பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் (தீராத பக்கங்கள்-5)

எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது அப்போது. சாத்தூரில் தென்வடல் புதுத்தெருவில் ஒரு காம்பவுண்டு வீட்டில் குடியிருந்தோம். காலையில் அடிகுழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற அம்மு ‘ஐயோ’வெனக் கதறிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். படுத்திருந்த நான் பதறி எழுந்து ‘என்ன என்ன’ என்று அவளைப் பிடித்துக் கொண்டேன். அப்படியே தரையில் விழுந்து குலுங்கி அழுதாள். ‘என்னன்னு சொல்லு’ என்று உலுக்கினேன். “ராஜிவ் காந்தியக் கொன்னுட்டாங்களாம்... டி.வில செய்தி போடுறாங்க...” என்றாள்.அதிச்சியாயிருந்தாலும், உண்மையில் எனக்கு பெரிதாக எந்தக் கவலையும் பற்றிக்கொள்ளவில்லை. “இதுக்குத்தானா... இப்படி அழுற...” என்று சாதாரணக்குரலில் கேட்டு, டி.வியை ஆன் செய்தேன். உடல் சிதறிக் கிடந்த அந்த உருவம் திரும்பத் திரும்ப காட்டப்பட்டது.

அம்மு ரொம்ப நேரம் குழந்தை போல அழுதுகொண்டு இருந்தாள். அவளைச் சமாதானப்படுத்துவதிலேயே கவனமாய் இருந்தேன். எங்கள் சங்க அலுவலகத்தில் இரண்டு தோழர்கள் தங்கியிருந்தது ஞாபகத்தில் வந்து கொண்டு இருந்தது. கடைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கும், என்ன செய்வார்கள் என்று கவலையாயிருந்தது. அம்முவிடம், கூடக் கொஞ்சம் இட்லிகள் செய்து தரக் கேட்டேன். முகமெல்லாம் வாடியிருந்தாள் அவள். டி.வியில் சோனியா காந்தி, பிரியங்கா, ராகுலைக் காண்பிக்கும் போதெல்லாம் பொங்கினாள். “ஏன் தான், இவர் இந்தியாவுக்கு பிரதமரானாரோ... இந்தக் குழந்தைகளுக்கு தந்தையாகவாது இருந்திருப்பார்” என்று புலம்பினாள். ஒருகணத்தில் சட்டென்று என்முகம் நோக்கித் திரும்பி, “ஏங்க..ஒங்களுக்குக் கொஞ்சம் கூட கவலையே இல்லையா..” என்று ஆழமாய்ப் பார்த்தாள். என்ன சொல்ல என்று தெரியவில்லை. “சரி, இதுக்கு நாம என்னச் செய்யமுடியும்?” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தேன்.

யோசித்துப் பார்க்கும்போது, அந்தக் கொடூரமான மரணத்தையும் தாண்டிய ஒரு வெறுப்பு அவர் மீது படிந்திருக்கிறது என்றேத் தோன்றுகிறது. இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட்ட சமயம், சீக்கியர்கள் காங்கிரஸாரால் நரவேட்டையாடப்பட்ட போது, மிகச் சாதாரணமாக அவர் சொன்ன “ஒரு பெரிய மரம் விழும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்’ என்ற வார்த்தைகள்தான் எனக்கு ராஜீவ்காந்தியை அறிமுகம் செய்தவையாக இருந்தன. எப்போதும் அவர் முகத்தில் இருக்கிற அந்தப் புன்னகை எனக்கு கொடூரமானதாகவேத் தெரியும். தொடர்ந்து ‘இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் செல்கிறேன்’ என்று அவர் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கு செய்த சேவகம் அரசியல் ரீதியாக எனக்குள் மோசமான சித்திரத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஒருதடவை ரெயிலில் எங்கள் கம்பர்ட்மெண்ட்டில் வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இந்திய அமைதிப்படை செய்த கொடூரங்களை விவரித்ததை கேட்கவே முடியாததாயிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து அவரது பிம்பத்தை வேறுமாதிரியாக எனக்குள்  எழுப்பியிருந்தது. தவறோ, சரியோ ஒரு மனிதனுக்குள் உருவாகும் கருத்துக்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றன என்பதை நான் தெளிவாக உனர்ந்த இடம் ராஜீவ் காந்தியின் மரணம். “லேசில் கலங்கிப் போகிற நீங்கள் எப்படி இரக்கமில்லாமல் இருக்கிறீர்கள்.”என்று பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அம்மு கேட்டது இன்னமும் கூடவே அவ்வப்போது வரத்தான் செய்கிறது.

