-->

முன்பக்கம் , � அரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை!

அரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை!

பதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்தது. தனிப்பட்ட அனுபவத்திலிருந்து அவரது பார்வை வெளிப்பட்டு இருந்த போதிலும் ஒரு பொதுவான சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவரது பதிவு இருந்தது நல்ல விஷயம். அந்தப் பதிவிற்கு வந்த பெரும்பாலான உரையாடல்கள் கருத்துரீதியான முரண்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தியதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பதிவுலகம் எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்பதற்கு அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையுமே நான் எந்தத் தயக்கமுமில்லாமல் சுட்டிக்காட்டுவேன். முதலில் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருபத்தைந்து வருட காலம் ஒரு அரசு வங்கி ஊழியனாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவனாகவும் இருப்பதால் நானும் சில கருத்துக்களைச் சொல்ல முடியும் என நினக்கிறேன். மேலும் இந்த தேசத்தின் ஒரு பிரஜை என்ற பிரக்ஞையும் இருக்கிறது. பதிவு எழுதப்பட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், ஏராளமான பின்னூட்டங்கள் ஏற்கனவே வந்திருப்பதாலும், அந்தப் பதிவு சம்பந்தமான என் கருத்துக்களை இங்குத் தனிப் பதிவிட வேண்டியதாகிவிட்டது. இதனை ‘எதிர்ப்பதிவு’ என்று யாரும் சொல்லாமல் இருப்பார்களாக. கருத்து முரண்பட்டு இருந்தாலும், உடன்பட்டு இருந்தாலும் ‘தொடர் பதிவு’ என்று அழைக்கலாமே.

இங்கே அரசு என்கிற பதத்தை ஊழியருக்கு வெறும் அடைமொழியாக மட்டுமே எடுத்துக்கொண்டு நாம் பார்க்கிறோம். அரசு என்றால் என்ன என்கிற தெளிவானப் புரிதலோடு நாம் இந்த ஊழியர்களை அணுகினால், இன்னும் சரியாக உண்மைகளின் பக்கம் செல்ல முடியும் என்றேத் தோன்றுகிறது. “ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு. அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தது. ஆனால் சமுதாயத்திலிருந்து மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது. சமுதாயத்திலிருந்து தன்னை மேலும் மேலும் அயலானாக்கிக் கொள்கிறது.” என்று மாமேதைகளில் ஒருவரான லெனின் சொல்கிறார். இவ்வகையான அரசின் குணாம்சங்களே அந்த ஊழியர்களுக்கு வந்து சேருகிறது. பீடித்து ஆட்டவும் செய்கிறது. நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். அருமையான அண்ணாக தம்பியாகவும்  இருப்பார்கள். ஆனால் ஊருக்குள் மோசமான ஒரு அரசு ஊழியராக கருதப்படுகிறார். இந்த இரசயான மாற்றம் இயல்பானதாகவா இருக்க முடியும்? எல்லாம் வல்ல அந்த அரசின் செயல்! எனவே முதலில் தனிப்பட்ட மனிதர்களின் தன்மையாக இவ்விஷயத்தைப் பார்க்காமல், அமைப்பின் கோளாறாக பார்ப்போமே.

இந்த அரசு என்பது எங்கே இருக்கிறது. இதுதான் என்று ஒரிடத்தைக் காட்ட முடியாது. சகல இடங்களிலும் அதன் கைகளும், நகங்களும் நீண்டு இருக்கின்றன. ஜாதிச் சான்றிதழ் வாங்கப் போனால் அங்கு தாசில்தார்தான் அரசு. ஒரு வாகனத்தை ஒட்ட ஆரம்பித்தால் ஆர்.டி.ஓ அலுவலகம் அரசு. தெருவுக்குள் இரண்டு பேருக்கு கைகலப்பும், தகராறும் வந்தால் காவல்துறை அரசு. குற்றம் சுமத்தப்பட்டால் நீதிமன்றமே அரசு. பயிர்க்கடனோ, கல்விக்கடனோ, வீட்டுக்கடனோ வாங்க நினைத்தால் வங்கியே அரசு. இப்படி அரசின் உபகரணங்கள் நாளெல்லாம் மக்கள் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன. மக்கள் அவைகளின் தயவுக்கு நிற்கிறார்கள். உள்ளுக்குள் வெறுப்பும், தவிப்புமாய் மக்கள் அந்தக் கட்டிடங்களுக்கு உள்ளேயும், வெளியேவும் காத்துக் கிடக்கிறார்கள். அவையெல்லாம் அங்கு நடமாடுகிற, உட்கார்ந்திருக்கிற மனிதர்கள் மீது படருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அரசின் முகமாக, அந்த நாற்காலியில் உட்கார்ந்து அலட்சியமாக பார்க்கும் ஊழியர் காட்சியளிக்கிறார்.

நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மனிதருக்குள் இருக்கும் உலகம் வேறு விதமானது. அரசின் அங்கம் என்கிற பெருமிதம் இருக்கிறது. திறமை இருந்தும் அடையாளம் காணப்படாமல், சிபாரிசுகளின் பேரில் நேற்று வந்தவன் மேல் பதவிகளுக்குச் சென்று கொண்டு இருக்கிறானே என்னும் வயிற்றெரிச்சல் இருக்கிறது. தினமும் இதே வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே என்கிற வெறுப்பு இருக்கிறது. இதற்கு முன்னர் வந்தவரிடம் பேசி, விளக்கமளித்ததையே அடுத்தவருக்கும் சொல்ல வேண்டியிருக்கிறதே என்னும் கடுப்பு இருக்கிறது. கடன்சுமைகள் பாரமாய் இருக்கிறது. இவையெல்லாவற்றோடும்தான் தன் எதிரே நிற்பவரை அந்த ஊழியர் பார்க்கிறார்.

இப்படி இந்த இருவரும் சந்தித்துக் கொள்கிற காட்சிகள், பல்வேறு சித்திரங்களாக, அவரவர் வண்ணங்களில் தீட்டப்படுகின்றன. அந்தச் சித்திரங்கள் பெரும்பாலானவற்றில் அரசு ஊழியருக்கு ஒளிவட்டம் தெரிகிறது. காட்சிப் பிழை அது. அரசுக்கு இருக்கும் ஒளிவட்டம் இவர்கள் பின்னால் வந்து தொற்றிக் கொண்டு இருக்கிறது. மொத்த விஷயங்களுக்குள்ளும் பொதிந்திருக்கிற பொதுவான உண்மை இது.

அடுத்து முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியது அரசு இயந்திரங்களில் கடைப்ப்டிக்கப்படும் கடுமையான விதிகள் (Hard rules). ஒரு சாதாரண விஷயத்திற்கும், ஏராளமான நிபந்தனைகள், நியதிகள் குறுக்கீடுகின்றன. சமீபத்தில் இன்னொரு வங்கியில் கடன்வாங்குவதற்கு எங்கள் வங்கியில் No objection Certificate வாங்க ஒரு சாமானியர்  இரண்டு நாள் அலைய வேண்டியதாயிற்று. சகல ரெக்கார்டுகளிலும் அந்த மனிதரின் பெயரும், ஊரும் இருக்கிறதா என ஆராய, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அந்த அவகாவம் தேவைப்பட்டது. அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளான அந்த மனிதர் கடும் வார்த்தைகளால், அந்த அலுவலரைத் திட்டினார். இது நடக்கிறது. ஆனால் எந்த விதத்திலும் அந்த அலுவலர் பொறுப்பல்ல. நிச்சயம் மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இந்த விதிகள் எளிதாக்கப்பட வேண்டும். அதே நேரம் கவனமும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறதே. உலகம் முழுவதும் வங்கிகள் பெரும் சரிவுகளுக்கு உள்ளான போது, இந்திய அரசு வங்கிகள் தாக்குப் பிடித்து நின்றதற்கும் இவ்வகையான Hard rules காரணம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து பல காலமாக புதிய பணி நியமனங்கள் அதிகமாக பொதுத்துறையில் இல்லாமலிருந்தது. எந்த ஒரு இடத்திலும் புதிய வெளிச்சமும், புதிய இரத்த ஓட்டமும் பாய்கிறபோதுதான் ஆரோக்கியமானச் சூழலையும் உற்சாகமான மனநிலையையும் உருவாக்கும். பார்த்த முகங்களையே பார்த்து, அலுத்து, வெறுத்து துருப்பிடித்துப் போய்க் கிடக்கின்றன அரசு அலுவலகங்கள். அங்குள்ள ஊழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்.

அரசு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் என்னும் பாதுகாப்பு இருக்கிறது, அதுதான் அவர்களை இத்தனை அலட்சியமாகவும், உதாசினமாகவும் மக்களிடம் நடந்து கொள்ள வைக்கிறது என்பது சரியானது அல்ல என நினைக்கிறேன். நினைத்த போது, ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்பது இன்று இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் அந்நியக் கம்பெனிகளின் கோரிக்கை. அதற்கேற்ப labor laws வசதியாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நிபந்தனை. எதிர்காலம் குறித்த பயத்தோடு  இருந்தால்தான், ஒழுங்காக வேலை செய்வார்கள் என்பது ஆபத்தானக் கருத்தாகவே படுகிறது. அது பாசிச சிந்தனையல்லவா. புரிதலோடும், சுதந்திரத்தோடும் தங்கள் பணியை ஊழியர்களை எப்படிச் செவ்வனே செய்ய வைப்பது என்றுதான் நாம் யோசித்தாக வேண்டும்.

இந்த ஊழியர்கள் sense of belongingness ஐ இழந்து நிற்பது இன்னொரு கோளாறு. நாம், நமது மக்கள், நமது பணி என்னும் உணர்வுகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ‘நமது’ என்பதைத் தொலைத்து விட்டதற்கும் நாம் மட்டும் காரணமல்ல. இந்த அமைப்புதான் காரணம். வசதியானவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் விதிகள் வளைக்கப்படுவதும், ஏய்த்துப் பிழைப்பவர்கள் அரசின் அனுசரனையோடு கவனிக்கப்படுவதும் ஒளிவு மறைவற்ற உண்மைகளாக இருக்கின்றன. இங்கு எப்படி இந்த அரசும், அமைப்பும் எல்லோருக்கும் சொந்தமானது என்ற நினைப்பு வரும்? யாருக்கோ வந்தது என்ற எண்ணம் மூளைக்குள் இயல்பாய் உட்கார்ந்து விடுகிறது.

இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது. அதுவே, அப்படியான மனிதர்களை மேலும் மேலும் உருவாக்கும்.  அரசின் இயந்திரத்துக்கு மனித முகத்தைக் கொண்டு வர செய்யும் பெரும் முயற்சியாக அது இருக்கும்.

தொழிற்சங்கங்களுக்கும் மிகப் பெரும் கடமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.  தங்கள் உரிமை, நலன், சலுகை குறித்து தொழிலாளர்களிடம் பேசும் இந்த அமைப்புகள் work culture  குறித்தும் பேச வேண்டும். இன்று தொழிற்சங்கங்களுக்கு உள்ள மிகப் பெரும் சவால்களில் இதுவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் “அரசு ஊழியர்களிடம் work culture வளர வேண்டும்” என்று சொன்னதற்கு, அம்மாநிலத்தில் பெரும் கண்டனங்கள் அரசு ஊழியர்களிடமிருந்து எழுந்தன. வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக்கிடக்கிறது. அதை அறிவின் தளத்துக்கு மாற்ற வேண்டிய போராட்டம் இது.

இன்னும் நிறைய சொல்லலாம். பதிவின் நீளம் கருதியும், உரையாடல்களுக்கான வெளியை விட்டும் இப்போது முடிக்கிறேன். பின்னூட்டங்களில் சந்திப்போம்.

*

Related Posts with Thumbnails

107 comments:

 1. வேறொரு கோணத்தில் இருந்து நல்ல பதிவு .ஆனாலும் எண்ணத்தை மாற்றக்கூடிய அளவுக்கு வலுவான வாதங்கள் இல்லை .அரசு /வங்கி ஊழியர்களிம் அராஜக /பொறுப்பற்ற /பணிவற்ற /சேவை என்பதை உணராத போக்குக்கு இந்த வக்காலத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாக இல்லை .

  ReplyDelete
 2. தாங்கள் எடுத்துள்ள நிலை ஆச்சர்யமளிக்கிறது

  RTO அலுவலகம் அல்லது Registrar அலுவலகம் சென்றால் நீங்கள் இந்த 'ஒளிவட்டத்தை' கண்ணார காணலாம்

  நான் சமீபத்தில் சென்ற krishnagiri State Bank Of India வில் இதை என்னால் காணமுடிந்தது
  அங்குள்ள சில அலுவலர்கள் வாடிக்கயாளர்களை நாயை விட கேவலமாக நடத்துவதை கண்டேன். வேலை அதிகம் - Rules அதிகம் - கூட்டம் அதிகம் - போன்றவை இவர்களுக்கு இது போல் நடக்கும் உரிமையை கொடுக்கவில்லை.
  சம்பளத்துக்கு அடிக்கடி strike நடத்தும் இவர்கள், இது போன்ற பிரச்சனைகளுக்கு என்றாவது strike நடத்தியதுண்டா?

  --anvarsha

  ReplyDelete
 3. //அரசு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் என்னும் பாதுகாப்பு இருக்கிறது, அதுதான் அவர்களை இத்தனை அலட்சியமாகவும், உதாசினமாகவும் மக்களிடம் நடந்து கொள்ள வைக்கிறது என்பது சரியானது அல்ல என நினைக்கிறேன்...//

  இதுவல்ல பிரச்சனை.. There is NO ACCOUNTABILITY. தாங்கள் செய்யும் அல்லது செய்யாத பணிக்கு அரசாங்க ஊழியர்களுக்கு பொறுப்பு என்பது சிறிதும் கிடையாது என்பதே என் கருத்து. இந்த பொறுப்பின்மை என்பேதே அரசாங்க உழியர்களுக்கு கவசம் போல..

  You may counter argue that the Government Servant shall need to undergo Departmental Enquiry, Memo etc.. But all these are just drama...

  ReplyDelete
 4. அரசோடு சேர்த்துதான் அரசு ஊழியர்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என நீங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  தனிப்பட்ட உதாரணங்கள் அல்லாது கருத்து ரீதியாக இந்த விவாதம் தொடருமானால் நல்லது.

  ReplyDelete
 5. //திறமை இருந்தும் அடையாளம் காணப்படாமல், சிபாரிசுகளின் பேரில் நேற்று வந்தவன் மேல் பதவிகளுக்குச் சென்று கொண்டு இருக்கிறானே என்னும் வயிற்றெரிச்சல் இருக்கிறது.//
  இந்த விஷயம் பொதுவானது,
  தனியார் கம்பெனிகளிலும் தங்களுக்கு
  வேண்டியவர்கள்,மேல் பதவிக்கு என்பது வாடிக்கை

  ReplyDelete
 6. // இந்த விதிகள் எளிதாக்கப்பட வேண்டும். //

  சம்பளம், வேலை நேரம், போனஸ் மற்றும் இத்யாதி இத்யாதிகளுக்கு போராட்டம் செய்யும் அரசாங்க ஊழியர்கள் இதற்கு ஏன் போராடுவதில்லை... ஊழியர்கள் அரசுக்கு பரிந்துரை செய்து இந்த விதிகளை நீக்கவோ / மாற்றவோ தடை ஏதும் உள்ளதா.. இருந்தால் விளக்கவும்... Please...

  ReplyDelete
 7. ஒரு சராசரி பொது ஜனப் பிரதிநிதியாய் வாசிக்கும்போது ஏற்றுக் கொள்ளும்படியான அழுத்தமான/வலுவான காரணங்கள் எதுவும் புலப்படவில்லை!

  சாதாரண சப்பைக்கட்டுகளாகவே தோன்றுகின்றன!

  சமீபத்தில் (மே மாதத்தில்தான்) நாமக்கல் இந்தியன் வங்கியில் சொந்த சேமிப்புக் கணக்க துவங்க விண்ணப்பம் கேட்டபோது வார்டு எண் என்னவென்று கேட்டார்கள்!
  என் வீடு இருக்கும் வார்டு எண்ணைச் சொன்னதும் சில குறிப்பிட்ட வார்டு எண்களுக்குள்தான் அங்கு வங்கிக் கணக்குத் துவங்க முடியும் என்று கூறினார்கள்!

  சேமிப்புக் கணக்கு துவங்க எந்த வார்டாக இருந்தாலென்ன என்ற எளிய கேள்வி எனக்கு எழாமலிலை! மேலும் வார்டுகள் பற்றிய வரையறை எதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றியும் சில நாட்களுக்கு முன்னர் (வேறு) ஒரு வங்கி ஊழியர் மூலம் அறிந்தே இருந்தேன்!

  ஆயினும் அந்த வங்கி ஊழியரிடன் விளக்கிச் சொல்லியும் வாதிட்டு வெல்ல இயலாது வெறுத்துப் போய் வெளியே வந்து நேர் எதிரில் இருந்த கரூர் வைஸ்யா வங்கியில் பத்தே நிமிடத்தில் வங்கிக் கணக்கைத் துவங்கிவிட்டு வெளியே வந்தேன்!

