகிறார் எனினும் சில எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் இந்தப் பதிவு என புரிகிறது.

    அவரது உணர்ச்சிவயப்பட்டு பேசுதல் என்பது அவரே ஒப்புக்கொண்ட ஒன்றுதான் என்றாலும், உங்கள் பதிவின் கடைசி வரிகள் நீங்கள் அவரது வரிகளை மிக நேராக புரிந்து கொண்டீர்கள் என்ற தோற்றத்தை தருகிறது!!!

    சீமான் இதே காந்தியின் , ஒரு இனத்தின் அழிவை தடுக்க நான் எந்த விதமான ஆயுத்தையும் ஏந்தி போராடுவேன் என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார் என்பது உங்களுக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்!!!

    அவரது உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களால் சில சிக்கல்கள் வரலாம் என்ற ஆதங்கத்தில் எழுந்த பதிவு என்றால் இன்னும் நல்ல முறையில் நீங்கள் கொண்டுவந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!!!

    நரேஷ்
    www.nareshin.wordpress.com

    பதிலளிநீக்கு
  32. வெங்கி ராஜா!

    ஓஹோ! சீமான் சொன்னதில் எந்த அர்த்தமும் கற்பிக்கக் கூடாதோ!
    அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாலும், அதை சுட்டிக் காட்டக் கூடாதோ!!
    வாழ்க ஜனநாயகம்!
    ஆயுதம் எடுக்காத காந்தியை எதிர்நிலையில் நிறுத்துவதிலும்,
    ஆயுதம் எடுத்த கோட்சேவையும் ஆதரிப்பதிலும் எந்த அர்த்தத்தையும் காணக் கூடாதோ!
    வாழ்க வரலாறு!!!!

    பதிலளிநீக்கு
  33. அகநாழிகை!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    //வெறும் பேச்சல்ல நடைமுறை வாழ்க்கையென்பது. போலி புரட்சியாளர்களும், அவர்களுடைய போக்கும் குறித்து சிந்தனையாளர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.//
    உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து எழும் எதுவும் நிலைக்காது!

    பதிலளிநீக்கு
  34. கிருஷ்னலீலை!
    வருகைக்கு நன்றி.
    நீங்கல் சொன்னது போல் தெரியட்டும். அது சில நல்ல விளைவுகளை எதிர்காலத்திலாவது ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறவர்களில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
  35. ரெங்கா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    சினிமாக் கலைஞர்கள் இன்னும் ஆழமான புரிதலோடு களம் இரங்க வேண்டும் என்பதே என் ஆசை!

    பதிலளிநீக்கு
  36. விஜயராஜ்!

    தங்களை புலிகளின் ஆதரவாளராகவும், தனி ஈழம் கோருபவராகவும் புரிந்து கொள்ள முடிகிறது.
    கொந்தளிப்பான மனநிலையில், இக்கட்டான சூழலில் வேறென்ன செய்ய முடியும் என்று எல்லோரையும் போல நீங்களும் கேட்பதில் உள்ள அர்த்தம் தெரிகிறது.
    இதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன்
    இந்த நேரத்த்தில் எதைச் செய்தாலும் நியாயம் என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.
    இதைத்தான் கொடுமை என்கிறேன்.
    வேறு வழி இருந்தது, இருக்கிறது என யார் சொன்னாலும் சந்தேகித்து, துரோகி என முத்திரை குத்துகிறீர்கள்.
    இதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
    ஒரு இனவெறிக்கு இந்தச் சாக்கில் தமிழ்நட்டில் தூபம் போடுகிறீர்கள்.
    அதைத்தான் கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. நரேஷ் குமார்!
    நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.
    //அவரது உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களால் சில சிக்கல்கள் வரலாம் என்ற ஆதங்கத்தில் எழுந்த பதிவு என்றால் இன்னும் நல்ல முறையில் நீங்கள் கொண்டுவந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!!!//

    ஏற்றுக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. இலங்கையில் தமிழர்கள் வாழ வேண்டும்.. தனி ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள்தான். இக்கட்டான நிலையில் அல்ல எந்த நிலையிலும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை தவிர்த்து ஈழத்தமிழர்களுக்கு வேறு நாதி எதுவும் இருந்தது இல்லை.

