எழுதி எழுதி கீழ்செல்லும் ஜெயமோகனின் கை!

முன்னர் ஒருமுறை சிவாஜி கணேசனுக்கு நடிக்கவேத் தெரியாது என்றார். பிறகு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை கடுமையாக கிண்டலடித்தார். கொஞ்ச காலத்துக்கு முன்புகூட திராவிட இலக்கியத்தை சகட்டு மேனிக்கு தாக்கி சர்ச்சையை கிளப்பினார். ஜெயமோகன் தன்னுடைய எழுத்து வேலைகளுக்கு ஊடாக இப்படிப்பட்ட "கருத்துப்போராட்டங்'களையும் அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டேயிருப்பார். அதற்கு எதிரான வினைகளில் தனது இருப்பை அனைவருக்கும் உணர்த்திக்கொள்ளும் யுக்தியாகவே இதனை வைத்திருக்கிறார். ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதித் தீர்த்தாலும், ஜெயமோகன் அவரது கதைகள் குறித்து பேசப்பட்டதைக் காட்டிலும், இப்படிப்பட்ட விவகாரங்களில்தான் அதிகம் அடிபட்டவராக இருக்கிறார்.

இப்போது இன்னொன்றும் புரிகிறது. தன்னை மட்டுமில்லாமல், தான் முன்வைக்கும் வம்பையும் அவர் நிலைநிறுத்திக் கொள்ளப் பார்ப்பதுதான் அது.மிக ஆழமான தத்துவார்த்த நுட்பங்களும், கடின ஆய்வுகளால் வரலாற்றின் இருட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட உண்மைகளும் பின்னிப் புனையப்பட்ட வாதமாக அது தோற்றமளிக்கும். எளிமையாக முன் இருக்கும் ஒன்றின் மீது ஏராளமான வார்த்தைகளைக் கொட்டி விஸ்வரூப'மாக்கி, யாரும் இதுவரை சொல்லாத ஒன்றை இவர் எதோ ரொம்ப சீரியஸாக முன்வைத்திருப்பது போல காட்டிக்கொள்வார். அவரது ஞானத்தையும், தர்க்கத்தையும் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்கிற கவனமும் அந்தவகையான எழுத்துக்களில் மிதமிஞ்சி இருக்கும். இப்படி இவர் இழுக்கும் வம்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதற்கென அரசியலும், உள்நோக்கமும் தெளிவுற வைத்துக் கொண்டுதான் ஒரு முஸ்தீபோடு அவர் தயாராகிறார். எல்லாவற்றையும் அறிய முயல்கிற சாதகனாகவே தன்னை அடக்கத்துடன் காட்டிக்கொள்ளும் கபடத்தையும் நிகழ்த்துவார். ஆனால் எல்லாம் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற
தொனி ஒவ்வொரு எழுத்திலும் உறைந்து இருக்கும்.

இந்த தேசத்தில் பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கிற சமயத்தில் அவரது "எனது இந்தியா' கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள வரிகளில் கோல்வார்கர், சவார்க்கர் மற்றும் நீதிமன்றத்தில் கோட்சேவின் குரலும் கோரஸாய் சேர்ந்து ஒலிக்கின்றன. இதுதான் சமயம் என இஸ்லாமிய எதிர்ப்பும், இந்து தேசீயத்தின் மாண்பும் ஒவ்வொரு எழுத்திலும் ஒருசேர கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்தின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக சிற்றிதழகள் இந்தப் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாகவும், அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் முல்லாக்களுக்கு ஆதரவாக புரட்சிக்கட்டுரைகள் எழுதுவதாகவும், சாதாரண முஸ்லீமும் போராளியாகும்படியாக மதரீதியாக கட்டளையிடப்படுவதாகவும் அளந்து கொண்டே போகிறார். அண்டை நாடுகளிலிருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறதாம் (அமெரிக்காவிலிருந்து அன்பும் நட்பும்தான் வருகிறது போலிருக்கிறது). காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் தாலிபான் அரசைத்தான் வேண்டுமென்கிறார்களாம். இஸ்லாம் என்பது ஒரு அடிப்படையில் தேசீய கற்பிதமாம். உலகம் பூராவும் மூஸ்லீம்கள்
இப்படித்தான் இருக்கிறார்களாம். மூஸ்லீம்களின் இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னரும் அவர்கள் இங்கு வியாபாரம் செய்யவும், அன்றாட தொழில்கள் செய்யவும் வாய்ப்புகள் அளிக்கப்படுவது கண்டு ஜெயமோகனுக்கு ஆச்சரியமும் வருகிறது. இப்படி ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது வெறுப்பு ஏற்படும்படியான பாசிச சித்தாந்தத்தை ஜனநாயகத்தின் பேரில் நிறுவ முய்ற்சிப்பதில்தான் ஜெயமோகனின் தனித்திறமை வெளிப்படுகிறது.

