படைப்பின்பம் - இயக்குனர் மகேந்திரன்


யக்குனர் மகேந்திரன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்திற்காக இரண்டு நாட்கள் சென்னை சென்று இன்றுதான் திரும்பினேன். பள்ளிக்கருணையில் புதுவீடு கட்டி குடியேறி இருக்கிறார் இப்போது அவர். அலமாரியில் அடுக்கிவைக்க ஏராளமான புத்தகங்கள் கட்டுக் கட்டாய் இருந்தன. எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவிருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அண்மையில் வந்த சில படங்கள் தவிர எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். கருத்துக்களும் கொண்டிருக்கிறார். ஐந்துமணி நேரத்துக்கும் மேலே அவரோடு பேசியிருந்த நேரம் சுகமானதும், உற்சாகமானதுமாகும்.

தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் உத்தமபுத்திரன் படத்தின் இயக்குனர் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அதன் இயக்குனர் அழைத்திருந்தாராம். பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடும் இயல்பு கொண்ட மகேந்திரன், அந்த இயக்குனர் தன்னோடு பணிபுரிந்தவர் என்பதனால் பிரியம் காரணமாக சென்றிருந்தாராம். தொகுத்துப் பேசிய நடிகர் விவேக், மகேந்திரனையும், ஜெயகாந்தனையும் ஒப்பிட்டுப் பேசினாராம். இருவரும் அவரவர் துறையில் சிகரங்களை தொட்டிருந்தாலும் இருவருமே இப்போது அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லி, “காற்று நாம் நினைத்த நேரத்தில் வராது. அதுவாக வீசும். நாம்தான் காத்திருக்க வேண்டும்” என்றாராம். டி.வி நிகழ்ச்சிகளில் விவேக் தொகுத்தளிக்கும் லட்சணத்தைப் பார்த்து, அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாதோ?

மாடியில், அவரது அறையில் சில ஓவியங்கள் இருந்தன. வண்ணங்களின் சிதறல்களும், சேர்க்கைகளும் காட்சியனுபவமாக மட்டுமல்லாமல் உணர்வுகளின் நடனம் போலிருந்தன. “யாருடைய ஒவியம் சார் இது?” என்று கேட்டதற்கு, மெல்லிய புன்னகையோடும் சின்ன கூச்சத்தோடும் “நாந்தான்” என்றார். அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வரைவதற்கான உபகரணங்கள் நிறைய புதிதாய் வாங்கி வைத்திருப்பதைக் காட்டினார். “படம் வரைவது பெரும் சுகமானது. நேரம் காலம் தெரியாமல் மூழ்கிப்போவேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவை உருப்பெறும் போது ஏற்படும் உணர்வுக்கும், சந்தோஷத்திற்கும் எதுவும் ஈடாகாது. அதுதான் கலையின் அழகு. எழுத்து, ஓவியம், சினிமா, நடனம், இசை போன்றவற்றில் இருக்கும் இன்பம் நிரந்தரமானது. அவைகளிலிருந்து திரும்பவும் அதே உணர்வுகளை புதுசாகப் பெற முடியும்” எனச் சொல்லிக்கொண்டே போனார். “படம் முடிந்தது என்று படுக்கப் போய்விடுவேன். அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் வர்ணம் கொடுக்கலாமோ எனத் தோன்றும். திரும்பவும் வந்து உட்கார்ந்து கொள்வேன்” என்றார். படைப்பின் சுவாரசியமே இதுதானே. அவரது ஓவியங்களில் சேகுவேராவும் இருந்தார்!

விடைபெறும்போது, அவர் இயக்கிய படங்களை சேகரிப்பது குறித்து பேச்சு வந்தது. தீராத பக்கங்களிலும் ஏற்கனவே எழுதியிருந்தேன். இணையத்தில் கிடைக்கும் அவரது சில படங்களுக்கான சுட்டிகளை ஒரு நண்பர் தந்திருந்தார். அவைகளின் குவாலிட்டி சரியில்லாமல் இருக்கிறது. டி.வி.டியாக கிடைத்தால் நல்லது. நண்பர்கள் தங்களிடம் இருந்தாலோ, அவைகளைப் பெறும் வழி தெரிந்தாலோ எனது இ-மெயிலுக்கு ( jothi.mraj@gmail.com ) தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கப்பூரில் கொலம்பியா கேசட் செண்டரில் இருப்பதாக தெரிந்தவர் ஒருவர் இயக்குனர் மகேந்திரனிடம் சொன்னாராம். நண்பர்கள் யாரேனும் உதவிட முடியுமா? 