    வேறு வழி இருந்தது.., இருக்கிற்து என்கிறீர்கள். என்ன வழி இருந்தது? எப்போது இருந்தது?? விடுதலைப்புலிகளை தவிர்த்து எதை நிறைவேற்றமுடியும். அந்த வழியை ஈழமக்கள் எற்பார்களா?

    உயிரை பணயம் வைத்து, துச்சமாக மதித்து அல்லது மதிக்காமல் அங்கு போரிடும் மாவீரர்கள் பற்றி இங்கிருந்து இழிவாக விமர்சிக்கிறார்கள். அதனை நீங்கள் மிகசரி என்று ஆமோதிக்கிறீர்கள். மக்கள் விரோதியாக இருந்தால், எந்த ஒரு இயக்கமும் நிலைத்து இருக்கமுடியாது.இன்னும் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் விடுதலைப்புலிகளைத்தன் ஆதரிக்கிறார்கள். மக்களை கவசமாக பயன்படுத்துபவர்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

    எந்த இன வெறிக்கு தமிழ் நாட்டில் தூபம் போடுகிறோ ம் என்று தெரிவித்து விட்டு கண்டிக்கலாமே!!!

    பதிலளிநீக்கு
  39. மரியாதைக்குரிய விஜயராஜ அவர்களுக்கு!

    இருந்த வழிகளையெல்லாம் அடைத்ததே விடுதலைப் புலிகள்தானே!
    ஈழம் குறித்த வரலாறு தயவு செய்து படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். ரொம்பதூரம் போக வேண்டாம், என்னுடைய வலைப்பக்கத்தில், புலம்பெயர்ந்த ஈழ்த்தமிழர் ஒருவருடைய பேட்டிக்கான இணைப்பு உள்ளது. உலகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதாகக் கூறுவது எவ்வலவு தூரம் சரி என்பதை அப்போது புரிந்து கொள்வீர்கள். அது எதற்கு? இந்தப் பதிவுக்கு கொழும்புவிலிருந்து ஒருவர் கருத்து தெரிவ்த்திருக்கிறாரே அதற்கு என்ன பதில் இருக்கிறது நம்மிடம்.

    நிச்சயமாக, இங்கு, த்மிழ் இன வெறி விதைப்பதற்கான சக்திகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றன. ஹிட்லரின் ஆரம்ப காலப் பேச்சுக்களுக்கும், இவர்களுக்கும் உள்ள ஒற்றுமையை என்னால் முன்வைக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  40. புதிய ஈழவன்8 மே, 2009 அன்று AM 1:47

    சீனா கொடுக்கும் ஆயுதம் தமிழனை கொல்லும் போது அதை தட்டிக்கேட்க வக்கில்லாத சி.பி.எம் கட்சி மாதவராஜ் சீமானை விமர்சிக்கரார்... ஈழத்தமிழ் மக்களே தமிழ் உணர்வாளர்கள ஜெயலலிதா ஜால்ராக்களின் நிலை பாரீர். ஜெவே ஈழம் தந்தாலும் இவர்கள் பிடுங்கி சீனாவிடம் கொடுத்துவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா8 மே, 2009 அன்று AM 1:47

    ஈழ நெருக்கடியை நன்கு தெரிந்த எந்த மனிதனும் சீமானின் கோபத்தைப் புரிந்துகொள்வான்.
    காந்தி வழியிலா இந்தியா நட்க்கின்றது?

    1988. இடம் திருகோணமலை, நேரம் காலை 8.30. பள்ளி மாணவர்கள் வீதி மறியற் போரில் இறங்கினார்கள். காரணம் 2 பள்ளி மாணவிகளை கட்த்திக் கற்பளித்து கொலை செய்தார்கள் இந்திய அமைதிப்படை சிப்பாய்கள். இந்திய‌ அமைதிப்படை டாங்கியை ஏற்றிக் கொலை செய்தார்க‌ள்.இதுபோன்ற‌ 10000000 க‌தைக‌ள் சீமானுக்கு தெரியும்.
    ஈழ‌ம் என்ப‌து ஒதுங்கி வாழ‌ ஒரு இட‌ம். புத்த‌க‌ங்க‌ளில் துன்ப‌த்தை உண‌ர‌ முடியாது. எண்ணிக்கையில் அதிக‌மான‌வ‌ர்க‌ள் எண்ணிக்கையில் கொலை செய்வ‌தை கோட்சே அல்ல‌ யார் க‌ண்டித்தாலும் அது நீதி.