  இந்த மாதிரி அனுபவங்கள் ஒப்பீட்டு அளவில் அரசு வங்கி ஊழியர்களின் ஒளிவட்டமாகத்தான் தோன்றுமே ஒழிய அரசின் ஒளிவட்டமாக எண்ணத் தோன்றாது!

  ReplyDelete
 8. //கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அரசின் முகமாக, அந்த நாற்காலியில் உட்கார்ந்து அலட்சியமாக பார்க்கும் ஊழியர் காட்சியளிக்கிறார்//

  I think this point of view is incorrect... Why?

  சமீபத்தில், தமிழக அரசு.. துவக்கநிலை கல்வி பாடத்திட்டம் மற்றும் பயிற்றுவிக்கும் முறையை மாற்றி அமைத்தது... (Policy Change)

  இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமுல் படுத்துவதில் ஆசிரியர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை / ஒத்திப்போட்டு காலம் தாழ்த்திவருகிறது.. (Delay in Implementation)

  இங்கு அரசு மாற்றத்தை கொண்டு வந்தாலும், அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு என்பது கிடையாது... இழப்பு என்னவோ வழக்கம் போல் பொது மக்களுக்குத்தான்...

  ReplyDelete
 9. //இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது. //

  Totally Agreed Boss... I have met few Government Servants and really impressed with their services. I salute those who are working for PUBLIC.

  ReplyDelete
 10. //அரசு /வங்கி ஊழியர்களிம் அராஜக /பொறுப்பற்ற /பணிவற்ற /சேவை //

  குறைந்த பட்ச மனிதாபினமும் அற்ற என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!


  இன்னொரு நாள் நான் வங்கிக் கணக்குத் துவங்கிய பிறகு சென்றிருந்தேன்! (மீண்டும் வங்கி மேலாளரை அணுகி ஆங்கிலத்தில் கொஞ்சம் வேகமாகவே விளக்கிய(விளாசிய!?) பிறகு அவரே எல்லா சான்றிதழ்களையும் சரிபார்த்து கையொப்பமிட்டு கொடுத்து, அதன்பிறகும் ஒரு 2/3 நாட்கள் கழித்தே கணக்கு துவங்கப்பட்டது ஒரு வழியாய்)

  சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வித்ட்ராயல் ஸ்லிப்பில் கைநாட்டு வைத்து கொடுத்த ஒரு (70 வயதிற்கும் மேற்பட்ட) மூதாட்டியை குறைந்தது (எனக்குத் தெரிந்து) 3 முறை அலைக்கழித்தார்கள்!

  முதலில் வேறு நபரிடம் (சாட்சியாம், அதே வித்ட்ராயல் ஃபார்மில் இன்னொரு இடத்தில்) கையொப்பம் வாங்கி வரச் சொன்னார்கள்!

  நான் அந்த மூதாட்டிக்காகக் கையொப்பமிட்டுக் கொடுத்தேன்!

  பின்னர் மீண்டும் அந்த கையொப்பமிடும் நபர் அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்கள்!

  பின்னர் நான் என் வங்கிக் கணக்கு எண்ணையும் அதில் எழுதிக் கொடுத்தேன்! இம்முறை வேறு ஏதோ காரணம் சொல்லி அனுப்பியிருந்தார்கள்! பின்னர் இரண்டு மூன்று முறை ஒரு மேசையின் முன்னர் நின்று கொண்டிருந்த அந்த மூதாட்டியின் விண்ணப்பம் ஒரு வழியாக எப்படியோ ஆத்தரைஸ் செய்யப்பட்டு அவர் பணம் பெற்றுக் கொண்டு செல்வதற்குள் மதியமாகிவிட்டிருந்தது!
  :(

  ReplyDelete
 11. ஊழியர் ஒளிவட்டம் இருப்பதை மறுக்க முடியாது.
  சேவையை முன்னிறுத்தி நிறுவனத்தை வளர்க்க வேண்டிய நிர்பந்தம் அரசு ஊழியர்களுக்கு இல்லாதிருப்பதும் அதற்கான காரணமாய் இருக்கலாம்.

  ReplyDelete
 12. சுரேஷ் கண்ணன் பதிவு இன்னும் படிக்கவில்லை.

  /
  ஜோ/Joe said...
  அரசு /வங்கி ஊழியர்களிம் அராஜக /பொறுப்பற்ற /பணிவற்ற /சேவை என்பதை உணராத போக்குக்கு இந்த வக்காலத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாக இல்லை .
  /

  இதை வழிமொழிகிறேன்.

  வங்கித்துறையிலும், தொலைத்தொடர்பு துறையிலும் மிக நல்ல வேகமான மாற்றங்கள் வந்திருக்கின்றன ஏனென்றால் தனியாரும் அந்த துறையில் உள்ளதால்.

  ReplyDelete
 13. /
  பீர் | Peer said...

  ஊழியர் ஒளிவட்டம் இருப்பதை மறுக்க முடியாது.
  சேவையை முன்னிறுத்தி நிறுவனத்தை வளர்க்க வேண்டிய நிர்பந்தம் அரசு ஊழியர்களுக்கு இல்லாதிருப்பதும் அதற்கான காரணமாய் இருக்கலாம்.
  /

  அருமையான பாயிண்ட்!

  ReplyDelete
 14. //ஊழியர் ஒளிவட்டம் இருப்பதை மறுக்க முடியாது.
  சேவையை முன்னிறுத்தி நிறுவனத்தை வளர்க்க வேண்டிய நிர்பந்தம் அரசு ஊழியர்களுக்கு இல்லாதிருப்பதும் அதற்கான காரணமாய் இருக்கலாம்//

  அரசுத்துறையை ஊழியர்களையும் தனியார் துறை ஊழியர்களையும் ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக ஒப்பிடுடலாம்!

  சென்னை அல்லாத மற்ற ஊர்களில் உள்ளூர் போக்குவரத்திற்கு (டவுன் பஸ் சர்வீஸ்) மற்றும் வெளியூர்களுக்கும் கூட தனியார் பேருந்துகளும் ஓடுகின்றன!

  அரசுப் பேருந்துகளில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் நேரத்திற்கு(அதாவது தங்கள் இஷ்டத்திற்கு, பேருந்தின் நேரத்திற்கு அல்ல) ஓட்டுகிறார்கள்! அதிக பயணிகளை ஏற்றினால் அரசிற்கு வருமானம் என்பது பற்றியெல்லாம் எண்ணுவதில்லை! அதேபோல சில நிறுத்தங்களில் (நிறுத்தமே இல்லைதான்) மக்களின் வசதிக்காக(பெண்கள், முதியவர்கள்) இங்க கொஞ்சம் நிறுத்துங்க, இறங்கிக்கிறோம் என்றாலும் நிறுத்துவதில்லை! அதேபோல் சிலநிறுத்தங்களில் நிற்காமல் செல்வதும் உண்டு!

  தனியார் பேருந்துகளில் அவ்வாறு இல்லை என்பதை நன்கு வெளிப்படையாகவே காணலாம்!

  ஏனெனில் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு வசூல் எவ்வளவோ அதைப் பொறுத்து ஊதியம்! எனவே அவர்கள் ஒரு எல்லா நிறுத்தங்களில்/நிறுத்தங்கள் இல்லாத இடங்களிலும் கூட நிறுத்தியும் பயணிகளை ஏற்றிக் கொள்கின்றனர்!

  இதே போன்றதொரு மனநிலைதான் எல்லா அரசு அலுவலகங்களிலும் என்பது பொது மக்களின் பார்வையாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று எண்ணுகிறேன்!

  ReplyDelete
 15. மாதவராஜ் - உங்களின் பல கருத்துக்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அரசின் நியதியை மாற்றாமல் இருப்பதால் தான் நமது வங்கிகள் பொருளாதார சீர்குலைவை தாங்கியது என்பது இந்த பதிவிற்கு சரியானதாகப் படவில்லை. முறைகளை யாரும் தூக்கியெறிய சொல்லவில்லை. துரிதபடுத்தவேண்டும். அதற்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். அந்த மாற்றங்களை ஊழியர்கள் வரவேற்கும் அளவிற்கு யூனியன் மட்டும் அரசு செயல்பட வேண்டும்.

  பலரின் அனுபவங்கள் மோசமாக இருக்கும்போது கருத்துரீதியாக மட்டும் இதை சந்திக்க இயலாது.

  ReplyDelete
 16. எந்த அரசாங்க அலுவலகத்திலும் வேலை தவிர பிஸினஸ் அமர்களமாக நடக்கிறது.

  இன்ஷீயுரன்ஸ், மல்டி லெவல் மார்க்கெடிக்ங், துணி வியாபாரம், ரியல் எஸ்டேட். இவை தவிர சிம் கார்டு சேல்ஸ், சமையல் கேட்டரிங் என்று பல சைடு பிஸினஸ்களை வைத்து கொண்டு அரசாங்க வேலையை பொழுது போக்காகவே செய்யும் பல பேரை தெரியும்.

  சும்மா சப்பை கட்டு கட்டாதீர்கள்..

  அது தவிர அவனுங்க வாங்கும் லஞ்சம்...?? அப்பா..???

  ஒரு தாசில்தார் / RTO / Muncipal Special Officer சுமார் 3 வருடங்களில் ஒன்று முதல் இரண்டு கோடி சம்பாதிப்பார் என்கின்றனர் அதே துறையில் வேலை பார்க்கும் நண்பர்கள்..

  ReplyDelete
 17. மத்திய அரசின் R&E சென்டரில் இரு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். அங்கிருந்த hierarchy-உம், எல்லாவற்றுக்கும் ஆர்டருக்காகக் காத்திருப்பதும் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது.

  ReplyDelete
 18. இந்த பதிவே முட்டாள்தனமாகப்படுகிறது. ஒருவேளை நீங்கள் அரசு ஊழியராக இருந்திருப்பதால் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என நினைக்கிறேன். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இரண்டு விதம்.

  1. அலுவலக நடைமுறைகளில் இருக்கும் சில அபத்தமான விதிமுறைகள். இந்த விதிமுறைகளை எழுதியதே முந்தைய தலைமுறை அரசு ஊழியர்களே. காலமாற்றத்திற்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்கும் கடமை மேல்மட்டத்தில் இருக்கும் அரசு ஊழியரையே சேரும். அப்படி செய்யாமல் இருப்பது முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு/பல அரசு ஊழியரின் செயல்படாத்தன்மையே ஆகும்.
  2. ஊழல் அரசு ஊழியர்கள். அலுவலக நடைமுறைகள் என்னதான் பொதுமக்கள் நன்மை சார்ந்து இருந்தாலும் இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக முட்டுக்கட்டை போடுபவர்கள். பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊழல் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு காரியம் செய்பவர்களில் இருந்து பள்ளிக்கு வராமலே வந்ததாக கையேட்டில் பதியும் ஆசிரியர்கள் வரை அனைவரும் இவர்களில் அடக்கம்.

  இதற்கு ஒரேவழி, நேர்மையான செய்யும் வேலையில் பற்று கொண்டிருக்கும் நபர்களை அரசு அலுவல்களில் அமர்த்துவது ஒன்றே. பொதுமக்கள் விழிப்புணர்வு ஊழல்களை குறைப்பதில் முக்கியமான ஒன்றாகும். அதை விடுத்து அரசு வேறு அரசு ஊழியர்கள் வேறு என்று சப்பைக்கட்டு கட்டுவது எதற்கும் உபயோகமில்லாத வாதமாகவே எனக்குப் படுகிறது.

  ReplyDelete
 19. கல்வி முறையில் மாற்றம் கண்டிப்பாக வேண்டும் ஆனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றாமல் பயிற்றுவிக்கும் திட்டத்தை மட்டும் மாற்றினால் பயன் இருக்காதல்லவா ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என மாற்றப்பட வேண்டும் அதுவரையில் கல்வித்தரம் சரியில்லை என்று பேசுவது ஏமாற்றும் வேலை

  ReplyDelete
 20. It happened in velecherry Madras. One day me and few others waiting for a bus on one sunday night around 9 PM. The bus frequencies are very low and ofcourse the traffic is obsolete. A bus finally came and didnt stop in the bus stop and stopped a hundered meters away. We scurried, but old people
  couldnot board the bus as the bus started immediately. When I argued with the driver abt that he stopped the bus and said untill I getdown he is not going to drive. The conductor, driver and even the fellow passengers made me get down the bus even to say with bit of force. Whichh is very unfortunate. Thats how the govt officials work

  Sundar

  ReplyDelete
 21. இதுவரை வருகை தந்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

  நான் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லவில்லையோ என்று நினைக்கத் தோன்றினாலும், ஜ்யோவ்ராம் தனது பின்னூட்டத்தில் இந்த விஷயம் குறித்து தெளிவான ஒரு திசை சுட்டிக் காட்டியிருந்தார். இருப்பினும், திசை மாறி விவாதங்கள் சென்று கொண்டு இருப்பதாகவே கருதிகிறேன்.

  அரசு ஊழியர்களிடம் எந்தத் தவறும் இல்லை என்றெல்லாம் நான் வாதிட வரவில்லை. பிரச்சினை எங்கிருக்கிறது என்று ஆராய முற்படலாமே என்பதுதான் என் பதிவின் நோக்கம்.

  ஜோவுக்கு அரசு ஊழியர்கள் மீது மாற்ற முடியாத கருத்து இருக்கிறது. நாமக்கல் சிபிக்கும், சந்தனமுல்லைக்கும், அனானி நண்பருக்கும் அவர்களது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கருத்துக்கள் உருவாகி இருக்கின்றன. ரெங்கா ஊழியர்களுக்கு accountability இல்லையென்கிறார். அரசு அலுவலகங்களில் இருக்கும் கடுமையான விதிகளை ஏன் மாற்ற யாரும் முன் வரவில்லையென கேட்கிறார். அரசு ஊழியர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லையென்கிறார். தனியார் துறைகள் போட்டிக்கு வருவதால் அரசுத்துறை சிறப்பாக செயல்படும் வாய்ப்பிருப்பதாக மங்களூர் சிவா நம்புகிறார். prosaic என்பவர் பதிவே முட்டாள்தனமானது என்கிறார். பரவாயில்லை.

  ஒருவர், அரசு ஊழியர் ஆனவுடன் மட்டும் ஏன் இப்படி வெறுப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயமில்லையா?

  அரசு ஊழியர்கள் மீதான கருத்துக்கள் தொடர்ந்து நமது common sense-ல் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப அங்கங்கு நடக்கும் சம்பவங்கள், பொதுவான அனுபவங்களாகவும் அதிலிருந்து பொதுவான அபிப்பிராயங்களும் கட்டமைக்கப்படுகின்றன. அதுவே முழுமையான உண்மையாக முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் சட்டென்று கண்ணுக்குத் தெரியும் காட்சிக்குப் பின்னால், இருக்கும் உண்மைகளையும் பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

  இன்னும் ஆழமாக யோசிக்கலாமே....

  ReplyDelete
 22. //அரசு ஊழியர்கள் மீதான கருத்துக்கள் தொடர்ந்து நமது common sense-ல் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப அங்கங்கு நடக்கும் சம்பவங்கள், பொதுவான அனுபவங்களாகவும் அதிலிருந்து பொதுவான அபிப்பிராயங்களும் கட்டமைக்கப்படுகின்றன. அதுவே முழுமையான உண்மையாக முடிவுக்கு வந்து விடுகிறோம்.//

  நடக்கறதுதானங்க நம்ம காமன் சென்சுக்கு வருது! தான் பென்ஷன் அக்கவுண்ட் ஓப்பன் செஞ்சபோது அலைக்கழிக்கப் பட்டதா என் அப்பா எனக்கு சொன்னார்! ஒரு கிளினிக்ல அந்த வங்கி அலுவலரைப் பார்த்ததும் அவரை சுட்டிக் காட்டியே என்னிடத்தில் சொன்னார்!

  "ரொம்ப இடங்கேடு பிடிச்ச ஆளு"ன்னு! அனுபவம் இல்லாம சும்மாவே இட்டுக்கட்டி அவரைப் பத்தி சொல்ல என் அப்பாவுக்கென்ன அவசியம்! (இத்தனைக்கும் என் அப்பாவும் ஸ்டேட் கவர்மெண்டுதான், ஆசிரியர்) அவர் சுட்டிக்காட்டிய நபர் என் நண்பனோட அப்பா! நான் பேங்க்ல பார்த்ததை மத்தவங்ககிட்டே சொல்லுவேன்!

  சும்மாவே இதையெல்லாம் மத்தவங்ககிட்டே போயி சொல்லிகிட்டிருக்கறதுமில்லைங்க!
  இன்னிக்கு ஒருத்தர் பதிவு போட்டு புலம்பி இருக்காரா, நாமளும் போயி "ஆமாப்பா! எனக்கும் இப்படித்தான் ஆச்சு!"ன்னு ரெண்டு வார்த்தை சொல்றோம்! இப்படித்தான் எதிர்மறையான கருத்துக்கள் பரவுதே ஒழியா வலிய அடுத்தவங்க காமன் சென்சுக்குள்ளே கருத்துக்களை யாரும் நுழைக்கறதில்லே!

