LATEST

பைத்தியங்களின் நாடு



முன்பும் ஒரு நாடு இருந்தது.
பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை பைத்தியங்கள் என அழைத்தால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.
பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.
பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்

Comments

8 Comments

You can comment here!
  1. தீராத பக்கங்கள் வாசித்து தீராமல் நதி வெள்ளமாய் நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே.

    இரமணிஷர்மா
    மதுரை

    ReplyDelete
    Replies
    1. இரமணிஷர்மா, தங்கள் வாழ்த்துக்கு என் அன்பும், மகிழ்ச்சியும்.

      Delete
  2. அன்புள்ள மாதவராஜ், அற்புதமான சொற்கோவை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரவீந்திரன். தங்களுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும். உற்சாகம் தரறீங்க.

      Delete
  3. சரி இப்போ உள்ள பைத்தியங்கள் எப்போ காணாமல் போவார்களா அல்லது குணமாவார்கள் என்று எண்ணுகிறீர்களா தோஸ்த்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக சொல்லி இருக்கிறேனே சுப்பையா!

      Delete
  4. பைத்தியங்கள் கதைஅருமை

    ReplyDelete
    Replies
    1. //பைத்தியங்கள் கதைஅருமை// தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete

You can comment here

SUBSCRIBE

தீராத பக்கங்களின் பதிவுகள், தகவல்களை தங்களுக்கு பகிர்கிறோம்