    காந்தி உயிரோடு இருந்திருந்தால் உங்க‌ளையும் ம‌ன்னிக்க‌வே மாட்டார்.
    சீமானையும் காந்தியையும் புரிந்துகொள்ள‌ தேசாபிமான‌ம் க‌ட‌ந்த‌ ம‌னிதாபிமான‌ உண‌ர்வை அனுப‌வபூர்வ‌மாக‌த் தெரிந்திருக்க‌ வேண்டும்.
    ஒருமுறை ஈழ‌த் த‌மிழனாக‌ வாழ்ந்து பாருங்க‌ள்.

    முத‌லில் உங்க‌ளைப் போன்ற‌ புத்திசாலிக‌ள் ' இந்தியாவில் ஈழ‌க் கொலைக‌ளை ம‌றைக்கும் போக்கைக் க‌ண்டிக்க‌ முன்வாருங்க‌ள். காந்தியைப் பார்க்காதீர்க‌ள்!! காந்தியைப் புரிந்துகொள்ளுங்க‌ள்!!!

    ஒரு ஈழ‌த்துத் த‌மிழ‌ன்

    பதிலளிநீக்கு
  42. மாதவராஜ்,
    குறும்படம் இயக்கும் அளவுக்கு ஆற்றலும் அறிவும் பெற்ற உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை புரிவதில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என நினைக்கவில்லை.

    கடைசியாக ஒரே கேள்வி ..இந்திய சுதந்திரத்துக்காக வெளிநாடுகளில் சென்று படையமைத்து போராடிய சுபாஷ் சந்திர போஸ் ,ஹிட்லரிடம் சென்று ஆதரவு கேட்டாரே ..அதை உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றால் இதையும் புரிந்து கொள்ள முடியும் .. இல்லையென்றால் விட்டுத் தள்ளுங்கள் .

    பதிலளிநீக்கு
  43. //asfar!

    ஆமாங்க. எனக்கு காந்தியும் தெரியாது. கோட்சேவும் தெரியாது!!!!
    இனவெறிக்கு எதிராக இயக்கம் நடத்தும்போது, இன்னொரு இனவெறியை கட்டமைப்பது சரியா என நான் கேட்டால், நான் ஒன்றும் தெரியாதவன் ஆகிப் போகிறேன் உங்களைப் போன்றவர்களுக்கு!//

    இந்த பின்னூட்டம் ஒன்று போதும் ..உங்கள் புரிந்து கொள்ளும் லட்சணத்தை சொல்லுவதற்கு .உங்களுக்கு ஆதரவாக என்மேலும் சுந்தர் மேலும் பாய்ந்து asfar எழுதியது கூட புரியாமல் அவர் மேலே பாய்கிறீர்கள் ..என்ன கொடுமை சார் இது?

    பதிலளிநீக்கு
  44. தோழமை மாதவராஜ் . மிக ஆழமானவை உங்களின் எழுத்துக்கள் மற்றும் பார்வைகளும் . எனக்கும் கூட வருத்தம் தான் . இலங்கை பிரச்சினைகள் என்று தீரும் ,நிலையான சமாதான தீர்வுதான் என்னவென்று . மக்களுக்காக பிராத்திப்போம்

    பதிலளிநீக்கு
  45. புதிய ஈழவன்!
    வருகைக்கு நன்றி.
    நண்பரே! இதற்கு முன்னரே பதிவு ஒன்றில் நான் தெளிவாகச் சொல்லி விட்டேன்.
    இலங்கைப் பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இலங்கை அரசுக்கு யாரும் ஆயுதம் அளித்திருக்கக் கூடாது என்று என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
    இந்தியா, சீனா என எந்த நாடு ஆயுதம் அளித்திருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது எனப்து என கருத்து.

    பதிலளிநீக்கு
  46. ஜோ!
    சுபாஷின் அந்தப் பார்வை குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் ஏராளமான வாதங்களும், எதிர்வாதங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றன.
    முசோலினியை சென்று அவர் சந்தித்தது ஒரு வரலாற்றுப் பிழை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.