  ReplyDelete
 23. நாமக்கல் சிபி!

  //ஒருவர், அரசு ஊழியர் ஆனவுடன் மட்டும் ஏன் இப்படி வெறுப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயமில்லையா? //

  இதோடு சேர்த்து என் கருத்தைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 24. //ஒருவர், அரசு ஊழியர் ஆனவுடன் மட்டும் ஏன் இப்படி வெறுப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயமில்லையா?//

  அவர் அரசு ஊழியர் ஆனதும் ஏன் அப்படி மாறிவிட்டார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயம்! அதை அவராகத்தான் சொல்ல முடியுமே தவிர மற்றவர்கள் எப்படி ஊகிப்பது?

  ஓரிரு குறைந்த ஆவணங்களுடன் வங்கிக்கு ஒருவர் வருகிறார்! எதனால் அப்படிப்பட்ட குறைந்த ஆவணங்களுடன் வருகிறார் என்றெல்லாம் கண்டறிந்து வழிகாட்ட வங்கி ஊழியர்களுக்கு நிதானம் இருந்திருக்கிறதா?

  பிறகு பொதுமக்கள் மட்டும் ஒவ்வொரு முறை அலைக்கழிக்கப் படும்போது ஊழியர்களின் நிலைகுறித்தான காரண காரியங்களை ஆராய்ந்து கொண்டிருப்பார்களா?

  ReplyDelete
 25. //ஒருவர், அரசு ஊழியர் ஆனவுடன் மட்டும் ஏன் இப்படி வெறுப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயமில்லையா? //

  அந்த பார்வையில் யாராச்சும் வலுவா எடுத்து வைத்தால்தானே எங்களுக்கும் தெரியும்? சராசரி பொது ஜனமா எங்களுக்கும் புரியும்படியும் இருக்கணும் அல்லவா?

  ReplyDelete
 26. மாதவராஜ்,

  நீங்கள் அரசு ஊழியராகவும், சங்கத்தில் பொறுப்பிலும் (என்ன சங்கம் என்று எனக்கு தெரியாது, அவசியமும் இல்லை) இருப்பதால், இந்த பதிவே ஒரு சார்பானதாகவும், உங்கள் தரப்பின் டிஃபென்ஸ் ஆகவும் தான் தெரிகிறது...

  நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சினைகளும் தனியார் ஊழியர்களுக்கும் உண்டு...ஆனால், எத்தனை தனியார் துறை ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுகிறார்கள்?? நாய்களை விட கேவலமாக நடத்துகிறார்கள்?? ஊழியருக்கும், அவரது மேலதிகாரிக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்...அதை சரி செய்து கொள்ள வேண்டியது அவர்களது பிரச்சினை...என்னிடம் எரிந்து விழுந்தால் எப்படி??

  சென்னையிலிருந்து ஒரு முறை மதுரைக்கு சென்று கொண்டிருந்த போது திருச்சியில் கொஞ்ச நேரம் பஸ் நின்றது...அப்பொழுது மதுரையில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், போலீசுக்கும் தகராறு என்று திடீரென்று ஸ்ட்ரைக் அறிவித்தார்கள்...நின்று கொண்டிருந்த பேருந்தின் காற்றை இறக்கிவிட்டு அதை எடுக்க முடியாத படி செய்தார்கள்...அப்பொழுது நேரம் இரவு சுமார் ஒன்றரை இருக்கும்....காற்றை புடுங்கி விட்டது எல்லாம் அந்த பணிமனையில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள்...பஸ்ஸிலிருந்த பயணிகளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை...டிக்கட் பணமும் திருப்பி தரப்படவில்லை..."வேணும்னா பஸ் எடுக்கற வரை இருந்து இந்த பஸ்ஸிலேயே போ...காசெல்லாம் திருப்பி தரமுடியாது" இது தான் அவர்களின் பதில்.... அந்த நள்ளிரவில் பலரும் குழந்தை குட்டிகளுடன் திருச்சி பஸ் ஸ்டாண்டில் அலைந்தது காசு கொடுத்து பஸ் ஏறிய பொதுமக்களுக்கு அரசு ஊழியர்கள் அளித்த கொடை!

  இது சேவையா இல்லை ரவுடித் தனமா??

  இதே போலத் தான் அரசு வங்கியும்....கிட்டத்தட்ட ஏதோ பிச்சைக்காரனை போலத் தான் நடத்துகிறார்கள்...குறிப்பாக எஸ்பிஐ...இத்தனைக்கும் லோனுக்காக கூட இல்லை....டெபாஸிட் செய்ய சென்றாலே கேவலப்படுத்துகிறார்கள்...

  இதற்கெல்லாம் காரணம் நீங்கள் சொல்வது போல ஆரோக்கியமான சூழல் எட்செட்ரா எட்செட்ரா அல்ல....ஸிம்பிளான காரணம் இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது...மீறி நடவடிக்கை எடுத்தால் ஸ்ட்ரைக் அறிவித்து பல நாட்களுக்கு நாட்டையே ஸ்தம்பிக்க வைப்பார்கள்....வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் பணி மூப்பு படி ப்ரமோஷன், இன்க்ரிமென்ட், ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் ஊதிய உயர்வு...

  என்னை பொறுத்தவரை, இந்தியாவில் ஜனநாயகமும் இல்லை, பொது ஒழுக்கமும் இல்லை...அரசியல்வாதிகள் என்றொரு மாஃபியா, அவர்களுக்கு கையாளாக செயல்படும் இன்னொரு மாஃபியா என்று இரண்டு மாஃபியாக்கள் தான் உண்டு...இவை இரண்டுமே ஒன்றை சார்ந்து ஒன்று இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை...

  தனிநபர் ஒழுக்கத்தைப் பற்றி வாய்கிழிய பேசும் நாட்டில் தான் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது...அப்படியே எய்ட்ஸும்...

  உங்கள் பதிவில் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரே விஷயம்....அரசு ஊழியர்களிலும் நல்லவர்கள் உண்டு என்பதே...

  ReplyDelete
 27. //“சனிக்கிழமை அக்கவுண்ட் தொடங்கமாட்டோம். மற்ற நாள்களில் 2.30 மணிக்குள் வரவேண்டும்.” //

  இது அவர்களது விதி. இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள்

  நான் இரவு பத்து மணிக்கு வந்து உங்கள் கடையில் புத்தகம் வாங்க முடியுமா

  --

  “ஞாயிறு மதியம் கடை கிடையாது. மற்ற நாள்களில் 7.30 மணிக்குள் வரவேண்டும்.”

  “இல்லங்க, அதுக்குள்ள எனக்கு டூட்டி முடியாது.”

  “அதைப்பத்தி எங்களுக்குக் கவலையில்லை.”

  --

  இந்த உரையாடல் உங்கள் கடையில் நடந்தால் அது சேவைக்குறையா அல்லது பொறுப்பற்றத்தனமா அல்லது ஒளிவட்டமா

  --

  சனிக்கிழமை கணக்கு துவங்கும் வசதி என்பது ஒரு கூடுதல் வசதி.. enhancement.

  சனிக்கிழமை கணக்கு துவங்க மாட்டார்கள் என்பது குறை அல்ல. it is not a bug

  --

  எனக்கு தேவையான வசதி இல்லை என்பதற்காக அதை குறையாக கூறுவது சரியா

  --

  ஒரு சர்தார்ஜி ஜோக்

  சார் இதில் சன் டிவி தெரியவில்லை

  சார், இது ரேடியோ, பாட்டு மட்டும் தான் கேட்கலாம். படம் பார்க்க வேண்டுமென்றால் டிவி வாங்க வேண்டும்

  --

  எனவே டிவி என்று விற்கப்பட்ட பொருளில் படம் தெரியவில்லை என்றால் தான் அது தவறு

  ரேடியோவில் படம் தெரியவேண்டும் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு சரி
  ஆனால் அதற்காக (பட்ம் தெரியவில்லை) என்பதற்காக ரேடியோவை குறை கூற முடியாது

  --
  புரியும் படி விளக்கியுள்ளேன் என்று நினைக்கிறேன்

  சந்தேகம் இருந்தால் கேட்கவும்

  --

  அரசு துறைகளின் மேல் உள்ள 90 சதவித “குற்றச்சாட்டுகள்” இது போல் தான்

  தவறு இல்லை என்றாலும் கூட தங்களின் அதீத எதிர்பார்ப்பு நிறைவேறாததையே குறை என்று கூறுவது தான் பிரச்சனையின் ஆதாரம்

  ஒளிவட்டம் எங்கிருக்கிறது என்று இப்பொழுதுதாவது புரியும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 28. //இதுவல்ல பிரச்சனை.. There is NO ACCOUNTABILITY. தாங்கள் செய்யும் அல்லது செய்யாத பணிக்கு அரசாங்க ஊழியர்களுக்கு பொறுப்பு என்பது சிறிதும் கிடையாது என்பதே என் கருத்து.//

  முற்றிலும் தவறான கருத்து

  அவர்களுக்கு தனியார் ஊழியர்களை விட accountability அதிகம்

  ஆனால் அந்த accountability உங்களது அதீத எதிர்ப்பார்ப்பிற்கு எதிராக உள்ளது தான் பிரச்சனை

  உதாரணமாக

  நான் மேலே கூறிய புத்தகக்கடை உதாரணத்தில்

  அது தனியார் புத்தகக்கடை என்றால் கடை முடிய பின்னர் அந்த கடைப்பணியாளர் ஒரு புத்தகத்தை எடுத்து பில் போட்டு விற்றகலாம்

  ஆனால் 5 மணிக்கு பிறகு வங்கியில் ஒரு transaction தன்னிச்சையாக நடக்க முடியாது

  // இந்த பொறுப்பின்மை என்பேதே அரசாங்க உழியர்களுக்கு கவசம் போல.. //

  இல்லை

  பிரச்சனை உங்களது அதீத எதிர்ப்பார்ப்பு தான்

  ReplyDelete
 29. //You may counter argue that the Government Servant shall need to undergo Departmental Enquiry, Memo etc.. But all these are just drama...//

  இல்லை

  அது டிராமா இல்லை

  ஆனால்

  5 மணியுடன் பணி முடிவடையும் வங்கியில் 5:05க்கு ஒரு வாடிக்கையாளர் வந்தால்

  அவருக்கு பணம் மறுக்கும் ஊழியருக்கு மெமோ அளிக்கப்படுவது கிடையாது

  அவருக்கு பணம் கொடுக்கும் ஊழியருக்கு தான் மெமோ அளிக்கப்படும்

  இது உங்களுக்கு தவறாக தோன்றுவதற்கு காரணம் உங்கள் அறியாமை என்பதை தவிர வேறு ஒன்றும் கூறுவதற்கில்லை

  ReplyDelete
 30. //சம்பளம், வேலை நேரம், போனஸ் மற்றும் இத்யாதி இத்யாதிகளுக்கு போராட்டம் செய்யும் அரசாங்க ஊழியர்கள் இதற்கு ஏன் போராடுவதில்லை... ஊழியர்கள் அரசுக்கு பரிந்துரை செய்து இந்த விதிகளை நீக்கவோ / மாற்றவோ தடை ஏதும் உள்ளதா.. இருந்தால் விளக்கவும்... Please.//

  காரணம் அதில் பல விதிகள் பொது நலன் கருதியே உருவாக்கப்படுபவை

  அவற்றை நீக்கினால் ஆபத்து அதிகம்

  --

  ReplyDelete
 31. //இந்த மாதிரி அனுபவங்கள் ஒப்பீட்டு அளவில் அரசு வங்கி ஊழியர்களின் ஒளிவட்டமாகத்தான் தோன்றுமே ஒழிய அரசின் ஒளிவட்டமாக எண்ணத் தோன்றாது!//

  அதாவது அந்த விதியை உருவாக்கியவர் அந்த ஊழியரே என்ற உங்களின் தவறான புரிதலை உங்களை உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்க வைக்கிறது :) :) :)

  ReplyDelete
 32. //இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது. //

  குறை இல்லாவிட்டால் கூட குறை என்று நீட்டி முழங்கி பதிவு எழுதுபவர்கள் இது வரை எத்தனை முறை பாராட்டி உள்ளார்கள் என்று பார்த்தால் வரும் விடை என்ன

  ReplyDelete
 33. //அந்த பார்வையில் யாராச்சும் வலுவா எடுத்து வைத்தால்தானே எங்களுக்கும் தெரியும்? சராசரி பொது ஜனமா எங்களுக்கும் புரியும்படியும் இருக்கணும் அல்லவா?//

  என் கருத்துக்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்

  மற்றப்படி

  அதிக சம்பளத்துடன் கூடிய நிலையில்லா வேலையில் இருக்கும் அனைவருக்கும், பொருளாதார தேக்க நிலை நேரத்தில் அரசு ஊழியர்களின் மேல் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே :) :) :)

  ReplyDelete
 34. சமீபத்தில் ஒரு பெண்பதிவர் ஒரு பதிவு போட்டிருந்தார்

  ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி கிளம்பும் படத்தை எடுத்து கார்டு தூங்குகிறார் என்று ஒரு அபாண்டத்தை கிளப்பியிருந்தார்

  வழக்கம் போல் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் அங்கும் சென்று அரசு ஊழியர்களை திட்டி தீர்த்தனர்.

  நடைமேதையில் உட்கார்ந்து இருப்பவர் கார்டு அல்ல. கார்டு கடைசி பெட்டியில் இருப்பார். கொடி காட்டியவர் அந்த பணிக்கு உரியவர் என்று நான் சுட்டி காட்டியவுடன் அந்த பதிவு அழிக்க்பட்டது

  ஏற்கனவே எழுதிய அபாண்டங்களுக்கு மன்னிப்பு இல்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு மறுப்பு கூட இல்லை

  இப்படி ஒழுங்காக நடக்கும் சம்பவங்களை கூட குறையாக கூறுவது ஏன் என்று நாமக்கல் சிபி போன்றவர்கள் தான் கூற வேண்டும்

  ReplyDelete
 35. அடுத்த உதாரணம்

  http://manam-anandrey.blogspot.com/2009/06/blog-post_04.html

  --

  தன் பணியை ஒழுங்காக செய்யும் ஒரு அரசு ஊழியரை திட்டி ஒரு இடுகை

  அதற்கும் சில அரவேற்காட்டு வயிற்றெரிச்சல்காரர்களின் பக்கவாத்தியம்

  http://manam-anandrey.blogspot.com/2009/06/blog-post_04.html படித்தால் உங்களுக்கு புரியும்

  --

  நான் கூற வருவது இது தான் : பல இடங்களில் உங்களது அதிக அதீத எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது தான் உங்களுக்கு குறையாக தெரிகிறதே தவிர, உண்மையில் பிரச்சனையின் சதவிதம் மிக குறைவே

  --

  இப்படி நீங்கள் எதற்கெடுத்தாலும் (தவறு இல்லை என்றால் கூட) குறை கூறுவதால், உண்மையான குறையை சுட்டிகாட்டும்போது அதை கவனிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது

  --

  ReplyDelete
 36. //ஒருவர், அரசு ஊழியர் ஆனவுடன் மட்டும் ஏன் இப்படி வெறுப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார் என்பது கண்டறியப்பட வேண்டிய விஷயமில்லையா?//

  http://manam-anandrey.blogspot.com/2009/06/blog-post_04.html பாருங்கள்

  //கிராமத்து சூழலில் வளர்ந்த அவர்கள், இந்த டிக்கெட்டை சொந்தக்காரர் ஒருவர் எடுத்து தந்ததாகவும், இதில் பிரச்சினை வராது என்று அவர் கூறியதால் தான் வந்ததாகவும் கூறினர்.//

  இதில் அந்த சொந்தக்காரர் பற்றி ஒரு வரி கூட கூறாமல் நேர்மையாக தனது பணியை செய்த பரிசோதகரை மட்டும் திட்டும் உளவியல் என்ன ???

  புரிகிறதா :) :) :)

  ReplyDelete
 37. அன்புள்ள மாதவராஜ்,

  'தொடர்பதிவு' எழுதியமைக்கு நன்றி. (எதிர்பதிவு என்பதை விட இந்தத் சொல்லாடலே நயமாகவும் சிநேகமாகவும் இருக்கிறது). நன்றாகவே எழுதியிருந்தீர்கள். ஆனால்..

  லெனினை மேற்கோள்காட்டி 'அமைப்பு' இப்படி இருக்கிற போது அதைச் சார்ந்திருக்கிறவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்' என்று மிகச் செளகரியமாக அரசு ஊழியர்களுக்குச் சாதகமான வார்த்தைகளை உங்கள் பதிவின் சில பகுதிகள் உரையாடுகிறதோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  குறிப்பிடத்தக்க நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அரசு ஊழியர்களை நான் மறுக்கவில்லை.அவர்கள் பாராட்டப்படவே வேண்டும். ஆனால் பெரும்பான்மையான சதவீதத்தைப் பற்றித்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அரசையும் ஊழியர்களையும் செளகரியமாக பிரித்துவிட்டு இதை கருத்து ரீதியாக உரையாடுவது 'அறிவுஜீவிகள்'தங்களின் மேதமையைக் காட்டுவதற்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர சொல்லப்படுவது சாதாரண மக்களிடம் சென்று சேராது. ஏனெனில் இது சாதாரண மக்களின் பிரச்சினையும் கூட.