இந்த தேசத்தில் தன் உரிமைக்காக கிளர்ந்தெழும் ஒரு குரல் கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை என்கிறார். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம் என்று அற்புதமாக ஒரு தர்க்கத்தை உணமை போலும் ஆக்குகிறார் ஜெயமோகன். அதாவது குஜராத், ஒரிஸ்ஸாவில் இந்து வெறியர்கள் எளிதில் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு, வன்முறைகளுக்கு எதிராக தீர்வு எளிதில் நிகழாவிட்டாலும்,
மெல்ல நிகழும் என்பதுதான் அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி. அப்படி இருக்கும்போது இந்த ஜனநாயகத்தை ஏன் மறுத்து இவர்கள் இப்படி வெடிகுண்டுகள் வைக்கிறார்கள் என்பதுதான் கட்டுரையில் எழுதாமல் எழுப்பும் கேள்வி.

இப்போது அவரிடம் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. முஸ்லீம்களின் பயங்கரவாதத்தை விலாவாரியாக நீட்டிய ஜெயமோகன் ஒரு வார்த்தை கூட இந்து பயங்கரவாதிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை? ("எங்களை சிமியுடன் ஒப்பிட என்ன துணிச்சல் வேண்டும். நாங்கள் தேசீயவாதிகள்" என்று இரண்டு வாரத்துக்கு முன் ஒரிஸ்ஸாவில் கிறித்துவர்கள் தாக்கப்பட்ட போது அறிக்கைவிட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் பிரகாஷ் ஷர்மாவை ஜெயமோகனுக்குத் தெரியாது என்பதை நம்புவோமாக!) எளிதில் எதுவும் இந்த ஜனநாயகத்தில் சிலருக்கு மட்டும் நிகழ்கிறதே எப்படி? "எனது இந்தியா' என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே, ஏன் "நமது இந்தியா" என தலைப்பு வைக்கவில்லை? இந்து என்பது மட்டும் தேசீய கற்பிதம் இல்லையா? அமெரிக்கா, ஈராக் மீது இராணுவ நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு எதிராக இந்த ஜனநாய்கவாதி தனது வார்த்தைக் கிடங்கிலிருந்து ஏன் ஒன்றைக்கூட எடுத்து
உபயோகிக்கவில்லை? இன்னும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை நம்மால் கேள்விகள் எழுப்ப முடியும். ஒன்று தெளிவாகவும் அப்பட்டமாகவும்
புரிந்துவிட்டது. இந்துத்துவா என்னும் ஜெயமோகனின் சதை ஆடியிருக்கிறது. நம்மோடு தினசரி பேசிப் பழகிக் கொண்டிருக்கும் ஒரு எளிய முஸ்லீமையும்
சந்தேகத்தோடு பார்க்க வைக்கும் எழுத்தாக ஆடித் தீர்த்திருக்கிறது.