    அப்புறம்...
    asfarn பின்னூட்டத்தின் கடைசிக் கேள்வி என்னிடம் கேட்பதாக தவறாக புரிந்து கொண்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. ***“எங்களைப் பொறுத்தவரையில், தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்” என்று சண்டே இந்தியன் என்னும் இதழில் இயக்குனர் சீமான் அவர்கள் இப்படியொரு கருத்தை சொல்லியிருக்கிறார். வருத்தமாக இருக்கிறது. ***

    வருத்தம்லாம் படாதீங்க, இந்த ஆளு உளற ஆரம்பிச்சுட்டார்.

    வள வளனு பேசியே காலத்தை ஓட்டனும்னா, பாதி உளறலில்தான் முடியும்.

    It is about time for him to shut his mouth and think before he says any damn thing!

    I am sure you will be labelled as
    "thamizhina thrOgi" pretty soon! :-))

    பதிலளிநீக்கு
  48. அனானி!
    இந்திய அமைதிப் படை அங்கு செய்த அட்டூழியங்கள் கொடூரமானவை. அதைப்பற்றிப் பேசுவதற்குள் ஒரு ராஜீவ் காந்தி மரணம். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வேறு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு புரிதல் கட்டமைக்கப்பட்டது. இன்று ஈழப் படுகொலைகளுக்குப் பின் அந்த பிம்பம் ஆவேசமாகத் தகர்க்கப்படுகிறது. இரண்டுமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கட்டியமைக்கப்படுவதாகவே இருக்கின்றன.
    இதுபோன்ற தருணங்களில், தவறானச் சொல்லாடல்கள் வந்துவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை.
    சிமானையும், காந்தியையும், கோட்சேவையும் நான் புரிந்து கொண்ட வரையில்தான் இந்தப் பதிவு.
    நான் சீமானை மதிக்கிறவன். அதை முதலில் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  49. பெயரில்லா8 மே, 2009 அன்று AM 9:53

    yaru intha seeman ulagai kakka purppatta kadavula blak elutharatha vittu vittu plain eri ponga puli kuttikala anga poi sanda podunga inga sugama irnthukittu na atha pannuva itha pannuven summa uthar vidakoodathu seeman mathiri aluga tamil nattil irukka koodathu ......

    பதிலளிநீக்கு
  50. என்னய்யா? காந்தி, காந்தி என்று சொல்லி என் நாட்டை (தமிழ்நாடு) இத்தனைகாலம் அடிமையாய் ஆக்கினீற்களே!! போதாதா? எனக்கென்று ஒரு நாடு (தமிழீழம்) எனக்கு கிடைக்ககூடாதா? (படிக்க: காந்தி செய்த தூரோகம் - http://tamilpadai.blogspot.com/2009/04/blog-post_425.html)
    இந்த காந்தி நாடுதான், அங்கே தமிழனை அழித்து கொண்டிருக்கும் போது, நான் உட்கார்ந்து காந்தி தேசியம் பாடி கொண்டிருக்ககவா? சொல்லுங்கள் அய்யா? தமிழனை அழிப்பது இந்தியா என்றால், இந்தியாவை அழிக்க “தமிழ்ப்படை” கிளம்பும். அதற்கு அண்ணன் சீமான் தலைமை ஏற்ப்பார்.

    பதிலளிநீக்கு
  51. இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.


    கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
    இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.
    இதன்போது அவரது உரையில்,
    இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.
    காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே! யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான். புலிகள்தான்!
    கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.
    பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.
    இத்தாலி சோனியாவை "பாரதத்தின் அன்னை" என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.
    சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான். இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள். பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.
    நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். பிரபாகரன் நாடு கேட்டது அவருக்காகவா. உனக்கும் எனக்கும்.இந்த ஒட்டுமொத்த தமிழினத்துக்குமல்லவா. இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே. தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே. எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?
    தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சதீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்?
    430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை.அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை. இறையாண்மையுமில்லை.
    தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...
    அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். 'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.
    கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான். இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகி விட்டோமே என்ற ஆற்றாமை என்னை பாடாய்படுத்துகிறது...
    திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா.பங்களாதேஷைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா.
    10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர். இலட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம். நண்பர்களே! பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை.
    காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.
    இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து. என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ்.
    அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

    தளபதி சீமானின் பேச்சில் என்ன தவறு உள்ளது ???