Comments

10 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. ரொம்ப சுவாரசியமான இடுகை. விவேக்கின் பேச்சு, மகேந்திரன் ஓவியங்கள், 'அனல் மேலே' பாட்டை ரசித்த விதம், அதற்கு ப்ரீதுவின் கிண்டல் ;-) எல்லாமே ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. புதிய பதிவர் அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  2. 'அனல் மேலே' பாடல், நானும் கொஞ்ச நாள் கழித்துதான் கேட்டேன் மாதவ்ஜி. கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்கள் பாடியது. நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

    கொஞ்ச நாள் முன்பு நீங்கள் காதலைப் பற்றி எழுதிய பதிவொன்றுக்கு காஷ்யபன் அவர்கள் பெரியார் காதலைப் பற்றி சொன்னதை படிக்கச் சொல்லி இருந்தார். பெரியார் எழுதிய ஒரு கட்டுரை - http://www.shobasakthi.com/shobasakthi/?p=22

    ReplyDelete
  3. ஆஹா நல்ல ரசனைக்கரிய பதிவு.. அத சரி எந்தப்பயல் தமிழ் மணத்தி்ல் இப்படி ஒரு வாக்கிட்டவன்...

    ReplyDelete
  4. பதிவை மிகவும் ரசித்தேன்.

    மகேந்திரனுடனான அனுபவங்கள் சுவரஸ்யமாக இருந்தது.

    விவேக் என்ன செய்வார். இப்படி தொகுத்தளிக்கவேண்டும் என்று கூறியிருந்தால்...

    விவேக் அப்துல்கலாமுடன் ஒரு பேட்டி எடுத்திருப்பார்.. மிக நேர்த்தியாக இருக்கும்.

    ReplyDelete
  5. கொலம்பியா கேசட் செண்டரை பற்றி விசாரிக்கிறேன். பிராமிஸ் இல்லை.

    ReplyDelete
  6. இயக்குநர் திரு.மகேந்திரன் அவர்களுடனான உங்கள் தொடர்பும் அது குறித்த பதிவும் அருமை அண்ணா....
    புதியவர்கள் அறிமுகமும்... நீங்க ரசித்த பாடலும் அருமை அண்ணா.

    ReplyDelete
  7. மகேந்திரன் பற்றிய பகிர்வு அருமை.
    மகேந்திரன், பாரதிராஜா, பாலு மகேந்திரா , மணி ரத்னம் காலங்களிலேயே செய்ய வேண்டிய ஒரு பணி, உதவி இயக்குனர்களை கொடுமை படுத்துதல் (மன ரீதியாக) என்ற நிகழ்வை தடுக்க வழி செய்தல்.

    ReplyDelete
  8. மிகவும் அழகாக தொகுத்திருக்கிறீர்கள் மாதவ் ஜீ!

    மகேந்திரன் - இயக்குனர் எனத் தெரியும். ஓவியர் என்பது இப்பத்தான் தெரியும். ஆவணப்படம் எப்போது வெளிவரும்?

    சுதா ரகுநாதன். ம்ம் நல்ல தேர்வு தான்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. திரு.மாதவராஜ்... கொலம்பியா கேசட் சென்டர் பற்றி விசாரித்தேன்... அப்படி ஒன்று இருப்பதாக யாரும் அறியவில்லை. கடையின் பெயர் சரிதானா என்று மேலும் ஒருமுறை உறுதிப்படுத்த முடியுமா? "முள்ளும் மலரும்" படத் தகடு இங்கே பரவலாகக் கிடைக்கிறது.மற்ற படங்களுக்கு சிலரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. unga kuda vara mudiya vilanau varutham.

    ReplyDelete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!