-->

முன்பக்கம் , , , , � காமராஜ் தம்பதியருக்கு இருபத்தைந்து!

காமராஜ் தம்பதியருக்கு இருபத்தைந்து!

kams 25 th anniv

 

தெருக்குழாயில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டி ஊருக்குள் எங்கள் வேன் நுழைந்தது. நான், பாரதி கிருஷ்ணகுமார், டாக்டர் வல்லபாய், வக்கீல் மாரிமுத்து  இன்னும் நண்பர்கள்  நிறைந்திருந்தோம். செம்மண் பாவிய நிலத்தில் குறுகிய தெருக்களும், ஒட்டு வீடுகளுமாய் இருந்த நடுச்சூரங்குடிக்குள் எங்களது முதல் பிரவேசம் அது. ஸ்பீக்கர் செட் வழி காட்டியது. பந்தல் போட்டு இருந்த வீட்டைச் சுற்றி சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தனர். இளவட்டங்கள் எங்களைப் பார்த்து, மரியாதையோடும், புன்னகையோடும் வரவேற்றனர். யாரும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்த காமராஜ் உள்ளேயிருந்து பரவசத்தோடு அழைக்க ஒடி வந்தான். “வாடா கல்யாண மாப்பிள்ள” என்று கிருஷ்ணகுமார் அவனை வாஞ்சையோடு இழுத்தார். “மாது” என கைகளைப் பற்றி, ‘மாமா’, ‘அண்ணன்’, ‘தம்பி’, ‘அம்மா’, ‘அப்பா’ எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். “பொன்னு எங்க” என்று வக்கீல் மாரிமுத்து அவனது தோளில் தட்டினார். எங்களது கிண்டல்களில்  அவனுக்கு வெட்கமும், சந்தோஷமும் பொங்கிப் போனது.

 

எல்லாம் இன்று நடந்தது போலிருக்கிறது. அதற்குள்ளாகவா இருபத்தைந்து வருடங்கள் ஒடிவிட்டன! இன்று காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து, “மாது, இன்னிக்கு எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள்” என காமராஜ் சொன்னதும் வாழ்வின் சுவாராசியத்தை அறிந்தேன்.

 

1984ம் ஆண்டிலிருந்து காமராஜ் எனக்குப் பழக்கம். ஒரு சாயங்காலத்தில் அவனை நான் கிருஷ்ணகுமாரின் அறையில் சந்தித்தேன். கையில் எதோ புத்தகத்தோடு இருந்தான். அதுவே அவனை எனக்கு நெருக்கமானவனாக உணர வைத்திருக்க வேண்டும். கொஞ்சநாளில் ‘நீ’,’நான்’ என்றும், ‘வாடா, போடா’ என்றும் பேசிக்கொள்ள முடிந்தது. பல நேரங்களில் நானும், அவனுமே சங்க அலுவலகத்தில் தனித்திருப்போம். பேசிக்கொண்டே இருப்போம்.  ரசனைகளும், பார்வைகளும் ஒத்துப் போன சுகமான காலங்கள் அவை. சாயங்கால நேரங்களில், அவனுக்குப் பிரியமான அந்த முகம் பார்க்க அலைபாய்வான். அவனது மாமா வீட்டின் அருகே இருந்த அந்தப் பெண்ணின் நினைவுகளோடு எங்கள் மத்தியில் இருப்பான்.  ஒருநாள், அவனது வீட்டிலும், அந்தப் பெண்ணின் வீட்டிலும் சம்மதித்து விட்டதாய் வந்து சந்தோஷமாய்ச் சொன்னான். அன்று நாங்கள் இருவரும் அளவுக்கு மீறி மது அருந்திக் கொண்டாடினோம். இன்றும் அந்த மது எங்களோடு கூடவே வருகிறதுதான். ஆனால் எப்போதாவது, அளவு மீறாமல்.

 

(அடர் கருப்பு)காமராஜ்க்கும் அவனது பிரிய சகி சுகந்தாவிற்கும் இருபத்தைந்தாவது திருமணநாள் வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails

23 comments:

 1. காமராஜ் அண்ணனுக்கு இனியநல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. காமராஜ் அண்ணனுக்கு அவரது துணைவியாருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..:-)))

  ReplyDelete
 3. காமராஜ் மற்றும் துணைவியாருக்கு , எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்

  பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றி மாதவராஜ்

  ReplyDelete
 4. வாழ்த்துகள் காமராஜ் சார் :)

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சார்

  ReplyDelete
 6. காமு மக்கா- mrs காமுமக்கா வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 7. இந்நாள் பல்லாண்டுகாலம் தொடர்ந்து வர இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நன்றி மாது.
  வாழ்த்துச்சொன்ன எல்லோருக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் காமராஜ் அங்கிள்!!! :-)

  ReplyDelete
 10. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் காமராஜ் சார்..

  ReplyDelete
 11. மண வாழ்வில் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு மைல் கல்தான். என்றென்றும் பிரியங்களுடன் வாழ்த்தும்
  திலிப் நாராயணன்.

  ReplyDelete
 12. வெள்ளிவிழா தம்பதியருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் காமராஜ் சார்.

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துக்கள், காமராஜ் சார்! தங்களின் பதிவிற்கு நன்றி மாதவராஜ் சார்!

  ReplyDelete
 15. side by side , year by year Be blessed kamarjas. thank you mathu sir for sharing the info

  ReplyDelete
 16. என் இனிய காமு அண்ணனுக்கும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 19. இதைவிட ஆனந்தமான செய்தி வேறு என்னவாயிருக்க முடியும் இன்றைய நாளில் தோழர் காமராஜ் குறித்து!

  எளிய தோழன், வளமான எழுத்தாளன், பண்புமிக்க நண்பன், உயிரோட்டமான தொழிற்சங்க முன்னணி ஊழியன், அற்புதமான சக மனிதன்
  தோழர் காமராஜ்-சுகந்தா வாழ்க்கை இணைக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் !

  தருமபுரி சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பியதும் தான் இதை எழுத முடிந்தது.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 20. மாது, காமராஜ் தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நானும் தொடர்புகொள்கிறேன்.

  ReplyDelete
 21. காம‌ராஜ் த‌ம்ப‌தியின‌ருக்கு
  "வெள்ளிவிழா திரும‌ணநாள்" வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 22. அன்புத்தோழர் காமராஜ், அவர் மனைவியார், அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள். நலமுடன் வாழ்க! இக்பால்

  ReplyDelete
 23. அன்பு தோழர் காமராஜ் அவர்களின் இனிய 25 ம் ஆண்டு திருமண நாளில் என் வாழ்த்துக்களை பகிர்வதில் உவகை கொள்கிறேன்.

  ReplyDelete