இப்படி எழுதுவதால் நானும் இந்த தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானவன் என்றும், மூஸ்லீம் தீவீரவாதத்தை ஆதரிப்பவன் என்றும் ஒற்றை வரியில்
ஜெயமோகன் சொல்லிவிடக் கூடும். Final Solution என்னும் ஆவணப்படம்தான் நினைவுக்கு வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் கிண்டர் கார்டனில் படித்துக்
கொண்டிருக்கும் இஜாஸ் நம்மோடு பேசுகிறான். தாயையும், தந்தையையும் கொன்று, அன்பும், பாசமும் மிக்க தன் சகோதரியை கண்முன்னால்
நிர்வாணப்படுத்தி கூட்டம் கூட்டமாய் சிதைத்த கொடுமைகளை பார்த்தவன் அவன். அதைத் தொடர்ந்து கலவரங்களும், அதன் கொடுமைகளும் காட்சிகளாக நம்மை பதற வைக்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில் மீண்டும் இஜாஸ் வருகிறான். "நீ என்னவாகப் போகிறாய்" என்று அவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. 'இராணுவ வீரனாக வேண்டும்" என்கிறான். "எதற்கு இராணுவ வீரனாக ஆசைப்படுகிறாய்?" என்று அடுத்த கேள்வி. "இந்துக்களை கொல்வேன்". "ஏன் கொல்வாய்?' "அவர்கள் எங்களை அழித்தார்கள்" "நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா?" என்கிறார் படத்தின் இயக்குனர் ராகேஷ் ஷர்மா. "இல்லை... மாட்டேன்." "ஏன்?..நானும் இந்துதான்." "இல்லை.நீங்கள் இந்து இல்லை...அவர்கள்தான் இந்துக்கள்". படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான்
முற்போக்காளர்கள் இங்கு திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் தீவீரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தனிமைப்படுத்துவதற்கான வழி. குறிப்பிட்ட சிலரை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பை வளர்ப்பது பாசிசத்தின் வழி. இங்கே இந்துத்துவாவின் வழி.

இதை அம்பலப்படுத்துவதால்தான் மிஸ்டர்.ஜெயமோகனுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீது கடுமையான எரிச்சல் வருகிறது. தனது அடுத்த வம்பைதீராநதி பத்திரிக்கையிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். அவரது "உட்கார்ந்து யோசிக்கும்போது ஒரு நகைச்சுவை தொடர்' அபத்தமும், வக்கிரமும் நிறைந்ததாய் இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்களையும், எழுத்தாளர்களையும் அவர் சித்தரித்திருக்கிற விதம் ஞானமும், பக்குவமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் சிந்தனைகளாக இல்லை. ஆரோக்கியமான இலக்கிய உறவுகளுக்கும், உரையாடல்களுக்கும் இதுபோன்ற அருவருப்பான நையாண்டிகள் ஒருபோதும் உதவாது. (கா.நா.சுவுக்கும், புதுமைப்பித்தனுக்கும் இடையில் நடந்த இலக்கிய சர்ச்சைகள் இப்போது படித்தாலும் இலக்கிய அழகும், அர்த்தமும் கொண்டவைகளாக இருக்கின்றனவே!) முற்போக்கு எழுத்தாளர்களைத் தாண்டி இன்னும் பல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் கூட சகட்டுமேனிக்கு
உருவகப்படுத்தி கேலி செய்திருக்கிறார். உயிர்மை ஆசிரியரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்காக அவர் பயன்படுத்தியிருக்கிற குறியீடான வார்த்தைகள் மனிதத்தன்மையற்றவைகளாக இருக்கின்றன. இப்படியெல்லாம் சமகாலத்து படைப்பாளிகளையும், இலக்கியவாதிகளையும் மட்டம் தட்டுவதாலும்,
கொச்சைப்படுத்துவதாலும் இவருக்கு என்ன திருப்தி ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை.

இலக்கியத்திலும், தேசீயத்திலும் நவீனம் பேசுகிற இவர் இன்னும் நாகரீகம் தெரியாதவராகவே இருக்கிறார். இவருக்கு வேண்டுமென்றால் "யானை'
மண்டையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக, அருந்ததிராயை 'குருவி மண்டை' என்று சொல்வதா? எந்த எழுத்தாளனும் இப்படி தாழ்ந்து போக மாட்டான். என்ன செய்ய? எழுதி எழுதி கீழே செல்கிறது ஜெயமோகனின் கை.

முன் பக்கம்

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //ஜெயமோகன் அவரது கதைகள் குறித்து பேசப்பட்டதைக் காட்டிலும், இப்படிப்பட்ட விவகாரங்களில்தான் அதிகம் அடிபட்டவராக இருக்கிறார்.//

    சூட்சுமத்தை தெரிஞ்சு வைச்சிருக்காரு போல :))

    பதிலளிநீக்கு
  2. எனது இந்தியா இன்னும் வாசிக்கவில்லை. முழுமையாய் வாசிக்காமல் எதுவும் எழுதவியலாது.

    இஜாஸின் சித்திரம் வலியை அளித்தது.