    சேகுவாராவின் ஆதராவாளர் சீமான் என்றால் தங்களுக்கு நல்லவர்!!!

    ஆனால், கோட்சே கண் தானம் செய்தால், அவர் தங்களுக்கு கெட்டவர்??? என்ன நியாயம்!!!

    உங்கள் பதிவை பதிவு செய்யும் முன்பு தமிழராக சிந்தியுங்கள்!!!

    வெயில் அதிகமாகதான் உள்ளது
    அடிக்கடி குளிர் பானம் அருந்துங்கள்...

    பதிலளிநீக்கு
  52. ஈழத்தமிழர்களுக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதே விடுதலைப்புலிகள்தான். ஆனால் புலிகளின் கை ஓங்கி தமிழர்கள் நிம்மதியை எதிர் நோக்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம், அந்த நம்பிக்கையை, நிம்மதியை உடைத்து எறிந்தது இந்தியாதான். முன்பு ராஜிவ் படை, இப்போது சோனியா படை.

    புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஒருவரின் பேட்டி வலைப்பக்கத்தில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறீர்கள். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உள்ள ஆயிரக்கணக்கானோர் பேட்டி- படங்கள் உங்களுக்கு தெரியவில்லை. அல்லது பார்க்க மறுக்கிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் அந்த நாடுகளில் தனிஈழ கொடியுடனும், பிரபாகரன் படத்துடனும் போராட்டம் நடத்துவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? ராஜபக்சே கூட அதை அனுமதிக்க கூடாது என்று ஊளையிடுகிறாரே! அது உங்களுக்கு கேட்கவில்லையா?

    தமிழ் இனவெறியை விதைப்பதற்கான சந்தர்ப்பம் இதுதான் என்று யாரும் கருதுவதாக தெரியவில்லை.யார் என்று சுட்டிக்காட்டுங்கள்.. தெரிந்து கொள்கிறோம். ஆனால் ராஜிவ் காந்தி கொலையை மட்டுமே சாக்காக கொண்டு தமிழ் இனத்தையே அழிக்க நினைத்தவர்கள்... அழித்துக் கொண்டு இருப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.

    கொழும்பில் இருந்து ஒரு நபர் எழுப்பியுள்ள கேள்விக்கு என்ன பதில் நம்மிடம் உள்ளது என்கிறீர்கள்.கொழும்பில் இருந்து சொல்கிறாரா? வேறு எங்கும் இருந்தும் சொல்கிறாரா? சொல்வது தமிழர்தானா?? என்றெல்லாம் கேட்கவிரும்பவில்லை! ஆனால் அவரது கேள்விக்கான பதிலை நான் ஏற்க்கனவே சொல்லிவிட்டேன். மக்களுக்கு எதிரான இயக்கம் என்றால் மக்கள் ஆதரவு கிடைக்குமா?

    ராஜபக்சேவின் பேட்டிகளை மட்டும் படித்துவிட்டு, அவர் வெளியிடும் படங்களை பார்த்து விட்டு பேசும் அவருக்கு நான் சொல்ல்ல என்ன இருக்கிறது..?

    சீமான் மீது இவ்வளவு ஆவேசப்பட்டு, அவர் வன்னிக்கு சென்று போராட தயாரா என்று கேட்கிறார். பிரபாகரனுக்கு எதிராக எவ்வளவு கோபம் காட்டுகிறார்...சுரணையும் ,தைரியமும் இருந்தால் வன்னிக்கு சென்று பிரபாகரனுடன் போராட வேண்டியதுதானே!

    பதிலளிநீக்கு
  53. பெயரில்லா8 மே, 2009 அன்று PM 3:21

    சார் என்ன சார், இலங்கை பிரச்சனையில உங்க கட்சி நிலைதான் என்ன விளக்க முடியுமா, சீனா ஆயுதம் கொடுக்குறது தப்புன்னு நீங்க சொல்றீங்க ஏன் உங்க கட்சி சொல்லல, அப்படின்னா உங்க கட்சி நிலையில இருந்து நீங்க மாறுபடறீங்களா, சரி விடுங்க அம்மா இப்ப ஈழம்தான் தீர்வுன்னு சொல்றாங்க நீங்க என்ன சொல்றீங்க, ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு ஆயுதம் தர்றது எப்படி தப்பா இருக்கும் விளக்கவும், இன்றைக்கு பாகிஸ்தான்ல தாலிபான்கள் செய்யும் அட்டகாசத்தை அந்த அரசு சமாளிக்கிறது சர்வதேச உதவியை நாடித்தான் முறியடிக்க முடியும் அதுக்கு பாகிஸ்தான் சீனாவிடமோ இந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ ஆயுதம் வாங்கத்தான் வேண்டும் அது நீங்க சரின்னு சொல்றீங்களா,