  என்னுடைய ஆதாரமான சந்தேகம் என்னவென்றால் எல்லாவித சமூகக் கோபங்களுடன் இருக்கும் ஒரு பொதுவான இளைஞன் அரசுப் பணிக்குப் போனவுடன் எப்படி அந்த அமைப்பின் அலட்சிய மனோபாவத்தையும் மந்தத்தனத்தையும் ஊழலையும் ஜீரணித்துக் கொண்டு அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறானே? எப்படி இந்த உருமாற்றம் ஏற்படுகிறது? அவனும் பொதுமக்களில் ஒருவனாக அரசு ஊழியர்களின் சேவைக் குறைபாட்டினால் எரி்ச்சல் அடைந்தவன்தானே? இதைத்தான் நான் ஆராய விரும்புகிறேன். பொதுமக்களின் பார்வையைவிட அரசு ஊழியர்களின் பார்வையையே நான் பெரிதும் அறிய விரும்புகிறேன். இதை அவர்களால்தான் சரியாக கூற முடியும் என நம்புகிறேன். இதற்கு தீர்வையும் அவர்கள்தான் முன்வைக்க முடியும் என்றும் தோன்றுகிறது.

  ReplyDelete
 38. //ஜோவுக்கு அரசு ஊழியர்கள் மீது மாற்ற முடியாத கருத்து இருக்கிறது//

  அது ஒன்றும் தனிப்பட்ட காழ்ப்பு அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ..என் தாய் ,தந்தை இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள்.

  ReplyDelete
 39. நாமக்கல் சிபிஅரசு ஊழியர்கள் மீது வெறுப்பு வருவதற்கு வலுவான காரணங்கள் என்பது எடுக்கப்படவில்லை என்கிறார்.

  தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருக்கும் அரசு ஊழியர்கள், அவர்களது இருக்கைகளில் அமர்ந்து இருக்கும்போது ஏன் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் ஆளாகிறார்கள் என்பதில்தான் இந்த அமைப்பின் கோளாறு இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த இருக்கைகளுக்குள் என்ன பிசாசு ஒளிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் மோசமானாவர்களா, அந்த இருக்கைகள் மோசமானதா என்பதே பிரச்சினை.அதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.

  அதுசரி அவர்கள் //என்னை பொறுத்தவரை, இந்தியாவில் ஜனநாயகமும் இல்லை, பொது ஒழுக்கமும் இல்லை..// என்று சொல்கிறார். இது ஒரு முக்கியமான விஷயமாகவேப் படுகிறது. பொதுவெளியில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. நாம் அனைவரும் அதைக் கடைப் பிடிக்கிறோமா? எல்லோருக்குள்ளுமே இருக்கிற மனோபாவங்கள்தானே இவை. சிகரெட் கம்பெனிகளுக்குத் தடை விதிக்கப்படாமல், சிகரெட் பிடிக்க மட்டும் தடை விதித்தால் இப்படித்தான் மிறல்கள் நடக்கும். அரசின் லட்சணங்களே அரசு ஊழியரின் லட்சணமாகவும் இருக்கும்.

  புருனோ அவர்கள், பல விஷயங்களை முன்னிறுத்துகிறார். அரசு ஊழியர்கள் எந்தச் சூழலில் இருக்கிறார்கள் என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அரசு உழியர்கள் மீது எத்தனை எளிதாக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனாலும் தவறு நடக்கிறது. ஏனென்றால் இங்கு தலைகளேச் சரியில்லை. ஒழுக்கம் என்பது கிழிழுது மேல் நோக்கிச் செல்லக் கூடியது அல்ல. மேலிருந்துதான் கீழ் நோக்கி பரவும். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி! எனவே தனிப்பட்ட முறையில், நாம் நேரடியாக சந்திக்கும் அரசு ஊழியர்களை மட்டும் முழுப் பொறுப்பாக்குவது எப்படிச் சரியாய் இருக்கும்.

  சுரேஷ் கண்ணன்!
  தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. அறிவுஜீவிகளின் மேதமையைக் காட்டுவதற்காக நான் எதுவும் சொல்லவில்லை என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். நீங்கள் சொல்வது போல் இதைச் சாதாரண மக்களின் பிரச்சினையாகவும், அவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம்தான் என்னுடையதும்.
  //என்னுடைய ஆதாரமான சந்தேகம் என்னவென்றால் எல்லாவித சமூகக் கோபங்களுடன் இருக்கும் ஒரு பொதுவான இளைஞன் அரசுப் பணிக்குப் போனவுடன் எப்படி அந்த அமைப்பின் அலட்சிய மனோபாவத்தையும் மந்தத்தனத்தையும் ஊழலையும் ஜீரணித்துக் கொண்டு அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறானே? எப்படி இந்த உருமாற்றம் ஏற்படுகிறது? //
  இதேக் கேள்விதான் என்னுடையதும். அதைத்தான் நான் இந்த அரசில் இருக்கும் கோளாறு என்கிறேன். அமைப்பின் கோளாறு என்கிறேன்.

  இன்னும் யோசிப்போம்.

  ReplyDelete
 40. ///“சனிக்கிழமை அக்கவுண்ட் தொடங்கமாட்டோம். மற்ற நாள்களில் 2.30 மணிக்குள் வரவேண்டும்.” //

  இது அவர்களது விதி. இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள்

  நான் இரவு பத்து மணிக்கு வந்து உங்கள் கடையில் புத்தகம் வாங்க முடியுமா

  --

  “ஞாயிறு மதியம் கடை கிடையாது. மற்ற நாள்களில் 7.30 மணிக்குள் வரவேண்டும்.”

  “இல்லங்க, அதுக்குள்ள எனக்கு டூட்டி முடியாது.”

  “அதைப்பத்தி எங்களுக்குக் கவலையில்லை.”
  //

  ஒரு கணக்கு துவங்குவதற்கும், கடையில் பொருள் வாங்கும் டிரான்ஷாக்சனுக்கும் ஒப்பிடுவது சரியல்ல புருனோ சார்!

  சனிக்கிழமை 5.05 மணிக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்யனும் வந்தாருன்னா அவரிடம் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து முறையாக நிரப்பிக்கொண்டு, தேவையான ஆவணங்களுடன் (என்னென்ன வேண்டும் என்று சொல்லி) மீண்டும் திங்கள் அன்று காலை வாருங்கள் என்று சொல்லலாம் அல்லவா!
  எங்கெங்கே கையொப்பம் இடவேண்டுமோ அதையெல்லாம் சொல்லிவிட்டால் பிறகு அதே நபர் கூட வரவேண்டிய அவசியம் இருக்காது! வேறு நபர் மூலமாகவும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் கொண்டுவந்து சேர்க்க முடியும் அல்லவா?

  அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வந்தவர் அன்றே 5000 ரூபாய் டெபாசிட் செய்து, 2500 ரூபாய் வித்ட்ராயலா செய்யணும் என்றா கேட்கிறார்!

  ReplyDelete
 41. விச்சுJuly 14, 2009 at 10:49 AM

  புரூனோ,

  சுயதொழில் செய்து அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தே ஒழிந்த பலரை எனக்கு தெரியும்.பத்திரபதிவு ஆபிஸுக்கு போய்பார்த்தால் லஞ்சம் எப்படி தாண்டவமாடுகிறது என்பது தெரியும்.ஏழைபாழைகளின் வயிற்றில் அடித்து லஞ்சபணம் சேர்க்கும் இந்த மிருகங்களுக்கு அரசு வேலை ஒரு கேடு.

  சனிக்கிழமை அக்கவுண்டு தொடங்கமாட்டேன் என்று சொல்வார்கள்.அப்புறம் மாமூலை வெட்டுனா அக்கவுண்டு ஓப்பன் பண்ணி தருகிறேன் என்பார்கள்.அட அவ்வளவு ஏன்?லஞ்சம் கிடைக்கிறார்போல் இருந்தால் ஞாயிற்றுகிழமை வீட்டுக்கு வந்து கூட அகவுண்ட் ஓப்பன் செய்வார்கள்.

  தீபாவளியானா நோட்டுபுத்தகத்தை எடுத்துகிட்டு கரண்ட் ஆபிஸில் இருந்து கடைகளுக்கு வசூலுக்கு வருவார்கள்.தரலைன்னா கரண்டு கட்டு ஆகும்னு எல்லா முதலாளிக்கும் தெரியும்.

  ReplyDelete
 42. சிலர் லஞ்சத்தைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். பலர் தனியார் துறையோடு அரசு நிறுவனங்களை ஒப்பிடுகிறார்கள். அதே மாதிரி இந்த விஷயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன் - தனியார் துறையும் ஒன்றும் சோடை போனதில்லை. தனியார் நிறுவனங்களில் பர்சேஸ் டிபார்ட்மெண்டில் இருப்பவர்களும் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்டில் இருப்பவர்களும் இது குறித்து இன்னும் தெளிவாக விளக்கலாம்!

  ReplyDelete
 43. எல்லாரும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைச் சொல்வதால் நானும் சொல்கிறேன் :

  ஐசிஐசிஐ வங்கியில் பணம் எடுக்க செக் கொடுத்தால் குறைந்தது 1-1/2 மணிநேரம் ஆகிறது (சென்னை பாரிமுனைக் கிளையில்). ஆனால் அரசு வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 15 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது இவ்வேலை. என்னுடைய அனுபவத்தில் அரசு வங்கிகளே தரமான சேவையைக் குறைந்த கட்டணத்திற்குத் தருகின்றன.

  ReplyDelete
 44. தனியார் துறையில் கஸ்டமர்களிடம் லஞ்சம் வாங்குவதில்லை.லஞ்சம் வாங்கியது தெரிந்தால் நிருபனம் எல்லாம் வேண்டியதில்லை. வாங்கினார் என்று முதலாளிக்கு சந்தேகம் வந்தாலே வேலை காலி.

  அரசு ஊழியர்கள் ஆபிசுக்கு வரும் பிச்சைகாரிகளிடம் கூட லஞ்சம் வாங்காமல் விடமாட்டார்கள்.

  ReplyDelete
 45. இது ஈமெயில் ஃபாலோ அப்க்காக!

  ReplyDelete
 46. /அதிக சம்பளத்துடன் கூடிய நிலையில்லா வேலையில் இருக்கும் அனைவருக்கும், பொருளாதார தேக்க நிலை நேரத்தில் அரசு ஊழியர்களின் மேல் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே :) :) :)/

  :))
  இதுக்கு நான் விளக்கம் சொல்ல விரும்பவில்லை புருனோ சார்! யாராச்சும் சொன்னா பார்த்துக்கலாம்!
  ஆனா புரிஞ்சிகிட்டது ஒரே வார்த்தைல "அரசு ஊழியர்களைப் பார்த்து மத்தவங்களுக்கு வயித்தெரிச்சல்னு சொல்றீங்க" அப்படித்தானே! :) :) :)

  ReplyDelete
 47. //
  நான் கூற வருவது இது தான் : பல இடங்களில் உங்களது அதிக அதீத எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது தான் உங்களுக்கு குறையாக தெரிகிறதே தவிர, உண்மையில் பிரச்சனையின் சதவிதம் மிக குறைவே//

  புரூனோ,

  பொதுமக்கள் தம்மை மனிதர்களாக அரசு ஊழியர்கள் நடத்தவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்க ஆபிஸில் காசு கொடுத்தால் ஒரு விதி.காசு கொடுக்கலைன்னா இன்னொரு விதி.நான் லைன்சென்ஸ் எடுக்க போனப்ப புரோக்கர் மூலமா போனதால் ஒரே நாளில் லைன்சென்ஸ் கிடைத்தது.முறைப்படி வந்து அரசாங்கம் சொன்ன கட்டணத்தை மட்டும் கட்டிய ஒருத்தனை மூணுநாள் வரசொல்லி வெயிட் செய்யவைத்து அதன்பின் லைன்சென்ஸ் கொடுத்தார்கள்.

  அரசு ஊழியர்களின் விதிகள் எல்லாம் செலக்டிவாக அப்ளை செய்யப்படும்.டேபிளுக்கு அடியில் பணம் போக,போக விதிகள் வீட்டு நாயா மாறி உங்களிடம் வாலாட்டும். இல்லையென்றால் அதே விதிகள் உங்களை கடித்துகுதறும்.

  (அரசு ஊழியரை பார்த்து எனக்கு பொறாமை என கூறவேண்டாம். எனக்கு அவர்களை விட பலமடங்கு வருமானம் அதிகம்.நேர்மையாக உழைத்து சம்பாதித்த வருமானம் தான்)

  மாதவராஜ்,

  அப்பாவி இளைஞன் ஏன் அரசு ஊழியனானதும் மக்கள்விரோதியாக மாறுகிரான்?

  லஞ்சம்..அது மூலம் கிடைக்கும் அதிகவருமானம்.கூட வேலை செய்த சீனியர்கள் எல்லாம் கார்,பங்களா என இருப்பதை பார்த்து வரும் பேராசை.அதுதான் மக்களில் ஒருவனாக இருந்த அரசு ஊழியனை மக்கள் விரோதியாக மாற்றுகிறது

  ReplyDelete
 48. புருனோ சார்.. I always respect your debating skills... but I can not engage K.K.Venugopal or Parasaran for this debate... :)) ok. with due respect let me explain again..

  மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அரசாங்கம் சில நிறுவனங்களை (Institutions) நிறுவி மக்களுக்கு சேவை செய்திட ஊழியர்களை நியமனம் செய்கிறது.. இதில் அரசாங்கத்தின் திட்டங்களையும், சேவைகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்பது ஊழியர்களின் பொறுப்பு. இந்தியா மாதிரியான நாட்டில் அரசாங்க ஊழியர்களின் பங்கு மகத்தானது. நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் எல்லாம் அரசாங்க ஊழியர்களின் சேவையில் மட்டுமே உள்ளதாக நான் நம்புகிறேன். Classic Example: Eradication of smallpox in India. This was just an amazing achievement by Government Servants (not only by health officials but also supported by other departments)..

  என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம்.. ஒரு அரசு / அமைச்சர் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்தால் அதை அரசு ஊழியர்கள் ஒத்துழைத்து அத்திட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டியது கடமை.. அதை விடுத்து காலாவதியான / காலத்திற்கு ஒவ்வாத சட்ட திட்டங்களை காரணம் காட்டி அத்திட்டத்தை தோல்வியுற செய்வது என்பது மொத்த சமுதாயத்திற்கும் இழப்பே..

  பல விதிகள் பொது நலன் கருதியே உள்ளது என்றாலும், அந்த விதிகளின் குறையால் ஒரு அரசாங்க ஊழியரின் செயல் திறன் மற்றும் உற்பத்தி திறன் (productivity) குறையும் என்றால் அதை சுட்டிக்காட்டி, விதிகளை மாற்றுவதில் என்ன சங்கடம் என்று எனக்கு புரியவில்லை.. சட்டங்களுக்காக மனிதர்களா அல்லது மனிதர்களுக்காக சட்டங்களா?

  குறிப்பு 1 : நான் 6 வருடங்கள் "Land Acquisition Officer" ஆக இந்தியாவின் பல மாநிலங்களில், பல மாநில மற்றும் மத்திய அரசாங்க ஊழியர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளவில்லை.. அப்படி குறை சொன்னால் அது தனி மனித அனுபவமாகத்தான் இருக்கும்.. என்னுடைய அனுபவங்களை மட்டும் அடிப்படையாக வைத்து அரசாங்க ஊழியர்களை மதிப்பீடு செய்ய விரும்பவில்லை.

  குறிப்பு 2 : அரசாங்க ஊழியர்களையும் தனியார் ஊழியர்களையும் ஒப்பீடு செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தாலுக்கா அலுவலகங்களை தனியாரிடமா விட முடியும்?

  குறிப்பு 3 : லஞ்சம் மற்றும் நேர்மையின்மை என்ற வாதம் இந்த பதிவிற்கு சற்றும் தேவையில்லாத விஷயம். தனியார் துறையிலும் இந்த லஞ்சம் etc.. எல்லாம் சகஜம்..

  ReplyDelete
 49. //ஏழைபாழைகளின் வயிற்றில் அடித்து லஞ்சபணம் சேர்க்கும் இந்த மிருகங்களுக்கு அரசு வேலை ஒரு கேடு//.

  அற்புதம்.

