மிக்ஸி!



“கிஸ்தி, திரை, வரி, வட்டி” பாணியில்  “உனக்கேன் 63 சீட்” என காங்கிரஸுக்கு எதிராக சினிமா கட்டபொம்மனாக இரண்டு வாரத்துக்கு முன்பு கர்ஜித்த கருணாநிதி “இது கொள்கைக்காக உருவான கூட்டணி” என்று இபோது கரகரத்துக்கொண்டு இருக்கிறார்.  சசிகலா அன் கோவை அருகில் வைத்துக்கொண்டே “குடும்ப ஆட்சியை தூக்கி எறியுங்கள்” என பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி போர்க்கோலம் பூண்டு போகிறார் ஜெயலலிதா. “நான் பதுங்குகிறேன், பாய்வேன்” என ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார் வைகோ. “அன்னை சோனியா, அன்னை சோனியா” என்ற மந்திரம் திரும்பத் திரும்ப ஒரிடத்தில் கேட்க, சுற்றி நின்று  “தங்கபாலு ஒழிக, நாசமாய்ப் போக” என செருப்பால் அடித்துக்கொண்டு இருக்கின்றனர் பக்தர்கள்.  திடீர் திடீரென்று அழகிரியும், ஸ்டாலினும் குதித்து குதித்து தாங்களும் இருக்கிறோம் என கத்திக் கொண்டிருக்கின்றனர். “நான் மக்களோடும், ஆண்டவனோடும் கூட்டணி வைத்து இருக்கிறேன்” என்று கண்போன போக்கில் கையசைத்துக்கொண்டு போகிறார் விஜய்காந்த். போதாதென்று  குஷ்பு, பாக்கியராஜ், வடிவேலு இன்னபிற கலாநிகழ்ச்சிகள் அங்கங்கு.  “ஊழல், விலைவாசி உயர்வு, மக்கள்” என அக்கறையோடு பேசிய குரல்கள் சத்தமாய் எழவில்லை. “அமைதி, அமைதி”  என்று கறாராக குறிப்பிட்ட இடைவேளையில் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள் தேர்தல் கமிஷன்காரர்கள்.


ஆள் ஆளுக்குச் சத்தம் போட்டு பேச,  மிக்ஸியின் சத்தம்  போல ஒரே இரைச்சலாகக் கேட்கிறது. அரைபடுகிறது இந்திய ஜனநாயகம்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. http://www.virutcham.com/2011/03/வெளிநாட்டு-வாழ்-தமிழர்கள/

    வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஓடோடி தாயகம் வந்து விடவும்

    பதிலளிநீக்கு
  2. hard to digest but its true!!!!!

    people r behind money, freebies

    senthil, doha

    பதிலளிநீக்கு
  3. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குகொண்டாட்டம் தானே. நாசமாய் போகட்டும் "தமிழக பணநாயகம், அரசியல் கூத்தாடிகளின் ஆட்டங்கள்" இரண்டும் - நடக்குமா?

    பதிலளிநீக்கு
  4. \\ஆள் ஆளுக்குச் சத்தம் போட்டு பேச, மிக்ஸியின் சத்தம் போல ஒரே இரைச்சலாகக் கேட்கிறது. அரைபடுகிறது இந்திய ஜனநாயகம்.\\

    நிஜம்:-)))

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!