    பதிலளிநீக்கு
  54. அன்பின் மாதவராஜ் சார்!
    துணிச்சலாகவும், நேர்மையாகவும் கருத்துக்களை தந்து இருக்கிறீர்கள். அனானிகளின் ராஜ்ஜியத்தில் இருபத்து மூன்றாம் புலிகேசிகளின் இம்சைகள் தாளமுடியாது. இலங்கையை முன்வைத்து அடிக்கும் லூட்டிகள் ஓவர்.

    உங்களுடைய நியாயமான வருத்தத்தை நாகரீகமாக சொல்லியும் புத்தி வராது. நிறைய நண்பர்கள் உங்கள் கருத்துக்களைத்தான் கொண்டு மௌனமாக இருக்கிறார்கள். சிலர் சீமானைப் போல ச்லம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  55. மாதவராஜ்,

    நீங்கள் தெளிந்த அறிவுள்ள ஒருவர். சீமான் சொன்னதற்கு நேரடியான பொருள்கொள்ளக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வருத்தமாக இருக்கிறது.

    அதைக்கூட விட்டுவிடலாம். "இலங்கையில் நடப்பதை இன அழிப்பாகச் சொல்லமுடியாது. மிகைப்படுத்திச் சொல்லி - மிகைப்படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்கலாம என்ற நப்பாசை எந்த இலாபத்தையும் கவனஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை"என்று அபத்தமாகப் பேட்டியளித்திருக்கும் நடராசா சுசீந்திரனின் பேட்டியை இங்கே, இந்த நேரத்தில் இணைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அப்படியென்ன வரலாற்றுத் தேவை அதற்கு இப்போது இருக்கிறது? அப்படியானால் இங்கே நாம் காணும் காணொளிகள் நாடகங்கள். புகைப்படங்கள் photoshop இல் செய்யப்பட்டவை என்றல்லவா ஆகிறது? வவுனியாவிலும் மன்னாரிலும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கும் அகதிகளும் பொய்யா? என்னவொரு மனச்சாட்சியற்ற வார்த்தைகள். அதைப்போய் நீங்கள் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்... வருத்தமாக இருக்கிறது நண்பரே. இந்நேரத்தில் இந்தியாவுக்கு வந்து இவர் பேட்டியளித்திருப்பதன் பின்னணியே ஐயுறத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  56. மரியாதைக்குரிய தமிழ்நதி அவர்களுக்கு!

    வணக்கம்.

    ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை உக்கிரமாக நான் அறிய நேர்ந்ததில் தங்களுக்கும், தங்கள் எழுத்துக்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு. உங்கள் வலைப்பக்கத்து பூனையை பார்க்கும் போதெல்லாம் மிகுந்த துயரச் சாயல் கொண்டதாய் எனக்கு காட்சியளிக்கும். பிப்ரவரி மாதத்தில் நான் எழுதிய ‘அமைதியும், இரத்தமும்’ என்னும் பதிவே அந்தப் பூனையின் தாக்கத்தால்தான். என் மேனியெங்கும் என் இரத்தத்தையே பூசிக் கொண்டு நிற்பது போல யுத்தக் காட்சிகள் அப்பிக் கொண்டன.

    தொடர்ந்து ஈழம் குறித்து படித்துக் கொண்டும், நண்பர்களோடும் உரையாடிக்கொண்டும்தான் இருந்தேன். இருக்கிறேன். பதற்றம் பற்றிய கணங்கள் தாண்டி இப்போது பலரின் பேச்சுக்களும், செய்கைகளும் எனக்கு சில அச்சம் மண்டும் கேள்விகளை எழுப்பியபடி இருக்கின்றன.