அதே அம்மு இந்த இரண்டு மூன்று நாட்களாய் என்னை வித்தியாசமாய்ப் பார்க்கிறாள். எதோ தவிப்பில் நான் இருப்பதை புரிந்து இருக்கிறாள். “பிரபாகரனை விமர்சனம் செய்வீர்களே...” என்று லேசாய் இழுத்தாள். எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. உண்மைதான். விமர்சனம் இருக்கிறது. ஆனால் அங்கே அந்தத் தமிழ் மக்களுக்கு இனி என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதே என்னை வதைத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் எதிர்காலம் மீதான ஒரு நம்பிக்கை வேண்டும். அதை எடுத்து விட்டால், அங்கே இன்னொன்று வைக்கப்பட வேண்டும். வெற்றிடமாக நிச்சயம் இருக்கவேக் கூடாது. அது மிகப் பெரும் அவலம். அதுதானா இப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கு நேர்ந்திருக்கிறது?

‘பிரபாகரன் தான் எங்கள் இலக்கு’ என்று பிரகடனம் செய்த ராஜபக்‌ஷே, தான் தொடுத்த யுத்தத்தால், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வு சிதைந்து போனதற்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லையே! ! மண்ணை முத்தமிடுகிறார். விண்ணை நோக்கி கைகளை உயர்த்துகிறார். ‘தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுப்பதென்பது எங்களுக்குத் தெரியும். இதில் யாருடைய தலையீடும், ஆலோசனைகளும் எங்களுக்குத் தேவையில்லை’ என்ற அறிவிப்பில் ஸ்வஸ்த்திக்கின் ஆணவம் தாண்டவமாடுகிறது. இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரேநாளில் கை, கால்கள் இழந்து வெடிமருந்துப் புகை பரவிய வீதிகளில் அனாதரவாக கிடக்கிற ஒரு தேசத்தின் இன்னொரு பக்கத்தில் வெடி வெடித்து வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது சகிக்க முடியாததாய் இருக்கிறது. பதுங்கு குழிகளுக்குள் பிணங்களோடு அடைக்கலம் கொண்டிருக்கும் மக்களும் தங்கள் தேசத்தின் பிரஜைகள் என்ற எண்ணம் இருந்தால் இந்த வெறியாட்டங்களை நிகழ்த்துவார்களா? இவர்களிடமிருந்து எந்த நம்பிக்கையை நாம் பெற முடியும்? எப்படிப்பட்ட அரசியல் தீர்வுகள் கிடைக்கும்?

சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும்  இருந்திருக்கிறார் என்பது உண்மை. தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். அதுவே அவரது மறைவு  (மரணமல்ல!)  குறித்து கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு மனிதனுக்குள் உருவாகியிருக்கும் கருத்துக்களை  ஒரு நிகழ்வு உடைத்து விடும் வலிமை கொண்டதாயிருக்கிறது. இதை நான் உணர்ந்த இடம் பிரபாகரனின் மறைவையொட்டிய (மரணமல்ல!) காட்சிகள்.

 

*

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //எதோ தவிப்பில் நான் இருப்பதை புரிந்து இருக்கிறாள்//

    எல்லா செயலும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உள் மனதின் தவிப்பை தவிர்க்க முடியவில்லை எனக்கும்..

    பதிலளிநீக்கு
  2. தோழர் என்ன சொல்லவருகின்றீர்கள்?

    போராடுவது நல்லதா? பொத்திக்கொண்டிருப்பது நல்லதா?

    'என்னைக் கேட்டால்
    போராடுவது பற்றிப்
    புனைகவி எழுதிக்கொண்டிருப்பதே
    எவ்வளவோ நல்லதென்பேன்'...

    ..... என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா20 மே, 2009 அன்று PM 9:05

    புலிகளை விடுங்கள்,கடந்த ஒரு வாரத்தில் தூக்கிபோட ஆளில்லாமல் மு.தீவில் கிடக்கும் 10000 தமிழர்கள் பற்றி எந்த நாயும் பேசவில்லை

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா20 மே, 2009 அன்று PM 9:09

    பொத்திக்கொண்டிருக்கலாம், அல்லது போட்டோஷாப்பில் விளக்கு புடிக்கலாம்.

