கயிறு கட்டிய மேடையில் ஒருத்தனை ஒருத்தன் கண்டமேனிக்கு அடித்து நொறுக்குகிற சேனலையே அவன் விரும்பிப் பார்த்தான். சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டால், அதனை சினிமாவாகவே ஒத்துக்கொள்வதில்லை. பெரியமனிதன் மாதிரி ‘அய்யோ’ என்று அந்தக் கதாநாயகனைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான்.
பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன், இரண்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று அவைகளை அவனே மோதச் செய்து “டிஷ்யூம், டிஷ்யூம்” என்று கத்திக்கொண்டேயிருந்தான்.
“இந்தக் குழந்தை இப்படி வளருகிறதே...” என்று கவலைப்பட்டாள் தாய். “இவனை என்ன செய்ய..” என யோசித்துக்கொண்டு இருந்தான் தந்தை.
ஒருநாள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தவன், அதிர்ச்சியோடு வீட்டுக்குள் நுழைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரம் கழித்துத்தான் அம்மா இவனைக் கவனித்தாள். “என்னப்பா..” என்று தாய் அணைத்துக்கொள்ளவும் ஓவென்று அழுதான். பேசமுடியாமல், திக்கித் திணறிக்கொண்டு இருந்தான். “என்னாச்சு, என்னாச்சு” என தாய் பதறினாள். “அங்க.... அங்க... சண்டை போடுறாங்கம்மா...” என்று விம்மினான்.
தாய் தெருவுக்கு வந்து பார்த்தாள். அமைதியாக இருந்தது. எதிர்த்த வீட்டில் விசாரித்தாள். “அதுவாக்கா.... அந்த சங்கர் அண்ணன் குடிச்சிட்டு வந்திருப்பாங்க போல. கவிதா அப்பவோட சண்டை வரப் பாத்துச்சு. ஒருத்தர ஒருத்தர் அடிக்கிற அளவுக்குப் போய்ட்டாங்க. அப்புறம் விலக்குப் பிடிச்சு, சங்கர் அண்ணனக் கூட்டிட்டு போய்ட்டாங்க..” என்று பதில் வந்தது.
பக்கத்தில் அம்மாவின் கால்களை கட்டியபடி நின்றிருந்த அவனுக்கு கைகள் நடுங்கிக்கொண்டு இருந்தன.

arumaiyaaka periyavarkal thavarai suttikkaatutum sandai.. vaalththukkal
ReplyDeleteஅளவுக்கு மிஞ்சி அமிர்தம் விஷமாவதை உளவியல் பார்வையுடன் சொன்ன அற்புதம் இது மாதவராஜ்.
ReplyDeleteஇதுதான் நடக்கிறது.முளையில் கிள்ளாமல் முதிர்ந்தவுடன் கிள்ளினால் உடைவதும் இல்லை.வளைவதும் இல்லை.
unmaithan
ReplyDeletenaan sandai padangalai paarpathillai aanaal avai perum thaakkathai erpadithiyathillai enaku
nijamaga poarattangal thatiyadigal galavaramaga mattrum sila tharunangalil
namakkul manithabimanam, manitha urimaigalukku arththaminri poagirathaga unargiroam.
ithu en anupavam sarntha paarvaiyae
மதுரை சரவணன்!
ReplyDeleteநன்றி.
சுந்தர்ஜி!
நன்றி.
எவனோ ஒருவன்!
உங்கள் பார்வையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.