    ///படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ///

    இது பிடித்திருந்த‌து.

    பதிலளிநீக்கு
  3. அன்புத் தோழரே!

    ஜெயமோகனின் எழுத்துக்களை நாம் தோலூரித்தது போதாதோ? என்று தோன்றுகிறது. இந்த பாசிச எழுத்தாளனின் உள் அரசியலை நாம் அக்கு வேறு - அணிவேறாக பிய்த்தெரிய வேண்டும். அதன் மூலம்தான் இன்னொரு ஜெயமோகன் நம் சமூகத்தில் உருவாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  4. dear Mathav

    It is heartening that you do not lose your balance even when engaged to counter a writing of an indecent order. You seem emboldened with your moral courage to show an alternative path of love and affection even after going through an absurd material borne out of utmost hatred. But you were effective in exposing the dubious nature of Jeyamohan successfully in your flow.

    I am only reminded of Samayavel's verses:
    PIRIYAM VITHAITHA KAATTIL
    NERUPPU MULAITHAALUM
    PIDUNGI ERINTHUVITTU
    MINDUM
    PIRIYAM VITHAIPEN


    Even if fire grows on the soil where love was sown,
    I would uproot it
    and
    sow the seeds of love once again....

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள வேணுகோபாலன்!

    நன்றி.

    சமயவேலின் அந்தக் கவிதையில் இறுதிவரி வேறு என்று நினைக்கிறேன்.

    பிரியம் விதைத்த காட்டில்
    நெருப்பு முளைத்தாலும்
    பிடுங்கி எறிந்துவிட்டு
    மீண்டும் உழுது வைப்போம்.

    சரி. இன்னும் ஏன் நீங்கள் தமிழில் எழுதமுடியவில்லை? முயற்சிக்கலாமே. உதவிட முடியும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள சந்திப்பு!

    உங்கள் கோபம் புரிகிறது. அதில் உள்ள நியாயமும் புரிகிறது. எழுத்துக்களுக்குள் நின்று ஜெயமோகன் ஆடும் சதுரங்கத்தை வாசகர்களுக்கு புரிய வைத்தால் போதும் என்று நினைக்கிறேன். நாம் ஒன்றும் தோலுரிக்க வேண்டியத்திலை. அவரே தன்னை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டினால் போதும் என்று நினைக்கிறேன்.

    இப்போதும் கூட அவருடைய ரப்பர் நாவலையும், அந்த செறிவான மொழிநடையையும் நான் நேசிக்கத்தான் செய்கிறேன். இப்படிப்பட்ட எழுத்தாளர் தன்னை ஒரு "இலக்கிய மடாதிபதி'யாக்கிக் கொள்வதற்காக தன் எழுத்துக்களுக்கே துரோகம் செய்கிறாரே என்றுதான் வருத்தம் மேலோங்குகிறது.

    இந்த சமூகம்தான் உங்களையும், என்னையும், ஜெயமோகனையும் உருவாக்குகிறது. அவரைப் போல தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நாமும் வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  7. ஆயில்யன்!

    நன்றி.

    அது சூட்சுமம் மட்டுமல்ல. ஒரு வகையான சூதும் கூட.

    பதிலளிநீக்கு
  8. மதுமிதா!

    விரைவில் final solution மற்றும் waiting ஆவணப்படங்கள் பற்றி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. "I said to him, 'I am a muslim, don't you want to kill me?' 'Not now, but while I was listening to them about the atrocities committed by Muslims, I could have killed you'.

    His remark shocked me deeply. I suddenly understood the psychological background of India's communal bloodbath. He said he could have killed me "then" but not "now". Therein lay the key to the communal holocaust of Partition.

    - Saadat Hasan Manto.

    Writers must remember this when they write about communalism. They cannot afford to be irresponsible. It would be a serious crime.

    பதிலளிநீக்கு
  10. I have not read what Jeyamohan has written, so I wont comment on that.
    Is CPIM a secular party.Your govt. in west bengal exiled tasleema nasrin. What was the reason?.
    First they banned her book.
    High Court struck down that ban.

    Your party has joined hands with ultra-conservative and fundamentalist muslim organisations.In tamil nadu your
    party was part of an alliance that
    sought and got the support of TMMK.
    Your party and your organisation
    did not protest when the exhibition
    on Aurangazeb was removed at the
    instance of TMMK. Visai published
    anti-brahmin views. Adhavan Deeskanya is well known for his anti-brahmin views.