    உரையாடல்களில், கொஞ்சம் மாறுபட்டு யோசித்தாலோ, கருத்துக்கள் கொண்டிருந்தாலோ உடனடியாக கடுமையான வசவுச் சொற்கள் நீள்கின்றன. துரோகியெனப் பட்டம் கட்டப்படுகிறது. இதுதான் என்னை மிகவும் உறுத்துகிறது. இதை கொந்தளிப்பான மனநிலையில் வெளிப்படும் வார்த்தைகள் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். பிறகு இணைப்பக்கங்களில் சிலரிடம் இதுவே திட்டமிட்ட செயலாக்கம் பெற்றதாய் உணர்ந்தபோது அச்சம் கொண்டேன். அதிலிருந்துதான் நான் சீமானின் வார்த்தைகள் இங்கு எந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என யோசித்தேன். எதற்கும் வேறு பொருள் கற்பிக்கக் கூடாது என்பது ஜனநாயகம் அல்லவே!

    சீமானின் பேச்சுக்களை இப்போது எல்லோரும் கவனிக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவரிடமிருந்து மதவெறியனுக்கு ஆதரவான வார்த்தைகள் வரலாமா என்பதே என் கேள்வி. நேரிடையாக பொருள் கொள்ளவில்லை. ஆழமான புரிதலினால்தான் அந்த வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன.
    தாங்கள் இதற்குப் பிறகும், வருத்தப்படுவீர்களானால், என் வருத்தங்களை உங்களிடம் தெரிவிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உங்கள் உணர்வுகளின் மீது எனக்கு மரியாதை உண்டு.

    நடராசா சுசிந்தரனின் பேட்டி விசை இதழில் வெளியாயிருந்தது. அதன் ஆசிரியர், நண்பர் ஆதவன் தீட்சண்யா எனது வலைப்பக்கத்தில் இணைப்புக் கொடுக்க கேட்டுக்கொண்டார். உலகம் முழுவதும் உள்ள ஈழத் கருத்து ஒரே மாதிரிதான் என்று நண்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கவே, இப்படியும் கருத்துக்கள் இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அந்த இணைப்பைக் கொடுத்தேன். எனக்கும் அந்தப் பேட்டியில் விமர்சனங்களும், ஐயமும் உள்ள பகுதிகள் உண்டு. எதையும் நம்ப முடியாத ஒரு மனநிலைக்கு ஆளாவது மிகப் பெரும் கொடுமை.

    பதிலளிநீக்கு
  57. பெயரில்லா8 மே, 2009 அன்று PM 11:04

    உங்கள் பதிவு நேர்மையானது. இலங்கையில் புலிகளால் தமிழர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை பற்றி சீமானுக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ வெளிநாடுகளில் புலி கொடியுடனும் பிரபாகரன் படத்துடனும் ஊர்வலம் போவபவர்களுக்கோ கவலையோ அக்கறையோ இல்லை. அவர்களது நோக்கம் முழுவதும் புலிகளை காப்பாற்றுவதும் கிளிநொச்சியிலே இறக்கப்பட்ட புலிக்கொடியை மீண்டும் ஏற்றவேண்டும் என்பதே. புலிகள் அமைப்பு என்பது இன்று இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டுமின்றி தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் பிரச்சினைக்குரிய ஒர் அமைப்பாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  58. பெயரில்லா8 மே, 2009 அன்று PM 11:50

    http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5283438/Life-as-a-female-Tamil-Tiger-guerilla-relived-by-one-of-first-female-soldiers.html

    பதிலளிநீக்கு
  59. பெயரில்லா9 மே, 2009 அன்று AM 3:32

    mr. madhavraj,

    seeman's speech could be simply understood in context to present tamilnadu election politics. that is, by inference to gandhi's 'congress' and gotse's 'BJP'. while trying to oppose congress vehemently, he just tries to acknowledge JJ's support directly and BJP's support indirectly. just dont bother to look back history.
    after election the scenes and speeches would be different and surprising.

    பதிலளிநீக்கு
  60. நேரம் எடுத்துக்கொண்டு பதிலளித்தமைக்கு நன்றி நண்பரே!

    எனக்கு ஒரு சின்னவருத்தம். நீங்கள் போய் இதை எப்படிப் போடலாம் என்று. அதனால்தான் அந்தப் பின்னூட்டம்.

    "எதற்கும் வேறு பொருள் கற்பிக்கக் கூடாது என்பது ஜனநாயகம் அல்லவே!"

