இது பதில்களுக்கான நேரம்


இந்த வலைப்பக்கத்தில் நான் வைத்த சில புள்ளிகளைச் சுற்றி கோடுகள் கிழித்து வலைகள் தொடர் விளையாட்டாய் பின்னப்படுவது ஆரோக்கியமானதாய் இருக்கிறது. மதுமிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உஷாவும், லேகாவும் 'நாவல் அனுபவம்' குறித்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அழகான கோலம் இருப்பதை உணரமுடிகிறது.

நான் முன்வைத்த கேள்விகளிடமிருந்து நானும் தப்பித்துக் கொள்ள முடியாது. இது பதில்களுக்கான நேரம். நேர்மையாக மௌனத்தை கலைத்து விடத்தான் வேண்டும்.

நாவல்களோடு எனது அனுபவம்

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
நான் படித்த முதல் நாவல் தமிழ்வாணனின் ஒரு நாவல். சங்கர்லால் துப்பறிவாளாராய் இருப்பார். நாவலின் தலைப்பு ஞாபகத்தில் இல்லை.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
ஒன்பது அல்லது பத்து வயது இருக்கலாம்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அ. சமூக நாவல்கள்
ஆ. சரித்திர நாவல்கள்

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
சொல்லப்படும் கதையின் காலம் மட்டும் பரப்பு எல்லை

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
எத்தனை பக்கங்களும் இருக்கலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
ஆசையாகவும் இருக்கும். அலுப்பாகவும் இருக்கும். எழுத்தாளரின் நடை பிடித்துப் போய்விட்டால் பக்கங்கள் பிரச்சினையாவதேயில்லை.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை.


10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
கிடைத்த நேரங்களிலெல்லாம். இப்போது பெரும்பாலும் பயணங்களின்போதுதான்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
கொற்கை, அபிதா.

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
குறிப்பாக லா.சா ராவின் நாவல்கள்


13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
உபபாண்டவம், புயலிலே ஒரு தோணி, வாடி வாசல், ஆழி சூழ் உலகு, பஞ்சும் பசியும், மண்கட்டியை காற்று அடித்து போகாது, கண் தெரியாத இசைஞன், அக்னி நதி, எரியும் பனிக்காடு, கிருஷ்ண பருந்து, கம்பா நதி, விஷ்ணுபுரம், நெடுங்குருதி

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
1.தரையில் இறங்கும் விமானங்கள்
2.சிவகாமியின் சபதம்
3.மோகமுள்
4.அம்மா வந்தாள்
5.புளியமரத்தின் கதை
6.கடல்புரத்தில்
7.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
8.நாளை மற்றொரு நாளே
9.சாயாவனம்
10.கோபல்லகிராமம்
இன்னும் இருக்கிறதே....


15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
1.சம்ஸ்காரா
2.செம்மீன்
3.பாத்துமாவுடைய ஆடு
4.பன்கர்வாடி
5.குலாத்தி
6.நினைவுகள் அழிவதில்லை
7.லட்சிய இந்து ஓட்டல்
8.நீலகண்ட பறவையைத் தேடி
9.சப்தங்கள்
10.காம்ரேட்
இன்னும் இருக்கிறதே....

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
1.புத்துயிர்ப்பு
2.அன்னாகரீனா
3.தாய்
4.ஜமீலா
5.அன்னைவயல்
6.ஏழு தலைமுறைகள்
7.வெண்ணிற இரவுகள்
8.யாருக்காக மணி ஒலிக்கிறது
9.விடுதலையின் நிறம்
10.டான் நதி அமைதியாக ஓடுகிறது
இன்னும் இருக்கிறதே....


17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
1.அன்னை வயல்
2.கடல் புரத்தில்


18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா
படிக்கும்போதே யோசிப்பதுண்டு. எழுத்தாளன் வாசகனுக்கு தன் கதையைப் பற்றி என்ன சொல்ல நினைத்திருக்கிறார் என யோசிப்பேன்.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
லட்சிய கதாபாத்திரங்கள் என்று சொல்ல முடியாது. மிக நெருக்கமான மனிதர்கள் என்று நிறைய பேரைச் சொல்லலாம். "பொன்னியின் செல்வனில்" பூங்குழலி , "ஜமீலா"வில் சையது, "மோகமுள்" யமுனா, "நினைவுகள் அழிவதில்லை' அப்பு என நிறையவே இருக்கிறார்கள்.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
முக்கியமாக பெயர்கள்.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
1.கடல்புரத்தில்
2.மோகமுள்

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
1.நினைவுகள் அழிவதில்லை
2.அன்னைவயல்
3.கடல்புரத்தில்
4.மோகமுள்
5.ஏழு தலைமுறைகள்
6.விடுதலையின் நிறம்.
7.குலாத்தி


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
வாசித்ததில் பிடித்த நாவல்களில் பிடிபடுவது, 1.இழப்பின் வேதனையை சுமப்பது 2.நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வது 3.கடந்த்காலத்தை சுகமாக உணர்வது

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
1. அன்னை வயலைப் படித்ததும் சிங்கிஸ் ஐத்மாத்தவை
2.கடல்புரத்தில் படித்ததும் வண்ண நிலவனை
3.குலாத்தி படித்ததும் கிஷோர் சாந்தாபாய் காலேவை

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27ம் வயது வரை ஒரே மூச்சுத்தான்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
1.வண்ண நிலவன்
2.தி.ஜானகிராமன்
3.சுந்தரராமசாமி
4.ஜெயமோகன் (ரப்பர் மட்டும்)
5.நாகராஜன்
6.சிங்கிஸ் ஐத்மாத்தவ்


28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
எரிச்சல் வரும். நாவலோடு ஒட்ட முடியாமல் படித்துக் கொண்டிருக்கிறோம் என்னும் பிரக்ஞை வரும். பலசமயங்களில் அந்த இடத்தில் படிப்பதை நிறுத்துவேன். பிறகு தொடர்வதும் உண்டு. தொடராமல் போவதும் உண்டு.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
ஜமீலா, அன்னை வயல், கடல்புரத்தில், புளியமரத்தின் கதை, நாளை மற்றொரு நாளே போன்றவை, மீன்காரத்தெரு. இன்னும் யோசித்தால் நிறைய இருக்கும்.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
உச்சம் என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் அகலமானது. உயரமானது.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
மீன்காரத் தெரு.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
தோன்றிக் கொண்டே இருக்கிறது.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

இவ்வளவுதான் நான்.

முன் பக்கம்

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பதில் போட்டாச்சா.. இதோ அடுத்த ஆட்டத்துக்கு வாங்க மாதவராஜ் :)


    http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!