  இந்த மிருகங்கள்தான் உமக்கு பிறப்பு சான்றிதல் வழங்கியதா? ( வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாரென்று)

  இந்த மிருகங்கள்தான் உமக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதா? உம்மை போலியோவிலிருந்து காப்பற்றியதா? (வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாரென்று)


  இந்த மிருகங்கள்தான் உமக்கு பத்தாம் வகுப்பு சான்றிதல் வழங்கியதா? (வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாரென்று)


  இந்த மிருகங்கள்தான் உமக்கு உங்கள் ஜாதி சான்றிதலும் வழங்கியதா?( வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாரென்று)


  இந்த மிருகங்கள்தான் உம்முடைய கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதலை வழங்கியதா? அதற்கு எவ்வளவு கோடி கொட்டி கொடுத்தீர்?
  (உங்களுக்கே தெரியும் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தீரென்று)

  இந்த மிருகங்கள்தான் உம்முடைய கல்லூரியில் சேர்வதற்கு பணம் பிடுங்கியதா? தனியாரில் படித்திருந்தால் நீர் அள்ளிக் கொடுத்திருப்பீர், (அதன் பெயர் நன் கொடை அது கொள்ளை அல்ல). அரசில் படித்திருந்தால் கிள்ளிக்கொடுத்திருப்பீர்,.. (கிள்ளிக் கொடுத்தல் வைபவத்திற்கு எவ்வளவு கோடி செலவானது, அதில் எவ்வளவு கோடி கள்ளத்தனமாக கொடுத்தீர்)

  இந்த மிருகங்கள்தான் உமது பல்கலைகழக சான்றிதலை வழங்கியதா (இதற்கும் நீர் காசு கொடுத்திருந்தால் முறையான வழியில்தான் பட்டபடிப்பை முடிக்கவில்லை என அர்த்தம்)

  சரி இந்த முறை ஓட்டு போட்டீரா? இல்லையென்றால் உம்மை பற்றி பேசுவது தண்டம், ஆமாம் என்றால் நீ ஓட்டுப் போட்டதால் அமைச்சரானவன் எப்படி கோடி ரூபாய் சம்பாரித்தான். அவன் தான் அரசை நடத்துபவன், அவனிற்கு கீழ்தான் அரசு ஊழியன் வருகிறான். தவறான ஆளை தேர்வு செய்ததது யார்.?? ஆட்காட்டி விரலை நீர அடுத்தவரின் முன் காட்டும் முன் கட்டைவிரல் உம்மை காட்டிவிட்டுதான் மேலெழும்பும்.

  ReplyDelete
 50. //அரசு ஊழியரை பார்த்து எனக்கு பொறாமை என கூறவேண்டாம். எனக்கு அவர்களை விட பலமடங்கு வருமானம் அதிகம்.நேர்மையாக உழைத்து சம்பாதித்த வருமானம் தான்//

  ஒரு முறை நீர் IAS அலுவலர் முதன்மை தேர்வு எழுதிவிட்டு, பின் மக்கள் சேவையை பற்றி வாய் கிழிய பேசும். அப்போது சொல்லும், நீங்கள் வாங்கும் சம்பளம் IAS அலுவலர் சம்பளத்தை வாங்குவதை விட பல மடங்கு அதிகம் என்று. இப்போது நீரே சொல்லுவீர் உமக்கு வழங்கும் சம்பளம் ஒர்த்தா என்று.

  மக்கள் சேவை உமக்கு சாதாரணமாய் போய்விட்டது.

  காலையில் 7 மணிக்கு போய் மதியம் 3 மணிக்கு சாப்பிடாமல் வேலை செய்து வரும் அரசு ஊழியரை பார்க்க வேண்டுமா? கீழ்பாக்கம், ஸ்டான்லி, செண்ட்ரல் எந்த மருத்துவமனையும் போய் பாருங்கள். காலையிலிருந்து ஆரம்பித்து மாலை வரை ஆப்ரேஷன் தியெட்டரில் நிற்கும் டாக்டரையும் (பல நாள் மதியம் சாப்பிடாமல் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாங்கி ஒரு ஏழைக்கு உயிர் கொடுக்கும் அவனையும் உம்மையும் ஒப்பிட சொல்லுகிறீரா?

  24 மணி நேரமும் எல்லையில் நின்று அன்னிய சக்திகளிடமிருந்து உம்மையும், என்னையும், நம் அனைவரையும் காக்கும் அரசு ஊழியனை பார்க்க வேண்டுமா? காஷ்மீருக்கு போங்கள். அனுபவிக்க வேண்டிய வயதில் குடும்பதை எங்கோ வைத்துவிட்டு கண்ணும் கருத்துமாக மாசம் பத்தாயிரம் வாங்கி நாட்டை காக்கிறானே அவன் உமக்கு அரசு ஊழியனா தெரியவில்லையா? அவன் பத்தாயிரம் உமது சம்பளத்திற்கு ஈடாகுமா?

  ஆசிரியப்பணி முடித்துவிட்டு சம்பந்தம் இல்லாத தேர்தல் வேலையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் வேலை செய்ய வைக்கப்படுகிறானே அவனையும் உம்மையும் ஒப்பிட சொல்லுகிறீரா? உமக்கு சம்பந்தமே இல்லாத பணியை செய்ய சொன்னால் செய்வீரா? (உதாரணமாக உமது தொழில் எஞ்சினியர் என்றாலும், திடீரென்று உம்மை CMDயை விமான நிலையத்திலிருந்து வரச்சொன்னால் செய்வீரா?) உம்மை ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டு இன்னும் அடிவாரத்திலே இருந்து கொண்டு உன் வளர்ச்சியை மட்டுமே பார்த்து கொண்டு சந்தோசம் கொண்டு காலையில் இன்னும் பழைய சோறு தின்னுக்கொண்டிருக்கும் அவனையும் உம்மையும் ஒப்பிட சொல்லுகிறீரா? உம்மை இப்படி பல மடங்கு தூக்கிவிட்ட அவனிற்காக நீ என்ன செய்தீர்? இல்லை இந்த மாற்றி மாற்றி வந்த அரசாங்கங்கள் என்ன செய்துவிட்டன?

  எல்லாவற்றையும் விட்டொழியும் நண்பரே. காலை 8 மணிக்கு குப்பை இந்த பக்கம் அள்ளி கொண்டிருக்கும் போதே அந்த பக்கம் நீர் விட்டெரியும் சிகரெட் துண்டையும், பிளாஸ்டிக் கவரையும், வாழைத்தோலையும் அள்ளி கொண்டிருக்கிறானே அவன் அரசு ஊழியனாக தெரியவில்லை.?அவனா உமக்கு நாய்? வேறு யார் வந்தாலும் அதைப் பின்னூட்டமாக போடும்.

  ReplyDelete
 51. அரசு அலுவலர் என்பது RTO ஆபீஸிலும், போலீஸ் ஸ்டேஷனிலும், வருமான வரி துறை, வங்கியிலும் மட்டும் முடிவதில்லை. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு நிறுவனங்களும் உள்ளன. உதாரணமாக நவரத்னா என வர்ணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்டுகின்றன. அங்கு கூட ஒளிவட்ட அரசு ஊழியன் தான் வேலை செய்கிறான்.

  வெளி நாட்டில் கோடி கணக்கில் சம்பளம் கொட்டிதர நினைக்கையில் அண்ணாதுறை, அப்துல் கலாம் போன்றோர் முழுக்க முழுக்க அரசிற்காக வேலை பார்த்தார்கள். தன் சுய நலத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சிறப்பிற்காக வேலை பார்த்த ஊழியர்கள் என அண்ணாதுறை, அப்துல் கலாம், கிரண்பேடி என வரிசையாக நிறைய சொல்லலாம். அது போல் தனியார் துறை ஊழியர் ஒருவரை இந்த நாட்டில் சொல்லுங்கள்.

  ReplyDelete
 52. இன்றைக்கு எந்த தொழில் சுத்தமாக இருக்கிறது?

  வீடு கட்டுவது தொழில். உங்கள் பிள்டர் உங்களை ஏமாற்றவில்லை? பிள்டர் நம்மில் ஒருவர்.

  பிள்டர் சிமெண்ட் வாங்குகிறார். சிமெண்ட் கடைக்கார் சிமிண்டில் மணலைக் கலந்து பிள்டரை ஏமாற்றுகிறார். கடைகாரர் நம்மில் ஒருவர்.

  விற்ற காசில் கடைக்காரர் லாரி வாங்குகிறார், லாரி விற்பவன் விலையை கூட்டி வைத்து கடைகாரரை ஏமாற்றுகிறார். லாரி விற்பவன் நம்மில் ஒருவன்.
  லாரி விற்பவன் வருமான வரி கட்டுகிறான். வருமான வரியை குறைத்து காட்டி அரசை ஏமாற்றுகிறான்.

  அரசு ஊழியன் வருமானவரியை குறைத்து காட்ட லாரி விற்பவனிடம் காசு வாங்குகிறான்.அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.

  அரசு, தன் வேலைக்கு ஆள் எடுக்கிறது. 100 ரூபாய் கொடுக்க வேண்டிய வேலைக்கு 60 ரூபாய் கொடுத்து தன் ஊழியனை ஏமாற்றுகிறது. அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.

  ஏமாற்றிய ஊழியன் முதலில் சொன்ன பிள்டரிடம் வீடு வாங்குகிறான். ஏமாறுகிறான்.

  அரசு ஊழியன் நம்மை போல ஒருவன். பிள்டரும் நம்மை போல ஒருவன்.

  எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நம்மில் ஒருவர். அரசு அலுவலர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் எல்லோருக்கும் தெரிகிறது.

  ReplyDelete
 53. ///அவர்கள் பாராட்டப்படவே வேண்டும். ஆனால் பெரும்பான்மையான சதவீதத்தைப் பற்றித்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.//


  என்ன கேள்வி இது??. கண்டிப்பாக தனியாரில்தான்.

  ஏமாறாமல் வீடு வாங்கி இருக்கிங்களா??

  ஏமாறாமல் வீட்டு லோன் கட்டி இருக்கிங்களா??

  7 ரூபாயில் அரசு அல்ட் ரா பஸ் இருக்க, மீட்டர் பார்த்து ஆட்டோ தொகையை கொடுத்து இருக்கிங்களா?? 4 கிமீக்கு 200 ரூபாய் கொடுத்து ஏமாந்து இருக்கிங்களா??

  மூடிய பெப்சியில் கரப்பான் பூச்சி பார்த்து இருக்கிங்களா??

  கோ ஆப்டெக்ஸில் நல்ல பட்டு புடவை இருக்கையில், ஸ்ரேயா வரும் கடையில் பட்டுபுடவை வாங்கி சாயம் ட்ரை வாஸில் வெளுத்திருக்கிறதா??

  freshஆக ஆவின் பால் இருக்கையில் நாலரை சதவீத பால் வாங்கி உங்களுக்கு புடுங்கியிருக்கிறதா??

  BSNLல் unlimited 650க்கு கிடைக்க உங்களுக்கு மாதவன் வரும் கம்பேனியில் brandband எடுத்து 6500 கட்டி இருக்கீர்களா??

  கட்டமாட்டேன் என கஸ்டமர் கேரில் போன் பண்ணியவுடன் உங்கள் வீட்டிற்கு வாட்டசாட்டமான நபர்கள் மிரட்டி 6500 பணத்தை பறித்து இருக்கார்களா. (இதனைதான் விரைவான் சேவை என விளம்பரபடுத்துகிறார்கள்,..)

  இவர்களெல்லாம் யார் நண்பரே?? அரசு ஊழியரா?? நம்மை போல ஒருவர்

  ReplyDelete
 54. நண்பர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அரசு அலுவலகங்களுக்கு போனால் நம் வேலை உடனே முடிந்துவிட வேண்டும். காலையில் குடுத்தால் மாலை கிடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாளே கிடைத்துவிட வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் அவர்களுக்கு பாவம் இது மட்டுமே வேலை. ஆனால் தனியாரில் பணி புரியும் நாம் பேங்க் போக வேண்டுமென்றால் பாஸ்ட்ட சொல்லிட்டு கிளம்பிறலாம். ஆனால் நம்மை போலவே மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அரசு ஊழியர் இது போல் போஸ்ட் அபீஸிற்கு செல்ல முடியாது. காரணம் அவர் கையொப்பத்திற்காக நம் நண்பர் காத்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதமானாலும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். காரணம் அவர்களுக்கு நேரம் ரொம்ப முக்கியம். (போய் தினமலர் பார்க்கணும்ல,..). ஏனா அவுங்க அரசு ஊழியர்களின் client. ஆனா நம்ம எப்படி? சொன்னா சொன்ன காலத்திற்கு நம் வேலைகளை முடித்து தருகிறோமா?? நான் பார்த்த பெரும்பாலான தனியார் அலுவலகங்களிலும் கண்டிப்பாக சம்பந்தமில்லாத ஒரு explorer file திறந்தும் திறக்காமலும் மூடியும் மூடாமலும் இருக்கும்,..எப்படியோ உங்களை நம்பிய நிறுவனத்தை நீங்களும்தானே ஏமாற்றுகிறீர்கள்?? இதற்கு பெயர் என்னவாம்?? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் 8 மணி உண்மையாக கம்பேனிக்காக உழைக்கிறீர்கள்?? கண்டிப்பாக அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவருக்கு 5 மணி நேரம் மட்டுமே முழுத்திரானியிடம் உழைக்க முடியும். அது நமக்கும் பொருந்தும் அரசு ஊழியருக்கும் பொருந்தும். துரதிர்ஷ்டமாக அந்த மூன்று மணி நேரத்தில் நாம் மாட்டிக் கொள்கிறோம். அந்த அரசு அலுவலர் நிலையில் உங்களை நிறுத்தி யோசித்து பாருங்கள். நீங்கள் எட்டுமணி நேரம் இப்படி அப்படி அசையாமல் வேலை செய்வீர்களா??

  ReplyDelete
 55. /அதிக பயணிகளை ஏற்றினால் அரசிற்கு வருமானம் என்பது பற்றியெல்லாம் எண்ணுவதில்லை!//
  ஏற்றினால் நாம் என்ன சொல்வோம்? ஆட்டு மந்தையை போல் ஏற்றுகிறான் என்று,..

  //அதேபோல சில நிறுத்தங்களில் (நிறுத்தமே இல்லைதான்) மக்களின் வசதிக்காக(பெண்கள், முதியவர்கள்) இங்க கொஞ்சம் நிறுத்துங்க, இறங்கிக்கிறோம் என்றாலும் நிறுத்துவதில்லை!அதேபோல் சிலநிறுத்தங்களில் நிற்காமல் செல்வதும் உண்டு!//
  நிறுத்தினால் என்ன சொல்வோம்?? சூப்பர் டீலக்ஸ்னு சொல்லிட்டு எல்லா எடத்திலயும் நிப்பாட்டிட்டு போறான்,
  இதேது தனியார் என்றால் எப்பவோ போயிருப்பான். ஒரு ஆண்டிற்கு எத்தனை அரசு, தனியார் பேருந்துகள் ஓடுகின்றன? அதில் எத்தனை சதவீதம் விபத்திக்குள்ளாகின்றன, எத்தனை சதவீதம் இழப்பீடு உரியவர்களுக்கு போய் சேர்கிறது தெரியுமா? கொசுவை கொல்வதுபோல் மக்களை கொன்றுவிட்டு எத்தனை தனியார் பேருந்துகள் வெளியில் உலாவிக்கொண்டு இருக்கின்றன தெரியுமா??

  ReplyDelete
 56. //மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அரசாங்கம் சில நிறுவனங்களை (Institutions) நிறுவி மக்களுக்கு சேவை செய்திட ஊழியர்களை நியமனம் செய்கிறது.. இதில் அரசாங்கத்தின் திட்டங்களையும், சேவைகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்பது ஊழியர்களின் பொறுப்பு. இந்தியா மாதிரியான நாட்டில் அரசாங்க ஊழியர்களின் பங்கு மகத்தானது. நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் எல்லாம் அரசாங்க ஊழியர்களின் சேவையில் மட்டுமே உள்ளதாக நான் நம்புகிறேன்.//

  உண்மையே,..

  உண்மையே,.நானும் தனியாரில் வேலை பார்ப்பவனே,.. ஆனாலும் அரசு துறையில் உள்ளவர்களின் சிரமங்களை நாம் உணரும் நிலையில் இல்லை. அரசு ஊழியன் என்பவன் அரசிற்கல்ல, மக்களுக்கே என்பதை நாம் உணரத்தவற விட்டோம். இல்லையென்றால் ஒரு அரசாங்கத்தையே எதிர்த்து தனிமனிதனாக போராடி தேர்தலில் நின்ற டிராபிக் ராமசாமி போன்றோரை தோற்கடிக்கவிட்டிருக்க மாட்டோம். ஒரு 70 வயது தாத்தாவிற்கு இருக்கிற வீரமும் பொறுப்பும் நமக்கில்லை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக முன்னின்று ஒரு உதாரண புருஷணாய் நடத்த மூத்த தலைமுறைகள் இல்லை. அது கக்கனுடனும், காமராஜிடமும் முடிந்துவிட்டது.