    When HINDRAF launched an agitation
    in Malaysia what was your party's
    stand.You will shed tears for muslims in palestine but not for muslims who are victimes of genocide in Sudan.

    Your party is now anti-Hindu.This was evident in your response to the
    Sethu project. Theekkathir is anti-Hindu.You will respect the sentiments of muslims and christians but not that of Hindus.
    I dont support BJP or hindutva.
    I dont consider CPI(M) as a secular
    party. It is communal to the core.
    In many ways it is more communal
    than BJP.

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள "பெரியார் விமர்சகரே'!

    ஜெயமோகனது கட்டுரையைப் பற்றி எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.
    தாங்கள் ஒன்று, ஜெயமோகனது கட்டுரை பற்றி பேசியிருக்கலாம். அல்லது நான் எழுதியவற்றில் உங்கள் விமர்சனங்களை சொல்லலாம்.
    ஆனால் இவை இரண்டையுமே விட்டு, விட்டு, இங்கு எதற்கு திடுமென சி.பி.எம்மைப் பற்றி இழுக்கிறீர்கள் என்று புரியவில்லை.
    தீக்கதிரைப் பற்றி பேசுகிறீர்கள். சட்டென்று விசை பத்திரிக்கைக்கு தாவி, ஆதவன் தீட்சண்யாவின் சட்டையைப் பிடித்து இழுக்கிறீர்கள்.
    தஸ்லீமாவைக் கைது செய்தது சி.பி.எம் என்கிறீர்கள். பிற்கு சி.பி.எம் மூஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவும் சொல்கிறீர்கள்.
    மலேஷியாவுக்கும், பாலஸ்தீனத்திற்கும், அப்படியே சூடானுக்கும் தாவுகிறீர்கள்.
    கடைசியில் 'உங்கள் கட்சி பிராமணர்களுக்கு விரோதமானது' என்று குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
    ஒன்று மட்டும் தெளிவாகிறது.
    யார் இங்கு சமயச் சார்பினமையை பேசினாலும், அவர்களை இடதுசாரிகள் என்றும், குறிப்பாக சி.பி.எம் என்றும் சொல்வது ஒன்றும் இந்துத்துவவாதிகளுக்கு புதிதில்லை.
    முற்போக்காளர்களை இந்துக்களுக்கு விரோதிகள் என்றுதான் அவர்கள் பிறந்ததிலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
    இதன்மூலம் தாங்கள் பெரும்பான்மை மக்களோடு நிற்பதாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.
    நீங்கள் என்ன வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளுங்கள்.
    ஒன்றை மட்டும் எளிமையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
    யார் மூஸ்லீம் யார் இந்து என்று யாரும் பார்க்கவில்லை.
    எது சரி, எது தவறு என்று மட்டுமே பார்க்கிறோம்..
    மதத்தின் பெயரால், பயங்கரவாதமோ, தீவீரவாதமோ அதை யார் செய்தாலும், அவர்கள் மனிதகுல விரோதிகள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.
    சரி.
    இந்த தேசத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அற்புதமான வாய்ப்புக்களைத் திறந்து வைக்ககூடிய சேது திட்டத்தை யார் இங்கு தடுப்பது ?.
    வரலாற்று உண்மைகளை விட்டு, விட்டு வெறும் மூடநம்பிக்கைகளால், கதவுகளை யார் அடைத்து மூடுவது?
    உங்கள் பெயர்க்காரணம் இப்போது தெளிவாகிறது.
    ஏன் உங்களது உண்மையான முகவரியோடும், பெயரோடுமே இதையெல்லாம் நீங்கள் பேசலாமே?
    ஏன் இந்த பெரியார் விமர்சகர் என்னும் முக்காடு?
    போரூரில், நாங்கள் பெரியாரைப்பற்றி பேசும்போது இப்படித்தான் கூட்டத்திலிருந்து ஒளிந்திருந்து கல்லெறிந்தார்கள்.
    நீங்களும் அப்படித்தானா?