    (மாதவராஜ் இது உங்களுக்கல்ல)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா20 மே, 2009 அன்று PM 9:26

    தாங்கள் இதுவரை பிரபாகரன் மற்றும் புலிகளின் தவறுகளை கண்டித்திருக்கிறீர்களா? அவர்கள் கொண்று குவித்த தமிழர்களின் எண்ணிக்கையை கண்டனம் செய்திருக்கிறீர்களா?
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா20 மே, 2009 அன்று PM 9:32

    //பொத்திக்கொண்டிருக்கலாம், அல்லது போட்டோஷாப்பில் விளக்கு புடிக்கலாம்.

    (மாதவராஜ் இது உங்களுக்கல்ல)//
    :)

    பதிலளிநீக்கு
  7. உணவு போட்ட இந்தியா!
    ஒப்பந்தம் செய்த இந்தியா - இன்று பொது எதிரியுடன்!
    யாரிடம் என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா20 மே, 2009 அன்று PM 9:37

    நீங்கள் கொடூரமானவர் என்று நினைத்த ராஜீவ்காந்தியையே கொன்றவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்

    பதிலளிநீக்கு
  9. மறைவு (மரணமல்ல!) :(

    எதுவுமே செய்யவியலாது இரண்டு நாட்களாக நண்பர்கள் என்னிடமும், நண்பர்களோடு நானும் மாற்றி மாற்றி புலம்பிக் கொண்டிருக்கிறோம் :(((

    பதிலளிநீக்கு
  10. //நீங்கள் கொடூரமானவர் என்று நினைத்த ராஜீவ்காந்தியையே கொன்றவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்//
    அறிவுகெட்ட வசனம். ஒரு தீவிரவாத அமைப்பிற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் வேறுபாடறியாத மூடர்களிடம் பேசுவது அர்த்தமற்றது.

    மனம் கனத்துப் போயிருக்கும் சமயத்தில் பதிவுகள் எழுத மனம் வரவில்லை. அழுவதற்கும் திராணியில்லை. பின்னூட்டங்களில் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஒரு தினுசாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பல்லாயிரம் கோடி போபர்ஸ் ஊழலில் சேர்த்ததை அனுபவிக்க விடாமல் கொன்று விட்டார்கள், ராஜீவை. அநியாயம்!

    பதிலளிநீக்கு
  12. இலங்கை அரசாங்கம் பிரபாகரன்
    இறந்ததாக கூறி அனைவரது கவனத்தையும் திருப்பிவிட்டு
    இன அழிப்பை மறைக்கவே செய்து கொண்டிருப்பது மகிந்தவின் ‘தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுப்பதென்பது எங்களுக்குத் தெரியும். இதில் யாருடைய தலையீடும், ஆலோசனைகளும் எங்களுக்குத் தேவையில்லை’
    இந்த அறிக்கையே சான்று

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா21 மே, 2009 அன்று AM 1:06

    சிறுவர்களுக்கு சயனைடு குப்பிகளையும் அணிவதற்கு இடுப்பு பெல்டுகளையும் கொடுப்பது தான் விடுதலை இயக்கமா, ஒருவேளை இந்த உலகில் இருந்து விடுதலை பெற்று தரும் இயக்கமோ

    மற்ற சிறுவர்களுக்கு குப்பி கொடுத்தாலும் தன் பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வு அந்த சொகுசு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் கொன்றொழித்துவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா21 மே, 2009 அன்று AM 1:07

    நாளை ராஜீவ் நினைவு நாள் இந்த வருடம் தான் அவர் நிம்மதியாக தூங்குவார்

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா21 மே, 2009 அன்று AM 1:17

    //மனம் கனத்துப் போயிருக்கும் சமயத்தில் பதிவுகள் எழுத மனம் வரவில்லை. அழுவதற்கும் திராணியில்லை. பின்னூட்டங்களில் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஒரு தினுசாக இருக்கிறது//

    ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட சேதி கிடைத்தவுடன் வன்னி காடுகளில் கொண்டாடியது தெரியுமா?

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா21 மே, 2009 அன்று AM 3:29

    thayavu seithu jarum jaraijum kurai kurathu avaravar thanvelaiyai seithal ellam thanaka
    kidaikkum. kidaikkirathu kidaikkum kidaikkathathu kidaikkathu.