  ReplyDelete
 57. //
  புருனோ Bruno said...
  //அந்த பார்வையில் யாராச்சும் வலுவா எடுத்து வைத்தால்தானே எங்களுக்கும் தெரியும்? சராசரி பொது ஜனமா எங்களுக்கும் புரியும்படியும் இருக்கணும் அல்லவா?//

  என் கருத்துக்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்

  மற்றப்படி

  அதிக சம்பளத்துடன் கூடிய நிலையில்லா வேலையில் இருக்கும் அனைவருக்கும், பொருளாதார தேக்க நிலை நேரத்தில் அரசு ஊழியர்களின் மேல் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே :) :) :)

  July 14, 2009 2:46 AM
  //

  அட, ஆமால்ல....அரசு ஊழியர்கள் மீதான மக்கள் வெறுப்பு போன வருஷ கடைசில பொருளாதார தேக்க நிலை வந்த பிறகு தான ஏற்பட்டுச்சி....அதுக்கு முன்னாடி மக்கள் எல்லாம் அரசு ஊழியர்களை கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க இல்ல?? :0))

  டாக்டர்,

  அதிக சம்பளத்துடன் நிலையில்லா வேலையில் இருப்பவர்கள் என்று நீங்கள் யாரை குறிக்கிறீர்கள்?? யாரை குறித்தாலும் அதிக சம்பளத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, விவசாயிகளில் இருந்து,சிறு தொழில் செய்பவர்கள், 1500 ரூபாய்க்கு நாளெல்லாம் உழைப்பவர்கள் என்று பலரும் அர்சு ஊழியர் மேல் வெறுப்பில் தான் இருக்கிறார்கள்...

  கொஞ்ச நாள் முன்பு வரை, எலக்ட்ரிசிட்டி பில் கட்ட அரசு அலுவலகம் செல்ல வேண்டும்...அங்கு இருக்கும் நபர்கள் படுத்தும் பாடு...ஏதோ பிச்சைக் கேட்டு போனது போல...

  இதையெல்லாம் வெறும் வயிற்றெரிச்சல் என்று சொல்வீர்களானால்....இங்கு உரையாடவும் விவாதம் செய்யவும் ஏதுமில்லை!

  நிலையான வேலையோ, நிலையில்லாத வேலையோ, ஊரான் சொத்தை அடித்து உலையில் போடாத எந்த வேலையிலும் இழிவில்லை....வயிற்றெரிச்சல் காரர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை..

  ReplyDelete
 58. வென்,

  /////இந்த மிருகங்கள்தான் உமக்கு பிறப்பு சான்றிதல் வழங்கியதா? ( வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாரென்று)/////

  நான் பிறந்தபோது அரசு ஆஸ்பத்திரியில் என்னை கொன்றிருப்பார்கள்.என் தாத்தா சைக்கிளை அடகு வைத்து என்னை அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரி கொண்டுபோய் காப்பாற்றினார்.
  போலியோ மருந்தெல்லாம் எவனும் எனக்கு கொடுத்த ஞாபகமே இல்லை.பத்தாம் வகுப்புக்கு அரசாங்கத்துக்கு பரிட்சைக்கு பணம் கட்டித்தான் எழுதினேன். சர்ட்டிபிக்கேட்டை என்ன அரசு ஊழியன் எனக்கு என்ன தான தருமமா செய்தான்? நான் கொடுக்கும் வரிப்பணத்தில் தானேஅவன் பிழைப்பு ஓடுகிறது? எனக்கு சேவை செய்யத்தானேய்யா அவனுக்கு சம்பளமே?

  சம்பளம் கொடுக்கும் முதலாளி வேலைக்காரன் சரியில்லையென்றால் கேட்கத்தானய்யா செய்வான்? மக்கள் ஊழியம்னு வந்துட்டு அந்த மக்கள் கிட்டேயே லஞ்சம் வாங்கிபிழைக்கும் இந்த மிருகங்களை திட்டுவதில் என்ன தவறு?அரசாங்கம் தான் சம்பள கமிஷன் மேல சம்பள கமிஷனா வெச்சு சம்பளத்தை கொடுக்குதில்ல? அப்புறமும் எதுக்குய்யா இவனுகளுக்கு லஞ்சம்? என்னைக்காவது அரசாங்க அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை மனுசனா, வாடிக்கையாளரா, சம்பளம் கொடுக்கும் முதலாளியா நினைச்சு பேசியிருப்பானுங்களா இவனுங்க? லஞ்சத்தையில்ல வாங்கி தொலைச்சானுவ?

  தனியார் லஞ்சம் வாங்கறான்.ஆனால் அவன் ஒண்ணும் என் வரிப்பணத்தில் கட்டிடம் கட்டி, என் வரிப்பணத்தை அவன் ஊழியர்களுக்கு சம்பளமா கொடுக்கலையே?அவன் சேவைக்கு கருப்புபணமா கட்டணம் வாங்கறான்.அதை தடுத்து நிறுத்தவேண்டிய அரசு ஊழியன் என்ன செஞ்சுகிட்டு இருந்தான்?தனியார் முதலாளிக்கு சல்யூட் அடிச்சு லஞ்சத்தையில்ல வாங்கிட்டு இருந்தான்?

  எங்க உங்க ஐ.ஏ.எஸ்ஸுகளை வந்து ஒரு கம்பனிய கைகாசு போட்டு நடத்தி நாலாயிரம் பேருக்கு வேலையை குடுக்க சொல்லுங்க பாப்போம். எது கஷ்டம்னு தெரியும். அரசு கம்பனிகளில் ஐ.ஏ.எஸ்ஸுகளை ஆபிசரா போட்டு எந்த கம்பனி லாபத்துல ஓடிருக்கு?ஏர் இந்தியாவில் ஐயாயிரம் கோடி நஷ்டம்.எத்தனை கோடி ஊழல் பண்ணினாங்களோ?

  மக்கள் வரிப்பணத்தில் பிழைச்சுகிட்டு, மக்கள் ஊழியன்னு பேரை வெச்சுகிட்டு மக்கள் கிட்டேயே லஞ்சம் வாங்கி சேவை குறைப்பாடு இருந்தா கேக்கத்தான் செய்வோம்.அது எங்க உரிமை. போயி அவனுங்க கிட்ட லஞ்சத்தை நிறுத்த சொல்லுங்க. நாங்களும் கேள்வி கேட்பதை நிறுத்தறோம்.

  ReplyDelete
 59. முதலில் "ven" என பின்னூட்டம் வந்தது என்னுடையதே. நண்பரின் லேப்டாப்பில் இருந்து அனுப்பும் போது அவர் "கூக்ளியில் log out" செய்யாததை நான் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 60. //
  புருனோ Bruno said...

  அதிக சம்பளத்துடன் கூடிய நிலையில்லா வேலையில் இருக்கும் அனைவருக்கும், பொருளாதார தேக்க நிலை நேரத்தில் அரசு ஊழியர்களின் மேல் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே :) :) :)
  //

  டாக்டர் நீங்க காமெடி கீமெடி பண்ணலியே!?

  ReplyDelete
 61. //நண்பர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அரசு அலுவலகங்களுக்கு போனால் நம் வேலை உடனே முடிந்துவிட வேண்டும். காலையில் குடுத்தால் மாலை கிடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாளே கிடைத்துவிட வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் அவர்களுக்கு பாவம் இது மட்டுமே வேலை.//

  வென்,
  நீங்க சொல்வது போல ஒரே நாளில் வேலை முடியவேண்டும் என்று விவாதிக்கவில்லை இங்கு!

  ஒரு குறிப்பிட்ட 4 நாள் ஆகுமென்றால் 4 நாள் ஆகுமென்றே சொல்லியனுப்புங்களேன் என்றுதான் சொல்கிறார்கள்! அதற்குமுன் சம்மந்தப்பட ஆவணங்களை சரிபார்த்து, ஒரே முறையில் எல்லா திருத்தங்கள்/மாற்றங்களையும் சொல்லி இன்ன தேதிக்கு கொண்டு மீண்டும் வாருங்கள் என்று சொல்லுங்கள்! அதை விடுத்து வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவானேன் என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம்!

  அலுவலகத்தில் உயரதிகாரிகள்/வேலையால் பிரஷர்/டென்ஷன் என்றால் அதை வாடிக்கையாளர்களிடம்தான் பகிர்ந்துகொள்ள வேண்டுமா என்ன? ஊதிய உயர்வு/பஞ்சப்படி/பயணப்படி உயர்வு பெறும்போதெல்லாம் அல்லது அலுவலகத்தில் பதவி உயர்வு போன்ற மகிழ்ச்சியான தருணங்களை வாடிக்கையாளர்களிடமா பகிர்ந்து கொள்கிறார்கள்? "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி" ன்னு சங்கம் மூலமா செய்தி போடுறீங்க!

  அப்பொ உங்க அலுவலக டென்ஷன்களையும் முதல்வர்கிட்டே பகிர்ந்து கொள்வதுதான் சரியே தவிர வாடிக்கையாளர்களிடம் அல்ல!

  ReplyDelete
 62. //ஒரு கணக்கு துவங்குவதற்கும், கடையில் பொருள் வாங்கும் டிரான்ஷாக்சனுக்கும் ஒப்பிடுவது சரியல்ல புருனோ சார்!//

  இல்லை சார்

  ஏன் சரியல்ல என்று விளக்குங்களேன்

  உங்களுக்கு ஏன் வங்கி மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது

  உங்களது அதீத எதிர்ப்பார்ப்பு தான் சரியான ஒரு நடைமுறையை கூட குறையாக தெரியவைக்கிறது என்ற என் வாதத்திற்கு உங்கள் மறுமொழி வலு சேர்த்துள்ளது :) :) :)

  ReplyDelete
 63. //சனிக்கிழமை 5.05 மணிக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்யனும் வந்தாருன்னா அவரிடம் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து முறையாக நிரப்பிக்கொண்டு, தேவையான ஆவணங்களுடன் (என்னென்ன வேண்டும் என்று சொல்லி) மீண்டும் திங்கள் அன்று காலை வாருங்கள் என்று சொல்லலாம் அல்லவா!//

  கண்டிப்பாக சொல்லலாம்

  ஆனால் 5:05க்கு கணக்கு துவங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் :) :) :)

  ReplyDelete
 64. //சனிக்கிழமை அக்கவுண்டு தொடங்கமாட்டேன் என்று சொல்வார்கள்.அப்புறம் மாமூலை வெட்டுனா அக்கவுண்டு ஓப்பன் பண்ணி தருகிறேன் என்பார்கள்.//

  எந்த வங்கியின் கணக்கு துவங்க நீங்கள் மாமுல் அளித்துள்ளீர்கள்

  வங்கி பெயர்
  கிளை
  மாமூல் அளித்த தேதி
  அளித்த தொகை கூற முடியுமா

  --

  முடியாது என்றால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க தயாரா

  ReplyDelete
 65. //என்னுடைய அனுபவத்தில் அரசு வங்கிகளே தரமான சேவையைக் குறைந்த கட்டணத்திற்குத் தருகின்றன.//

  வழிமொழிகிறேன் !!

  ReplyDelete
 66. // "அரசு ஊழியர்களைப் பார்த்து மத்தவங்களுக்கு வயித்தெரிச்சல்னு சொல்றீங்க" அப்படித்தானே! :) :) :)//

  வயிற்றெரிச்சல் இல்லாமல் ஏன்

  1. பொய் குற்றச்சாட்டுகள் வருகின்றன (உதாரணம் வங்கியில் கணக்கு துவங்க மாமூல்)
  2. சரியான நடைமுறைகளை கூட தவறென்று எழுதப்படும் வயிற்றெரிச்சல் இடுகைகள் (உதாரணம் மேல் உள்ள மறுமொழிகளில் அளித்துள்ளேன்) வருகின்றன

  ReplyDelete
 67. //நான் பிறந்தபோது அரசு ஆஸ்பத்திரியில் என்னை கொன்றிருப்பார்கள்.//

  அதாவது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் ஒரு குழந்தை கூட உயிருடன் பிறக்க வில்லை

  என்ன கொடுமை சார் இது

  --

  இதைத்தான் வயிற்றெரிச்சல் / காழ்புணர்ச்சி என்று கூறினேன்

  //போலியோ மருந்தெல்லாம் எவனும் எனக்கு கொடுத்த ஞாபகமே இல்லை.//

  கரெக்ட் சார்

  உங்களுக்கு நீங்க பிறந்த நாளிலிருந்து 9 மாசம் வரை எந்த நேரத்தில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இன்று வரை தெளிவாக ஞாபகம் வைத்திருக்கும் அபார ஞாபக சக்திகாரர். எனவே உங்களுக்கு ஞாபகம் இல்லை என்றால் அது பொய்

  சரி

  ReplyDelete
 68. //பத்தாம் வகுப்புக்கு அரசாங்கத்துக்கு பரிட்சைக்கு பணம் கட்டித்தான் எழுதினேன். சர்ட்டிபிக்கேட்டை என்ன அரசு ஊழியன் எனக்கு என்ன தான தருமமா செய்தான்? நான் கொடுக்கும் வரிப்பணத்தில் தானேஅவன் பிழைப்பு ஓடுகிறது? எனக்கு சேவை செய்யத்தானேய்யா அவனுக்கு சம்பளமே? //

  கேள்வி நீங்கள் லஞ்சம் அளித்தீர்களா

  அல்லது

  லஞ்சம் அளிக்காமல் பெற்றீர்களா

  --

  நீங்கள் கட்டணம் செலுத்தினீர்களா என்பது கேள்வி அல்ல

  ReplyDelete
 69. // அரசு கம்பனிகளில் ஐ.ஏ.எஸ்ஸுகளை ஆபிசரா போட்டு எந்த கம்பனி லாபத்துல ஓடிருக்கு? //

  இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன

  பார்வை சரியாக இருந்தாலும் மனதில் ஊனம் இருப்பவர்களால் அந்த உதாரணங்களை படிக்க முடியாது !!!

  //ஏர் இந்தியாவில் ஐயாயிரம் கோடி நஷ்டம்.எத்தனை கோடி ஊழல் பண்ணினாங்களோ?//

  சார்

  அது விமான தொழிலில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் பாதித்த விஷயம்

  இந்த நஷ்டம் பல மாதங்களுக்கு முன்னரே ஜெட் போன்ற தனியார் நிறுவனங்களை பாதித்தது மனதில் ஊனம் இருப்பவர்களை தவிர பிறருக்கு நினைவிருக்கலாம்

  ReplyDelete
 70. //டாக்டர் நீங்க காமெடி கீமெடி பண்ணலியே!?//

  கண்டிப்பாக இல்லை.

  இங்கு வரும் மறுமொழிகளை நான் கூறிய கருத்திற்கு ஆதாரம் !!

  ReplyDelete
 71. புரூனோ

  மாமூல் கொடுத்ததற்கும், லஞ்சம் கொடுத்ததற்கும் எல்லாம் பலரும் ஆதாரம் தரவோ, புகார் தரவோ முன்வரமாட்டார்கள். அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது உலகம் முழுக்க அறிந்த செய்தி. நான் சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நீங்கள் வக்கீலுமில்லை,நான் சாட்சியுமில்லை குறுக்குவிசாரணை நடத்த.

  எங்கே கடவுள் மேல் ஆணையாக நீங்கள் இதுவரை எந்த அரசு ஊழியனுக்கும் பத்துபைசா லஞ்சமே கொடுத்ததில்லை என்று சத்தியம் செய்யுங்கள் பார்ப்போம்.அல்லது லஞ்சம் கொடுத்திருந்தால் கொடுத்த தேதி,வாங்கிய ஊழியர்,நிறுவனம் பெயரை இங்கே தெரிவிக்கிறீர்களா என பார்ப்போம்.

  நான் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தபோது ஆசுபத்திரி ஊழியர்கள் என் அம்மாவுக்கு பிரசவவலி எடுத்தபோது கூட வந்து பார்க்கவில்லை.கடைசியில் என் தாத்தாவும் அப்பாவும் போய் கெஞ்சி டாக்டரையோ,நர்சையோ கூட்டிவந்து பிரசவம் பார்த்ததாக சொன்னார்கள்.அம்மாவுக்கு உடம்பு மிகவும் முடியாமல் போய் அதன்பின் என் தாத்தா தன் சைக்கிளை விற்று என் அம்மாவை அங்கிருந்து கூட்டிபோய் தனியார் மருத்துவமனையில் சேர்த்து எங்கள் இருவரையும் காப்பாற்றினார்.

  தேதி,ஆஸ்பத்திரி விவரம்,டாக்டர் பெயர் எல்லாம் கேட்காதீர்கள். தரமுடியாது.பொய் சொல்கிறேன் என வைத்துக் கொண்டால் வைத்து கொள்ளலாம்.அது உங்கள் விருப்பம்.

  லஞ்சம் வாங்கமுடிந்த அரசு ஊழியன் எல்லாம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறான்.வாங்கமுடியாத துறைகளில் இருப்பவர்கள் வாங்குவதில்லை.அவர்கள் லஞ்சம் வாங்காமல் இருக்ககாரணம் வாங்ககூடாது என்ற அவர்கள் விருப்பமல்ல.வாங்கமுடியாமல் இருக்கும் நிலைதான் காரணம்.உதாரணம் அரசு பள்ளி வாத்தியார்,பத்தாவது சர்ட்டிபிகேட்டை அச்சடித்தவர்.அவர்களும் கூட டியூஷன் வைத்து பல்ளிமாணவர்களை அங்குவரசொல்லி கேன்வாஸ் செய்து காசு தேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அதிலும் கணக்கு,அக்கவுன்டன்சி வாத்தியார்களுக்கு தான் இந்த மேல்வரும்படி. தமிழ் வாத்தியாருக்கும், ஹிஸ்டரி வாத்தியாருக்கும் இல்லை. அவர்களும் விட்டேனா பார் என்று மாணவர்களிடம் வீட்டு வேலை எல்லாம் வாங்குகிறார்கள். அதுவும் லஞ்சம் தானே?