    பதிலளிநீக்கு
  12. Mr.Madhava Raj,
    the point is simple, CPI(M) is
    not a secular party.It talks of secularism but in practice it appeases minorities, particularly muslims.So before accusing Jeya Mohan look at the record of your party.I think a party that is
    yet to apologise to Tasleema
    should refrain from claiming that
    it is secular. Your party's stand
    on Danish cartoon controversy vis a vis the stand of the paintings by Hussein is another example of its hypocrisy. You sided with muslims and your leaders addressed a rally of muslims and wanted
    Indian govt. to intervene in
    this. When it comes to
    HINDRAF you turn a blind eye.
    That is why I say that your claims
    on secular credentials of CPI(M) are a big sham.

    I agree with Jeya Mohan on many points .Islam can co-exist with secular democracy although islaimic fundamentalists
    and radicals abhor both secularism
    and democracy. Jeya Mohan does not mice words. But your party lacks the courage to call spade a spade.
    On Afzal Guru it could not decide
    so took a stand that was pathetic.
    Should he be hung or not? Your party refused to address this question and took a stand that law
    should take its own course.

    Your party did not even bother to look at the ecological impacts
    of Sethu project. It wanted that
    the project should be completed
    at any cost.Hindutva groups
    oppose not the project, but a
    route that would destory the Ramar
    Sethu.Dr.Swamy is not against the
    project. Yet you are writing as
    if he and others are blocking the
    project. You write

    "இந்த தேசத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அற்புதமான வாய்ப்புக்களைத் திறந்து வைக்ககூடிய சேது திட்டத்தை யார் இங்கு தடுப்பது ".

    They want the project to be implemented in another route
    without destroying Ramar Setu.
    Yet you are repeating the lie that
    they are against this project.
    Are you not ashamed about this.

    Finally does your party agree with
    the views of Arundati Roy on Kashmir. Does it advocate that
    Kashmir should be ceded from India
    and turned into an independent nation. If you dont know the
    answer better you find it out
    AND then criticise Jeya Mohan
    for his views on her stand.

    பதிலளிநீக்கு
  13. மிஸ்டர் பெரியார் விமர்சகரே!

    முக்காடு போட்டுக்கொண்டு திரும்ப திரும்ப ஒன்றையே பேசிக்கொண்டிருக்கும் உங்களையெல்லாம் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கிறது.
    நீங்கள் சொல்லாவிட்டாலும், உங்கள் கருத்துக்களிலிருந்து நீங்கள் யார் என எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக எனக்கு புரிந்தே விட்டது.
    இலக்கியம் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் நுழைந்து பீடம் தெரியாமல் சாமியாடுகிறீர்கள்?
    நான் சி.பி.எம் குறித்து எங்கும் பேசவில்லை.
    ஜெயமோகனின் ஒருதலைப் பட்சமான கருத்துக்கள் குறித்து என் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.
    உங்கள் முதுகிலும், மூளையிலும் ஆயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டு நீ மட்டும் யோக்கியமா என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் சி.பி.எம் கோபம்.
    நான் இப்போதும், எப்போதும் தஸ்லீமா நஸ்ரினை மதிக்கிறேன்.

    லஜ்ஜை நாவலின் முன்னுரையில் அவர்கள் எழுதியதிலிருந்து அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.

    "நான் அடிப்படைவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்கிறேன். 1992 டிசம்பர்-6ம் தேதி அன்று இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நான் லஜ்ஜா(அவமானம்) நாவலை எழுத அதுவே காரணம், ஏழு நாட்களில் நான் எழுதி முடித்த அப்புத்தகம் பங்களாதேஷில் மத சிறுபான்மைனராக உள்ள இந்துக்கள் பெரும்பான்மையினரான முஸ்லீம்களால் கொல்லப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் பற்றிப் பேசுகிறது. மசூதி இடிக்கப்பட்ட உடன் எங்கள் நாட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் வேட்டையாடப்பட்டது கேவலமானது. அழகிய எங்கள் வங்க தேசத்தை நேசிக்கும் எல்லோரும் இதற்காக வெகப்பட வேண்டும் . அந்தக் கல்வரங்களுக்கு நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் குற்றவாளியாக உணர்கிறோம்'

    இந்த மனசாட்சி முஸ்லீமாக இருக்கக்கூடிய தஸ்லீமா நஸ்ர்ரினுக்கு இருந்தது.
    ஏன் இந்துவாக இருக்கும் ஜெயமோகனுக்கு இல்லை என்பதுதான் என் கேள்வி.

