தீபாவளி முடிந்து விட்டது

 


நேற்றிரவு
வெடித்துச் சிதறி
ஒளிக் குப்பையாய்க் கிடந்த
வானம் சுத்தமாய் இருக்கிறது
கிழக்குப் பக்கம்
சாவகாசமாய் நான்கைந்து பறவைகள்
பேசிக்கொண்டே செல்கின்றன
தெருதான்
கருமருந்து வாடையும்
கந்தல் கந்தலான காகிதங்களோடும்
கலைந்து கிடக்கிறது
வெடிக்காதவைகளை பொறுக்கியபடி
இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள்
வாலைப் பதுக்கி
தானும் பதுங்கிய நாய்களெல்லாம்
மெல்ல எட்டிப் பார்க்கின்றன
முதலில் எழுந்த அம்மா ஒருத்தி
வாசல் பெருக்குகிறாள்
“ம்... தீபாவளி முடிந்துவிட்டது”

*

Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. //ஒளிக் குப்பையாய்க் கிடந்த
    வானம் சுத்தமாய் இருக்கிறது //

    புயலுக்கு பின்னும் அமைதி..,

    கொண்ணாட்டத்திற்கு பின்னும் அமைதி..,

    ReplyDelete
  2. அருமை!

    கவிதை ரொம்ப பிடிச்சுருக்குது

    ReplyDelete
  3. //வெடிக்காதவைகளை பொறுக்கியபடி
    இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள்
    வாலைப் பதுக்கி
    தானும் பதுங்கிய நாய்களெல்லாம்
    மெல்ல எட்டிப் பார்க்கின்றன //

    அட ஆமா நேத்து ஒரு நாயைகூட தெருவுல பார்க்கமுடியல...

    ReplyDelete
  4. இன்றைய காலைப்பொழுதின் எல்லா தெருக்களின் நிலை

    ReplyDelete
  5. ஆம்.தீபாவளி முடிந்து விட்டது. தொலைக்காட்சி செய்தியில் தீவிபத்துகளின் பட்டியல். அடுத்த வருடமும் தீபாவளி வரும், கொண்டட்டங்கள் வரும், விபத்துகள் இல்லாமல் வேண்டுமென வேண்டிக் கொள்வோம்.

    ReplyDelete
  6. இந்த வருட தீபாவளியின் போது நிறைய அசம்பாவிதங்கள் :((

    ReplyDelete
  7. சுரேஷ்!
    சென்ஷி!
    தோமா!
    கிரகம்!
    அம்பிகா!
    மங்களூர் சிவா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. ம்ம்ம்...தீபாவளியும் முடிஞ்சுது.

    ReplyDelete
  9. //வானம் சுத்தமாய் இருக்கிறது//

    கோடிக்கனக்கான ரூபாய் கரும்புகையாய் இன்னும் படிந்துதானே இருக்கின்றது

    ReplyDelete
  10. எங்களுக்கு இந்த முறை தீபாவளி வரவேயில்லை

    ReplyDelete
  11. அருமையாய் இருக்கு மாதவன்.வார்த்தை ஜாலம் இல்லாமல்,சிக்கல் முக்கல் இல்லாமல் நேரடியாய்.கடைசி வரியில் ஏக்கம் பரவுகிறது.

    ReplyDelete
  12. தமிழன் கருப்பி!
    ஆமாங்க....தீபாவளியின் துயரங்கள்தா(பள்ளிப்பட்டு வெடிவிபத்து) செய்தித்தாள்களில் படங்களாக வந்து அறுக்கின்றன.

    கதிர்!
    சரிதான்.


    கிருத்திகன் குமாரசாமி!
    :-(((((

    பா.ராஜாராம்!
    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. நல்ல கவிதை.அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    பட்டாசுகளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு வருமா?.

    ReplyDelete
  14. மாதேவி!
    அஷிக்!
    நன்றி.... வருகைக்குகு, பகிர்வுக்கும்.

    ReplyDelete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!