  ReplyDelete
 72. //2. சரியான நடைமுறைகளை கூட தவறென்று எழுதப்படும் வயிற்றெரிச்சல் இடுகைகள் (உதாரணம் மேல் உள்ள மறுமொழிகளில் அளித்துள்ளேன்) வருகின்றன//

  வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவதுதான் சரியான நடைமுறையென்று புரூனோ சார் கூறிவிட்டதால் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு அப்படியே விவாதத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஒரு நன்றியும் கூறிவிட்டு நான் ஜகா வாங்கிக் கொள்கிறேன்!
  :)

  ReplyDelete
 73. //வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவதுதான் சரியான நடைமுறையென்று புரூனோ சார் கூறிவிட்டதால்//

  மன்னிக்கவும்

  நான் அப்படி கூறவே இல்லை.

  நான் கூறாததை கூறுவதாக தாங்கள் திரித்து கூறுவது தரந்தாழ்ந்த செயல்
  / நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்

  நான் கூறிய உதாரணங்கள் வேறு

  // அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு அப்படியே விவாதத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஒரு நன்றியும் கூறிவிட்டு நான் ஜகா வாங்கிக் கொள்கிறேன்!:)//

  நாமக்கல் சிபி

  உங்களிடமிருந்து இந்த பதில் வருவது ஒரு பக்கம் வருத்தத்தை வரவழைத்தாலும் அதே நேரம் அரசு மேல் குற்றச்சாட்டை கூறுபவர்களின் குணாதியசங்களை பற்றி தெளிவாக எடுத்துரைப்பதால், என் வாதத்திற்கு வலு சேர்க்கவே செய்கிறது :) :)

  நான் தெளிவாக கூறிய உதாரணங்கள்

  1. July 14, 2009 2:50 AM எழுதிய மறுமொழி
  2. அடுத்த உதாரணம் http://manam-anandrey.blogspot.com/2009/06/blog-post_04.html

  --

  நான் ஏற்கனவே கூறியபடி கண்களில் ஊனம் இருந்தாலும் படிப்பதில் சிரமம்

  மனதில் ஊனம் இருந்தாலும் படிப்பதில் சிரமம்

  --
  நான் கூறாததை கூறுவதாக தாங்கள் திரித்து கூறியது மிகவும் தரந்தாழ்ந்த செயல்

  உங்களிடமிருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர்ப்பார்க்கவில்லை

  :( :(

  --

  ReplyDelete
 74. //மாமூல் கொடுத்ததற்கும், லஞ்சம் கொடுத்ததற்கும் எல்லாம் பலரும் ஆதாரம் தரவோ, புகார் தரவோ முன்வரமாட்டார்கள். அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது உலகம் முழுக்க அறிந்த செய்தி. நான் சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நீங்கள் வக்கீலுமில்லை,நான் சாட்சியுமில்லை குறுக்குவிசாரணை நடத்த.//

  ஐயா

  நீங்கள் கூறிய குற்றச்சாட்டு சனிக்கிழமை அக்கவுண்டு தொடங்கமாட்டேன் என்று சொல்வார்கள்.அப்புறம் மாமூலை வெட்டுனா அக்கவுண்டு ஓப்பன் பண்ணி தருகிறேன் என்பார்கள்

  அரசு துறை மேல் கூறப்படும் பெரும்பாலான (உதாரணம் - ஏற்கனவே கூறிய இரு தொடர்வண்டி உதாரணங்கள்) போலவே அதுவும் ஒரு பொய் குற்றச்சாட்டு. ஆதாரமற்றது. உங்களது அடிமன வக்கிரத்தால், உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் கூறப்பட்ட முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்பது என் சந்தேகம்

  எனவேத்தான் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள அந்த கேள்விகளை கேட்டேன்

  உங்களது பதிலிருந்து உண்மை என்னவென்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது

  (ஏற்கனவே கூறியபடி, கண்களில் ஊனம் இருப்பவர்களுக்கும், மனதில் ஊனம் இருப்பவர்களுக்கும், உண்மை தெரியாது !!!)

  ReplyDelete
 75. //எங்கே கடவுள் மேல் ஆணையாக நீங்கள் இதுவரை எந்த அரசு ஊழியனுக்கும் பத்துபைசா லஞ்சமே கொடுத்ததில்லை என்று சத்தியம் செய்யுங்கள் பார்ப்போம்.அல்லது லஞ்சம் கொடுத்திருந்தால் கொடுத்த தேதி,வாங்கிய ஊழியர்,நிறுவனம் பெயரை இங்கே தெரிவிக்கிறீர்களா என பார்ப்போம்.//

  சார்

  நான் எதுவும் குற்றச்சாட்டு கூறவில்லை

  நீங்கள் கூறினீர்கள். எனவே நீங்கள் தான் விளக்கம் தர வேண்டும்

  இது கூடவா உங்களுக்கு புரியவில்லை

  --

  //எல்லாம் கேட்காதீர்கள். தரமுடியாது.//

  ஆச்சரியமில்லை. எதிர்பார்த்தது தான் !!!

  ReplyDelete
 76. எனது புரிதலில் ஏற்பட்ட பிழை காரணமாக மேற்கண்ட பின்னூட்டத்தை இட்டேன்!

  புரூனோ அவர்கள் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவதை சரியான நடைமுறையென்று கூறவில்லை! அதனை அவ்வாறு புரிந்துகொண்டது என் தவறுதான்! அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு வருத்தத்தையும் கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
 77. என் பதிவில் கவனம் செலுத்தியதால் இத்தொடர் பதிவில் கவனம் செலுத்த முடியவில்லை (ஹி ஹி மாதவராஜ் சாரைப் போல)

  //நான் கொடுக்கும் வரிப்பணத்தில் தானேஅவன் பிழைப்பு ஓடுகிறது? எனக்கு சேவை செய்யத்தானேய்யா அவனுக்கு சம்பளமே? //

  ஹா ஹா. என்ன சொல்லுகிறீர்கள்??. உங்களுக்கு மட்டுமே சேவை செய்து கொண்டிருந்தால் மற்றவன் கதி.??? நீங்கள் பல மடங்கு சம்பாதிக்கிறீர்கள் நண்பரே. ஆனால் வரிக்கட்டுபவர்கள் மட்டுமே இந்திய மக்கள் என்றால் இங்கே எவனும் சோறு தின்ன முடியாது. விவசாயிகள், கூலிகளும் வரியே கட்டுவதில்லை. அவர்களுக்கு வயிற்றில் மட்டுமே வரி உள்ளது. அவர் வரி கட்டவில்லை என்பதால் ஒதுக்கி வைத்துவிடலாமா???

  ReplyDelete
 78. //மக்கள் வரிப்பணத்தில் பிழைச்சுகிட்டு, மக்கள் ஊழியன்னு பேரை வெச்சுகிட்டு மக்கள் கிட்டேயே லஞ்சம் வாங்கி சேவை குறைப்பாடு இருந்தா கேக்கத்தான் செய்வோம்.அது எங்க உரிமை. போயி அவனுங்க கிட்ட லஞ்சத்தை நிறுத்த சொல்லுங்க. நாங்களும் கேள்வி கேட்பதை நிறுத்தறோம்.//

  அய்யா,. நான் எங்கும் லஞ்சம் வாங்குங்கள் என்று சொல்லவே இல்லை. நான் சொன்னது அரசு ஊழியர்களுக்கு இன்றைக்கு ஊதியம் குறைவு, அதனால் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற காரணத்தை சொன்னேன். அதை வைத்து நான் லஞ்சத்தை ஆதரிப்பவன் என முடிவு கட்டாதீர்கள்.

  கேள்வி கேட்பது உங்கள் உரிமை. அதைப்போலவே சம்பளம் உயர்த்துங்கள் என்பது அவன் உரிமை. மாசம் 7000 ஆயிரம் வாங்கிட்டு சென்னையில் வாடகை வீட்டில் பெற்றோருடனும், 2 குழந்தைகளுடனும், மனைவியுடனும் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும். இதற்கு உங்கள் பட்ஜெட்டை சொல்லுங்கள் பார்க்கலாம். சோறு கிடைக்காதவன் பிச்சை (அரசாங்கத்திடம்) எடுக்கிறான், பிச்சை கிடைக்காதவன் திருட ஆரம்பிக்கிறான். திருட ஆரம்பித்தவன் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கிறான். இதுதான் எதார்த்தமான உண்மை.

  ReplyDelete
 79. லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போடுங்கள். நான் வழி மொழிகிறேன். ஆனால் நீங்கள் தேர்வு செய்த அரசியல்வாதிகளுக்கு காசு கொடுத்து நாட்டின் பொருளாதரத்தை குட்டி சுவராக்கிய சத்யம் ராஜூ போன்ற தனியார் கூட்டங்களையும் அதன் ஆடிட்டர்களையும் கல்லால் அடித்து சாகடியுங்கள்.

  நண்பரே லஞ்சம் இல்லாத இடமில்லை. கடும் கட்டுப்பாடுகளுக்கு பெயர் போன இந்த middle east நாடுகளில் கூட லஞ்சம் கரை புரண்டு ஓடுகிறது. இங்கே டிரைவிங் லைசென்ஸ் வாங்க கூட 20000 ஆயிரம் வாங்குகிறார்கள். இவர்களிடம் பணம் இல்லையா??

  லஞ்சம் என்பது தனி மனித ஒழுக்கம். நாம் ஆபீஸ் டைமில் பெர்சனல் மெயில் பார்க்காமல் இருப்பதை போல. அது தானாக வர வேண்டும்.

  ReplyDelete
 80. //கேள்வி நீங்கள் லஞ்சம் அளித்தீர்களா

  அல்லது

  லஞ்சம் அளிக்காமல் பெற்றீர்களா

  --

  நீங்கள் கட்டணம் செலுத்தினீர்களா என்பது கேள்வி அல்ல//

  அதுவே நான் கேட்டது. பிறப்பிலிருந்து கல்லூரி சான்றிதல் வரைக்கும் எத்தனை முறை லஞ்சம் கொடுத்தீர்கள்?

  ReplyDelete
 81. //அவன் சேவைக்கு கருப்புபணமா கட்டணம் வாங்கறான்.//

  நீங்கள் சேவைக்கட்டணமாக கொடுக்க ஆரம்பிக்கும் அந்த கறுப்பு பணத்தில்தானே லஞ்சம் ஆரம்பிக்கிறது? அதுதானே வருமான வரித்துறைக்கு லஞ்சமாக போகிறது?? ஏன் அரசு கல்லூரிகளுக்கு என்ன குறைச்சல். IITக்கும் அண்ணா பல்கலைகழகத்திற்கும் தானே கம்பேனிகள் வருகின்றன. பிறகுதானே தனியாருக்கு?? தரமில்லாத இடத்திற்கு எப்படி தனியார் வருவான்??? சொல்லுங்கள். நீங்கள் நேர்வழியில் வரவேண்டியதுதானே.

  ReplyDelete
 82. // அவர்கள் லஞ்சம் வாங்காமல் இருக்ககாரணம் வாங்ககூடாது என்ற அவர்கள் விருப்பமல்ல.வாங்கமுடியாமல் இருக்கும் நிலைதான் காரணம்.உதாரணம் அரசு பள்ளி வாத்தியார்,பத்தாவது சர்ட்டிபிகேட்டை அச்சடித்தவர்.அவர்களும் கூட டியூஷன் வைத்து பல்ளிமாணவர்களை அங்குவரசொல்லி கேன்வாஸ் செய்து காசு தேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அதிலும் கணக்கு,அக்கவுன்டன்சி வாத்தியார்களுக்கு தான் இந்த மேல்வரும்படி. தமிழ் வாத்தியாருக்கும், ஹிஸ்டரி வாத்தியாருக்கும் இல்லை.//

  என்ன இது?? இது தனியாரில் நடக்கவில்லை என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம். DAV முதல் நாடார் பள்ளி வரை பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் இது தொழில். (காசு வாங்காமால் நடத்து ஆசிரியர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கிராமத்து பள்ளிகளில் வேலை செய்கிறார்கள்.) இதில் அரசு எங்கே வந்தது. சொல்லப்போனால் இது தனியார் பள்ளிகளில்தான் இது அதிகம் நடக்கிறது. இவர்கள் வீட்டில் வேலை சொல்வதில்லை. ஆனால் அப்பாவையும், அம்மாவையும் அழைத்து பாடம் நடத்துவார்கள்,. (பிள்ளைக்கல்ல, பிள்ளைகளுக்கு அப்பா அம்மா நடத்துவார்கள், அந்த பள்ளி interview மறக்க முடியாதது ,.) வாரம் இரு முறை பள்ளிக்கு செல்லும் இவர்கள் டார்ச்சர் தாங்க முடியாமல் பிள்ளைகளை டியூசனுக்கும் அனுப்புவார்கள். வேறுவழி??

  ReplyDelete
 83. //புருனோ Bruno said...
  ....உங்களது அதீத எதிர்ப்பார்ப்பு தான்...//

  அரசாங்க இயக்கம் மக்களுக்கானது, அரசு ஊழியர்களும் அவ்வாறே. மக்களின் (தனியாரைவிட) சற்று அதிகமான சேவை எதிர்பார்ப்பிற்கும் காரணமும் அதுவே. அரசாங்க சேவையை மளிகை கடை அல்லது தனியார் வங்கியுடன் ஒப்பிடுவது தவறு. (அதைவிட சற்றே சிறந்த சேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.)
  மருத்துவர் புருனோவும், அண்ணன் மாதவராஜூம் தங்கள் இருவரை மட்டுமே அரசு ஊழியர்களுக்கான மாதிரியாக நினைப்பதிலிருந்து சற்று விலகி, எதிரே ஒருவருக்கு நடக்கும் அநீதியை பாருங்கள்.
  இங்கு பின்னூட்டமிட்ட அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து 'அரசு ஊழியர்களிலும் நல்லவர்கள் உண்டு' என்பதே. அரசு ஊழியர்களில் கெட்டவர்கள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?
  இவர்களுக்கு நிரந்தர பணியிடமும் அதற்கு ஏதேனும் ஆபத்து வந்தால் சங்கமும் இருப்பதால்தான், அரசாங்க வேலைக்கு கிராக்கி இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது.
  (எனது முந்தைய பின்னூட்டத்தையும் சேர்த்து வாசிக்கவும்)

  ReplyDelete
 84. இங்கே விவாதங்கள் போய் கொண்டேதான் இருக்கும். காரணம் ஒவ்வொருவரின் அனுபவம் ஒவ்வொரு மாதிரி. எல்லோரும் அவர்களின் பார்வையை முறையானது என நிரூபிக்க முயற்சிக்கிறோம்.

  ஆனால் லாஜிக்காக பார்ப்பதுதான் முறையானது. 100 கோடி மக்கள் என்பது சாதாரணமானதல்ல எண்ணிக்கை அல்ல (நீங்கள் ஒன்னு, ரெண்டு சொல்ல ஆரம்பித்தால் 30 வருடம் சொல்ல வேண்டும்.) அவர்களுக்கு முழு திருப்தியான சேவை என்பதும் நடக்ககூடியதல்ல. அது நடக்க வேண்டும் என்றால் கட்டுக்கோப்பான, மக்களுக்கு நியாயமான சேவை தர வேண்டும் என நினைக்கும் அரசாங்கமும், சிறந்த மேன்மையான திறமை பொருந்திய அதிகாரிகளும் தேவை. இரண்டாவதில் எனக்கும், யாருக்கும் எந்த மாற்று கருத்தும்*** இருக்கமுடியாது. இதுதான் உண்மை. எனவே முதலில் சிறந்த தொலை நோக்கும் தன்னலமும் கருதாத அரசியல்கட்சி இருந்தால் மட்டுமே முறையான, நேர்மையான ஆட்சியை தரமுடியும். காரணம் தவறு செய்யும் ஊழியனை நீங்கள் கேள்வி மட்டுமே கேட்க முடியும். தண்டனை வழங்கும் அதிகாரம் அரசிற்கே உண்டு. ஒரு நல்ல அரசாங்கமே நல்ல ஆட்சியை தரும், எப்படி ஒரு நல்ல ஊழியன் மூலமாக. நல்ல அரசங்கத்திற்கு எங்கே போவது? அது நம் கையில்தான் உள்ளது. அடுத்தவன் மீது ஆட்காட்டிவிரலை நீட்டும் முன் அதே ஆட்காட்டி விரலை கொண்டு ஒரு நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் இது மாதிரி தெரிந்த உண்மையை வைத்துக்கொண்டு தெரியாத பொய்யைதேடி அலைந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.