    இப்போதும் சொல்கிறேன், நான் தஸ்லீமா பக்கமே!
    அவர் வங்க தேசத்தில் என்ன செய்தாரோ, அதை நாங்கள் இந்தியாவில் செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. fan following (real/created) can lead to this state. keep writing. jayamohan is not a single offender- there is a big dark albeit safron - force operating.

    பதிலளிநீக்கு
  15. ஜெயமோகன் இந்த்துவ ஆதரவாளர் அல்ல.அதை அவர் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
    ஒரிஸாவில் நடந்த வ்னமுறையை அவர் கண்டித்திருக்கிறார்.உங்களைப் போன்றவர்கள்தான்
    குதர்க்கமாக அவர் எழுதியதை திரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவர் இந்த்துவாவை ஆதரித்து
    எழுதியுள்ளார் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட நீங்கள் அவர் எழுத்திலிருந்து காட்டவில்லை.அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தினை, பிரிவினைவாதிகளை விமர்சித்தால்
    நீங்கள் ஏன் ஐயா கோபப்படுகிறீர்கள். அருந்ததி ராய் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்
    என்று எழுதியதை அவர் கண்டிக்கிறார்.உங்கள் கட்சி காஷ்மீர் தனி நாடாவதை ஆதரிக்கிறதா?
    அருந்ததி எழுதியதை வரவேற்றுள்ளதா. உங்கள் கட்சியே பிரிவினைவாததினை ஆதரிக்காத போது நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  16. இந்த வாரம் குமுதம் படித்தீர்களா? அதில் ஜெயமோகன் கோயில்கள் பற்றி ஏதொ ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் சிதிலமடைந்த பல கோயில்களில் எளிய குடும்பங்கள் வாழ்வதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படிக்கும்போது மனிதாபிமானம் உள்ள எவ‌ருக்குமே அக்கோயில்கள் இதற்காகவாவ்து பயன்படுகின்றனவே என்று தான் தோன்றும்.

    இவர் "உலகளந்த பெருமாள் சக்கராயுதங்களுடன் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் குமுட்டி அடுப்பும் கரிச்சட்டிகளும், கட்டப்பட்ட கோழிகளும்..."

    "....நம்முடைய தரித்திரத்தைச் சாமிக்குக் காட்டலாமா என்ன?


    எனக்கு உண்மையில் இவர் எந்த அர்த்தத்தில் எழுதி இருப்பார் என்று புரியவில்லை. பெருமாளுக்குப் பரிதாபப்படுகிறாரா இல்லை அந்தக் குடும்பத்துக்குப் பரிதாபப்படுகிறாரா?

    பதிலளிநீக்கு
  17. மிஸ்டர் அநாமதேயம்!

    எனக்கு ஒன்று முதலில் நீங்கள் புரிய வைக்க வேண்டும்.
    ஜெயமோகனுக்கு ஆதரவாக எழுதுகிற உங்களைப் போன்றவர்கள் ஏன் முகவரியற்று
    மாயாவிகளைப் போல எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
    அதிலேயே எதோ தவறு இருப்பதாகப் படுகிறது.
    சரி. இருந்துவிட்டுப் போகட்டும்.
    ஜெயமோகன் இந்துத்துவவாதி இல்லை என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார் என்பதால்
    நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
    அவர் பேசும் தத்துவமும், கருத்துக்களும் மிகத் தெளிவாக புரிய வைக்கின்றன.
    அதுகுறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.
    அதை மறுத்து அவரும் எங்கும் பேசவில்லை.
    நீங்களும் இங்கே பேசவில்லை.
    அவரது எனது இந்தியா கட்டுரை ஒன்று போதும், அவர் யார் என்பதை புரியவைக்க.
    அதன் ஒவ்வொரு வரிகளையும் என்னால், கோல்வார்கரின், சவார்கரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு என்னால் பேசமுடியும்.
    அப்படியொரு தர்மசங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாமென்று நினைக்கிறேன்.
    நீங்கள் ரொம்ப ஆசைப்பட்டால், எனக்கொன்றூம் கஷ்டமில்லை.

    பதிலளிநீக்கு
  18. //மாயாவிகளைப் போல எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் //

    உவமையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. Please friends,

    Just ignore him. He will vanish progressively.

    S.Ravi
    Kuwait

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!