    என்பதோடு நானும் உடன்படுகிறேன். விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்களோடும் சேர்த்துத்தான் நாங்கள் அவர்களை எங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் புலியெதிர்ப்புப் பிரச்சாரம் என்பது எதிரிகளால் திட்டமிடப்பட்டு உலகெங்கிலும் வலைப்பின்னலாக நடத்தப்பட்டுவருகிறது. சரி அவர்களைப் பற்றி நாம் பேசாமல் விட்டுவிடலாம். ஆனால், மக்கள் படும் துயரங்களை,இழப்புகளை, மனச்சிதைவுகளை, இடப்பெயர்வை ஒன்றுமேயில்லை 'ஊதிப் பெருப்பிக்கிறார்கள்'என்று சொல்வது எவ்வளவு மனிதப்பண்பற்ற செயல். பொய்மை. என்னிடம்கூடக் கேட்டிருந்தார்கள். 'நீங்கள் ஏன் சுசீந்திரனுக்கு மறுப்பு எழுதக்கூடாது?'என்று. உண்மை என்று ஒன்று இருக்கிறது. அது கண்முன்னே அவ்வளவு வெளிச்சமாகத் தெரிகிறது. இருந்தும், வாதங்களால் அதை இருட்டுக்குள் அமிழ்த்திவிடமுடியும். துரதிர்ஷ்டவசமாக எதிரியின் பிரச்சாரப் பீரங்கிகளாகத் தொழிற்படுபவர்கள் வாதத்திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் நிரபராதிகள் தண்டனைக்குள்ளாவதும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும் அதனாலன்றோ?

    'உண்மை வெல்லும்'என்பதை உணர்ச்சிவசப்பட்டு அன்றி, வரலாற்றுச் சுவடுகள் தந்த நம்பிக்கையினால் சொல்லிவிட்டு வாளாதிருப்பதன்றி, எங்களைப் போன்றவர்களால் இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  61. //இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது.//

    அருமையான தெளிவான பார்வை!
    ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளப்படுவது மிகக் கடினமே. உங்களைப் போன்றவர்களை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  62. //இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது.//

    இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் இதைத் தான் நிரூபிக்கின்றன. மன்னிக்கக் கூடிய கோபம் தானே அது? நிதானமாக யோசித்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்ல வருவது புரியும்.

    பதிலளிநீக்கு
  63. ஈழம் எட்டாக் கனவாய்க் கிட்டாக் கனியாய் ஏன் ஆனது என்பதற்கு இத்தகையவர்களின் ஆதரவும் ஒரு காரணம் ! எதையும் நின்று நிதானித்து யோசிப்பது என்பது இந்த மாவீரர்களின் அகாராதியில் இல்லாத ஒன்று ; எதிரில் அமர்ந்திருக்கிற கூட்டத்தின் கைத் தட்டலுக்காக வாய்க்கு வந்தபடிப் பேசுவதும் காலப் போக்கில் அதில் கிடைக்கிற செல்வாக்கைத் தன் சொந்த வாழ்க்கையின் சுக போகத்துக்கான அரசியல் முதலீடாக மாற்றுவதும் அன்றையத் திராவிட அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை; அதையே இன்றையத் தமிழின அரசியல் வாதிகளும் அடி பிசகாமல் பின்பற்றுகிறார்கள் ; ஆகப் பெரும் பிரச்சனையாம் இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கிற அனைவரையும் திட்டித் தீர்ப்பதும் , வெட்டிச் சாய்ப்பதும் எவ்வகையில் தமது விடுதலைப் போருக்கு உதவிகரமாக இருக்கும் எனப் பிரபாகரனும் யோசிக்கவில்லை; இங்கே தமிழகத்தில் அவரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடிடும் இந்த வாய்ச் சவடால் மன்னர்களும் தங்களின் இத்தகைய பேச்சு எவ்வகையில் அதற்கு இன்றையச் சூழலில் உதவிடும் எனக் கொஞ்சமும் சிந்திப்பதில்லை; இப் பூவுலகின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்திய மண்ணில் மாற்று மதத்தவரைக் கொன்று குவிக்கிற ஆர்.எஸ்.எஸ். அத்வானியையும் ஈழப் போரில் துணைக்கழைப்பது இவர்களின் உண்மையான நோக்கம் பற்றிய ஐயத்தை எழுப்புவது இயல்பானதோர் எதிர்வினையே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!