  ***
  ( எனக்கு மாற்றுக்கருத்து உண்டு என கருதுபவர்கள், தன் சுய நலத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சிறப்பிற்காக வேலை பார்த்த ஊழியர்கள் என அண்ணாதுறை, அப்துல் கலாம், கிரண்பேடி என சொல்வதுபோல் தனியார் துறை ஊழியர் ஒருவரை இந்த நாட்டில் சொல்லிவிட்டு தொடருங்கள்.)

  ReplyDelete
 85. //மருத்துவர் புருனோவும், அண்ணன் மாதவராஜூம் தங்கள் இருவரை மட்டுமே அரசு ஊழியர்களுக்கான மாதிரியாக நினைப்பதிலிருந்து சற்று விலகி, எதிரே ஒருவருக்கு நடக்கும் அநீதியை பாருங்கள். //

  ஒரு பயணச்சீட்டு பரிசோதகருக்கு ஏற்பட்ட அநீதி குறித்து நான் எழுதியிருந்தேனே

  ஒரு தொடர்வண்டி ஊழியருக்கு ஏற்பட்ட அநீதி குறித்து நான் எழுதியிருந்தேனே

  அதற்கு உங்கள் பதில் என்ன

  ReplyDelete
 86. //அரசாங்க இயக்கம் மக்களுக்கானது, அரசு ஊழியர்களும் அவ்வாறே. மக்களின் (தனியாரைவிட) சற்று அதிகமான சேவை எதிர்பார்ப்பிற்கும் காரணமும் அதுவே. //

  சற்று அதிகமாக எதிர்பாருங்கள்

  அதாவது சென்னை மட்டும் பெறுநகரங்களில் மட்டும் கிளை வைத்திருக்கும் தனியார் வங்கியை விட அதிக கிளைகள் (கிராமங்களில்) வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பாருங்கள்

  அந்த எதிர்ப்பார்ப்பை நான் தவறு என்று கூறவில்லை


  அதே நேரம் ஆனால் 5 மணிக்கு பிறகு கூட கணக்கு துவங்க வேண்டும், பயணச்சீட்டு இல்லாமல் வருபவரை கூட பயணம் செய்ய அனுமதிக்க் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் தான் அதீத எதிர்ப்பார்ப்பு என்றேன்

  ReplyDelete
 87. //இங்கு பின்னூட்டமிட்ட அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து 'அரசு ஊழியர்களிலும் நல்லவர்கள் உண்டு' என்பதே.//
  நன்றி !!

  //அரசு ஊழியர்களில் கெட்டவர்கள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?//

  முடியாது

  ReplyDelete
 88. //என் பதிவில் கவனம் செலுத்தியதால் இத்தொடர் பதிவில் கவனம் செலுத்த முடியவில்லை (ஹி ஹி மாதவராஜ் சாரைப் போல)//

  இல்லைங்க.... நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் விரும்பிய திசையில் விவாதங்கள் பயணிக்க வில்லையென்றாலும், பல விஷயங்களில் நீங்களும், புருனோவும் சொல்லிக் கொண்டு இருப்பதில் பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அதையே நானும் திரும்ப சொல்ல விரும்பவில்லை.

  ReplyDelete
 89. //இல்லைங்க.... நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் விரும்பிய திசையில் விவாதங்கள் பயணிக்க வில்லையென்றாலும்//

  Exactly... You are right Mathavaraaj

  லஞ்சம் மற்றும் நேர்மையின்மை என்ற பெரும்பான்மையான வாசகர்களின் கருத்துக்கள் இப்பதிவிற்கு தேவை இல்லை என்பதே என் கருத்து..

  ReplyDelete
 90. புரூனோ,

  நான் பொய் சொன்னேன் என்றே வைத்துக்கொண்டு நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமே?

  அதாவது "நீங்கள் இதுவரை அரசு ஊழியர்களுக்கு லஞ்சமே கொடுத்ததில்லை" என்று கடவுள் மேல் ஆணையாக கூற தயாரா?அல்லது கொடுத்திருந்தால் எந்த தேதியில் கொடுத்தீர்கள்,எந்த அலுவலகத்தில் கொடுத்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொல்ல தயாரா?

  நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்.அப்புறம் நான் சொன்னது பொய்யா உண்மையா என ஆராயலாம்.ஒரு அரசு டாக்டரான உங்களாலே "நான் இதுவரை அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில்லை" என சொல்ல முடியவில்லை.அப்புறம் சாதாரண பொதுமக்கள் நிலை என்ன?

  ஜோதி,

  ///கேள்வி கேட்பது உங்கள் உரிமை. அதைப்போலவே சம்பளம் உயர்த்துங்கள் என்பது அவன் உரிமை. மாசம் 7000 ஆயிரம் வாங்கிட்டு சென்னையில் வாடகை வீட்டில் பெற்றோருடனும், 2 குழந்தைகளுடனும், மனைவியுடனும் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும். இதற்கு உங்கள் பட்ஜெட்டை சொல்லுங்கள் பார்க்கலாம். சோறு கிடைக்காதவன் பிச்சை (அரசாங்கத்திடம்) எடுக்கிறான், பிச்சை கிடைக்காதவன் திருட ஆரம்பிக்கிறான். திருட ஆரம்பித்தவன் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கிறான். இதுதான் எதார்த்தமான உண்மை./////

  சம்பளம் போதவில்லை என்றால் அதுக்கு பொதுமக்கள் வயிற்றில் அடிப்பதை விட தெருவில் பிச்சை எடுத்து பிழைக்கலாம். கூலிகாரன்,அன்னாடங்காய்ச்சி வயிற்றில் அடிப்பதை விட இது ஒன்றும் கேவலமான வேலை அல்ல. இதே சென்னையில் தினகூலி வாங்கியும், மூட்டை தூக்கியும் குடும்பத்துடன் பிழைப்பவன் எல்லாம் இருக்கிறானய்யா.அன்னாடங்காய்ச்சிகளிடம் லஞ்சம் வாங்கித்தான் இவன்கள் பிழைக்கணுமா?தூ..

  ReplyDelete
 91. எதிர்பார்ப்பது அதிகம். அது தவறு என்கிறார் Mr. Bruno. ஆனால் குறைந்த பட்ச சேவை / மனிதர்களை மதிக்கும் பண்பு இல்லாததும் ஒரு form submit பண்ணும்போது, அதில் தேவையானவைகளை ஒரே முறையில் சொல்லாமல், பல முறை அலைக்கழைப்பது போன்றவையே அரசு அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.

  --anvarsha

  ReplyDelete
 92. //லஞ்சம் மற்றும் நேர்மையின்மை என்ற பெரும்பான்மையான வாசகர்களின் கருத்துக்கள் இப்பதிவிற்கு தேவை இல்லை என்பதே என் கருத்து..//

  Exactly. தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி இங்கு விவாதிப்பது அவசியமற்றது. நடந்தது ,நடக்கிறது என பேசுவதைவிட ஏன் நடக்கிறது, எப்படி தடுக்கலாம் என விவாதித்தால் நன்று.

  விவாதம் பலனுள்ளதாக முடியும்.

  ReplyDelete
 93. மாதவராஜ்,

  புரூனோவுக்கு நான் அளித்த பதிலை மட்டுறுத்தி விட்டீர்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. பரவாயில்லை. இந்த சுட்டியை நீங்களும், புருனோவும், ஜோதியும் மற்ற பிற அரசு ஊழியர் ஆதரவாளர்களும் படியுங்கள். அரசு ஊழியர்களிடையே எந்த அளவு லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதும் ஒரு தனிமனிதன் இதனால் எத்தனை பெரிய வன்முறைக்கு ஆளாகிறான் என்பதும் தெரியும்.


  http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

  இதையும் மட்டுறுத்தி விடமாட்டீர்கள் என எதிர்பார்க்கிறேன்:-(((((

  ReplyDelete
 94. ஒளிவட்டம் அரசு ஊழியனுக்கு இருப்பதால்தானே லஞ்சம் கேட்கிறான் எப்படி இந்த இழைக்கு சம்பந்தமில்லை?

  ReplyDelete
 95. //அதாவது "நீங்கள் இதுவரை அரசு ஊழியர்களுக்கு லஞ்சமே கொடுத்ததில்லை" என்று கடவுள் மேல் ஆணையாக கூற தயாரா?//

  இல்லை

  //அல்லது கொடுத்திருந்தால் எந்த தேதியில் கொடுத்தீர்கள்,எந்த அலுவலகத்தில் கொடுத்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொல்ல தயாரா?//

  இரு நாட்களுக்கு முன்னர் சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சுமை சுமப்பவரிடம் அரசு நிர்ணயம் செய்துள்ள 8 ரூபாய்க்கு மேல் 22 ரூபாய் லஞ்சம் அளித்தேன்

  ReplyDelete
 96. //நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்.அப்புறம் நான் சொன்னது பொய்யா உண்மையா என ஆராயலாம்.//

  நான் கூறிவிட்டேன்.

  //ஒரு அரசு டாக்டரான உங்களாலே "நான் இதுவரை அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில்லை" என சொல்ல முடியவில்லை.அப்புறம் சாதாரண பொதுமக்கள் நிலை என்ன?//

  விச்சு அவர்களே,

  நான் எங்குமே லஞ்சம் இல்லை என்று கூறவில்லை

  எனவே உங்களது விவாதமே அர்த்தமற்றதாகிறது

  July 14, 2009 10:49 AM அன்று நீங்கள் கூறியது என்ன //சனிக்கிழமை அக்கவுண்டு தொடங்கமாட்டேன் என்று சொல்வார்கள்.அப்புறம் மாமூலை வெட்டுனா அக்கவுண்டு ஓப்பன் பண்ணி தருகிறேன் என்பார்கள்.அட அவ்வளவு ஏன்?லஞ்சம் கிடைக்கிறார்போல் இருந்தால் ஞாயிற்றுகிழமை வீட்டுக்கு வந்து கூட அகவுண்ட் ஓப்பன் செய்வார்கள்.//

  உங்களது அந்த குற்றச்சாட்டிற்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன்

  அதற்கு ஆதாரம் அளித்தால் நீங்கள் கூறியது உண்மை

  இல்லை என்றால் நீங்கள் கூறியது பொய்

  அவ்வளவு தான்

  புரிகிறதா

  ReplyDelete
 97. //Exactly. தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி இங்கு விவாதிப்பது அவசியமற்றது. நடந்தது ,நடக்கிறது என பேசுவதைவிட ஏன் நடக்கிறது, எப்படி தடுக்கலாம் என விவாதித்தால் நன்று.

  விவாதம் பலனுள்ளதாக முடியும்.//

  ஐயா விவாதம் பண்ணுபவர்களில் சிலரின் நோக்கம் தீர்வு வேண்டும் என்பதல்ல. கிடைத்த சாக்கில் சேற்றை வாரியிறைக்கும் பொய் குற்றச்சாட்டுகளை வீசுவது (உதாரணமாக கணக்கு துவங்க வங்கியில் லஞ்சம் கேட்கிறார்கள்.) என்றிருக்கும் போது விவாதம் எப்படி பலனுள்ளதாக முடியும்.

  ReplyDelete
 98. //. இந்த சுட்டியை நீங்களும், புருனோவும், ஜோதியும் மற்ற பிற அரசு ஊழியர் ஆதரவாளர்களும் படியுங்கள். அரசு ஊழியர்களிடையே எந்த அளவு லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதும் ஒரு தனிமனிதன் இதனால் எத்தனை பெரிய வன்முறைக்கு ஆளாகிறான் என்பதும் தெரியும்.//

  அந்த சுட்டியில் சென்று நீங்கள் திட்டுங்கள்

  அல்லது அங்கு குறிப்பிட்டிருப்பவர்களை நீங்கல் திட்டினால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை

  ஆனால் வங்கியில் கணக்கு துவங்க லஞ்சம் கேட்கிறார்கள் என்பது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்

  ஒழுங்காக பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகரை பற்றி அவதூறாக எழுதாதீர்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன்

  தொடர்வண்டிநிலையத்தில் பயணி ஒருவரை புகைப்படம் எடுத்து விட்டு, கார்டு தூங்குகிறார் என்று அபாண்ட பழி சுமத்தாதீர்கள். அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்

  --

  மற்றப்படி குறைகளை சுட்டி காட்டுவதை யாருமே எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 99. //ஒளிவட்டம் அரசு ஊழியனுக்கு இருப்பதால்தானே லஞ்சம் கேட்கிறான் எப்படி இந்த இழைக்கு சம்பந்தமில்லை?//

  லஞ்சம் என்பது அரசு, தனியார் இரு துறைகளுக்கும் பொதுவானது என்பது உங்களுக்கு தெரியாத மங்களூர் சிவா அவர்களே

  ReplyDelete
 100. /
  புருனோ Bruno said...

  லஞ்சம் என்பது அரசு, தனியார் இரு துறைகளுக்கும் பொதுவானது என்பது உங்களுக்கு தெரியாத மங்களூர் சிவா அவர்களே
  /

  லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் தனியார் துறையில் எங்கு வருகிறது?.

  தனியார் துறையில் இவன் இல்லை என்றால் இன்னொரு க்ளையண்ட் ஆனால் அரசாங்கத்தில் பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், ட்ரைவிங் லைசன்ஸ் என அந்தந்த அலுவலகத்தை தவிர வேறு எங்கு செல்ல முடியும்? இவை உதாரணத்திற்கு மட்டுமே.

  ReplyDelete
 101. /

  மற்றப்படி குறைகளை சுட்டி காட்டுவதை யாருமே எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
  /

  மிக்க நன்றி டாக்டர்.

  ReplyDelete
 102. //ஒழுங்காக பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகரை பற்றி அவதூறாக எழுதாதீர்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன்//

  அனைத்து துறைகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இங்கு அனைத்து பயணசீட்டு பரிசோதகரும் அவதூறு சொல்லப்படவில்லை. லஞ்சம் வாங்கியவர் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறார். தொடர்வண்டியில் மதுரை -சென்னை பயணிக்க (அட்டவணை போடுவதற்கு முன்பு) எந்த நேரமும் டிக்கெட் வாங்கித்தர ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் 'உள்ள ஆள் இருக்காருங்க' என்பதுதான்.

  ReplyDelete
 103. //... பயணச்சீட்டு இல்லாமல் வருபவரை கூட பயணம் செய்ய அனுமதிக்க் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் தான் அதீத எதிர்ப்பார்ப்பு என்றேன்//

  லஞ்சம் கொடுத்தால் இத்தகைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகிறதே? அதேநேரம், லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக எதிர்கொள்ள நினைக்கும் ஒருவர் ஏமாற்றப்படுகிறார் என்றுதானே கொள்ள வேண்டும். (பயணச்சீட்டு இல்லாமல் வருபவர் மட்டுமல்ல உறுதிப்படுத்தப்படாத பயணச்சீட்டு வைத்திருப்பவருக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.)

  ReplyDelete
 104. //இங்கு அனைத்து பயணசீட்டு பரிசோதகரும் அவதூறு சொல்லப்படவில்லை. லஞ்சம் வாங்கியவர் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறார். //

  பீர் சார்

  நான் கூறியது இந்த இடுகை பற்றி http://manam-anandrey.blogspot.com/2009/06/blog-post_04.html

  இதில் லஞ்சம் எங்கு வந்தது :( :(

  இது போன்ற கற்பனை குற்றச்சாட்டுகள் வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்

  ReplyDelete
 105. ////புருனோ Bruno said...
  //இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது. //

  குறை இல்லாவிட்டால் கூட குறை என்று நீட்டி முழங்கி பதிவு எழுதுபவர்கள் இது வரை எத்தனை முறை பாராட்டி உள்ளார்கள் என்று பார்த்தால் வரும் விடை என்ன////

  http://masivakumar.blogspot.com/2007/12/blog-post_3933.html#comment-1092960417223115859

  ReplyDelete
 106. //
  இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது.
  //

  பாராட்டு என்பது செய்யவியலாத அல்லது செய்ய மிகவும் சிரத்தை எடுக்கவேண்டிய காரியங்கள் செய்பவருக்கு கிடைக்கவேண்டும். கடமையை செய்பவர் பாராட்டு எதிர்பார்ப்பது லஞ்சம் வாங்குவதுபோலத்தான்.

  ReplyDelete
 107. இந்திய அரசு ஊழியர்களை பற்றிதானே இத்தனை விவாதம். இந்திய அரசு ஊழியர்களின் மனோபாவத்தை,
  அய்ரோப்பிய, அமெரிக்க, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் அரசு ஊழியர்களின் மனோபாவத்துடன் ஒப்பிட்டால் சில விசியங்கள் விளங்கும். அங்கு இங்கு போன்ற ஜாப் செக்யூரிட்டி கிடையாது. எந்த வயதிலும், பதவியிலும் எப்போது வேண்டுமானாலும் வேலை சேரும் வசதி உண்டு. பல இதர வித்யாசங்கள். ஆனால் சேவைகளின் தரம் மற்றும் மனோபாவம் இங்கு போல இல்லைதான். இதை பற்றி...

  ReplyDelete