    பதிலளிநீக்கு
  17. so basically for, you anything against Praba is unfavourable.
    There are millions of people rejoicing for Praba's death (or his disappearence..even if he is alive he can't do much anymore..i wish he is alive and he can see the destruction he caused..that should kill him)
    lately i feel . “சரி, இதுக்கு நாம என்னச் செய்யமுடியும்?” :)

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா21 மே, 2009 அன்று AM 10:36

    புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே உள்ள சண்டையில் இவர்கள் புகலிடம் தேடி ஒளிவது அப்பாவி மக்கள் இருக்கும் இடத்தில் .என்ன நியாயம் ? அரசியலிக்காக வாய்கிழிய பேசிய ஜயலலிதா ,சைகோ சி வைகோ யாரும் இப்ப வாய்திறக்கவில்லை .

    நீர் தொட்டிலையும் கிள்ளி பிள்ளையும் ஆட்டுகிரீரோ ?

    பாரும் LCD முன்னால் ஜாலியாக இருக்கிறார் .

    இவனுவ சண்டையில் பாதிக்க பட்டது அப்பாவி மக்கள் தான் .

    பதிலளிநீக்கு
  19. மிகச்சரியான எழுத்து.. நேற்று இதைத்தான் நான் சொல்லவந்தேன். வேறு பாதையில் சென்று விடுமோ என்று பயந்து எதையும் சொல்லவில்லை!!!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்

    \\ஒவ்வொரு சமூகத்துக்கும் எதிர்காலம் மீதான ஒரு நம்பிக்கை வேண்டும். அதை எடுத்து விட்டால், அங்கே இன்னொன்று வைக்கப்பட வேண்டும். வெற்றிடமாக நிச்சயம் இருக்கவேக் கூடாது. அது மிகப் பெரும் அவலம்.\\

    மிகச்சரியான வாசகம்.

    இவை பல தளங்களில் அதிர்வுகளை எனக்குள் ஏற்படுத்துகின்றது

    இராஜராஜன்

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா22 மே, 2009 அன்று AM 7:38

    பிரபாகரன் மரணத்திற்கு, இல்லை மறைவிற்கு கலங்கும் உங்கள் மனம் ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு கலங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.இதில் எந்த மனிதாபிமானமும் தெரியவில்லை.ஊனமான அரசியல் பார்வையைத் தவிர.

    பதிலளிநீக்கு
  22. .... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் ....


    உண்மையான வரிகள்.சரியான கருத்து.

    ஆணால் ஊனமான பார்வை என்று அனானி சொல்கிறார்.முகமே இல்லாதவர் ஊனத்தை பேசுவது வேடிக்கை////

    பதிலளிநீக்கு
  23. //விமர்சனம் இருக்கிறது. ஆனால் அங்கே அந்தத் தமிழ் மக்களுக்கு இனி என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதே என்னை வதைத்துக் கொண்டு இருக்கிறது.//

    எல்லா அறிவு சார்ந்த கருத்துகளிலும், ஆழ்ந்து நோக்கினால் ஓர் உணர்வு வேர் தெரிகிறது எனக்கு சில நாட்களாக. குறிப்பாக தற்ப்போது வரும் பல பதிவுகளைப் பார்க்கும்போது (மாதவராஜ்! உங்கள் பதிவைச் சொல்லவில்லை). இது சரியா என்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  24. வந்து வாசித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் என் நன்றிகள். வந்திருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது, இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இதுகுறித்து ஒரு தொடர் பதிவை விரைவில் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா24 மே, 2009 அன்று PM 5:17

    வெறும் ராஜிவ் அல்ல இங்கே பிரச்னை. அவர்கள் குறித்து கருத்து வெளியிட்டார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இந்தியா போன்ற பெரிய நாட்டு தலைவர்களையே குறி வைக்கும் குரூரம்தான் இங்கே பிரச்னை.

    ஜனநாயக நாட்டில் வளர்ந்து சுதந்திரம் அனுபவிக்கும் நீங்கள் இப்படி சொல்லலாம். ஆனால் மாற்றுக் கருத்து கேட்கப்பழகாத புலிகள் என்றுமே தமிழர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்து.

    ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பது இன்று புலிகள் மட்டும்தான் என்ற நிலமை எப்படி வந்தது. குரல் கொடுத்த மற்றவர்களை எல்லாம் புலிகள் கொன்றதனால்தானே?

    தன் வினை தன்னைச் சுடும். இது இந்திரா குடும்பத்துக்கும் பொருந்தும், பிரபாகரனுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!